சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தேவையா? இல்லையா-?






திரைப்படங்கள்தான் என்னை பொறுத்தவரை சிறந்த சமுக ஆவணம் என்பேன்..
 1940 இல் இருக்கும் இளைஞனின் ஹேர்ஸ்டைல் மீசையில் இருந்து 80களில் கோலோச்சிய பெல்பாட்டம் வரை.... திரைப்படங்கள்தான் மக்கள் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் கண்ணாடி என்பேன்....

1970 இலிருந்து 1980 வரை  ஏன் 1995 வரை வெளியான திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் வேலையில்லா திண்டாட்டம் பெரிய அளவில் காட்சிகளாக வைத்து இருப்பார்கள்...வேலை கிடைப்பது அவ்வளவு குதிரைக்கொம்பாக இருந்த கால  கட்டம் அது....ஸ்கூட்டம் புக் பண்ணிதான் வாங்கனும்... கார் புக் பண்ணிதான் வாங்கனும்... மக்கள் தொகை அதிகம்...... ஆனா  உற்பத்தி குறைவு.....காசு வச்சி இருந்தாலும் அதுதான் நிலைமை...


நரசிம்மராவ் ஆட்சிகாலத்துல புதிய பொருளாதாரகொள்கைன்னு பேரு வச்சி அந்நிய முதலீட்டை அனுமதிக்க இருந்தாங்க.. எல்லாரும்  வானத்துக்கு பூமிக்கும் குதிக்க ஆரம்பிச்சாங்க... இதுக்கு நாம ஆடிமையாவே  திரும்ப போயிடலாம்ன்னு ஆச்சா போச்சான்னு  குதிக்க ஆரம்பிச்சாங்க... ஏன் விபரம் தெரியாம குதிச்ச லிஸ்ட்டுல நானும் ஒருவன்... இப்பயும்  பொதுத்துறை நிறுவணத்தில் தனியார் மயத்தை எதிர்க்கின்றேன்.


அன்னைக்கு நீயா நானாவுல  திட்டக்குழு தலைவர் பேசறார்... அன்னைக்கு கஜனா மொதக்கொண்டு திவாலா போய் இருந்திச்சி... அடுத்து என்ன செய்யலாம்....?  வேலையில்லா திண்டாட்டம் போன்ற காரணங்களை ஒழிக்கதான் புதிய பொருளாதாரக்கொள்கை கொண்டு வரப்பட்டது என்றார்.... நரசிம்மராவை தூற்றினார்கள். சட்டமாக உட்கார்ந்து கைய்யெழுத்தையும் போட்டு இந்தியாவோட தலையெழுத்தையே மாத்தினார்ன்னுதான் இப்ப சொல்ல தோனுது...

அன்னைக்கு படிச்சி வெளியே வந்தா  வேலை காலி இல்லை என்ற போர்ட்டை  பழைய காலண்டர் அட்டையின் மேல்   வெள்ளை பேப்பர்ல  ஒட்டி எழுதி தெருவுக்கு தெரு வச்சாங்க.. பசங்களும் படிச்சி முடிச்சிட்டு நாயா பேயா தெரு தெருவா வேலைக்கு அலைஞ்சாங்க...

சத்யா படத்துல காட்டறது போல ஒரு வடைக்கு நாலு பேர் அடிச்சிக்கிட்டது போலவும்....ஒரு டீ க்கு நாலு கிளாசாதான் நம் சமுகம் இருந்திச்சி... ஆதான் அன்றைய உண்மை நிலவரம்... பிஏ பெரிய படிப்பு அப்ப எல்லாம்... பசங்க நிலைமையே இப்படின்னா  பொண்ணுங்க நிலைமைய  யோசிச்சி பாருங்க...?


அதை விட அன்றைய நிலமைய அழகாய் பேசும் படம் தோலுரிச்சி  காமிச்சி இருக்கும்... அதில் ஒரு நடுத்தர வயதை கடந்தவர் கூட வேலை தேடிக்கொண்டு இருப்பார்... 15 பேருக்குதான்  டெம்பரவரி வேலை என்று தெரிந்தும் பெரிய வரிசை நிற்கும்....கமல் நடிப்பில் பின்னு இருப்பார்.....



ஆனா அன்னைக்கு நரசிம்மராவ் அனுமதிச்சார்.....ஏன் விளம்பர படத்துல கூட நடிச்சார்... கடற்கரையில் பேன்ட்   சார்ட் போட்டு இன் பண்ணிக்கிட்டு ரொம்ப ஸ்டைல நடந்து போறா போல அந்த விளம்பர பாட்டு  டிடியில அடிக்கடி போடுவாங்க...

இன்னைக்கு பசங்க படிக்கற  கலேஜ்லேயே போய் வேலைக்கு ஆள் எடுத்து, அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கையில கொடுத்துட்டு வந்துடறாங்க... அந்த  அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டத்தை போக்கி இருக்கு... குளோபலைசேஷன்... இது நரசிம்மராவ் கையெழுத்து  போட்ட்டாலும் போடாவிட்டாலும் ஒரு கட்டத்தில் இது கண்டிப்பா இந்தியாவுல நடந்து இருக்கும்... இரும்புத்திரை சீனாவே குளோபலைசேஷனுக்கு தலைவணங்கிதான் போக  வேண்டிய  கட்டாயம் என்பதை எல்லோருக்குமே தெரியும்....

அன்னைக்கு எந்த போராட்டம் நடந்தாலும் டான்னு நம்ம பயபுள்ளைங்க் ஆஜராகி இருப்பானுங்க... இப்ப எந்த போராட்டத்துக்காவது  பசங்க, அதாவது இளைஞர் ஆதரவு இருக்கான்னு பார்த்து   சொல்லுங்க....?

சார் சென்னையில பசங்க போராட்டம் செய்யறாங்க... சில வௌங்கா வெட்டிங்க... பஸ்டே கொண்டாடறேன்னு  பிரச்சனை பண்ணி அதுல வரும் போராட்டத்தக்கு பேரு போராட்டம் இல்லை... காரணம் வேலை வெட்டி இல்லாம அன்னைக்கு நடுத்தர குடும்பத்து பயபுள்ளைங்க எல்லாம் சுத்திக்கிட்டு கிடந்துச்சி.. இந்தி எதிர்ப்பா இருந்தாலும், ஈழ போராட்டம்னாலும் முதலில் வந்து  நின்னாங்க...ஆனா இன்னைக்கு வேலையில சேர்ந்தாச்சி.. கடன் வாங்கி வீடு வாங்கியாச்சி, வட்டி கட்டனும் கமிட்மென்ட் லைப்ல இறங்கட்டகாரணத்தால் போராட வரும் நபர்கள் மிக குறைவு...

இன்று நடக்கும் எந்த போராட்ட்டத்துக்கு இளைஞர் ஆதரவு பெருமளவு இல்லையே ஏன்?
போராட்டம்னா கம்யூனிஸ்ட்டும் திமுகாவும்தான்... ஆனா அங்கேயே ஏதாவது போராட்டம்ன்னு  சொன்ன கூட்டம் பிசு பிசுத்து  போயிடுச்சு... அன்னைக்கு வந்த கூட்டத்தை கம்பேர் செஞ்சா இன்னைக்கு கூடும் கூட்டம் எல்லாட் ஜுஜுபி..காரணம் நடுத்தர குடும்பத்துல அத்தனை பயபுள்ளைங்களுக்கும் படிச்சதும் வேலை கிடைச்சிடுத்து...வேலையில்லா திண்டாட்டம் அந்த அளவுக்கு இல்லை....

இன்னைக்கு மட்டும் அந்த வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்றால் நாட்டில் மேலும் குற்றம் பெருகி இருக்கும் என்பது என் கருத்து... சில்லரை வர்த்தகத்தை பொறுத்தமட்டில் இன்னமும் நியாயமான விலை உழைப்பாளிக்கு அதாவது விவசாயிக்கு சென்று  சேரவில்லை.... இடைதரகர்களே அவ்வளவு பணத்தையும் அபிட்டு விட்டுக்கிட்டு போயிடுறாங்க என்கின்றார்கள்..

  சில்லரை வர்த்தகத்தில்   அந்நிய  முதலீடு வந்தால் கொள்முதல் பலன் விவசாயிக்கு நேரடியாக கிடைக்கும் என்கின்றார்கள்... இது சரியா சரியில்லையா என்று விவாதிக்கும் முன் காமன் மேனாக என் பார்வையை சொல்லிவிடுகின்றேன்...

இன்றைக்கு  ரிலையன்ஸ், மோர், ஸ்பென்சர்ஸ்  போன்ற  பெரிய நிறுவனங்கள்..சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கின்றன... இதனால்  எந்த மளிகைகடைகாரரும் ஷட்டரை இழுத்து  பூட்டி திவலாகி நடுத்தெருவில் நின்று விடவில்லை. எந்த காய் கறி விற்ப்பவரும் காய்கறி விற்க்காமல் வயிற்றில் ஈரத்துணி போட்டுக்கொண்டு இல்லை... எல்லோரும் வியாபாரம் செய்கின்றார்கள்....

இந்தியா என்ன சின்ன தேசமா? குறைவான மக்கள் தொகையா பயப்பட.,..-  தெருவுக்கு தெரு சந்துக்கு சந்து, எந்த வால்மாட்டாலையும் எந்த ரிலையன்சாலையும் கடை திறக்க முடியாது...? ஆனால்  செட்டியார் கடையும் நாடார் கடையும் எல்லாம் சந்து முனைகளிலும் உண்டு.. ஆத்திர அவசரத்துக்கு இந்த  வகையான  சின்ன கடைகளைத்தான் பொதுமக்கள் நம்பி இருக்கின்றார்கள்...

 என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மளிகை கடையில் ஒரு செவன் அப் பாட்டில் 29 ரூபாய்  அரை லிட்டர் ஆபர் போக 27 என்று அச்சடித்து என்ஜாய் ஆபர் என்று விளம்பர படுத்தி இருக்கின்றது... ஆனால் 29 ரூபாய் என்கின்றார்கள் கேட்டா?...குளிங்ல இருக்கற கூல்டிரிங்ஸ்க்கு 29 ரூபாய்...சாதாரணமா இருந்தா 27 என்றார்... இதுவரை   எம்ஆர்பி விலையில் ஒரு  பைசா குறைத்து கொடுத்தது கிடையாது...  எட்டான , இரண்டு  ரூபாய் அதிகம் சொல்லி இருக்கின்றாரே தவிர  சரியான விலை விற்றது கிடையாது.. முக்கியமாக பில் இதுவரை எந்த பொருளுக்கும் போட்டது  கிடையாது...  பொருளுக்கு பிரியாக வரும் பேனாவை கூட விற்று காசு பார்த்து விடுவார்கள்....நெஸ்ட்லே அட்டை பெட்டி எலி கடித்து கிழிந்து இருந்தாலும் டப்பாவை வச்சிக்கிட்டு என்ன பண்ண போறிங்க? என்பார் அவ்வளவு கருத்து..... எல்லா கடைகாரர்களையும் நான் குறிப்பிடவில்லை...ஒரு சில நேர்மையான கடைகாரர்களையும்  எனக்கு தெரியும்....


250 ரூபாய் டயப்பர் அப்படியே விலை கொடுத்து என் காசை நிறைய  கரியாக்கி இருக்கின்றேன்.. ஆனால் 250  ரூபாய் டயப்பர் ரிலையன்சில் 150 ரூபாய்க்கு  ஆபர் பிரைசில் கொடுக்கின்றார்கள்...  ரிலையன்சில் விற்ப்பனை செய்யும் அத்தனை பொருள்களிலும் 5 ரூபாய் எம் ஆர்பி விலையை விட குறைவாகத்தான் கொடுக்கின்றார்கள்... 
ஒருலிட்டர் சன்ரிச் எண்ணெய் பாக்கெட்118 ரூபாய்.. ஆனால் ரிலையன்சில் 76க்கொடுக்கின்றார்கள்...  மோர் போன்ற கடைகளில் சின்னதாக பாக்கெட்டில் கிழிச்சல் இருந்தாலும் அந்த  பொருளுக்கு 30 பர்சென்ட் ஆப்பர் தருகின்றார்கள்...

  நான் பக்கத்தில் இருக்கும் கடைகளை அவசர தேவைக்கு பொருட்களை  வாங்கிக்கொண்டு வாரத்துக்கு  ஒரு முறை ரிலையன்ஸ் மற்றும்  மோரில்  பொருட்களை வாங்கி விடுவேன்...தரம், சுத்தம், பில் ,ஆப்பர், எல்லாம் கிடைக்கும்.... இரண்டாயிரத்துக்கு பொருள் வாங்கினால் கண்டிப்பாக 300 ரூபாய் அளவுக்காவது   மிச்சம் கிடைக்கும்.... அது மட்டும் அல்ல... முதலாளிங்க என்னைக்கும்  முதலாளிங்கதான்.... அவன் வெளியூர் முதலாளி... இவன் சந்துக்கடை முதலாளி அவ்வளவுதான்...

  அம்மாவாசை அதுவுமா செத்துப்போன எங்க அம்மாவுக்கு படைக்க வாழை இலை கேட்டா? கூசாம பதினைஞ்சு ரூபாய்  சொல்லற அந்த தடிப்பு இருக்கே... அத நீங்க எங்கயும் பார்க்க முடியாது.. ஆத்திர அவசரத்துக்கு என்கிட்டதானே வந்தாகனும் என்ற நக்கல் பார்வை அதில் பொதிந்து இருக்கும்....

ரிலையன்ஸ், மோர், ஸ்பென்சர் திறந்த்த காரணத்தால் எந்த மளிகைகடைகாரரும் போண்டியாகி விடவில்லை... வால்மாட் வந்தால், கண்டிப்பாக சுதேசி கம்பெனிகளான ரிலையன்ஸ் போன்றவை போட்டிக்கு தொடை தட்டும்...250 ரூபாய் டயப்பர் 100க்கு கிடைத்தால் 150ரூபாய்   மிச்சம் என்று போகவேண்டியதுதான்... கண்டிப்பாக  அந்த விலை சரிவு.... நிச்சயம் நுகர்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும்....

ஆகவே உண்மை நிலவரத்தை சொல்லிட்டேன்.. அப்படியே ஒரு முறை ரிலையன்ஸ் மற்றும் மோரில் ஆபர்  பொருட்களை வாங்கி பாருங்கள்.. பக்கத்து சந்துக்கடையில் அதுவும் ஒரு வாழை  இலை பதினைந்து ருபாய் சொல்லும் கடைகாரர் கடைக்கு செல்லவே யோசிப்பீர்கள்...நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வந்தாலும் அவன் தெருவுக்கு தெரு கடை வைக்கப்போவதில்லை.. சந்துக்கு சந்துக்கு  சந்து நம் ஆட்கள்தான் கடை விரித்து ஒரு வாழை இல்லை 15 ரூபாய்க்கு விற்ப்பார்கள்....   என்னதான் அவர்களை நாம்  வயிறு  எரிந்து பொருட்கள் வாங்கினாலும் அவர்களை விட்டால்  நமக்கும் நாதி இல்லை என்பதே உண்மை....அதனால் நம்மவர்கள்  நொடிந்து போக வாய்ப்பே இல்லை...

அப்படி நொடிந்து போய் இருக்கின்றார் என்றால் ரிலையன்ஸ் கடை  திறந்தபோதே நொடிந்து இருக்க வேண்டும் அல்லவா? பழைய இடத்துல குடி இருந்த வீட்டுக்கு பக்கத்துல கடை வச்சி இருக்கும் மளிகைகடைக்காரர் குன்றத்தூர் பக்கத்தில் தற்போது இடம் வாங்கி போட்டு இருக்கின்றார்... காலையில் இருந்து  மாலை வரை கடுமையான உழைப்பு அதன் பின்னே இருக்கின்றது என்பதை மறுப்பதற்கு இல்லை.. அதே வேளையில்  டிமாண்டுக்கு ஏற்றபடி, நேரத்துக்கு தகுந்த படி விலையேற்றும் டெக்னிக் அவர்களிடத்தில்தான் கற்றுக்கொள்ளவேண்டும்...

காலையில்   எட்டு மணிக்கு எலும்பிச்சை பழம் கேட்கின்றானா-? நிச்சயம் மதியம் எலுமிச்சை பழ சாதத்துக்குதான் என்று தெரிந்து, மூன்று ரூபாய் எலுமிச்சை பழம் ஆறு ரூபாய்க்கு விற்பார்.... நமக்கு வேற வழிகிடையாது... வாங்கிதான் தொலைக்கனும்...

ச்சே அன்னிய  பொருட்களா.? நான் வாங்க மாட்டேன்பா...  நம்ம  சில்லரை வியாபாரிகளிடம் பொருள் வாங்கி அவர்கள்  வாழ்க்கை தரம் உயர பாடுபடுவேன் என்கின்றீர்களா? ஆல் த  பெஸ்ட்....

என்னை பொறுத்தவரை வால்மார்ட் கூட  வேண்டாம் ரிலையன்ஸ்  மோர் போன்ற கடைகள் போதும்...வால்மார்ட் வந்தாலும் பிரச்சனை இல்லை... வாழை   இலை பதினைந்து ரூபாய்க்கு வாங்கிய இந்த  கிரமத்தானுக்குதான்  அந்த வலி தெரியும்....ச்சே எங்க பக்கத்து கடைகாரர் ரொம்ப நல்லவர் என்கின்றீர்களா?... நீங்கள் பாக்கியசாலி....

ஒரு சிலரை வைத்து அப்படி பொத்தாம் பொதுவாக எடைபோடக்கூடாது ஜாக்கி என்கின்றீர்களா?....

இரண்டு முதலாளிகள் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்ளுவோம்..... எனக்கு சகாயமாக பொருள் கொடுக்கும் முதலாளியிடம் வாங்கிக்கொள்கின்றேன் அவ்வளவே...

 அப்ப தேவையா? தேவையில்லையா...?

வாரத்துக்கு ஒரு முறை, மாதத்துக்கு ஒரு முறை பர்ச்சேஸ் செய்ய அது போல  கடைகள் எனக்கு கண்டிப்பாக தேவை.....சத்துக்கடையும் தேவை...ஒரு  சின்ன பிளேட் வாங்கனும்னாலும் ரிலையன்சு  வால்மார்ட்டுக்கா போக முடியும்??


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.   



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

32 comments:

  1. Totally agree from Consumer perspective. But Walmart is the place compared to our Annachi Saravana Stores. WM in USA has a labour of US People. but they will hire local people and we know our mentality & attitude. You will see the difference between a purchase at local store & Saravana. You won't get customer recognition. After "Angadi Theru Movie", I am not showing my anger to Saravana employees. But as a customer, I feel bad to purchase at Saravana.

    It may be early to decide whether to go on with WM or not. Same WM in US has rollback option. If you see the product not good in quality or high in price, you can return it back within 30 days, whereas we dont have that option in India. Defnly WM in india will be run by an Indian & with indian attitude.

    ReplyDelete
  2. கன்ஸ்யூமர் பாயிண்ட்டில் தான் இந்த பதிவை எழுதி இருக்கின்றேன் ராமு...வால் மார்ட் வந்தாலும் வராவிட்டாலும் கவலை இல்லை.. ரிலையன்ஸ் போதும்...

    ReplyDelete
  3. //வாழை இலை பதினைந்து ரூபாய்க்கு வாங்கிய இந்த கிரமத்தானுக்குதான் அந்த வலி தெரியும்...

    fact!!!!

    ReplyDelete
  4. எனது பதில் தனி பதிவாக.

    http://sathyapriyan.blogspot.com/2012/11/blog-post_28.html

    ReplyDelete
  5. I totally agree with ur point of view Jackie.. But eventhough the advantages r there, once the walmarts and reliances are installed and well settled in India (say 10 to 15 years), they are the one to fix the buying price of any product and will create a enormous problem for our Farmers. Even here in Europe, the farmers are not receiving the appropriate price for their product. (best example:MILK ) So we should stop within the Indian supermarkets as Reliance...

    ReplyDelete
  6. I totally agree with ur point of view Jackie.. But eventhough there is an advantage as a consumer now, once the Walmarts and Reliances are installed and well settled in India (say 10 to 15 years), they are the one fixing the buying price of all the products that wiil affect our farmers and local manufacturers that in turn affect all the consumers including you and I. Even in Europe, the farmers are not receivin the appropriate price of their product (Ex: MILK ) We should not go beyond Indian based shops (Reliance) ... Nevertheless .. an excellent article...

    ReplyDelete
  7. உங்கள் தலைவர் கலைஞர் இதற்க்கு ஆதரவு தெரிவித்த பிறகு, உண்மை தொண்டனாகிய நீங்கள் இதை ஆதரித்து கட்டுரை எழுதுவதில் ஆச்சரியம் இல்லை.

    ReplyDelete
  8. உங்கள் தலைவர் கலைஞர் இதற்க்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தால், நீங்கள் இந்தியாவில் வால்மார்ட்ஐ தடை செய்ய வேண்டும் என்று கட்டுரை எழுதி இருப்பீர்கள்.

    ReplyDelete
  9. It is a great article Jackie. Walmart negotiates price point with big giants like P&G. So it is really good for consumers. Walmart will also give job opportunities but it will take some small businesses out of business for sure. If you are a small business then you need to find your effecieny and work with consumers to gain confidence and trust. One way small business can survive is by introducing locally made products and promoting it as Green.

    ReplyDelete
  10. It is a good point of view... There is one more store called Costco in US..these kind of stores will give us the rich customer experience and the points you told.. but if you look at it in US, there are no small shop owners... 40 or 50 years before there were street shops in US too, but look at now.. nothing.. every where only chain of stores and restaurants...It may be a good look for a short time... but long term, this is going to create lots of unemployment in India.. Not every one are skilled labors in india.. the working class will be affected.... Apart from that I agree the local kadai comment you made.. that is excellent

    ReplyDelete
  11. அந்நிய முதலீடு சில்லறை வர்ர்த்தகத்தில் கொண்டு வருவதால் விவசாயிகளுக்கு கண்டிப்பா நல்லது.
    நல்ல விலைக்கு அவங்க உற்பத்தி பொருளை விற்க முடியும். யாருக்கு இது நஷ்டம் .. இப்போ ரொம்ப குறைவா கொள்முதல் பண்ணி.. Reliance விலை விட அதிகமா விற்கிற பெட்டிக்கடை owners க்கு தான். அந்நிய முதலீடு நிச்சயமா ஒரு நல்ல போட்டிய உண்டாக்கும். நுகர்வோருக்கும் விவசாயிகளுக்கும் கண்டிப்பா நல்லதுதான்.
    See பெட்டிகடைல மட்டும் இப்போ என்ன நடக்குது. பெருங்கலதூர்ல கடை வச்சு இருக்கிற owner செங்கல்பட்டுல காய்கறி வாங்கிட்டு கோயம்பேடு ரேட் விட அதிகமா விற்கிறாரு. பெடிகடைகள் கூட இபோ globalization மாதிரிதான். சென்னையும் சுற்றுவடரதிலும் ஒரே விலை. ஆனால் அவங்களோட கொள்முதல் விலை வேறு வேறா இருக்கும். Good article சார்.

    ReplyDelete
  12. நான் என்ன எழுத போகின்றேன்...-எப்படி எழுத போகின்றேன்... என்பதை அட்சரம் பிசகாமல் தெரிந்து வைத்து இருக்கின்றீர் என்றால் நீங்கள் பலே கில்லாடிதான் சார்.. நீங்கள்... அடுத்த என்ன பதிவு எழுத போகின்றேன்.. என்ன நிலைப்பாடு எடுக்க போகின்றேன் என்று தாங்கள் சொன்னால் தன்யனாவேன்... நன்றி இவன்யார்....

    ReplyDelete
  13. aanaa ithula parunga! piracinai FDI venuma venama apdingrathillai ippo! FDI vantha 2G swaga!

    ReplyDelete
  14. FDI pootham! 2G saathana thinnututhaan ulla varum!

    ReplyDelete
  15. ஒரு சிலரை வைத்து அப்படி பொத்தாம் பொதுவாக எடைபோடக்கூடாது

    ReplyDelete
  16. Have you seen the documentary on walmart? "The High Cost of Low Prices". Its available in youtube. It runs for about 90 minutes. Please ask yourself if you still support them after watching this.

    ReplyDelete
  17. How Much Peoples Does Annachi Gives Job in his Shop. Chain Stores give Jobs for many people compared to local Shops with Much Higher Salary. Many Ladies will be employed. In my town there is a chettiyar shop they make huge turnover but with low salaried employees. So for one family how many other famlies loss. In Big stores there are many Jobs catagories avilable and chain of people benifited.

    ReplyDelete
  18. அருன் நீங்கள் சொல்வதில் உடன் படுகின்றேன்...மோர் கடையில் வேலை செய்யும் பெண்ணுக்கு எட்டு மணி நேரம் டுயூட்டி, 5,500 ரூபாய் சம்பளம்... இதை எந்த மளிகைகடையும் சந்துக்கடையும் செய்ய முடியாது... மளிகை கடையில் வேலை பார்க்கும் பல அடிமைகளை எனக்கு நன்கு தெரியும்....

    ReplyDelete
  19. திரும்பவும் சொல்லறேன்.. வால்மார்ட் வந்துதான் என் தேவையை நிறைவேத்த போவுதுன்னு சொல்லவரலை... ரிலையன்ஸ் டாடாவே போதும்... என்ன அவுங்க வந்த இவுங்க இன்னும் நுகர்வோருக்கு ரொம்ப சீப்பா கொடுக்க முடியும்... அவ்வளவே...

    ReplyDelete
  20. முதன் முதலில் கணினியை அறிமுகம் செய்யும்போது பாதி பேருக்கு வேலை போய்விடும் என்று கம்யுனிஸ்ட்கள் கூக்குரளிட்டார்கள் என்ன ஆச்சு மாறாக வேலை வாய்ப்பு கூடியது. வளைகுடா நாடுகளில் உலகத்தில் உள்ள அத்தனை சூப்பர் மார்க்கட்டுகளும் இருக்கிறது அத்துடன் குரோசெரி என்று அழைக்கப்படும் சிறிய அண்ணாச்சி கடைகள் இந்தியர்களால் வெற்றிகரமாக நடக்கிறது.

    ReplyDelete
  21. இதை வேறு மாதிரி யாரும் சிந்திக்க மாட்டீர்களா? இன்று இடைத்தரகர்களால் விலைவாசி ஏறுகிறது என்று சொல்லும் நாம் அந்த இடைத்தரகர்கள் இந்தியர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. ஆக என்னதான் விலைவாசி ஏறினாலும், அந்த பணம் இந்தியாவிற்குள்ளேயே புழங்கும். ஆனால் அந்நிய முதலீடுகளின் மூலம் சம்பாதிக்கப்போவது அமெரிக்கனே. அடுத்தது, அந்நிய முதலீட்டாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே விவசாயியிடம் பொருட்களை வாங்குவார்கள். அப்படிப்பார்த்தால், அவர்கள் 10 வருடத்திற்கு ஒரு விவசாயியிடம் வெறுமே அரிசி பயிரிட வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டால், விவசாயி விளைச்சல் இல்லாத நேரத்தில் கூட ஊடுபயிர் எதுவும் போட முடியாது. அவர்கள் அரிசியை மட்டுமே நம்பி இருக்க வேண்டும். பருவமழை பொய்த்தால் விவசாயி தூக்கு கயிறுக்கு கழுத்தை கொடுக்க வேண்டியது தான்.

    ReplyDelete
  22. Senthil Kumar, indian sambaarichu swiss bank-la pottaaalum namakku patta naamamthaan...

    ReplyDelete
  23. Your point of view very very clear sekar , i agree . I had purchase last 4+ year on relience,spencer,more . Got lot of offer and good quality.

    ReplyDelete
  24. Nice article. Positive approach. Even i know the jobless people in before globalistaion. The youth people dont know the "No Vacancy" Board.

    ReplyDelete
  25. நெல் விலை 1300 ரூபாயினை தாண்டவில்லை. அரிசி அடக்கவிலை சரி பாதியாக நிர்ணயித்தாலும் கிலோ 26 தான். ஆனால் நம் ஆட்கள் விற்பது கிலோ ரூ 48 அதுவும் கர்னாடகா அரிசி அதே அரிசி ஸ்பர் மர்கெட் கோவையில் 38 தான். கிலோவிற்க்கு பத்து ரூபய் வித்தியாசம்
    சரி எத்தனை மளிகை கடைக்காரர்கள் வருமான வரி கட்டுகிறார்கள்.
    டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்திருப்பவன் கட்டுவானே
    இப்ப்து எல்லாம் சோப் விலை அட்டையில் உள்ள விலைதான்
    அதுவும் மோர் ரிலையன்ஸில் விலை குறைவுதான்.
    ஆனால் ஒரே வித்தியாசம்
    நகர்புறத்தில் உள்ளவர்கட்ட்கு தான் இந்த வசதிகள்
    மற்றவர்கள் அண்ணாச்சியினை விட்டால் வேறு கதி கிடையாது. கடன் வேறு தருகிறாரே!

    ReplyDelete
  26. அண்ணா நீங்க உங்கள் தனிபட்ட அனுபவத்தில் இதை எழுதி இருக்கீங்க ஆனால் உன்மையில் நீங்க சொன்னது எல்லாம் மாசா மாசம் சரியா சம்பளம் வாங்குகின்ற நிரந்தர வருமானம் உள்ளவர்களுக்கு சரியாக இருக்கலாம் ஆனால் நிரந்தர வருமானமில்லாத சில நடுத்தர மற்றும் பல கீழ் நடுத்தர மக்களுக்கு இது சரியாக வருமா? மேலும் அவ்வபொழுது நாம் வாங்கும் குளிர்பானம் எப்பொழுதாவது வாங்க்கும் மின் சாதன பொருட்கள் மற்றும் என்றாவது ஒரு நாள் வாங்கும் வாகனம் (கார், பைக்) போன்ற வெளிநாட்டு பொருட்களில் அன்னிய முதலீடு பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால் இது நம் வாழ்வின் அத்தியவசிய பொருட்களின் வியபாரம். அதை அன்னிய முதலீட்டாளர்களின் கட்டுபாட்டில் விடுவதற்கு முன் நாம் கொஞ்சம் சிந்தித்து செயல்படவேண்டும். கடைசியில் நீங்க சொன்ன மாதிரி மாதம் ஒரு முறை ரிலையன்சும் அவசர தேவைக்கு அண்ணச்சி கடையும் போதும் வால்மார்ட் வேண்டாம். பிறகு எலித்தொல்லைக்கு பாம்பை வளர்த்த மாதிரி ஆகிவிடும். எலி எல்லாம் செத்த பிறகு பாம்பு நம்மை கடிக்க தொடங்கிவிடும்.

    ReplyDelete
  27. அண்ணா நீங்க உங்கள் தனிபட்ட அனுபவத்தில் இதை எழுதி இருக்கீங்க ஆனால் உன்மையில் நீங்க சொன்னது எல்லாம் மாசா மாசம் சரியா சம்பளம் வாங்குகின்ற நிரந்தர வருமானம் உள்ளவர்களுக்கு சரியாக இருக்கலாம் ஆனால் நிரந்தர வருமானமில்லாத சில நடுத்தர மற்றும் பல கீழ் நடுத்தர மக்களுக்கு இது சரியாக வருமா? மேலும் அவ்வபொழுது நாம் வாங்கும் குளிர்பானம் எப்பொழுதாவது வாங்க்கும் மின் சாதன பொருட்கள் மற்றும் என்றாவது ஒரு நாள் வாங்கும் வாகனம் (கார், பைக்) போன்ற வெளிநாட்டு பொருட்களில் அன்னிய முதலீடு பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால் இது நம் வாழ்வின் அத்தியவசிய பொருட்களின் வியபாரம். அதை அன்னிய முதலீட்டாளர்களின் கட்டுபாட்டில் விடுவதற்கு முன் நாம் கொஞ்சம் சிந்தித்து செயல்படவேண்டும். கடைசியில் நீங்க சொன்ன மாதிரி மாதம் ஒரு முறை ரிலையன்சும் அவசர தேவைக்கு அண்ணச்சி கடையும் போதும் வால்மார்ட் வேண்டாம். பிறகு எலித்தொல்லைக்கு பாம்பை வளர்த்த மாதிரி ஆகிவிடும். எலி எல்லாம் செத்த பிறகு பாம்பு நம்மை கடிக்க தொடங்கிவிடும்.

    ReplyDelete
  28. நன்றி கருத்துக்களை பகிர்ந்தவர்களுக்கு....ராசி... வால்மார்ட் தேவையில்லை... அதே நேரத்துல... வந்தாலும் பெரிய இழ்ப்பு இருக்காது காரணம் நம் மக்கள் தொகை.....

    ReplyDelete
  29. விலை குறைத்து கொடுப்பார்கள் என்று கூறுகிறீர்கள்.. கத்தரிக்காய் ஒரு கிலோ பத்து ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு விவசாயிகளிடம் எவ்வளவு ரூபாய்க்கு கொள்முதல் செய்வார்கள்? அப்படி கொள்முதல் செய்யும் விலைம்திப்பு விவசாயிகளுக்கு போதுமானதாக இருக்குமா?

    நுகர்வோருக்கு வேண்டுமானாலும் லாபமாக இருக்குமெ தவிர விவசாயிகள் மற்றும் சிறு குறு வியாபாரிகள் நிச்சயமாக பாதிக்கப்படுவார்கள் என்பது தான் உண்மை......

    ReplyDelete
  30. விலை குறைத்து கொடுப்பார்கள் என்று கூறுகிறீர்கள்.. கத்தரிக்காய் ஒரு கிலோ பத்து ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு விவசாயிகளிடம் எவ்வளவு ரூபாய்க்கு கொள்முதல் செய்வார்கள்? அப்படி கொள்முதல் செய்யும் விலைம்திப்பு விவசாயிகளுக்கு போதுமானதாக இருக்குமா?

    நுகர்வோருக்கு வேண்டுமானாலும் லாபமாக இருக்குமெ தவிர விவசாயிகள் மற்றும் சிறு குறு வியாபாரிகள் நிச்சயமாக பாதிக்கப்படுவார்கள் என்பது தான் உண்மை......

    ReplyDelete
  31. முதலாளிங்க என்னைக்கும் முதலாளிங்கதான்.... அவன் வெளியூர் முதலாளி... இவன் சந்துக்கடை முதலாளி அவ்வளவுதான்...

    ReplyDelete
  32. முதலாளிங்க என்னைக்கும் முதலாளிங்கதான்.... அவன் வெளியூர் முதலாளி... இவன் சந்துக்கடை முதலாளி அவ்வளவுதான்...
    super super this is true

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner