தென்
மாவட்டத்து இளைஞர்கள் அனைவரும் படித்து மனதில் நிறுத்துக்கொள்ள வேண்டிய
உப்புக்காத்து பகுதி இது....
பொதுவாய் கல்வியில் கோலோச்சும் தென் மாவட்டத்து இளைஞர்கள் இளைஞிகள் தோற்றுப்போகும் இடம் எதுவென்றால் ஆங்கில மொழியிடம்தான்....மாநில
அளவில் தேர்வுகளில் முதல்
மதிப்பெண் பெற்றவர்கள்...
சென்னை கல்லூரிகளில் சேர்ந்த மூன்றாவது மாதத்தில்
ஒன்று படிப்பை தொடர மறுக்கின்றார்கள்... அல்லது தூக்கு கயிற்றை நாடிப்போய் உயிரை
மாய்த்து கொள்ளுகின்றார்கள்...
இது காலம் காலமாய் நடந்து வரும்
கொடுமைதான்..ஒன்றாம் வகுப்பில் இருந்து
பண்ணிரண்டாம் வகுப்பு வரை பர்ஸ்ட் ரேங்க் எடுத்து வெற்றி பெற்று வரும் மாணவன்... முழுக்க முழுக்க
ஆஙகில வழிக்கல்விக்கு மாறும் போது கண்ணை கட்டி காட்டில் விட்டது போல திகைத்து... சென்னை ஆங்கிலத்தோடு போட்டி போட முடியாமல்,
ஆங்கில மொழியை வைத்துகொண்டு சென்னை
மாணவர்கள் பேசும் கேலியை மனதளவில்
பொறுத்துக்கொள்ள முடியாமல் உயிரை
மாய்த்துக்கொள்ளுகின்றார்கள்....
சென்னை இளைஞனை விட, ஒரு தென் மாவட்டத்து இளைஞன்
ஜெயிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல...
உதாரணத்துக்கு இளையாராஜா. ஏஆர் ரகுமான்
இரண்டு பேரும் மிகத் திறமையானவர்கள்... அதில் மாற்றுக்கருத்து இல்லை... இரண்டு
பேரும் சிறு வயதில் கஷ்டப்பட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது...ஆனால்
சென்னையில் இருக்கும் ரகுமான் பத்மசேஷாத்திரியில் படித்தார்....சென்னை போன்ற
இடங்களில் கிடைத்த வாய்ப்புகள் என்று அவரை உலகம் எங்கும் கொண்டு சென்று
விட்டது...ஆனால் ராஜா அப்படி அல்ல.. பண்ணயபுரத்தில் படித்து,. சென்னையில் தங்க இடம் இல்லாமல்
வறுமையில் உழன்று ஆங்கிலம் தெரியாமல்
சென்னை காலாச்சாரத்தோடு போட்டி போட்டு இந்த நிலைக்கு வந்து இருக்கின்றார் என்றால் ஏஆர்ரகுமானை
விட ஒரு படி ராஜா இந்த விஷயத்தில் உயர்ந்தவர் என்றே சொல்லுவேன்...
தூத்துக்குடி
விளாத்திகுளம் அருகே இருக்கும் தங்கம்மாள்புரத்தில் பிறந்து, ஏழாம் வகுப்பில்
ஆங்கிலம் என்ற ஒரு சப்ஜெக்ட் இருக்கின்றது என்று அறியப்பட்டு எட்டாம் வகுப்பில் ஏ
பார் ஆப்பிள் படித்து ஆங்கில மொழியை துச்சமென மதித்து அந்த மொழியோடு போர் புரிந்து அதனை எட்டி நடுமார்பில் உதைத்து, அந்த மொழியை
நிலை குலைய செய்து அந்த மொழியில் இரண்டு
புத்தங்கள் எழுதியவனின் கதை , ஒன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு தாய் கல்வி மீது வைத்த பெரும் நம்பிக்கையை வீண் போக செய்யாமல் அந்த தாயை தலைநிமிர
வைத்தவனின் கதை..இந்த உப்புக்காத்து...
தூத்துக்குடி
விளாத்திகுளம் அருகே இருக்கும் தங்கம்மாள்புரத்தில் வீரப்பன் சீனியம்மாள் தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள்...
இரண்டு ஆண் பிள்ளை மற்றும் ஒரு பெண்பிள்ளை செல்வத்தோடு இனிதே
வாழ்ந்தார்கள்...நம்ம நாயகனின்
பெயர்... சித்தன் என்று
வைத்துக்கொள்ளுவோம்.....
சித்தன்..... வீரப்பன் சீனியம்மாள் தம்பதிகளுக்கு நடுப்பிள்ளை... சித்தனுக்கு
மூன்று வயதாகும் போது, தந்தை இறந்து போனார்... ஒன்றாம் வகுப்பு மட்டுமே படித்த தாய் சீனியம்மாள் மூன்று
பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்....
சித்தன்
படிப்பில் படுசுட்டி...காரணம் சீனியம்மாளின் தாத்தா சுப்பைய்யா ஒரு ஓலைச்சுவடி
எழுத்தாளர் என்பதால் தன் மகனும் படிப்பில்
படு சுட்டியாக விளங்குகின்றான் என்று
எல்லோரிடமும் பெருமை பொங்க சொல்லுவார்... சித்தன் அவரது கதையை நம்மோடு பகிர்ந்துகொள்கின்றார்....
ஐந்தாம் வகுப்பு வரை தங்கம்மாள்புரத்தில்
படித்தேன்... அதன் பின் வெம்பாரில் இருக்கும் அரசுபள்ளிக்கு
சென்றேன்...தங்கம்மாள்புரத்தில் இருந்து தினமும் 5 கிலோ மீட்டர் நடந்தே பள்ளிக்கு
செல்ல வேண்டும்.. போக வர பத்து கிலோ
மீட்டர் தினமும் நடக்க வேண்டும்.
இன்றளவும் என்னால் மறக்க முடியாத டீச்சர் யார்
என்று கேட்டால் லூர்துமலை மேரி என்ற
ஆங்கில பாடம் நடத்தும் ஆசிரியர் அவர்தான் ஆங்கிலத்தை வெகு இலகுவாக எனக்கு புரிய வைத்தவர்....
1968களில்தான் எனக்கு
ஆங்கில மொழி பரிட்சயம்.... ஆங்கிலம் என்ற மொழியை கேள்விபட்டு இருந்தாலும்
எங்களுக்கு எட்டாம்வகுப்பில்தான் ஏ பார் ஆப்பிள் சொல்லிக்கொடுத்தார்கள்...என்கின்றார்
சித்தன்...
அப்போதுத்தான் எங்களுக்கு
ஆங்கில மொழி அறிமுகம்...வெம்பார் அரசு பள்ளியில் படித்தேன்... ஸ்கூல் பர்ஸ்டாக
வந்தேன்...
தென்
மாவட்டத்து இளைஞர்கள் சந்திக்கும் பெரிய
பிரச்சனை என்ன கோர்ஸ் எடுக்க வேண்டும்..
எது எடுத்தால் என்னவாகலாம் என்று யாருக்கும் தெரியாது...எனக்கு அதுதான் அப்போது
பெரிய பிரச்சனை...பியூசி படிக்க பணம் இல்லை...
என் அம்மாவிடமும் பணம் இல்லை..
அப்பா வைத்த விட்ட போன நிலத்தை ஊரில் இருக்கும் பண்ணையாரிடம் அடகு வைத்து என்னை
படிக்கவைக்க வேண்டும் என்று என் அம்மா சீனியம்மா நினைத்தார்..
தோ
பாரு சீனியம்மா உன் பிள்ளை படித்து உன்னை
காப்பாற்றுவான் என்று எப்படி நம்புறே... -?இருக்கற வருமாணம் கொடுக்கற நிலத்தை
எதுக்கு அடகு வைக்கிற..? இங்க ஏதாவது வேலை
செய்ய சொல்லு என்று பண்ணையார் அட்வைஸ்
செய்தாலும் தன் பிள்ளை சித்தன் படிப்பின்
மேல் உள்ள காதல் முறிந்து விடக்கூடாது என்று
நினைத்த ஒன்றாம் வகுப்பு படித்த சீனியம்மாள்...1000ரூபாய்க்கு நிலத்தை அடகு வைத்து பாளையங்க்கோட்டை புளித
சேவியர் கல்லூரிக்கு பியூசி படிக்க
அனுப்பினார்....கல்லூரி கட்டணம் 600ரூபாய் மற்றும் கை செலவுக்கு 200ம் என் அம்மா
சீனியம்மா எனக்கு கொடுத்து அனுப்பினார் என்கின்றார் சித்தன்....
தமிழ்
வழியில் படித்த எனக்கு கல்லூரியில் முழுவதும்
ஆங்கிலத்தில் படங்கள் இருந்த காரணத்தால்
நான் நிலைகுலைந்து போனேன்.. என்ன பாடம் எடுக்க வேண்டும் என்று
தெரியாமல் செக்கன்ட் குருப்
எடுத்தேன்... முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை முதல் மாணவனாக
திகழ்ந்த எனக்கு ஆங்கில பாடம் எனக்கு பெரும் தலைவலியாக இருந்தது...
ஆங்கில மீடியத்தில் படித்து விட்டு
வந்த மாணவர்களோடு என்னால் சரிக்கு சமமாக போட்டி போட முடியவில்லை... நான்
படிக்க லாயிக்கில்லேயோ என்று நினைத்து பாத்ரூமில் போய் அழுது இருக்கின்றேன்.
ஆனால் ஒன்று மட்டும் மனதில் இருந்தது..
அம்மா எனக்காக பண்ணையாரிடம் கடன் வாங்கி என் மேல் நம்பிக்கை வைத்து, பாளையங்க்கோட்டை அனுப்பி படிக்க வைத்த
நம்பிக்கையை உடைக்க மனம் இடம் கொடுக்கவில்லை....
டெய்லி
இந்து பேப்பர் வாங்கினேன்.... ஒன்றாம் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை
படித்தேன்... வரி விளம்பரத்தில் எந்த வரியையும் விட்டு வைக்கவில்லை... புரியாத
வார்த்தைக்கு டிக்ஷனரி வைத்து படித்தேன்... ஒரு நாளைக்கு தெரியாத 5 ஆங்கில
வார்த்தைகளை எழுதி எழுதி மனப்பாட செய்ய ஆரம்பித்தேன்.... அப்ப வருஷத்துக்கு
எத்தனை வார்த்தைகள் மனப்பாட செய்ய முடியும் என்று
யோசித்துக்கொள்ளுங்கள்....
இன்றைய இளைஞர்களுக்கு
நான் சொல்லுவது என்னவென்றால் ஆங்கிலம் தெரியவில்லை என்று கவலை படுவதை விட
அதை கற்றுக்கொள்ள தினமும் ஆங்கில தினசரி
படியுங்கள் என்கின்றார் சித்தன் ... முதல் ரேங்க் எடுத்த நான் ஆங்கில மொழியின் காரணமாகவும்... அப்போது கல்லூரியில்
நடந்த ஸ்டைக் மற்றும் எம்ஜியார் திமுக கழகத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நேரம்
என்பதால் கல்லூரி பல நாட்கள் நடைபெறவில்லை அதனால் இரண்டாம் வகுப்பில் தேர்வு பெற்றேன்...
அதன்
பின் சேவியர் கல்லூரி பாதர்.. பிஎஸ்சி சுவாலஜி எடுத்து
படிக்க சொன்னார்.. காரணம் என்ன எடுத்தால் பெரிய
வேலைக்கு செல்லலாம் என்று தெரியாத
காலக்கட்டம் அது என்கின்றார் சித்தன்..ஆனால் பிஎஸ்சி சவாலஜியில் முதல் மதிப்பெண்
பெற்றேன்...அன்றிலிருந்து இன்று வரை இந்து
பேப்பர் ஒரு வரி விடாமல் படித்து
வருகின்றேன்.
படித்து
முடித்து நான்கு மாதங்கள் ஊரில் எல்லா வேலைக்கு அப்ளை செய்து கொண்டு
இருந்தேன்.. என் அண்ணன் அப்போது சென்னை டிரிப்ளிகேன் மேன்ஷனில் தங்கி வேலைபார்த்து
வந்தார்... சென்னையில் வந்து ஏதாவது வேலை பார் என்றார்....டிரிப்ளிகேன் போலிஸ்
ஸ்டேஷன் எதிரில் இருக்கும் செல்லராம்
துணிக்கடையில் 150ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்த்தேன்....
சேர்ந்த இரண்டாவது
மாதத்தில் என் வேலை பிடித்து போய்,175
ரூபாய் சம்பயம் ஏற்றிக்கொடுத்தார்கள்.... அந்த இடத்தில் இதற்கு முன் வேலை செய்த நபர்.. டிஎன்பிஎஸ்சி பரிட்சை எழுதி
கிளார்க்காக தேர்வு பெற்று அரசு உத்யோகத்துக்கு சென்றது தெரிய வந்தது...
அப்போதுதான் எனக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வகள் பற்றி தெரியவந்தது..
1976
இல் டிஎன்பிஎஸ்சி, மற்றும்..யூபிஎஸ்சி தேர்வுகளுக்கு அப்ளை செய்தேன்..அப்போது
எமர்ஜன்சி நேரம்...எஸ்ஐ போஸ்ட்டுக்கு ஒரு அப்ளிகேஷன் வாங்கி கடைசி நாளில் கடைசி
நிமிடத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன் அந்த பெட்டியில் போட்டேன்.. தேர்வு
எழுதினேன்.....30,000 பேர் கலந்து கொண்ட அந்த தேர்வில் 333 பேர் தேர்வு
செய்யப்பட்டார்கள்... எனக்கு 37 வது இடம் கிடைத்தது...
சென்னை
அசோக்நகரில் இருக்கும் போலிஸ் டிரெயினிங் சென்டரில் டிரெயினிங்....சின்ன வயதில்
இருந்தே படிப்பு படிப்பு என்று இருந்த காரணத்தால் விளையாட்டில் பெரிய கவனம்
எல்லாம் இல்லை.. ஆனால் போலிஸ்வேலைக்கு
சேர்ந்த காரணத்தால் சென்னை மெரினா கண்ணகி சிலைக்கு பின்புறம் தினமும் ரன்னிங் போய் என் உடலை உறுதி செய்தேன்...
1976இல் மாத
சம்பளம் 500ரூபாய்.... இரண்டு வருடத்தில் பண்ணையாரிடம் அடகு வைத்த நிலத்தை அம்மோவோடு சென்று மீட்டேன்...
1978 இல் சாயல்குடியில்
எஸ்ஐ போஸ்ட்... சித்தன்னன் எஸ்ஐயாக எனது பக்கத்து ஊரில் போலிஸ்
உத்யோகம்...அந்த காலத்தில் எனது சொந்த ஊரில் காக்கிசட்டையோடு மிடுக்காக வளம் வந்த
தருனங்கள் என்னால் இன்றளவும் மறக்க
முடியவில்லை...ஆங்கித்தை நினைத்து படிக்காமல் திரும்ப கிராமத்துக்கு ஓடிப்போய் இருந்தால்..? யோசித்து பாருங்கள்.... நிறைய இளைஞர்கள் சருக்கும் இடம் இந்த இடம்தான் என்கின்றார் சித்தன்...
அதன்
பின் திருமணம்.. முன்று மகன்கள்....என்
மனைவி சொன்னாள்... இன்னும் ஏதாவது படிக்க வேண்டும் என்று
கேட்டுக்கொண்டாள்....1997இல் லா காலேஜில் இவினிங் காலேஜில் சேர்ந்து படித்தேன்..
அன்றைய காலகட்டத்தில் பிரின்ஸ்பாலாக இருந்த ராபின் என் வாழ்வில் மறக்க முடியாத
நபர்...பிஏபிஎல் மற்றும் எம் எல் முடிதேன்... எஸ்பியாக பணி உயர்ந்தேன்..
இம்மாரள்
டிராபிக் என்ற கையேடு ஒன்றை தயார்
செய்தேன்...அந்த கையேட்டுக்கு மிகுந்த வரவேற்ப்பு இருப்பதை கண்டு... பெரிய அளவில்
ஆங்கிலத்தில் அந்த புத்தகத்தை எழுதினேன்.. எனக்கு சட்டமும் தெரியும் என்ற காரணத்தால்
கிரைம் இன்வெஸ்ட்டிகேஷன் என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதினேன்... இந்தியா முழுக்க அந்த
புத்தகத்துக்கு காவல் துறையில் பெரிய வரவேற்ப்பு பெற்றது... அந்த புத்தகம் வெளிவந்த
போது ஆங்கிலம் தெரியாமல் தவித்தகாலங்கள்
என் மனதில் முட்டி மோதின....
இந்த
புத்தகத்தை பற்றி கேள்விபட்டு எழுத்தாளர் சுஜாதா கிரைம் இன்வெஸ்ட்டிகேஷ்ன்
புத்தகத்தை வாசித்து விட்டு கற்றதும் பெற்றதும் பகுதியில் மூன்று பக்கத்துக்கு
எழுதினார்... வேட்டையாடு விளையாடு
படத்தின் போது கூட கமல் பல விஷயங்கள் என்னிடத்தில் கேட்டு தெளிவு பெற்று இருக்கின்றார்....இப்போது கூட காவல் துறை பற்றி
படம் எடுக்க கவுதம் வாசுதேவமேனன் என்னிடம் நிறைய டிப்ஸ்கள் பெற்று
இருக்கின்றார்...
கிரைம்
இன்வெஸ்ட்டிகேட்டிங் மற்றும் இம்மாரள் டிராபிக்
இரண்டு புத்தகங்களை பெரிய பொறுப்பில் இருக்கும் தமிழ் ஆர்வலரிடம் கொடுத்த போது , தமிழில்
இருந்தால் இன்னும் நிறைய பேருக்கு உதவியாய் இருக்கும் என்று சொன்னார்....தமிழில்
இந்த புத்தகத்தை எழுதி வருகின்றேன்... தமிழில்
எளிமையான கலைசொற்களை பயண்படுத்த நேரம் எடுத்து கொள்கின்றது... உதாரணமாக
அலிபி என்ற ஒரு வார்த்தை அதற்கு தமிழில்
எளிமை படுத்த இரண்டு வாக்கியங்கள் சொல்ல
வேண்டும்.. அதை இன்னும் சுருக்கி சொல்ல ,எளிமையாய் புரியவைக்க எழுதி
வருகின்றேன்....ஜனவரியில் இந்த இரண்டு புத்தகங்களும் வெளியிட வேலைகள் நடந்து
வருகின்றது என்றார்...
58
வயது ஆகின்றது... பாத்தால் அப்படி அவர்
இல்லவே இல்லை. இன்னும் இளமையாக இருக்கின்றார்... பெரிய இடத்துக்கு சென்று விட்டால்
பழசை பலர் மறந்து விடுவார்கள்...ஆனால் இன்றும் திரும்பி பார்க்கும் சித்தன்னன்
சார் ஒரு தன்னம்பிக்கை சின்னம்தான்...
ஒரு
புத்தகம் எழுதுவது சாதாரண விஷயம்... அல்ல இந்தியா முழுமைக்கும் ஆங்கிலத்தில்
காவல்துறை சம்பந்த பட்ட ஒரு புத்தம் வெளியாகின்றத என்றால் கண்ணில் விளக்கெண்ணெய்
ஊற்றி தவறு கண்டு பிடிக்க வருவார்கள்... அப்படி வராதவாறு எழுதி
இருக்கின்றேன்... அந்த அளவுக்கு கடின
உழைப்பு அதில் இருக்கின்றது...
நண்பர்
ஒருவர் மூலம் எனக்கு நேற்றுதான் எனக்கு சித்தன்னன் சார் அறிமுகம்.... மிக நீண்ட
நாட்கள் பழகிய நண்பர் போல மனம் விட்டு பேசினார்... அவர் எழுதிய
புத்தகத்தில் இருந்த ஆங்கில புலமை என்னை மெய்சிலிர்க்க வைத்தது..அவரிடம் பிடித்த வாசகம்...100குற்றவாளிகள்
தப்பிச்சாலும் ஒரு நிரபராதி தண்டிக்க கூடாது என்று காலம் காலமாய் சொல்லும் வாசகத்தை கடுமையாக மறுத்தார்...ஒரு
குற்றவாளியும் தப்பிக்க கூடாது... ஒரு நிராபராதியும் தண்டிக்கபட கூடாது என்கின்றார்
சித்தன்னன்....
தூத்துக்குடி
தங்கம்மாள்புரத்தில் இருந்து வந்து போலிஸ் அதிகாரியாக உயர்வு பெற்று அப்படியே
வக்கிலுக்கும் படித்து வெற்றி பெற்று ஆங்கில புலமையோடு ஆங்கில புத்தகம் எழுதுவது
சாதாரண விணயம் அல்ல.. அதன் பின் கடுமையாக உழைப்பு தேவை என் முன்னே அந்த கடுமையான
உழைப்பு சித்தன்னன் என்ற உருவத்தில் என்
எதிரில் உட்கார்ந்து பேசிக்கொண்டு
இருக்கின்றது... ஒரு கிரைம் நாவல் எழுதிக்கொண்டு இருப்பதாகவும் அது வெளிவரும் போது இன்னும் பரபரப்பாய் இருக்கும் என்றும் சொல்கின்றார்......
இளையாராஜா,ரகுமான்
இரண்டு பேருமே திறமையானவர்கள்...சிறுவயதில் கஷ்டப்பட்டவர்கள்...ஆனால் பண்ணயபுரத்து
வெற்றிக்கும் சென்னை வெற்றிக்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கின்றது...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
இளைஞர்களை ஊக்குவிக்கும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் ! !
ReplyDeletereally motivating...nice
ReplyDeleteregards
geetha
Excellent article. Thank you!
ReplyDeleteExcellent article. Thank you!
ReplyDeleteVery nice. Let us know when the book will be released in Tamil.
ReplyDeletesuper.....
ReplyDeletesuper....
ReplyDeletesuper.....
ReplyDeleteஆங்கிலத்தை எல்லோருமே ஒரு பெரிய தடைக்கல்லாக பார்க்கிறார்கள். எனக்குமே பத்தாம் வகுப்பு வரை ஆங்கிலம் என்றால் எட்டிக்காய்; கணிதம் என்றால் பாகற்காய். ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும் பொது எனது வீட்டுக்கருகில் இருந்த ராஜகோபால் என்கின்ற ஆங்கில ஆசிரியர் (இன்று இவர் சொர்க்கம் ஏகி விட்டார்) அதனை தமிழ் போன்ற ஒரு மொழியாக மட்டுமே நினைத்து படித்துப்பார். தினமும் ஆங்கில செய்தித்தாள் (ஹிண்டு) படித்து வா (நான் படிக்காதது வேறு விஷயம்); தெரியாத வார்த்தைகளுக்கு டிக்ஷனரியில் பொருள் தேடு என்று சொன்னார். அவர் சொன்னதில் "தேடு" என்பதை மட்டும் எடுத்துக்கொண்டேன். பின்னாளில், ஆங்கில வழியில் கல்வி கற்று வந்த பலர் எனது கல்லூரி நாட்களில் என்னிடம் வந்து ஆங்கிலத்தில் கட்டுரைகளும் கவிதைகளும் (கல்லூரி வரவேற்பு (welcome) மற்றும் வழியனுப்பு [farewell] விழாக்களில் பேச) வாங்கி சென்ற அந்த ஞாபகம் இன்றும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.
ReplyDeleteஆக வாழ்வில் பெரும்பாலும் தேடுதல் இல்லாதவர்களே தோற்றுப்போகிறார்கள். இன்றைய இளைய தலைமுறையினரிடம் இன்னும் வளர வேண்டிய ஒரு பண்பு நம்மிடம் இல்லாத ஒன்றை தேடுதல். அந்த தேடுதல் இருப்பவர்கள் இன்றும் ஜெயித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இல்லாதவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
அதனால் இன்றைய இளைய தலைமுறைக்கு எனது ஒரே அறிவுரை - உங்களிடம் இல்லை என்று சோர்ந்து போய் ஓடிப்போகாமல் தேடுங்கள். நிச்சயமாக சென்னையில் ஆங்கில வழி கல்வி கற்றவர்களுக்கு நீங்கள் இளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க முடியும்.
ஆங்கிலத்தை எல்லோருமே ஒரு பெரிய தடைக்கல்லாக பார்க்கிறார்கள். எனக்குமே பத்தாம் வகுப்பு வரை ஆங்கிலம் என்றால் எட்டிக்காய்; கணிதம் என்றால் பாகற்காய். ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும் பொது எனது வீட்டுக்கருகில் இருந்த ராஜகோபால் என்கின்ற ஆங்கில ஆசிரியர் (இன்று இவர் சொர்க்கம் ஏகி விட்டார்) அதனை தமிழ் போன்ற ஒரு மொழியாக மட்டுமே நினைத்து படித்துப்பார். தினமும் ஆங்கில செய்தித்தாள் (ஹிண்டு) படித்து வா (நான் படிக்காதது வேறு விஷயம்); தெரியாத வார்த்தைகளுக்கு டிக்ஷனரியில் பொருள் தேடு என்று சொன்னார். அவர் சொன்னதில் "தேடு" என்பதை மட்டும் எடுத்துக்கொண்டேன். பின்னாளில், ஆங்கில வழியில் கல்வி கற்று வந்த பலர் எனது கல்லூரி நாட்களில் என்னிடம் வந்து ஆங்கிலத்தில் கட்டுரைகளும் கவிதைகளும் (கல்லூரி வரவேற்பு (welcome) மற்றும் வழியனுப்பு [farewell] விழாக்களில் பேச) வாங்கி சென்ற அந்த ஞாபகம் இன்றும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.
ReplyDeleteஆக வாழ்வில் பெரும்பாலும் தேடுதல் இல்லாதவர்களே தோற்றுப்போகிறார்கள். இன்றைய இளைய தலைமுறையினரிடம் இன்னும் வளர வேண்டிய ஒரு பண்பு நம்மிடம் இல்லாத ஒன்றை தேடுதல். அந்த தேடுதல் இருப்பவர்கள் இன்றும் ஜெயித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இல்லாதவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
அதனால் இன்றைய இளைய தலைமுறைக்கு எனது ஒரே அறிவுரை - உங்களிடம் இல்லை என்று சோர்ந்து போய் ஓடிப்போகாமல் தேடுங்கள். நிச்சயமாக சென்னையில் ஆங்கில வழி கல்வி கற்றவர்களுக்கு நீங்கள் இளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க முடியும்.
excellent
ReplyDeleteexcellent
ReplyDeleteசாதிக்க வேண்டுமெனும் வெறி! வெற்றியாகியுள்ளது. இளையராஜாவின் வெற்றிபோல்...
ReplyDeleteதெக்கத்திகாரங்க படிக்க வேண்டிய பதிவு
ReplyDeleteஅற்புதமான பதிவு
ReplyDeleteசாதிக்க துடிப்பவர்கள் படிக்க வேண்டிய பதிவு . நன்றி
ReplyDeleteசாதிக்க துடிப்பவர்கள் படிக்க வேண்டிய பதிவு . நன்றி
ReplyDeleteஜாக்கி உங்களுளக்கு பைத்தியம் பிடித்து விட்டதா,தென் மாவட்டத்தில் பொறியியல் கல்லூரிகள் இல்லையா?அங்கு தமிழிலா கற்றுக் கொடுககிறார்க்கள்,தென் மாவடத்தில் அங்கில வழியில் படித்து வருபவனும் இருக்கிறான்,வடமவடத்தில் தமிழ் வழியில் படித்து வருபவனும் இருக்கிறான்.வட மாவட்டம் என்றால் சென்னை மட்டுந்த்தனா?மதுரைக்கு வடக்கே உள்ள மாவட்டங்கள் எல்லாம் ஆங்கிலக் கல்வியறிவு நிறைந்த மாவட்டங்களா?தென் மாவட்ட மதுரையில் இருந்து வருபவனுக்கு அங்கில அறிவு அதிகமா இல்லை வட மாவட்ட விருதாச்சலத்தில் இருந்து வருபவனுக்கு அங்கில அறிவு அதிகமா?இல்லை வடமாட்டத்தவர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் சென்னைக் கல்லூரியில் சேர மாட்டார்கள் என்று நினைத்து எழுதினீர்களா?அவ்வளவு ஏன் சென்னை தி.நகரிலிருந்து சுமாரான அங்கிலப்ப்பள்ளியில் படித்துவருபவனைவிட மதுரை,ராமநாதபுர முதல் தர நகர்புறப் பள்ளிகளில் படித்து வருபவன் நல்ல அங்கில அறிவுடன் இர்ருப்பான்.உங்களை சென்னை வியாதி தொற்றிக் கொண்டுள்ளது.அமேரிகர்கள்ளுக்கு அமெரிக்காவுக்கு வெளியே உள்ள உலகம் தெரியாமல் கினட்டுதவளைகள் போல் சென்னைக்கு வெளியே இருப்பதெல்லாம் பட்டிகாடு என்று நினைத்துக் என்று நினைத்துக் கொண்டு சில முட்டாள் கூட்டம் உள்ளது.சென்னை புறநகர் பகுதிகளை விட கூடுதலான வசதிகளோடு,மட மழிகைகளோடு வாழ்ந்து வரும் கிராமங்கள் தமிழ் நாட்டின் எல்லா திசைகளிலும் உள்ளன.
ReplyDeleteவாலன் பாசில் என்பவர் இந்த கட்டுரையை நன்கு புரிந்து கொண்டு என்னை அர்ச்சித்து எழுதிய மடல் உங்கள் பார்வைக்கு...
புரிதலுக்கு நன்றி
வாலன்.
வாலன். தங்களது கூற்று உண்மையே. ஆனால் மொழி பிரச்சினையால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களில் அதிக இடம் பெறுவது தென்தமிழகத்து இளைஞர்களே அன்றி வடதமிழகத்து இளைஞர்கள் அல்ல என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு தெரிந்து வடதமிழகத்து மாணவர்கள் தோல்விகளை கண்டு துவளும் எண்ணிக்கை மிகக்குறைவு. நானும் எத்தனையோ வடதமிழகத்து இளைஞர்களோடு போட்டி போட்டு மட்டுமே முன்னேறி வந்திருக்கிறேன். அவர்களிடம் இருக்கும் போராட்ட குணத்தில் பாதி கூட தென்தமிழகத்து இளைஞர்களுக்கு இருப்பதில்லை என்பதே நிதர்சனம். அதையும் மீறி வருபவர்கள் பெயர் வாங்காமல் போனதில்லை என்பதே எனது அனுபவம் . (நான் மதுரைக்காரன்.) எனக்கு மதுரையை சுற்றி மற்றும் மதுரைக்கு கீழே இருக்கும் அத்துனை ஊர்களிலும் நண்பர்கள் உண்டு. அதே போல வட தமிழகத்து நண்பர்களும் உண்டு. இவர்களில் அதிக அளவில் நல்ல நிலையில் இருப்பவர்கள் வட தமிழகத்து நண்பர்களே. இதற்கு காரணம் எனக்கு தெரிந்து போராட்ட குணம் மட்டுமே. மொழி ஒரு பிரச்சினையே அல்ல. தென் மாவட்டத்து இளைஞர்களிடம் மொழியை பிரச்சினையாக கருதாமல் போராடும் குணம் வந்து விட்டால் தற்கொலைகள் குறைந்து விடும்.
ReplyDeleteஎழுச்சியுற செய்யும் தன்னம்பிக்கை வரிகள்
ReplyDeleteஅருமையான உங்கள் எழுத்துக்களில்
பயனுள்ள கட்டுரை ஜாக்கி அண்ணே வாழ்த்துக்கள்
தொடரட்டும் உம் எழுத்துக்கள்
Proud to have him as my uncle. He is been a role model for lot of us. We all love you dear uncle.
ReplyDeleteVery proud to have him as my uncle. He is been and continue to be a role model for many of us. There is lot more which he has done to lot of people and helped them to achieve their goals. He is very humble and has admirable character. His service to the nation never ends. Hats off uncle.
ReplyDelete