A Girl Cut in Two-2007/உலகசினிமா/பிரெஞ்சு/டீவிபெண் தொகுப்பாளினியின் காதல்...வேர்ல்டு மூவிஸ்ல எதெச்சையா இந்த படத்தை பார்க்க ஆரம்பிச்சேன்....
எங்கயோ இந்த படத்தை பார்த்தாப்பல  இருக்கேன்னு நினைச்சி  மண்டையகுழப்பிக்கிட்டு இருந்தேன்.. ரொம்ப குழம்பி இருக்கற  நாலு முடியும் ஹோகையா ஆயிடுச்சின்னா என்ன பண்ணறது... ? இன்னும் குறை காலத்தை ஓட்டனுமேன்னு அதிகம் குழப்பிக்கலை...

ஒரு எழுத்தாளன் அவனை வெறித்தனமா காதலிக்கற பொண்ணு.... இதான்  படத்தோட ஒன்லைன்... ஒம்மால எவ்வளவு  யோசிச்சும் நியாபகத்துக்கு வந்து தொலைக்கலை...பொண்டாட்டி டீ போட்டு எடுத்துக்கிட்டு வந்து தந்தா... யுரேகாதான்....

அப்படியே அந்த எழுத்தாளர் கேரக்டருக்கு பார்த்தீபனை போட்டு அந்த சின்ன  பொண்ணு கேரக்டருக்கு பவர் சோப் ஆட்வல வர பொண்ணை போட்டா...  தங்கர் பச்சான் இயக்கிய தென்றல் படத்து கதையோடு ஒத்துப்போகுது... பட் ஒன்லைன் மட்டும்தான்.. பட் இந்த கதைக்கு அந்த கதைக்கு  நிறைய வித்தியாசம்...

=========
A Girl Cut in Two-2007 படத்தின் ஒன்லைன்...

ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர்....  அவரை கண்முடித்தனமாக நேசிக்கும் பெண்... அந்த  பெண்ணை கண்மூடித்தனமாக நேசிக்கும் ஒரு லூசு காதலன்... இவர்களின் முக்கோணகாதல்தான்  படத்தின் ஒன்லைன்.
====================
A Girl Cut in Two-2007 படத்தின் கதை என்ன?

Gabrielle (லுடிவைன்) டீவியில் வானிலை அறிக்கை வாசிக்கும் பெண்... Charles, மிடில் ஏஜ் ரைட்டர்... கேப்ரியல் அம்மா ஒரு புக் ஷாப்புல வேலை  செய்யறாங்க...எழுத்தாளர் சார்லஸ் தன் புது புக்கோட புரோமோஷனுக்கு  கேப்ரில்  அம்மா வேலை செய்யும் கடைக்கு வரும் போது ரைட்டரோட  பேரும் புகழும் தெரிய வருது...இதுக்கு நடுவுல பவுல்ன்னு ஒரு லூசுப்பய கேப்ரிலை ஐஸ்கிரிம் போல உருகி உருகி காதலிக்கின்றான்...ஒரு கட்டத்துல ரைட்டருக்கு  இந்த சின்ன பொண்ணுக்கும் ஜலபுலசங்ஸ் ஆயிடுத்து...   கொஞ்சநாள்  ரைட்டர் ஜலபுல சங்ஸ் நடத்திட்டு தோ வரேன்னு  பாரிஸ் போனவன் வரவேயில்லை.. அவனுக்கா வெயிட் செய்யற... அவன் வரவேமாட்டான்னு ஒரு கட்டதுதல முடிவு பண்ணி  பவுலை கல்யாணம் பண்ணிக்கறா....ரைட்டரோடு ஜலபுலசங்ஸ் செஞ்ச கதையை சொல்ல அவன் ஒரு லூசுன்னு முன்னாடியே சொன்னேன் இல்லையா? அவன்  ரைட்டரை பழி வாங்க புறப்படுறான் முடிவு என்ன என்பதை திரையில்  பார்த்து தெரிஞ்சிக்கோங்க.,.
=============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


லுடிவைன் ஹீரோயினா நடிச்சி இருக்காங்க... வானிலை அறிக்கை படிச்சிட்டு அப்படியே விவாதம் நிகழ்ச்சி வரை அந்த பெண் தொழில் ரீதியாக வளர்வதை அழகாக காட்டி இருக்கின்றார்கள்..


ரைட்டராக டிரன்ஸ்போர்ட்ர் படத்துல ஜேசன் ஒதவற போலிஸ்  இன்ஸ்பெக்ட்டரா நடிச்சி இருப்பாரே  அவர்தான்  இந்த படத்துல ரைட்டர் வேஷம் போட்டு இருக்கார்.... சின்ன பொண்ணோடு  கூத்தடிக்கும்  காட்சியில கூச்சப்படாம நடிச்சி இருக்கார்...


இரண்டு பேருக்கும் காதல் அரும்பும் காட்சிகள் கவித்தவமான காட்சிகள்... என்ன சின்ன  பொண்ணா டிரிட் பண்ணாதிங்க... என்று சொல்வதும்... உனக்கும்  எனக்கும் 30 வயது டிபரண்ட்.. சின்ன பசங்க போல என்கிட்ட வேகத்தை எதிர்பார்க்கதே என்று சொல்லும் காட்சிகள்... லைட்டாக  அகத்தியனின் விடுகதை படத்தின் டயலாக்குகளை  நியாபகபடுத்தின....


 நைட்டு புல்லா மேட்டர் பண்ணிட்டு  காலையில் எழுந்து வரும் அந்த பெண்ணை  சட்டென முட்டி போட வைத்து வாய்புணர்ச்சி செய்ய  சொல்லும் இடமும் கேமரா நேராக கம்யூட்டர் கீ போர்ட்டில் இருக்கும் கைக்கு செல்ல   கை டெம்ட்டாவதை  செமையா எடுத்து இருக்காங்க..
கிரைம் திரில்லர் படமா இந்த  படத்தை எடுத்து இருந்தாலும்... ரொம்ப மெதுவான திரைக்கதை...பவுல்  அந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு எத்தனை வாட்டி நீயும் ரைட்டரும் மேட்டர் செஞ்சிங்க என்று அவளை இம்சிக்கும் இடங்கள் தமிழ் படம் பார்ப்பது போன்றே இருந்துச்சி............


வெனிஸ் திரைப்படவிழாவில் அபிஷியல்  செலக்ஷனுக்கு தேர்வு செய்யப்பட்ட திரைப்படம் இது... அதே  போல குறைவான தியேட்டர்களில் மட்டுமே திரையிட்டார்கள்..

====================
படத்தின் டிரைலர்.================
படக்குழுவினர் விபரம்

Directed by Claude Chabrol
Produced by Patrick Godeau
Written by Claude Chabrol
Cecile Maistre
Starring Ludivine Sagnier
Benoît Magimel
François Berléand
Mathilda May
Music by Matthieu Chabrol
Cinematography Eduardo Serra
Editing by Monique Fardoulis
Distributed by Pan Europeenne
Release date(s)
8 August 2007
Running time 114 minutes
Country France
Language French


=====================
பைனல்கிக்.

இந்த படம் உலகதிரைப்படங்களுக்கே உரிய ஸ்லோவான மூவிங் திரைக்கதை என்றாலும்...சின்ன சின்ன டுவிஸ்ட் டயலாக்குகள் ரசிக்க வைக்கின்றன... வேர்ல்டு மூவிஸ் இல் எல்லா சீனையும் கட் செய்து பூண்டு கூட இல்லாமல சுத்த  சைவமாக படத்தை ஒளிபரப்புகின்றார்கள்.. அதனால் இந்த படத்தை டைம்பாஸ்  லிஸ்ட்டில் சேர்க்கின்றேன்.


===============
 என்னடா இது ஒரே ஒரு போட்டோவை போட்டு இருக்கேன்னு பாக்கறிங்களா-? தோனி  தொலங்கி இன்னைக்குதான் ஒரு பதிவு  எழுதினேன்.. தம்பி ஒனக்கு   கொடுத்த ஒரு ஜிபி போட்டோ கோட்டா முடிஞ்சிடுச்சின்னு  கூகுள் சொல்லிடுச்சி.. போட்டோ பக்கெட்டு அப்லோட் பண்ணி பண்ணலாம்ன்னு நண்பர்கள் சொன்னாலும் இரண்டு வேலைதான்... சரி... மாசத்துன்னு 25 ஜிபி அப்லோட்க்கு நாலு டாலர் கட்டனுமாம்.... இப்ப இருப்ப இருக்கற சூழல்ல வெள்ங்கிடும்...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

6 comments:

 1. ஜாக்கி, அந்த இன்ஸ்பயர் ஆன படம் ஒரு பாலு மகேந்திரா படம். ஜெயராம், சரிதா நடிச்சது. பேரு எனக்கும் மறந்திடிச்சு.

  ReplyDelete
 2. ஞாபகம் வந்திடிச்சி, படம் பேரு ஜூலி கணபதி!

  ReplyDelete
 3. Mr.jackie, 'உலக சினிமா' அப்படினா என்ன? விளக்கம் தரவும்.

  ReplyDelete
 4. அண்ணா கவலையைவிடுங்க நிறைய போட்டோ போட வழி இருக்கு இதோ http://tamil-computer-ulagam.blogspot.de/2012/11/blogger-1gb-dropbox.html

  ReplyDelete
 5. அண்ணா நிறைய போட்டோ போட இதோ வழி
  http://tamil-computer-ulagam.blogspot.de/2012/11/blogger-1gb-dropbox.html

  நீங்க ஃபோட்டோ போட்டாதான் பதிவ படிக்கிற எங்க மனசு நிறைவடையும்.

  ReplyDelete
 6. Hello jackie brother...Photos uploaded in blogger will be stored in picasa web. you can move your all albums and photos from one google account to other google account when your space is full. the advantage of moving this albums is the photo link of images will not changed..ie.. image links will be same as before. so dont worry about that brother.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner