உப்புக்காத்து/17


சென்னையில் எனக்கு யாரையுமே தெரியாது...  
ஒரே ஒரு உறவு என்று சொல்லிக்கொள்ள தூரத்து சொந்தமான எனது அத்தைபெண் இந்திராஜெயபாலன் வெஸ்ட் அண்ணாநகரில்  இருந்தார்...  ஏன்டா இவன் இங்க வந்தான்னு நினைக்கறவங்க  அவுங்க.. அப்படிபட்ட சொந்தம்.. ஸ்டேட்டஸ் பார்ப்பாங்கன்னு எனக்கு முதல்ல தெரியலை...  

அப்படி அவங்க நினைக்கறாங்கன்னு நினைக்கறதே எனக்கு ரொம்ப லேட்டாதான் தெரியும். நான் நம்பறவங்களை சந்தேகபடமாட்டேன்... சந்தேகபடறவங்களை நம்பமாட்டேன். இதுதான் என் பாலிசி.. ஆனா அந்த சம்பவத்துக்கு அப்புறம்..  என்னதான் உறவா இருந்தாலும் ஒரு 10 பர்சென்ட் டவுட் வச்சிக்கறது நல்லதுன்னு நினைச்சுக்குவேன்.


 சொந்த  ஊரிலும் ரத்த வழி உறவுகளை நினைச்சாலே நடுங்கும்.... ஒரு உதாரணத்துக்கு சொல்லறேன்... எங்க அப்பா கால் உடைஞ்சி அப்படியே பெராலிஸ் அட்டாக் ஆகி  படுத்தபடுக்கையா கிடைக்கார்.  பத்து வீடு தள்ளிதான் என் அப்பாவோட கூட  பிறந்த அண்ணன் இருக்கார்.. இரண்டு வருஷம் கழிச்சி  எப்படி இருக்க....? நல்லா இருக்கியான்னு கேட்டுட்டு 100 ரூபாய் பணத்தை எடுத்து கொடுக்க வர.. எங்க அப்பா நான்  ஒன்னும் உன்கிட்ட பிச்சை கேட்கலையேன்னு சொல்லிட்டார்..ரத்த உறவுகள் அந்த அளவுக்கு சப்போர்ட்.


முதல் முறை என் சென்னை பயணம் படு  தோல்வி...  நாய் படாதபாடுபட்டு நான் என் சொந்த ஊருக்கு போய் சேர்ந்தேன். ஆனால் திரும்ப சென்னைக்கு வந்து சைதாபேட்டையில் இறங்கும் போது 100 ரூபாயும் சில சில்லரைகள் மட்டுமே பாக்கெட்டுல இருந்துச்சி...
கடலூர்ல நான் வச்சி இருந்த சைக்கிளை பஸ் மேல போட்டு கட்டி எடுத்துகிட்டு வந்துட்டேன். மேல இருந்து இருக்கும் போது டொம்னு மேல இருந்து இறக்கனவன் போட்டு விட, வீல் பெண்ட் ஆயி.. கொஞ்ச நாளைக்கு  என்னுடைய சைக்கிள்  பின்பக்கத்தை செக்சியா ஆட்டிகிட்டு போச்சி....


தென் சென்னையில் என்  சைக்கிள்  சுத்தாத தெருவே இல்லைன்னு சொல்லலாம்.. இன்டு இடுக்கு சந்து பொந்து எல்லாத்தையும் அந்த  சைக்கிள்  பார்த்துடுச்சி. சினிமா பீச்சின்னு சுத்த வசதியா இருந்துச்சி... நான் நடந்து போய் கால் கடுக்க பஸ்சுக்காக வெயிட் பண்ண இடம் எல்லாத்தை சைக்கிளில் கடக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. அந்த சந்தோஷத்துக்கு முக்கியகாரணம்.. சைக்கிள்  சென்னையில் ஓட்டறது ரொம்ப ஜாலியா இருக்கும்... கிராமத்து பல்லாங்குழி சாலைகளுக்கு மத்தியில், சென்னையில்   மழ மழ சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது பேரானந்தம்...


மூன்று கிலோமீட்டர் துரத்தை மூக்கால் அழுது  ஊரில் சைக்கிள் ஓட்டுவதற்கும், 30 கிலோமீட்டர் பயணம் செய்வதற்கும் சலிப்பே  கொள்ளாத  சென்னை சாலைகள் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்...


ஒரு கட்டத்தில்  வாடகை அதிகம் ஏற்றிய காரணத்தால் வடபழனி  குமரன் காலனியில் இருந்து வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பக்கம் போக  வேண்டியதாகிவிட்டது. வடபழனிக்கு  வேலைக்கு வர  சைக்கிள் சாத்தியபடவில்லை.. ஒரு வண்டி வாங்க முடிவு செய்தேன்.


அப்பாவுக்கு போன் செய்தேன்..

அப்பா செகன்ட் ஹேண்ட் டிவிஎஸ் பிப்ட்டி வாங்கலாம்னு இருக்கேன் ..

ஏன்டா சென்னையில் கீர் வண்டியில அவன் அவன் பறப்பான் நீ டீவிஎஸ் பிப்டியில  போன நல்லா இருக்காது என்றார்.. அவர் சொன்ன லாஜிக் எனக்கு பிடித்தது.

அதன் பிறகு அப்படியே  மறந்து விட்டேன்..  எனது நண்பர் ராஜசேகர் விஜயராகவபுரத்தில் இருக்கும் மெக்கானிக் சீனுவிடம்தான் வண்டியை சர்விசுக்கு விடுவார்... அவரை அந்த பக்கம் செல்லும் போது அந்த மெக்கானிக் கடையில்  நிறுத்தி பார்த்து  பேசிவிட்டு செல்வது வழக்கம்.. அப்படித்தான் மெக்கானிக் சீனு பழக்கம்..

சீனு எனக்கு ஒரு டிவிஎஸ் பிப்ட்டி செகன்ட்ஸ் வந்தா சொல்லேன்.. கண்டிப்பா சொல்லறேன் அண்ணே..

சீனு சொந்த அக்கா பெண்ணையே மனம் முடித்தவன்.. இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன் ஆனாலும்  அவனுக்கு நான் அண்ணன்தான்.... கல கல எனும் பேசும் சுபாவம்... ஏனோ எனக்கு சீனுவை பிடித்து விட்டது......

சைக்கிள் வைத்து இருப்பவனுக்கு முன் பின் பழக்கம் இல்லாத டூவீலர் மெக்கானிக் நட்பாய் இருப்பது சாத்தியமாயிற்று.

அந்த பக்கம் சைக்கிளில் போகும் அவன் கடைக்கு பக்கத்தில் இருக்கும் டீக்கடையில் டீ சாப்பிட்டு விட்டு அவனோடு பேசி விட்டுசெல்வது என் வழக்கம்..

ஒரு கட்டத்தில் வண்டி  வேண்டும் என்று தீவிரமாக தேட  ஆரம்பிதேன்..

பாடியில் இருக்கும் பாலாஜி மோட்டர்சில்  செக்ண்ட் ஹேண்டில் ஒரு பாக்சர் வண்டியை பார்த்து விட்டேன்... அந்த வண்டியை வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன்...
எனது நண்பர் ராஜசேகரை வண்டி பார்க்க அழைத்து போக அழைத்த  போது அவர் வர மறுத்து விட்டார்... எனக்கு சைக்கிளை தவிர எந்த வாகனமோ கடனோ  வாங்கி பழக்கப்பட்டதில்லை..


சென்னையில் எனக்கு நண்பர் என்று சொல்லிக்கொள்ளவோ? அல்லது சொந்தம் என்று சொல்லவோ யாரும் இல்லை...
சரி மெக்கானிக்கை அழைத்து போய் காட்டலாம் என்று சீனுவை  அழைத்தேன்..  என் சைக்கிளை  அவன் மெக்கானிக் ஷெட்டில் விட்டு விட்டு, அவனுடைய பச்சைகலர் டிவிஸ் சுசுகியில் என்னை உட்கார வைத்து அழைத்து போனான்.


பாடி பாலாஜி மோட்டர்சில்.. வண்டியை காட்டினேன்...20 ஆயிரம் ரூபாய்... சிவப்பு கலர் பாக்சர்.... வண்டியை ஸ்டார்ட் செய்தான் ஆக்சிலேட்டரை திருகினான்... சைலன்சரில் புகை வருகின்றதா-? என்று செக் செய்தான்.. அண்ணே வண்டி நல்லா இருக்கு... வாங்கலாம் என்றான்.. புருப் கேட்டார்கள் கொடுத்தேன்... ஜாமீன் கையெழுத்து போட வேண்டும் என்றார்கள்....யாரை அழைப்பது ராஜசேகரை அழைக்கலாமா? ஓ அதுக்குதான் பயபுள்ளை வண்டி பார்க்க வரலையோ? நல்லது..


சரிங்க.. நான் எனக்கு   தெரிஞ்ச யாரையாவது அழைச்சிகிட்டு வரேன்...   இந்த பரந்து விரிந்த சென்னையில் ஜாமின் கையெழுத்து போட யாரை அழைப்பது.. அப்படி அழைத்தாலும் யாரும்வ வரப்போவதில்லை.... வண்டி கனவு அரோகராவா? சரி வீட்டுக்கு போய் நிதானமாக யோசிப்போம்...இன்பாக்ட் என்னையே யாராவது ஜாமின் கையெழுத்து போட அழைத்தால் போய் இருக்க மாட்டேன்...


சரிபோலாம் சீனு...நாளைன்னைக்கு வந்து எடுத்துக்கறேன்னு சொல்லிட்டேன்... ஏன் பணம் இல்லையா? பணம் இருக்கு... பட் ஜாமின் கையெழுத்து கேட்கிறான். அதுக்குதான் ராஜசேகர் கழட்டிக்கிட்டான் போல..


அட  போங்கண்ணே.. இதுக்கா  நாளைன்னைக்கு  வண்டியை எடுக்கபோறேன்னு  சொன்னிங்க...? நான் கையெழுத்து போடறேன்.. நீங்க கட்டுவிங்க என்னை வில்லங்கத்துல மாட்டி விட மாட்டிங்கன்னு நம்பிக்கை இருக்கு.வாங்க நான் கையெழுத்து போடறேன்...
ஒரு கையெழுத்து இல்லை  இரண்டு கையெழுத்து இல்லை 42 கையெழுத்து திருப்பிய பக்கம் எல்லாம் சேட் காட்டிய திசைகளில் எல்லாம் கையெழுத்தை  போட்டான்...எனக்கு  மிகுந்த  நெகிழ்ச்சியாக இருந்தது... எனக்கு பேச்சே வரலை... சென்னைக்கு வந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டிங்க இனிமே  நல்ல  காலம்தான் என்றான்....


இன்றைக்கு சென்னையில் நிறைய நண்பர்கள்.....ஆனால் இன்றைக்கு சென்னையில் வண்டியில் செல்ல காரணம் அவன்தான்... அவன் மட்டும் கையெழுத்து போடவில்லை  என்றால் இரண்டு வாரத்துக்கு மேல் ஆகி இருக்கும்... யார் கையெழுத்து போடுவார்கள் என்று  தேவுடு காத்து இருக்க வேண்டும்..


ரத்த உறவு இல்லை, நெடுநாள் பழக்கம் இல்லை, தொடர்ந்து வண்டியை சர்விஸ்விடும் ஆளும் இல்லை..நானோ சைக்கிள் வைத்து இருப்பவன், என்னால் அவனுக்கு எந்த உதவியும் இல்லை, நானும் அவனுக்கு எந்த உதவியும் செய்தது இல்லை, என்னால் அவனுக்கு லாபமே இல்லை.. ஆனாலும் 42 கையெழுத்து  எனக்காய் எதுக்கு  போட்டான் என்று எனக்கு தெரியவில்லை... அந்த மனசு யாருக்கு வரும்?


அண்ணே இங்க என் கிட்ட வண்டி ரிப்பேர் பண்ணாத ஆட்களே இல்லை.. கேமராமேன் ஏகாம்பரம், திவாகர் எல்லாம் என் கஸ்டமர்தான்...ஆனா வளர்ந்த அப்புறம் இந்த பக்கம் யாரும் திரும்பி பார்த்ததே இல்லை... நீங்க எப்படின்னு எனக்கு தெரியலை... நான் மவுனித்தேன்... என் குடும்பத்தின் ஒருவராய் பார்க்க ஆரம்பிதேன்.. நானும் என் மனைவியும் அதே மெக்கானிக் ஷெட்டில் நின்று டீ குடித்து விட்டு சென்று இருக்கின்றோம்.. இன்றும் என் வீட்டில் எந்த விசேஷத்துக்கு சீனுக்கு பத்திரிக்கை வைக்காமல் விட்டதில்லை..ஆனால் அவன்தான் வேலைபளு காரணமாக வர முடியவில்லை என்றான்...


என்   வண்டியை சர்விஸ் விட்டால் 250ரூபாய்க்கு மேல் அவன் இதுவரை வாங்கியது இல்லை...அடுத்தது சீடி 100  புது வண்டியை வாங்கி அவன் முன் நிறுத்தினேன்.. அண்ணே  ரொம்ப சதோஷமா இருக்குன்னே.. அன்னைக்கு சைக்கிள்ள வந்தது போலவே பழசை மறக்காம  வந்துட்டு  போறது  ரொம்ப சந்தோஷம்ணே...


விஜயராகபுரத்தில் இருக்கும் சீனு மெக்கானிக் கடையை நான் எப்போது கடந்தாலும் என் நண்பர் புதியவராக இருந்தால், சீனு கடையில் வண்டியை நிறுத்தி எனக்காக 42 கையெழுத்து போட்டு என்னை இந்த சிட்டியில வண்டி ஓட்ட வச்சவன் என்று யாரையாவது அவன் எதிரில் அறிமுகப்படுத்தினால் பெண்கள் போல  ரொம்பவே வெட்கப்படுவான்..


அதன் பின் சீனுவை பார்க்க முடியவில்லை... பார்ட்டைமாக ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்ய ஆரம்பித்தான்..ஒரு நாள் வண்டி சர்விசுக்கு போன் செய்த போது.. அண்ணே எம்டிசியில் டிரைவருக்கு ஆள் எடுத்தாங்க.. எனக்கு டிரைவர் போஸ்ட்டிங் கிடைச்சிடுச்சி...12பில  டிரைவரா இருக்கேன்...ரொம்ப சந்தோஷம் சீனு..

சீனுவின் மொபைலில் என் பெயிரை எந்த பெயரில் ஸ்டோர் செய்து வைத்து இருக்கின்றான் என்று தெரியுமா? பாக்ச்ர் என்று.


அதன் பிறகு ரொம்பவே பிசியாகி விட்டான்...நேற்று சீனு போன் செய்தான்... அண்ணே சவுக்கியமா? நல்லா இருக்கேன் சீனு....ரொம்பவே சந்தோஷமா இருக்குண்ணே.. எதுக்குடா..? தினகரன் வெள்ளி மலர்ல உங்க போட்டோவை பார்த்தேன்... ரொம்ப சந்தோஷம்னே.. எட்டு வருஷத்துக்கு முன்ன சைக்கிள்ல வந்தப்ப நான் பார்த்து இருக்கேன்....நீ பெரிய ஆளா வருவேன்னு மனசு சொல்லிச்சி...கலைஞர் டிவியில  நீ வந்த போதே வீட்டுல ஒரே கைதட்டல்தான்.... இப்ப  பேப்பர்ல.... இன்னமும் நல்லா வருவண்ணே... நல்லா வரனும் என்றான்..


எங்கம்மா என்னை பார்த்து ஆசிர்வதித்து போல இருந்தது.. சீனு சொன்ன வாக்கியங்கள்.




=======================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.






போட்டோவில் நட்ட நடுவில் சென்னையில் நான்  மோட்டர் சைக்கிள் ஓட்ட காரணமாக  இருந்து..... 42 கையெழுத்து போட்ட  மெக்கானிக் சீனு...




காக்கி பேண்ட்டில் மெக்கானிக் சீனு...


====



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

36 comments:

  1. மனம் நெகிழ வைத்த பதிவு ஜாக்கி!

    ReplyDelete
  2. நெகிழ்வான பதிவு ஜாக்கி.

    நன்றியோடிருப்பதும் அந்த நன்றியுணர்வைப் புரிந்து கொள்பவர் அமைவதும் மிக அரிது உங்களுக்கும் சீனுவுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நெகிழ்வான பதிவு ஜாக்கி

    நன்றியோடிருப்பதும் அந்த நன்றியுணர்வைப் புரிந்து கொண்டவர்கள் இருப்பதும் மிக அரிதாகிவிட்ட காலத்தில் சீனுவுடனான உங்கள் உறவு மகிழ்ச்சி தருகிறது

    ReplyDelete
  4. பழையவைகள் மறக்காத உங்கள் குணம் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.....தொடருங்கள்...........

    ReplyDelete
  5. நன்றி மறவாமல் ஒவ்வொரு நண்பர்களையும் சரியான நேரத்தில் பதிவிடுகிறீர்கள். சம்பந்தப் பட்டவர்களுக்கு எவ்வளவு சந்தோசம் கிடைக்குமோ, அதே அளவு படிக்கும் எமக்கும் கிடைக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே ..

    ReplyDelete
  6. பதிவு ரொம்ப பிடிச்சுது..சீனு பார்த்தோன்ன நட்பாகிற மாதிரி இருக்காப்ல :)

    ReplyDelete
  7. Supper sekar... touch panitienga..

    ReplyDelete
  8. Super Sekar... line speaks truth..

    ReplyDelete
  9. மச்சி, நீ கறுப்புன்னு நெனச்சேன், இப்பத்தான் புரியுது, உடம்பு முழுக்க மச்சம்னு...

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  10. மனம் நெகிழ வைத்த பதிவு ஜாக்கி!

    ReplyDelete
  11. மனம் நெகிழ வைத்த பதிவு ஜாக்கி!

    ReplyDelete
  12. You got all these friends because of your character only Jackie.

    ReplyDelete
  13. Karaipadintha aadaikalukkul karunai ullangal.
    Karaivettikal uthavatha naattil,
    katharvettikal uthavatha naattil,
    Ippadiyum ethanai kadavul.

    ReplyDelete
  14. மிக நெகிழ்ச்சியான பதிவு.. சீனு போன்ற நல்லவர்களும் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    ReplyDelete
  15. அனுபவங்கள்தான் ஆசான் என்பதை உப்புக்காத்து தொடர் மூலமாக தொடர்ச்சியாக வலியுறுத்துகிறீர்கள் ஜாக்கி.

    //என்னால் அவனுக்கு எந்த உதவியும் இல்லை, நானும் அவனுக்கு எந்த உதவியும் செய்தது இல்லை.//

    இந்த இடத்தில் மட்டும் ஏதோ தோற்றமயக்கம் ஏற்படுகிறது. என்னவென்றுதான் தெரியவில்லை.

    ReplyDelete
  16. உங்கள் வாழ்வியல் அனுபவங்கள் அருமை அண்ணா

    ReplyDelete
  17. உங்கள் வாழ்வியல் அனுவங்கள் அருமை அண்ணா சாதரண ஒரு விஷயத்தையும் ஒரு அற்புதமாக சொல்லி அனைவரையும் நெகிழ வைக்கும் படைப்பு

    ReplyDelete
  18. தல உனக்கு உதவ நிறைய தம்பிகளும் நண்பர்களும் இருக்கிறோம். மச்சி என்னைய மட்டும் திட்டாத எதுக்குனு புரியும் உனக்கு

    ReplyDelete
  19. தல உனக்கு உதவ நிறைய தம்பிகளும் நண்பர்களும் இருக்கிறோம். மச்சி என்னைய மட்டும் திட்டாத எதுக்குனு புரியும் உனக்கு

    ReplyDelete
  20. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது!

    unmaivrumbi.
    mumbai

    ReplyDelete
  21. நண்பேண்டா பதிவு! கலங்கிய கண்களுடன் கமெண்ட் செய்கிறேன்! எங்கிருந்தாலும் வாழ்க சீனு!

    ReplyDelete
  22. padikum pothu romba feeling aha irunthathu really good

    ReplyDelete
  23. //கொஞ்ச நாளைக்கு என்னுடைய சைக்கிள் பின்பக்கத்தை செக்சியா ஆட்டிகிட்டு போச்சி....//

    இதைக் கற்பனை செய்து பார்த்தேன். ஜாக்கியின் "ரச்" இங்கே தான் இருக்கிறது.
    அழகான பதிவு.

    ReplyDelete
  24. Jaki anna neenga nalla varuveenga paarunga.adutha sila varuta- thil oru car vanguveena nichayam.nalla ullam konda ungalukku ellaame vasapatum neram ithu.

    ReplyDelete
  25. நெகிழ்வான பதிவு ஜாக்கி.

    நன்றியோடிருப்பதும் அந்த நன்றியுணர்வைப் புரிந்து கொள்பவர் அமைவதும் மிக அரிது உங்களுக்கும் சீனுவுக்கும் வாழ்த்துகள்

    ____
    ---- ஆசிப் மீரான் ***** repeattu.

    ReplyDelete
  26. /*சொந்த ஊரிலும் ரத்த வழி உறவுகளை நினைச்சாலே நடுங்கும்.... ஒரு உதாரணத்துக்கு சொல்லறேன்... எங்க அப்பா கால் உடைஞ்சி அப்படியே பெராலிஸ் அட்டாக் ஆகி படுத்தபடுக்கையா கிடைக்கார். பத்து வீடு தள்ளிதான் என் அப்பாவோட கூட பிறந்த அண்ணன் இருக்கார்.. இரண்டு வருஷம் கழிச்சி எப்படி இருக்க....? நல்லா இருக்கியான்னு கேட்டுட்டு 100 ரூபாய் பணத்தை எடுத்து கொடுக்க வர.. எங்க அப்பா நான் ஒன்னும் உன்கிட்ட பிச்சை கேட்கலையேன்னு சொல்லிட்டார்..ரத்த உறவுகள் அந்த அளவுக்கு சப்போர்ட்.*/

    செய்த உதவியை நினைவுகூறும் உங்கள் பண்பு பாராட்டுக்குரியது. அதேவேளையில் சொந்தங்களை பற்றிய உங்கள் பார்வை ஒரு தலைபட்சமாக உள்ளது. இப்படி(மேலே) ஒரு சம்பவம் நடந்ததா என்பது எனக்கு தெரியாது. ஆனால் சில நல்ல விஷயங்கள் மட்டும் எனக்கு நினைவுள்ளது. அப்படிப்பட்ட விஷயங்களை பற்றி பேசும் மனநிலை இல்லாத போது, மேல உள்ளது போன்ற ஒரு தலையான, புண்படுத்த கூடிய கருத்துகளை தவிர்க்கலாம். நன்றி.
    --ரவிக்குமார் ராஜாராம்.

    ReplyDelete
  27. /*சொந்த ஊரிலும் ரத்த வழி உறவுகளை நினைச்சாலே நடுங்கும்.... ஒரு உதாரணத்துக்கு சொல்லறேன்... எங்க அப்பா கால் உடைஞ்சி அப்படியே பெராலிஸ் அட்டாக் ஆகி படுத்தபடுக்கையா கிடைக்கார். பத்து வீடு தள்ளிதான் என் அப்பாவோட கூட பிறந்த அண்ணன் இருக்கார்.. இரண்டு வருஷம் கழிச்சி எப்படி இருக்க....? நல்லா இருக்கியான்னு கேட்டுட்டு 100 ரூபாய் பணத்தை எடுத்து கொடுக்க வர.. எங்க அப்பா நான் ஒன்னும் உன்கிட்ட பிச்சை கேட்கலையேன்னு சொல்லிட்டார்..ரத்த உறவுகள் அந்த அளவுக்கு சப்போர்ட்.*/

    செய்த உதவியை நினைவுகூறும் உங்கள் பண்பு பாராட்டுக்குரியது. அதேவேளையில் சொந்தங்களை பற்றிய உங்கள் பார்வை ஒரு தலைபட்சமாக உள்ளது. இப்படி(மேலே) ஒரு சம்பவம் நடந்ததா என்பது எனக்கு தெரியாது. ஆனால் சில நல்ல விஷயங்கள் மட்டும் எனக்கு நினைவுள்ளது. அப்படிப்பட்ட விஷயங்களை பற்றி பேசும் மனநிலை இல்லாத போது, மேல உள்ளது போன்ற ஒரு தலையான, புண்படுத்த கூடிய கருத்துகளை தவிர்க்கலாம். நன்றி.
    --ரவிக்குமார் ராஜாராம்.

    ReplyDelete
  28. naattil niraiya seenukkal irukkiraarkal.vaazhththukkal.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner