சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/வெள்ளி/13/07/2012




ஆல்பம்..
சாவுங்கடா சட்டி சாம்பாருங்களா?-
ஒரு நாலானா அந்த ஆள் பஸ் கட்டணத்தை உயர்த்திட்டா போதும்.. ஏழைகளின் வாழ்க்கை தரத்தினை அறியாமல் உயர்த்தி விட்டார்... ஆச்சா போச்சா ? என்று கூப்பாடு போட்டு இருப்பார்கள்... பல நட்ட நடு சென்டர்கள். முக்கிய இப்படி கத்தறது ஏதுவும் இந்த ஊர்ல இருக்கறது  இல்லை.. எல்லாம் வெளிநாட்டு உட்கார்நது கிட்டு, கரண்ட் கட்டுன்னா என்ன்ன்னு தெரியாத ஊர்ல வாழ்ந்துகிட்டு கத்திகிட்டு கிடப்பானுங்க..  இவனுங்களுக்கு முனுக்குன்னா நக்கலு.. விலுக்குன்னா நக்கலுதான்.. கரெண்ட் பில் இரண்டாயிரம் கட்டனவன் எல்லாம் 5000ரூபாய் முள்ளங்கி பத்தையாட்டம் எடுத்துகிட்டு போய் போன மாசமும் இந்த மாசமும் ஈபி ஆபிஸ்ல பணத்தை கட்டிட்டு வரவனுக்குதான்  தெரியும்.... அந்த வலியும் வேதனையும்...ஒரே ஒரு நட்ட நடு சென்டர் வாய தெறக்க போறானுங்க...ச்சே அவனுங்கதான் நட்ட நடு சென்டர் ஆச்சே...?
====
நேற்று வரை  கட்சித்தலைமையின் கட்டளையை ஏற்று, கட்சியின் அடிமட்ட தொண்டனாக பாடுபடுவேன் என்று சொல்லிய கர்நாடக முதல்மந்திரி சாதானந்த கவுடா, நேற்று ஜகா வாங்கி இருக்கின்றார்...முதல்வர் பதவியை ராஜினாமா எல்லாம் செய்ய முடியாது என்று போர்கொடி உயர்த்தி இருக்கின்றார்.. அப்புறம் சமாதானம்.... எல்லாம் பதவி படுத்தும் பாடு...ஒருவேளை நித்தி உட்ட சாபம் பலிச்சிருச்சோ..??
========
திரும்பவும் இரண்டு நாளுக்கு முன்பு கொருக்கு பேட்டையில் காத்தாடி மாஞ்ச நூலில் கழுத்து அறுபட்டு இறந்து போய் இருக்கின்றார்...வாழ்வின் மீது நம்பிக்கை வைத்து எத்தனை லோன் எடுத்து இருப்பாரோ? அல்லது தோ வாங்கிக்கலாம் என்று எத்தனை பேருக்கு இரண்டாம் பேருக்கு தெரியாமல்  லட்சங்களில் கடன்  கொடுத்து இருப்பாரோ..? எல்லாம் காற்றடி கயிறு முடிவுக்கு கொண்டு வந்து விட்டது... வருடத்துக்கு நாலு பேர் சாவறது தொடர்கதையா போச்சு....130 கோடியில் நாலு பேர்  செத்தா என்ன? என்று  ஆட்சியாளர்கள் நினைக்கின்றார்கள்... இல்லையென்றால்  இப்படி தொடர்ந்து யாரும் காற்றாடி நூலுக்கு இறந்து போக மாட்டார்கள்  அல்லவா-?
=======
மிக்சர்.
ஏற்கனவே வாகன  நெரிசலில் வழிபிதுங்கி  மெட்ரோ ரயில் வேலைகளால் அவஸ்த்தைப்பட்டுக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் வேளச்சேரியில் ஒயிட் டாப்புன்னு ஒரு ரோட்டை போட்டு  டிராபிக்ல உயிரை வாங்கி தொலையறானுங்க.
=========
போருர் பிரிட்ஜை கட்டற மாதிரி தெரியலை... எப்படியும் அம்மா ஆட்சி  முடிய  இன்னும் நாலு வருஷம் இருக்கு... அதுக்குள்ள அதுக்கு ஏதாவது விடிவுகாலம் வருதான்னு பார்க்கலாம். போருர் பிரட்ஜை பார்க்கும் போது பேரம்பூர் பாலம் ஞாபகம் வருவதை தவிர்க்கவில்லை..
====
ஜுனியர் விகடனுக்கு எதிராக மேலும் இரண்டு அவதூறு வழக்குகளை முதல்வர் ஜெ தொடர்ந்து இருக்கின்றார்... இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
=========
2005 இல்தான் புதியவண்டி  வாங்கும் பாக்கியம் கிடைக்க பெற்றேன்..பஜாஜ் சிடி 100 வாங்கினேன்..இப்போது வெண்புகை கக்கி என்னை கலவர படுத்துகின்றது..என்ஜின் ஆயில் மாத்தினால் நாலு நாளைக்கு மேல் இருக்க மாட்டேன் என்கின்றது..  போர் மாற்ற வேண்டும் 4000 ரூபாய் சலவைதாளை கிழகிக்க வேண்டும் என்று மெக்கானிக் சொல்கின்றார்...அதுக்கு புது வண்டி வாங்கவேண்டும்..பஜாஜ்ஜில் 125 சிசி டிஸ்கவர் பார்த்தேன்.. 58 ஆயிரம் ரூபாயாம்...மனப்புரத்துக்கும் முத்துசாட் வாசப்படியை மிதிக்க வைக்காமல் விடமாட்டேன் என்கின்றது..வாழ்க்கை... ஹூம்... என்ன கொடுமைசார்.
==========
இந்தவாரகடிதம்..
ஒருமுறை  பேசாம ஐரோப்பா பக்கம் வேலை  தேடி போயி குடும்பத்தோடு செட்டில் ஆகிடலாம்னு பார்க்கின்றேன் என்று எழுதி இருந்தேன். அதுக்கு வந்த பதில்.
வெயிலுக்கு பயந்து ஐரோப்பா பக்கம் வருவது... தண்ணியில இருந்து துள்ளி குதித்து எண்ணெய் சட்டிக்குள்ள விழறதுக்கு சமம்.. குளிர் காலத்தில் ஏழு எட்டு மாசத்துக்கு குளிரில் நாங்கள் படும் வேதனை சொல்லிமாளாது அதனால் அந்த எண்ணத்தை கைவிடுங்கள் சகோ.... இக்கரைக்கு அக்கரை பச்சை.. யாழினி பொண்ணு டெய்லி அப்பாவை  இம்சை பண்ணு... குடிப்பதை நிறுத்தும் வரை அப்பா கன்னத்துலேயே போடு.....
இவன்
 ராஜ முகமது..
போர்சுக்கல்...
=========
அன்பின் ராஜ முகமது போர்ச்சுகல் மொழியில்  எஸ்எம் எஸ் அனுப்பினாலும் அனுப்பினிங்க.... நிறைய பேர் அது என்ன என்று சொல்லி அசத்தி விட்டார்கள்... நேற்று  இரவு கூட உங்கள் எஸ்எம்எஸ் வந்தது நன்றி.
=============
பிலாசபி பாண்டி..
ஒரே விஷயம்தான்..ஆனா அதை நாம எப்படி பார்க்கறோம் , எப்படி அனுகுகின்றோம் என்பதில்தான் வாழ்க்கை சூட்சமம் அடங்கி இருக்கு...ஒன்பது மணிக்கு அடிக்கற ஸ்கூல்பெல் வயத்தை கலக்கி வைக்கும்... அதுவே சாயங்காலம் நாலுமணிக்கு அடிக்கற ஸ்கூல் பெல் மனதுக்கு இனிமையா இருக்கு...ஸ்கூல் பெல் ஒரே பெல்தான்...ஒரே சவுண்ட்தான்...ஆனா சூழ்நிலை மற்றும் கால நேரம், நாம பார்க்கற கோணம் வித்தியாசப்படுது அப்புட்டுதேன்..
சோக்கு...
girl to her boy friend... i heard that you failed in English ??? boy friend replay....what??? unpossible !! who telled you?
=========
வீடியோ..
இந்த மாதிரி எனர்ஜி டிரிங் இருந்தா நல்லதுதான்.. பட் கிளைமாக்ஸ் அல்ட்டிமேட்.... என்ஜாய்..
=======
நான்வெஜ் 18+
நேத்து ஒரு 16 வயசு பொண்ணை கற்பழிப்புல இருந்து  காப்பாத்தினேன்
எப்படி மச்சி  காப்பாத்தினே??
செல்ப் கண்ட்ரோல் மச்சி

நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....EVER YOURS...

19 comments:

  1. காலை வணக்கம்..இந்த சாண்ட் விச் கொஞ்சம் கூட நல்லா இல்லை.ஏதோ எழுதணும் அப்படீன்னு எழுதி இருக்கீங்க.சுவாரஸ்யம் இல்லை...

    ReplyDelete
  2. காலை வணக்கம்

    நான்வெஜ் அருமை அண்ணா

    ReplyDelete
  3. காத்தாடியும் கரண்ட்டு பில்லும் கழுத்த அறுக்குதுன்னு அவரு ஃபீல் பண்றாரு, சண்ட்விச் நல்லால்ல நொல்லாலன்னு.. ஓடிப்போன நியூசு தினத்தந்தில வந்திருக்கும், போய் சுவாரஸ்யமாப் படிங்க மிஸ்டர் கோவை நேரம் ;)

    ReplyDelete
  4. யாழினி பொண்ணு டெய்லி அப்பாவை இம்சை பண்ணு... குடிப்பதை நிறுத்தும் வரை அப்பா கன்னத்துலேயே போடு.....

    ReplyDelete
  5. நல்ல இருக்கு ஆன இல்ல எனைய சூர்யா மாரி பொலம்ப வச்ச ஜாக்கி கு நன்றி

    ReplyDelete
  6. //ஒரே ஒரு நட்ட நடு சென்டர் வாய தெறக்க போறானுங்க...ச்சே அவனுங்கதான் நட்ட நடு சென்டர் ஆச்சே...?//

    இதுல ஏதோம் ஆபாசமாகச் சொல்ல வருகிறீர்களா ?
    :)

    ReplyDelete
  7. Kool. I think you are finding some time to write now

    ReplyDelete
  8. jackie anna i guess you are not in good mood today something missing in the start of the post

    ReplyDelete
  9. Yes, my expectation was also ended in disappointment

    ReplyDelete
  10. பாக்ஸர் 150 வாங்குங்க. நல்லாருக்கு. லுக்குதான் கொஞ்சம் டொக்கு. ஆனாலும் ஹானஸ்ட்டா உழைக்குது. உங்க பழைய வண்டியை எக்சேஞ்சுலே மினிமம் 15,000 ரூபாய்க்கு எடுத்துப்பாங்க.

    ReplyDelete
  11. பதிவு அருமை! நானும் என் பழைய டிவிஎஸ் எக்செல்ல மாத்தணும்னு இருக்கேன்!

    ReplyDelete
  12. jackie!!!mithamaana panam!!mithamana velai. chennai sorkkam! gnaanam 63-......

    ReplyDelete
  13. என்னோடது டிஸ்கவர் 100... மொதல்ல எண்பது, ஒரு வருஷத்துக்கு அப்புறமும் சாலிடா எழுவத்தஞ்சு மைலேஜ் தருது... நம்மள மாதிரி குடும்பஸ்தனுங்களுக்கு ஏத்த வண்டி.. ஆனா அதில கடலூர் மாதிரி லாங்லாம் போகமுடியாது...

    ReplyDelete
  14. Sir, We accept and understand JJ is bad in administration. but that does not make the MK & his big family as non corrupt...May be they did 1% less corruption then JJ. we all tamils know about saguni MK. You might have benefited from Them... But dont make them as god and JJ as evil... Actually both are evils.

    ReplyDelete
  15. அண்ணே... பாஜாஜ் பிக்கப் கூடிய சைக்கிளாக இருந்தாலும் எண்ணை அதிகம் பிடிக்கிறதே... இங்கு ஹீரோ கொண்டாவை விரும்புவத அதிகம்...

    ReplyDelete
  16. (Sir, We accept and understand JJ is bad in administration. but that does not make the MK & his big family as non corrupt...May be they did 1% less corruption then JJ. we all tamils know about saguni MK. You might have benefited from Them... But dont make them as god and JJ as evil... Actually both are evils.)Prince u r correct..... jackie mind that and write ...

    ReplyDelete
  17. டிஸ்கவர் 125 சிசி புக் பண்ணிட்டேன்.

    மிஸ்டர் பிரின்ஸ் கலைஞர் யோக்கியம்ன்னு எந்த காலத்திலேயும் சொன்னதில்லை.. இரண்டு பேருமே கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர்கள் இல்லைன்னு எல்லாருக்கும் தெரியும்.. ஆனால் கலைஞர் ஆட்சி எப்படின்னு ஏழை பாழைங்களுக்கு நல்லா தெரியும்.

    ReplyDelete
  18. //ஆனால் கலைஞர் ஆட்சி எப்படின்னு ஏழை பாழைங்களுக்கு நல்லா தெரியும்.//
    அட அப்ப தமிழ்நாட்டுல ஏழைகளே இல்லையா???? எல்லாரும் பணகாரங்களா ஆகிட்டாங்களா??? ஏழைகளுக்கு கலைஞரை பத்தி தெரிந்தும் ஏன் அவருக்கு ஒட்டு போடவில்லை?? தெரிஞ்சுருச்சு அதான் போடல ஹிஹிஹிஹி :)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner