சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 30/05/2012


ஆல்பம்.
போராட்டமாடா  பண்ணறிங்க போராட்டம்...?? பெட்ரோலுக்கு  நாயா பேயா அலையவச்சா தெரியும்டா என்பது போல   மத்திய மாநில அரசுகள் இரண்டு நாட்களாக சென்னையில் நடந்து கொண்டன.

பெட்ரோல் கிடைக்காமல் வேலைக்கு போக முடியாமல் இரண்டு நாட்கள் பொதுமக்கள் தவித்த தவிப்பு இருக்கே.. அது ஆண்டவனுக்கே அடுக்காது....தமிழக ஆட்சியாளர்களை  இன்னும்  நான்கு வருடத்துக்கு  கேள்வியே  கேட்க முடியாது.. அந்த அளவுக்கு அற்புதமான முடிவை தமிழக மக்கள் எடுத்து விட்டார்கள்... மின் வெட்டால் வியர்வையில் வழிந்த படி விழி பிதுங்கி இருக்கின்றார்கள்..பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு மாநில  அரசு என்ன செய்யும் ? என்ற கேள்வியை யாராவது ஒரு புண்ணியவான் கேட்டு வைப்பான்.. ஆமாம் என்ன செய்ய முடியும்??? என்று நானும் கேட்டு வைக்கின்றேன்.??

===========
பிளஸ் டூ ரிசல்ட்டு வந்தாலே  பெரிய பயம் மனதில் வந்து தங்கி விடுகின்றது…  யார் வீடு இழவு வீடாக மாறப்போகின்றது என்று ஒரு பயம் தன்னால் வந்து ஒட்டிக்கொள்கின்றது..   தோல்வி அடைந்த ஒரு பெண் தீக்குளித்ததும், மற்ற ஒரு பெண் தற்கொலை செய்துக்கொண்டதும் மனதை வலிக்க  செய்கின்றது.. அதே வேளையில் 1100க்கு மேல் மார்க் எடுத்த பெண், பேஸ்புக்கில் தன் மார்க்கை பகிர்ந்து கொள்ள.... மூன்று   நாளைக்கு முன் நட்பான  பையன் அந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க, யார் அந்த பையன் என்று அம்மா கத்த  கோபத்தில் இரண்டாம் மாடியில் இருந்து விழுந்து  மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டு  இருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது..
==========
அனந்த விகடனில் மதன் கேள்வி பதிலுக்கு மதன்  கொடுத்த விளக்கம் மெய் சிலிர்க்க வைத்தது.. யாருக்கா இருந்தாலும் அம்மான்னாலே கொஞ்சம் அடிவயிறு கலங்கும் போல.. இதே மதன் கார்ட்டுனில் மற்றும் கேள்வி பதில்களில் என்னவெல்லாம்  நக்கல் விட்டு இருக்கின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்... விகடன் எனக்கும் மதனுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி விட்டது.. எந்த ஒரு நிறுவனமும் எந்த ஒரு தனிநபரையும் நம்பி இருந்ததாக சரித்திரமே இல்லை..
=============
வாழ்த்துகள்..
பதிவர் கார்த்திகை  பாண்டியன் மற்றும் அலைகள் பாலா இரண்டு  பேருக்கும் எனது உளம் கனிந்த திருமண வாழ்த்துகள்..
========================



பேட்மேன் சென்னையில் இருந்து இருந்தா அந்த ஆளுக்கும் இதுதான் நிலமை.....
=================
மிக்சர்..
சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயிக்க வேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன்..ஆனால் ஷாருக் பக்கத்தில் மென் சோகத்துடன் நின்றுக்கொண்டு இருந்த பெண் குழந்தையையும் அதற்கு ஷாருக் தேற்ற முடியாமல் அந்த குழந்தையை அணைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தஉடன், ஏன் கல்கத்தா நைட் ரைடர்ஸ் ஜெயித்து அந்த குழந்தை மகிழ்ச்சியாக இருக்க கூடாது என்று எண்ணினேன்.. நினைத்தது நடந்து விட்டது... ஆனால் ஷாருக்கின் ஆட்டம் முடியவில்லை.. ஆனால் அவன் நடிகள் அப்படித்தான் இருப்பான் இற்த குதுகலிப்புக்காக நிறைய வருடங்கள் காத்து இருந்தவன் அப்படித்தான் இருப்பான்..
========
தண்ணீர் லாரி சென்று கொண்டு இருந்தது..அதற்கு பின்னால் ஒரு ஹோண்டா சிட்டி அதுக்கும் பின்னால் ஒரு பைக்காரர் சென்று கொண்டு இருந்தார்.. எதிரில் சட்டென கிராஸ்செய்த நடைப்பாதை வாசியை தவிர்க்க படக்கென்று பிரேக்கை ஹோன்டா சிட்டி போட,சாலையில் தண்ணீர் லாரி  கொட்டிச்சென்ற நீரில் பைக்காரர் பிரேக்  அடிக்க முயற்சிக்க சிவாஜி படத்துல தீதீ பாட்டுக்கு ஸ்ரையோ இடுப்பை ஒடிச்சி ஆட்டறது போல  வித விதமா  ஆட்டி ஹோன்டா  சிட்டி சூத்துலே போய் டோமாருன்னு பைக்காரன் இடிச்சிட்டான்...  பெரிய ஒடுக்கு பைக்காரன் கையெல்லாம் நடுங்குது.. நடு ரோட்டுல காரை  நிறுத்திட்டு கார் காரன் இறங்கி வந்து மங்கம் மாஞ்சிக்கறானுங்க.. கவர்னர் வீட்டு விருந்துக்கு அவசர அவசரமா ரோட்டை   கிராஸ்  பண்ண அந்த பொறம் போக்கு   எதிர்க்க இருந்த கடையில இருந்து இரண்டே இரண்டு  பீடி வாங்கி ஒன்னை கைலி  மடிப்புளையும்  ஒன்னை வாயிலேயும் வச்சிகிட்டு அவனுக்கும் எதிர்க்க நடக்கற பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லாத்து போல நின்னுகிட்டு இருந்த்தை பார்க்க பார்க்க  எனக்கு வயிறு எரிஞ்சிது வேற என்ன செஞ்சி தெலைக்கறது...???
===========
அது என்னமாயமோ என்ன மந்திரமோ தெரியலை..? நான் போகும் போதுதான். அதுவரை நின்று கொண்டு இருந்த ஷேர் ஆட்டோ  கிளம்பி எனக்கு முன்னாடி போவும்.. அதுவரை பேராடு பிரியா இருக்கும் நான் போகபோக பக்கத்து சந்துல இருந்து லோடு  லாரி எனக்கு முன்னாடி புழுதியை கிளப்பிகிட்டு போகும்... ட்ரூமேன் ஷோ படத்துல வருவது போல எவனாவது சேட்டர்லைட்டு வழியா  பார்த்துட்டு ஜாக்கி வீட்டை  விட்டு கிளம்பிட்டார் ஓவர்..சொன்னதும் எல்லா பயல்களும் வண்டியை  எடுத்துகிட்டு வந்து ரகளை விடுறானுங்களா-? இல்லை... மச்சி ஜாக்கி கிண்டிகிட்ட வந்துட்டான் எனக்கு வயத்த கலக்குது  என் சார்பா நம்ம செங்கல்  லோடு  லாரியை அவன்  வண்டிக்கு முன்ன எடுத்துகிட்டு போய் ரொம்ப பொறுமையா போன்னு.... எவனாவது சொல்லறானுங்களா?- இல்லைன்னா ஜாக்கி கிளம்பிட்டார் ஓவர்.. எல்லாருக்கும் செல்போன்ல மேசேஜ் அனுப்பி எல்லாரும் கிளம்பி வரானுங்களான்னும் தெரியலை.. என்னமோ போடா மாதவா......
===================
காலையில்  மனைவியோடு அலுவலகம் கிளம்பும் போதே டென்ஷன் படுத்தறானுங்க..  ரெண்டு பேரு  அப்பதான் கிளம்பி  வேலைக்கு கிளம்பி வரானுங்க.. ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் போல...  வளைவு வரும் போது திரும்பி  பின்னாடி இருக்கற பிரண்டுகிட்ட பேசிட்டு திரும்பின ஆர்னை அடிச்சிக்கிட்டு நான் வரேன்..  அவன் திரும்பனதை பாத்துட்டு பிரேக் போட்டு நான் நின்னுட்டேன்.. அவன் பதட்டத்துல முன் பிரேக்கை அடிக்க அது சிமென்ட் தரை வேற சிலப்பாயி நேர நின்ன என் வண்டியில இடிச்சிகிட்டு விழறானுங்க.. கையில எல்லாம் அவனுங்க ரெண்டு  பேருக்கும் சிராய்ப்பு.. ஒருத்தனுக்கு காதுல கல்லு பொத்து ரத்தம் வேற வருது.. நான் தூக்க போனேன்.. நீங்க கிளம்புங்க சார்.. என்றார்கள்,.. இல்லை தண்ணியாவது வாங்கி வந்து தரேன் என்றேன்... உங்க மேலதான் தப்பு இல்லை இல்ல.. நீங்க கிளம்புங்க என்று டென்ஷன் ஆக.. நான் அந்த இடத்தில் இருந்து கிளம்பினேன்...
==========
 சரி இவனுங்க என்னவாயி இருப்பானுங்க என்று  நினைச்சிகிட்டே போன ஒருத்தன் கை காமிக்காம திரும்பி நான் பிரேக் அடிக்க அவன் அலன்டு போக ரெண்டு வண்டியம் ஈக்குவலா ஜாயின்ட் ஆயி நிக்குதுங்க... அவன் கை காட்டாம வளைஞ்சதுக்கு காரணம் பின்னாடி  அவன் லவ்வர்  அவன் மேல பின்னாடி சாஞ்கிட்டு இருந்ததுதான்... அப்ப கூட  அந்த பொண்ணு அவன் முதுக விட்டு நகரலை..  பெவிக்காலின்  பலமாக இணைப்பு போல...
=======
கூட்டுப்பிரார்த்தனை செய்வோம்.

அவர் பெயர் முகம்மது எனது சென்னை நண்பர்..! சில நாட்களாக தனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என சொன்னார்..! செல் போனிலும் தொடர்புகொள்ள வில்லை..! இன்று காலை என்னிடம் பேசினார் அவர் மனைவிக்கு ரத்த புற்று நோயாம் ஓ பாஸிட்டிவ் ரத்தம் தேவை உதவ முடியுமா என..! மிகுந்த மன வருத்ததுடன் பேஸ் புக்கிலும் ,கூகுள் பிளசிலும் பகிர்ந்ததுடன் சில நண்பர்களிடமும் தொடர்பு கொண்டு இந்த செய்தியை பரப்பினேன்..! தற்பொழுது முகம்மது என்னை தொடர்பு கொண்டார் அவரால் பேச முடியாத அளவிற்கு ஏகப்பட்ட அழைப்புகளாம் ..! ஆனால் இன்னும் அவர் மனைவி நிலை சீரடைய வில்லை ஸ்டான்லியில் ஐசியு வில் இருக்கின்றார்.! சற்று நிலைமை சீரடைந்தால் ஜீ ஹெச் க்கு மாற்றுவார்களாம்..! அந்த சகோதரியை பற்றி சொல்ல வேண்டும்..! சில மாதங்களுக்கு முன்னர் நமது ஜாக்கி சேகர் ஒரு பதிவிட்டு இருந்தார் இலங்கையில் போருக்கு பின்னர் அங்கே குழந்தைகள் உடுப்பு இன்றி சிரமப்படுகின்றார்கள் உங்களால் முடிந்த துணிகளை கொடுக்க சொல்லி அதன் பேரில் நான் திரு முகம்மது அவர்களிடமும் இதை சொன்னேன் ஆனால் அவர் வெளியூரில் இருந்தார்..! ஆனாலும் தனது மனைவியிடம் சொல்லி இரண்டு அட்டை பெட்டி நிறைய துணிகளை கொடுக்க ஏற்பாடு செய்தார் பர்தா அணிந்த அந்த சகோதரி என்ன்னிடம் துனிகளை கொடுத்து சென்றார் அந்த தங்கைதான் இன்று ரத்த புற்று நோயால் பாதிக்க பட்டு இருக்கின்றார் பிராத்தனை வலிமையானது ..!
தமிழ் அமுதன்....
========
நண்பர் தமிழ் அமுதன் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தார்... படித்ததில் இருந்து மனம் சங்கடப்பட்டது...சகோதரி மீண்டு வர பிரார்த்திப்போம்.  கூட்டுப்பிரார்த்தனை மிக வலிமையானது... மனம் உருக பிரார்த்திப்போம்.......அந்த மெயில் கீழே...

==============
இந்த வார கடிதம்.
Hello Jackie sir,

I'am a regular reader of your blog. you writes well and your writing style is too good. Keep it up.

Could you please help me to find one movie, i think its a Korean/Japan movie (I'am not sure about that)

In the movie one scene is like,
The Hero is a photographer and have studio.one time one family comes and take the family picture, after that the son will ask the hero to take his mother photo alone. hero will do the same, but after sometime the old lady will come back to the  shop again and says to the hero can you take one more picture, as i know my son want this picture for my funeral and i want to be look good on that picture.

Sir, Any guess. my head is breaking to find out that movie name . i hope u can help me in this :)

Thanks for your time to read my mail.

============
அன்பின் ராஜிக்கு வணக்கம் இவ்வளவுதாமதமான கடிதத்துக்கு முதலில் என்னை மன்னிக்கவும்... நானும் இந்த படத்தை பார்த்த்து இல்லை.. நண்பர்கள் என்ன படம் என்று சொன்னால்  நன்றாக இருக்கும்... யாராவது படித்து விட்டு நிச்சயம் இந்த படத்தை பற்றி சொல்லுவார்கள்... நன்றி.,
==========
ஆழ்ந்த அஞ்சலிகள்....
 பழம்பெரும்  பத்திரிக்கையாளர் சோலை காலமானார்.. அவருடைய கட்டுரைகள் நறுக்கு தெரித்தது போல இருக்கும்...கலைஞர் ஆட்சியில் இருந்த போதும் அவர் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட தயங்காதவர்... அவருடைய இழப்பு பத்திரிக்கை உலகத்துக்கு பேரிழப்புதான்.. அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

===========

ஒரு திரைப்படத்தை எத்தனை முறை நீங்கள் பார்ப்பீர்கள்...  ஒன்று அல்லது இரண்டு முறை... ஆனால்  நான் தியேட்டரில் மட்டும் 45 முறைக்கு மேல்  அந்த படத்தை பார்த்து இருக்கின்றேன்.. அது என்ன படம் என்று இங்கே கிளிக்கி படித்துக்கொள்ளுங்கள்.. அந்த படத்தின் இரண்டாவது பாகம் செம அசத்தலாக இருக்கும்... இப்போது மூன்றாவது பாகம் வர இருக்கின்றது... எஸ் ஜாக்கிசான் நடித்து வெளிவர இருக்கும்( cz12 ) சைனிஸ் ஜோடியாக் என்ற பெயரில் டிசம்பரில்  வெளிவர இருக்கின்றது.. இந்த படத்ன் ஜாக்கி நடித்து வெளிவர இருக்கும் கடைசி ஆக்ஷன் படம் என்று  குண்டை தூக்கி போடுகின்றார்கள். அப்படி எல்லாம்நடக்ககூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்வோம்..

======
பிலாசபி பாண்டி...

நீங்கள் காதலிப்பவரை விட உங்களை காதலிப்பவரை காதலியுங்கள்... வாழ்க்கை இனிக்கும்.
====
நான்வெஜ்18+


A young couple took their three-year-old son to doctor Cohen.
With some hesitation, they explained that, although their little
angel appeared to be in good health, they were concerned about
his rather small penis.

After examining the child, the doctor confidently declared, "Just
feed him cubes of cream cheese. That should solve the problem."

The next morning, when the boy arrived at breakfast, there was a
large stack of cubes of cream cheese in the middle of the
table.

"Gee, mommy," the boy exclaimed. "For me?"


"Just take two," his mother replied. "The rest are for your
dad."

===========




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

15 comments:

  1. சோலை காலமானாரா ஆழ்ந்த அஞ்சலிகள் அவருக்கு ..

    ReplyDelete
  2. Anna ....
    Simply Superb
    please watch & Write about "Satyameva Jeyathe" program on Vijay TV 11am on Sundays.
    It's good one
    convey my love to yazhini pappa

    ReplyDelete
  3. if there is any symptoms for cancer, it will be very helpful for all to take treatment in initial stage but 90% people know at the last minute only about the attack of cancer

    ReplyDelete
  4. காங்கிரஸ் பிளவின் போது காமராஜரை மன்னர்களின் கைக்கூலி என்றும் இந்திரா.cs ,nd திவாரி (காதல் மன்னன்]போன்றவர்களை முற்போக்கு என்றும் எமர்ஜென்சி ரொம்ப நல்லது என்றும் mgr உயிரோடு ஆட்சியிலிருந்த போது பண்ணிய எல்லா கோமாளிதனங்களையும் சப்பைக்கட்டு கட்டியதையும் பிறகு கருணாநிதியின் ஜால்ரா ஆன சோலைக்கு எனது அஞ்சலிகள்.

    ReplyDelete
  5. காங்கிரஸ் பிளவின் போது காமராஜரை மன்னர்களின் கைக்கூலி என்றும் இந்திரா.cs ,nd திவாரி (காதல் மன்னன்]போன்றவர்களை முற்போக்கு என்றும் எமர்ஜென்சி ரொம்ப நல்லது என்றும் mgr உயிரோடு ஆட்சியிலிருந்த போது பண்ணிய எல்லா கோமாளிதனங்களையும் சப்பைக்கட்டு கட்டியதையும் பிறகு கருணாநிதியின் ஜால்ரா ஆன சோலைக்கு எனது அஞ்சலிகள்.

    ReplyDelete
  6. //இந்த படத்ன் ஜாக்கி நடித்து வெளிவர இருக்கும் கடைசி ஆக்ஷன் படம் என்று குண்டை தூக்கி போடுகின்றார்கள்//

    கவலைப் படாதீங்க! அவரே அதை மறுத்துட்டார்!

    ReplyDelete
  7. Dear jackie
    intha vaara kaditham padam naan paartha mathiri ullathu mandaiyai udaichathil kidaitha 3 padangal
    1. christmas in august hero photographer + disease
    2. ...ing yes padam title is itself ...ing
    3. sad movie ( 3rd story -- mother son affection )

    but may be all 3 also wrong ( i am just recollecting after studying the scenario thats all )

    we all shall pray for her speedy recovery. may god bless her with good health and confidence ( mental strength to overcome )

    this one i know but i do not know whether still the service exists ie.,
    for blood requirements just type required blood group and sms to 96000 97000 ie., sms O+ve to 96000 97000 i think it is a free service but whether it is still functioning or not i do not know or
    contact 044-24346255 satya sai baba trust for blood donating volunteers for free this i know that they are doing it as a service but they require proper blood type full details of the patient and hospital and relative names etc to contact. poor people will be given 1st preference hope this message will reach a lot through your web page thanks jackie
    anbudan
    sundar g chennai rasanai

    ReplyDelete
  8. ஜாக்கி,
    இந்த ஜோக் ஆரம்பிக்கும்போதே நினைச்சேன் இப்படிதான் முடியும்னு.
    ''ஜாக்கி சேகர் ''..... "ஜாக்கி சேகர்" .......... ன்னு சொல்றீங்க ......... ஆனா உங்க தளத்துல ஒரு ஜாக்கி சான் படத்தோட விமர்சனமும் படிச்ச மாதிரி ஞாபகம் இல்ல. ( ஏதாவது பாத்து செய்யுங்க )
    தமிழ் நாட்டு மக்கள் இரண்டு .. இல்ல இல்ல........ மூணு 'சேகர்' களை மறக்கவே மாட்டங்க.

    1. S.V. சேகர்-----------------நாடகப்போராளி
    2. நாய் சேகர்..... நாய் சேகர்.......நகைச்சுவைப் போராளி
    3.The great one one and only
    ஜாக்கி சேகர் ------------ -------பதிவுலகப்போராளி.

    .
    தினமும் வேல முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து குளிச்சு எல்லா வேலையும் முடிச்சுட்டு உங்க பதிவுகளை படிச்சு கம்மென்ட் எல்லாம் போடுறோம். but நீங்க reply / respond பண்ணவே மாட்டேங்கறீங்க.

    "என்னமோ போடா மாதவா "

    வில்லேஜ் வாசி.

    ReplyDelete
  9. அண்ணா...

    சாண்ட்விச் நான்வெஜ் ரொம்ப நல்லாயிரு்க்கு...
    ஜாக்கி சானின் டிரைலர் அருமை...
    நீங்கள் பகிர்ந்திருக்கு எல்லாமே அருமை.

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. http://en.wikipedia.org/wiki/Christmas_in_August

    christmas in august? :)

    ReplyDelete
  11. prarthanai valimaiyanathu. akka nalam pera iraivanai prarthikiren.

    ReplyDelete
  12. Sir ,

    That movie is "Christmas in august", one of my favorite movie ever

    THanks,
    Surya.R

    ReplyDelete
  13. பின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கு என் நன்றிகள்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner