The Raid: Redemption/2012 ஆக்ஷனில் கலக்கும் இந்தோனேஷிய படம்.



சமீபத்தில் ஒரு ஆசிய திரைப்படம்  அமெரிக்க பாக்ஸ் ஆபிசில் கலக்கு கலக்கு  என்று கலக்கிக்கொண்டு இருக்கின்றது.. 


சினிமா உலகின் அதி புத்திசாலிகள் நாங்கள்தான் என்று  எப்போதும் மார்த்தட்டிகொண்டு இருக்கும்...ஹாலிவுட்டின் எண்ணைத்தை தவிடு போடியாக்கியவர்கள் புருஸ்லி,ஜாக்கிசான்,ஜெட்லி  போன்றவர்களை உதாரணமாக சொல்ல்லாம்..
மிகவும் பின் தங்கிய நாடான இந்தோனேஷியாவில் இருந்து ஒரு படம் அமெரிக்க பாக்ஸ் ஆபிசை  கலக்கிக்கொண்டு இருப்பது நமக்கு எல்லாம் பெருமைதானே..

வழக்கமாக பார்த்து பார்த்து புளிப்பு ஏறிய கதைதான் இருந்தாலும் அதில்  கொஞ்சம் எண்ணெய், கடுகு, உளுத்தம், பருப்பு  ரெண்டு கருவேப்பிலையை கிள்ளி போட்டு கையால் பிசைந்து தயிர் சாதமாக கொடுக்கும் போது புளிப்பு பற்றி பெரிதாய் நாம் யோசிக்க மாட்டோம்  அல்லவா? அப்படித்தான் இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து இருக்கின்றார்கள்.

=====
The Raid: Redemption/2012 படத்தின் ஒன்லைன்..

15 மாடி கட்டிடத்தின் உச்சியில் இருக்கும் கொள்ளையர் தலைவனை பிடிக்க 20 பேர் கொண்ட போலிசார் அந்த கட்டிடத்தை ரெய்டு செய்கின்றார்கள்.  பிடித்தார்களா இல்லையா? என்பதுதான்  ஒன்லைன்.

====

The Raid: Redemption/2012 படத்தின் கதை என்ன?

 ஒரு பெரிய  போதைமருந்து கடத்தல் கும்பல் தலைவன் அவனுக்கு ரெண்டு பெரிய அடியாளுங்க... ஒரு அடியாள் புத்திசாலி, இரண்டாவது அடியாள் முரடன்.. ஒரு பெரிய கட்டிடத்தில் 15 வது மாடியில உச்சியில வசிக்கின்றான்.. ஒம்மால எப்ப ரெய்டுக்கு போனாலும்  போலிஸ்காரனுங்க போறதுக்குள்ளே தகவல்  அவனுக்கு போய் சேர்ந்துடுது...

அதனால் அவன் பல வருஷடா போலிசுக்கு தண்ணி காட்டறான்.. அதனால்  ஒரு புது போலிஸ் கமாண்டோ படைய கூட்டிகிட்டு அந்த பில்டிங்க ரெய்டு பண்ண போறாங்க... உள்ள விட்டு உதைப்பானுங்களே அது போல பில்டிங் உள்ள விட்டு கதை சாத்திக்கிட்டு வில்லன்க கமாடோ படையை வேட்டை ஆட கடைசியில் வில்லனை புடிச்சாங்களா என்பது படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

===========
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

 இந்த படம் 2011 ஆம் ஆண்டே இந்தோனேஷியாவில் வெளியானாலும் பல உலக படவிழாக்களில் பங்கு பெற்று ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பார்த்த, இதன் தயாரிப்பாளர்  இதன் பரபரப்பான  திரைக்கதையை காசாக்க நினைத்து ,கதையை விற்க நேரம் இல்லாமல் படத்தை மட்டும் இங்கிலிஷ் டப் செய்து 2012இல்  உலகம் எங்கும் ரிலிஸ் செய்ய, அது பூந்தமல்லி பகவதி தியேட்டர் வரை வந்து தமிழ் பேசி இருக்கின்றது..

ஒரே ஒரு பில்டிங் அதுக்குள்ள போலிஸ்  போறதுக்கு முன்ன பின்னன்னு சில மணித்துளிகள்தான் அவுட்டோர்ல ஷுட் பண்ணி இருக்காங்க.. மத்தபடி  எல்லாம் இண்டோர்தான்...

கேமரா மேன் மற்றும் அசிஸ்டேன்ட் பருப்பு எல்லாம் பரதநாட்டியம் ஆடி இருக்கும்  அந்த அளவுக்கு வேலை பெண்டு நிமிர்ந்து இருக்கும்.  அவுட்டோர்னா இரண்டு ஸ்கிம்மர் நாரு தேர்மாகேகால்  தேவைப்பட்டா இரண்டு பார் லைட்டுன்னு இந்த படத்துல ஒயிட்டவே  முடியாது.. பிரேம்ல லைட்டுக்கு போற ஒயர்  தெரியாம எடுக்கறதுக்குள்ள போதும் போதும்னு போயிடும்...

படம் ஆக்ஷன் படம் ரெண்டு பேர் வந்து இன்டோர்ல பேசிட்டு போயிட்டா எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனா ஆக்ஷன் படத்துல.. கேமரா பரபரன்னு அலையும் அதுக்கு ஏத்தது போல லைட்டிங் செய்யனும்..

ரொம்ப நாளைக்கு அப்புறம் பரபரப்பான ஆக்ஷன் படம் பார்த்த உணர்வு.. டேய் எற்கனவே இது போல பார்த்து இருக்கியே அப்புறம் எதுக்கு ரசிக்கறே என்று   மனம் அடிக்கடி கேட்டுக்கொண்டாலும் ரசிக்க மறக்கவில்லை..

வந்த போலிஸ்காரனுங்க எல்லாரையும்  சாகடிச்சிட்டா இனி வாடகையே தர வேண்டாம்னு சொல்ல   தங்கி இருக்கறவன் அத்தனை பேரும் கத்தியோட கொலைவெறியாடு போலிஸ்காரனுங்களை துரத்துவது நல்ல டுவிஸ்ட்...

இந்த படத்துக்கு திரைக்கதை மற்றும் லோக்கேஷன் வேலைகளுக்கு மட்டுமே நான்கு மாதங்கள் எடுத்துக்கொண்டர்கள்.. படத்தில் நடித்த கமொண்டோ வீரர்களுக்கு நிஜ கமான்டோக்களிடம் பயிற்சிக்கு அனுப்பி எப்படி அடிப்படையாக ஆயுதங்களை கையாள வேண்டும்? சிக்னலுக்கு எப்படி கட்டுப்பட வேண்டும்   போன்றவற்றை டிரெயினிங் கொடுத்தப்பிறகே படபிடிப்புக்கு சென்றார்கள்..

இந்த படத்தை பானோசோனிக்  ஆட்டோ போகஸ் 100 கேமராவில் எடுத்து இருக்கின்றார்கள்.. சோ லைட்டிங் ரொம்ப ரொம்ப கம்மியா  பண்ணாலே போதும்..

இந்த படத்துல கவர்சிக்கு கூட ஒரு பொண்ணையும் வில்லன் தன் கையாளா வச்சிக்கலை என்பதுதான் படம் பார்த்த எனக்கு இருந்த ஒரே வருத்தம்.

============

படத்தின் டிரைலர்.


===============
படக்குழுவினர் விபரம்..

 Directed by Gareth Evans
Produced by Ario Sagantoro
Written by Gareth Evans
Starring Iko Uwais
Joe Taslim
Donny Alamsyah
Yayan Ruhian
Pierre Gruno
Tegar Setrya
Ray Sahetapy
Music by Fajar Yuskemal
Aria Prayogi (Celluloid Nightmares release)
Mike Shinoda
Joseph Trapanese (Sony Pictures Classics release)
Cinematography Matt Flannery
Editing by Gareth Evans
Studio PT. Merantau Films
XYZ Films
Distributed by Celluloid Nightmares (Worldwide)
Sony Pictures Classics (North America)
Release date(s)
8 September 2011 (TIFF)
20 January 2012 (Sundance)
23 March 2012 (United States & Indonesia)
27 April 2012 (Iceland)
2 May 2012 (France & Belgium)
Running time 101 minutes 
Country Indonesia
Language Indonesian
Budget £$1.1 million
Box office $4,092,792 (US)
 ==============
பைனல்கிக்...

இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படம் காரணம் பரபரப்பான ஆக்ஷனில் நம்மை கட்டிப்போட்டு விடுகின்றார்கள்.. பார்த்த நல்ல பரபரப்பான ஆக்ஷன் படத்தையே கதை தெரிஞ்சாலும் டிவில போடும் போது பார்க்கறது இல்லையா? அது போலத்தான் இந்த படத்தையும் பாருங்க....




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

8 comments:

  1. your story telling style.....realy very interesting.

    ReplyDelete
  2. நல்ல படம்.. ஆனால் பாக்ஸ் ஆபீஸ் எல்லாம் கலக்க வில்லை..

    ReplyDelete
  3. நன்றி லக்ஷ்மி... நன்றி நண்பர்களே...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner