காகிதங்கள் (சிறுகதை)




 என்ன பணம் கட்டிட்டியா-?


இன்னும் இல்லைங்க... இப்பதான்  டோக்கன் கொடுத்து இருக்காங்க.. எனக்கு முன்னாடி பதினைஞ்சு பேருக்கு  மேல நிக்கறாங்க..  இங்க பணம் கட்டிட்டு அந்த பில்லை எடுத்துக்கிட்டு போயிட்டு அட்மிஷன் கார்டுல சீல் குத்தினாதான் வேலை முடியும்...

 எனக்கு   ஆபிஸ்ல  நாலரை மணிக்கு  முக்கியமான  மீட்டிங் இருக்கு.. என்ன செய்யறதுன்னு தெரியலை.. ?நானே  இரண்டு மணி நேரம்தான் பர்மிஷன்  போட்டுட்டு வந்தேன்... இங்க இவ்வளவு பெரிய க்யூ நிக்கும்னு நான் எதிர் பார்க்கவேயில்லை...

ஐசிடபுள்யூ படிக்க போறேன்னு தெரிஞ்சுது இல்லை.. இரண்டு நாளைக்கு முன்னயே போய் பணம் கட்டி அட்மிஷன் ஆகற  வேலையை பார்த்து இருக்கனும்.. கடைசி நாள்ல  சாவும் போது  சங்கரா சங்கரான்னா இப்படித்தான் அனுபவி என்றேன்....

  சேகர் நானே டென்ஷன்ல இருக்கேன்.. நீ ரொம்ப யோக்கியம் போல எனக்கு அட்வைஸ் எல்லாம் கொடுக்காதே என்று என்னை என் மனைவி கடிந்துக்   கொண்டாள்...

 நான் அரைமணிக்கு ஒரு முறை   தொடர்ந்து விசாரித்துக்கொண்டு இருந்தேன்.. அவள் காலையில்  இருந்து எதுவும் சாப்பிடவில்லை... மணி இரண்டரை ஆகி கொண்டு இருந்தது.. நான்  வேணா  வரட்டுமா? என்று என் மனைவியை கேட்டேன்..
  இங்க எத்தனை மணிக்கு முடியும்னு தெரியலை.. அதனால நானே  பார்த்துக்கறேன் என்றாள்...குழந்தை பெற்ற பிறகு ஐசிடபிள்யூ படிக்க வேண்டும் என்ற எண்ணம்  மனைவிக்கு வந்து இருப்பதற்கும் அந்த தன்னம்பிக்கையை நினைக்கும் போது எனக்கு ரொம்ப  சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது..

ஹலோ...

சொல்லுடி...

பணம் கட்டிட்டேன்... ஆட்டோ பிடிச்சிட்டேன்...

எதுவரைக்கு ஆட்டோ பிடிச்சி இருக்கே...?

எக்மோர் வரைக்கும்தான்...

எதுக்கு எக்மோர் வரைக்கு..? கிண்டியில இருக்கற உன் ஆபிசுக்கு ஸ்டெரெயிட்டா ஆட்டோபிடிச்சிடு....

நீங்கவேற  300 ரூபாய் கேட்கறாங்க.. எக்மோர் டூ கிண்டிக்கு டிரெயின் புடிச்சி, அங்க இருந்து ஆட்டோ புடிச்சிக்கறேன் என்றாள்..

என்னமோ செய் என்று சொல்லி  போனை  வைத்தேன்....

ஐந்தரை மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கு  பம்பரமாக எனது குழுவோடு பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்க.. எனது செல்போனில் இரண்டு  எஸ் எம் எஸ்கள் என் மனைவியிடமிருந்து வந்து இருந்தது.

 ரொம்ப நாளைக்கு அப்புறம் படிக்க சேர்ந்ததும், பல வருடங்கள் கழித்து சென்னை லோக்கல் ரயில் பயணமும் மனதை ரொம்பவே குதுக்கலிக்க வைக்கின்றன என்று செய்தி வந்து இருந்தது.. மெலிதாய் புன்னகைத்து விட்டு பதிலுக்கு ஆல்த பெஸ்ட் அனுப்பி, திரும்பவும் வேலையை  பார்க்க துவங்கினேன்.

ஒரு புதிய நிகழ்ச்சியின் ஸ்கிரிப்ட் பற்றி அலுவலக சகா ஒருவருடன் நான் விவாதித்துக்கொண்டு இருக்கும் போது, என் மனைவி  போன் செய்தாள்.. நான்  கட் செய்து விட்டு பேசிக்கொண்டு  இருந்தேன்.. காரணம் அது  ரொம்பவே முக்கியமான மீட்டிங்.. 

திரும்பவும் போன்  செய்தாள்... திரும்ப கட் செய்தேன்... மீட்டிங் முடிந்தது.. திரும்ப திரும்ப போன் செய்கின்றாள் என்றால் ஏதோ பிரச்சனையோ? குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்துருக்குமோ? என்று ஏதேதோ சிந்தனைகளுடன்  நான் அவளுக்கு போன் செய்தேன்.

 சொல்லும்மா...

ஆபிசுக்கு வந்துட்டேங்க...

சில மணி நேரத்துக்கு முன் அவள் அனுப்பிய எஸ்எம்எஸ்சில் இருந்த உற்சாகம்  போனில் பேசும் அவள் குரலில்  சுத்தமாக இல்லை..

ரைட் எங்க இருக்க..?

ஆபிஸ் லிப்ட்ல இருக்கேன்ங்க....

என்னை திட்ட மாட்டிங்களே என்றாள்...

எதுவா இருந்தாலும் சொல்ல்லு என்றேன்...

ஆபிஸ்ல லிப்ட் ஏறும் போது இரண்டு பேரு லிப்ட்ல மீட்டிங்குக்கு பைல்  எடுத்துக்கிட்டு போகும் போதுதான் கவனிக்கின்றேன்.. என் சர்ட்டிபிகேட் பைல் எங்க வச்சேன்னு தெரியவில்லை.... என்று  என் மனைவி சொல்ல எனக்கு பிபி சர் என்று எகிர ஆரம்பித்தது....

ஓகே  டென்ஷன் இல்லாம சொல்லு....நல்லா  யோசிச்சி பாரு...எங்க விட்டேன்னு?

எனக்கு பிளாங்கா இருக்குங்க...?

அந்த நொடியில் இருந்து எனக்கு பிளாங் என்ற ஆங்கில வார்த்தையை பிடிக்காமல் போயிற்று... அந்த  வார்த்தையை கேட்கும் போது எல்லாம் தண்ணி கலக்காமல் கல்ப்பாக சரக்கு அடித்தால், ஒரு மாதிரி வயிறு கபகபன்னு எரியுமே? அப்படி ஒரு எரிச்சல் அந்த வாக்கியத்தையும் வார்த்தையையும் கேட்கும் போது எனக்கு ஏற்பட்டது.


ஓகே... இப்ப எங்க இருக்க... நான் எங்க வரட்டும்...??

நான் அந்த மீட்டிங் அட்டேன்ட் பண்ணிட்டு வரேன் என்றாள்...

சரி நான் அங்க வரும்  போது ஆபிஸ் வாசலில்  நில்லு என்றேன்..

 என் குழுவிடம் நிலையை விலக்கி விட்டு, நான், என் மனைவி அலுவலகம் நோக்கி வண்டியை பறக்கவிட்டேன்..

 சர்ட்டிபிகேட் தொலைந்து போனது கூட எனக்கு வருத்தம் இல்லை பிளான்க்கா இருக்கு என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்???

சர்ட்டிபிகேட் என்பது வெறும் காகிதம் அல்ல... அது 17 வருட உழைப்பு... இரண்டு வருடம் எல்கேஜி யூகேஜி, பத்து வருடம்  ஸ்கூல், இரண்டு வருடம் ஹயர் செகண்டரி, மூன்று வருடம் காலேஜ்.... 

இதுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணிநேர உழைப்பு..  பரிட்சையில் பாஸ் செய்ய 17 வருஷத்துக்கு எத்தனை மணி நேரம் அதுக்காக வீட்டில் ராப்பகலா படிச்சி இருக்கனும்.. --??என்று  ஏதேதோ யோசித்துக்கொண்டு கிண்டியில் இருக்கும் மனைவியின்  அலுவலகத்து வாசலில் வந்து நின்று விட்டேன்...

5 கோடி மக்கள் பரபரப்பாக பெட்ரோல் விலைஉயர்வையும் மின் கட்டண உயர்வையும் நினைத்துக்கூட பார்க்க  நேரமில்லாமல் இயங்கும் சென்னையில், தொலைந்து போன சர்ட்டிபிகெட்டுகளை எங்கே  போய் தேடி தொலைப்பது என்ற கவலையோடு... வானத்தை பார்க்க  இரையை எடுக்க லாவகமாக இறங்கும் பருந்தை போல, ஏர் இந்தியா பருந்து ஒன்று மெல்ல ஆனால் கணத்த ஓசையுடன் இறங்க  ஆரம்பித்தது...


எங்கடி தொலைச்சே என்றால் பிளாங்கா இருக்கு என்றகின்றாள்.. ஓத்தா பிளாங்குன்னு வார்த்தை கண்டுபிடிச்ச  பொறம் போக்கு, வக்காலி, அவன் மட்டும் என் கையில கெடச்சான் பெசஞ்சி புடுவேன் பெசஞ்சி என்ற மனதில் கருவிக்கொண்டு இருந்தேன்...

 என்னடா இது  சர்ட்டிபிகேட் தொலைச்ச  உன் பொண்டாட்டியை கேக்க துப்பு இல்லை... பிளாங்குன்னு  வார்த்தை கண்டு பிடிச்சவனை திட்டுறியே என்று  நினைக்கும் உங்கள் மைனட் வாய்ஸ்சை  நான் கேட்ச் செஞ்சிட்டேன்...


லவ் பண்ணும் போது இரண்டு வாட்டி அவளை அடிச்சி இருக்கேன்.. ஒரு வாட்டி கண்ணாடி பறந்து போயிடுச்சி.. கல்யாணத்துக்கு அப்புறம் இதே போல ஏதோ ஒரு சண்டையில அவள அடிச்சிட்டேன்...அவ விசும்பிக்கிட்டு இருந்தா...  நான் இன்னும் கொஞ்சம் ங்கோத்தா ஒம்மா எல்லாம் கலந்து கட்டி வார்த்தைகளை தேர்ந்து எடுத்து, காக்டெயிலா  மிக்ஸ் பண்ணி ஒரு பெரிய ஓழ் பாட்டை விட்டு விட்டு நான் பாட்டுக்கு காலை கிளப்பிகிட்டு தூங்கிட்டேன்... 

திடிர்ன்னு தூக்கம் கலைஞ்சி எழுந்து பார்க்கறேன் எந்த இடத்துல அழுதுகிட்டு உட்காந்து இருந்தாளோ? அதே இடத்துல  உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்கா... 

எனக்கு என் மேலயே வெறுப்பு... என்ன ஆள் நாம..? இப்படி பண்ணிட்டோமே... அவளுக்குன்னு வேற யாரு இருக்கா? நம்மளை விட்டான்னு நினைச்சி.. அவ தோளை தொடறேன்.. ஓ ராமான்னு  அழறா... இனிமே நான் உன்னை கை நீட்டி அடிக்காம இருக்க முடிஞ்சவரைக்கு முயற்சி செய்யறேன்னு சொன்னேன்...

அதுக்கு அப்புறம் அவ மேல "அடிக்கறதுக்கு" கை வைக்கறதே இல்லை.... இத்தனை வருஷத்துல 248 தடவைக்கு மேல  அவளை இழுத்து போட்டு உதைச்சி இருக்கலாம் ஆன நான் என்  கோபத்தை கன்ட்ரோல் பண்ணிகிட்டு வெறும் திட்டுடோட முடிச்சிக்குவேன்… 


அதனால பொண்டாட்டியை பார்க்கறதுக்குள்ளயே.. அவனை அதிகமா திட்டக்கூடாதுன்னு மனசுக்குள்ள சத்திய பிரமாணம் செஞ்சிகிட்டேன்.. ஆபிஸ் வாசல்ல காத்து கிட்டு இருந்தேன் மீட்டிங் முடிஞ்சி என் பொண்டாட்டி என்னை நோக்கி வந்தா..


சேகர்பா   சாரி டாரொம்ப டென்ஷன் படுத்திட்டேன். இல்லை.. பாவம் நீ வேற  வேலையை விட்டு விட்டு அவசரம் அவசரமா இங்க வந்து இருக்க  என்றாள்..

ஓகே லீவ் இட்

 எந்த இடத்துல தொலைச்சேன்னு இப்பயாவது நல்லா   யோசிச்சி சொல்லுஎன்று சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து  அவளை பின்னால்  உட்கார வைத்தேன் . வண்டியை கிண்டி ரயில்வே ஸ்டேஷன் நோக்கி வண்டியின் சக்கரத்தை உருள விட்டேன்....

ஐசிடபிள்யூ ஆபிஸ்ல இருந்து  வெளியே வந்தேன்.. எக்மோர் ஸ்டேஷனுக்கு ஆட்டோ பிடிச்சேன்…  ஸ்டேஷனுக்கு போனதும் தலை சுத்தறமாதிரி இருந்திச்சி.. ஒரு சிட்டோஸ் பாக்கெட்டும் ஒரு கூல் டிரிங்ஸ் குடிச்சிட்டு, கிண்டிக்கு டிரெயின் புடிச்சேன். டிரெயின்ல உங்க எல்லாருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பிச்சேன்..  கிண்டி வந்ததும் இன்னும் பசி அடங்கலை அதனால ஒரு பாதங்கீர் குடிச்சேன்திரும்ப பஸ் பிடிச்சேன்.. பட்ரோடுல இறங்கி அங்க இருந்து எங்க ஆபிசுக்கு   ஆட்டோ பிடிச்சேன்……..


 சரி இப்பவாவது  நல்லா யோசிச்சு சொல்லு எங்க சர்ட்டிபிகேட்டை தொலைச்சேன்னு..??

தெரியலைப்பா  பிளாக்கா இருக்கேன்.. காலையில் இருந்து அந்த பைலை மாரோட அனைச்சிகிட்டு அலைஞ்சேன்.. அது என்கூடவே இருக்கறமாதிரி ஒரு பீல் அதனால் எங்க மிஸ் ஆச்சின்னு தெரியலை என்றதும் ....

அப்ப உன் கூடவே சர்ட்டிபிகேட் இருந்துச்சின்னா இருக்கனுமே? எங்க போச்சி-?

அதான் சொல்லறனே.. பிளாங்கா இருக்குன்னு…

என்னடிங்கோத்தா பிளாங்கா இருக்கு???  5 கோடி பேரு வாழற ஊரு இது… ஒரு நாளைக்கு லட்சம் பேருக்கு மேல டிரெயின்ல, அட்டோன்னு போற இடம்..?  எங்கன்னு போய் தேடுவேன்..?? நான்தான்  காசு மயிறு போனாலும் ஆட்டோ பிடிச்சி வான்னு சொன்னேன் இல்லை...?? உன் தெரவுசு மயிறு தெரிஞ்சிதானே சொன்னேன்... இப்ப பாரு ரோடு ரோடா அலையற அளவுக்கு ஆயிடுச்சி..??

சர்ட்டிபிகேட் தொலைஞ்சா போலிஸ் கம்ளெயின்ட் கொடுத்து ,அந்த எப்ஐஆர் காப்பியை எல்லா டுப்ளிகேட்  காப்பி கூடவே  வைக்கனுமாம்… நீ வர்ரதுக்குள்ள எல்லாம் விசாரிச்சிட்டேன்.. எங்கடி உட்டன்னு கேட்டா? பிளான்க்கா இருக்கு பிளான்க்கா இருக்குன்னு மயிறு பேச்சி பேசிகிட்டு இருக்க..?? என்று என்னையும் மீறி எரிச்சலில் கத்தி தீர்த்தேன்.. முதலில் பாதாங்கீர் சாப்பிட்ட இட்டத்தில் ஏதாவது சர்ட்டிபிகேட் இருக்கின்றதா என்று போய் கேட்க சொன்னேன்.. அங்கே இல்லை என்று என் மனைவி உதடு பிதுக்க…

நீ என்ன பண்ணறே பிளாங்கா அப்படியே டிரேயின் புடிச்சி எக்மோர் ஸ்டேஷன்ல சிட்டோஸ் சாப்பிட்ட கடைக்கு போய் விசாரிச்சிகிட்டு இரு.. நான் பைக்ல எக்மோர் ஸ்டேஷன் வந்துடுறேன்னு  சொன்னேன்…

 லைட்டாக கண் கலங்க என்னை முறைத்து பார்த்தாள்..   அவள் ரயில் பிடிக்க.. நான் எக்மோருக்கு ஸ்டேஷனுக்கு  பைக்கில்  விரைய ஆரம்பிதேன்..  என் ஒரே நம்பிக்கை அந்த கடைதான்.. பசி மயக்கத்தில்  சீட்டோஸ் மற்றும் கூல்டிரிங்க்ஸ் குடித்து விட்டு, கடையிலேயே சார்ட்டிபிகேட்டை மறந்து  ரயில் ஏறி இருக்க  வேண்டும்..  அதனால் அங்கே   கண்டிப்பாக சர்ட்டிபிகேட் இருக்கும் என்று நம்பினேன்.

போன் அடிக்கும் போது எல்லாம் அவள்தான் போன் செய்கின்றாள் என்று ஆர்வமாக எடுக்க காத்து இருந்தேன்..

ஏங்க…  அந்த கடையில தான் சர்ட்டிபிகேட் வச்சிட்டேன் கிடைச்சிடுச்சி என்று சொல்லுவாள் என்று  எதிர்பார்த்து இருந்தேன்..  ஹெட் போன் போட்டுக்கொண்டு வேகமாக  நான் வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தேன்…

போன் அடித்தது.. நான் ஹெட்போனில் இருக்கும் ஆன்சர் பட்டனை பிரஸ் செய்து, ஆர்வமாக  பேச ஆரம்பித்தேன்..  போனில் ரஜினி வந்தார்.. கண்ணா கன்னியாக்குமாரியில் இருந்து காஷ்மீர் வரை எந்த தகவல் வேண்டும் என்றாலும் என்று  ஜஸ்ட் டயல் விளம்பரம்  வர... போடாங்........  என்று வழக்கமான வார்த்தை பிரயோகத்தை உபயோகப்படுத்தி போனை வைத்து விட்டு இன்னும் வண்டியை விரைவு படுத்தினேன்..

எக்மோர் ஸ்டேஷன்  இறங்கி என் மனைவிக்கு போன் செய்தேன்...

ஏங்க..... அங்கேயும் இல்லை... என்றாள்...

என் ஒரே நம்பிக்கை சுத்தமாக நொறுங்கி போனது...  சார்ட்டிபிகேட் தொலைந்த விஷயம் தெரிந்த என் மனைவியின் நண்பி வேறு எஸ்எம்எஸ்சில்  என்னாச்சி என்னாச்சி என்று  டென்ஷன் கிளம்பிக்கொண்டு இருந்தாள்......

 போன் செய்தேன்.. அவளிடம் பேசினேன்.... கண்டிப்பா சர்ட்டிபிகேட் கிடைச்சிடும் என்றாள்..

அவள் சொன்னால் பலிக்கும் அவள் நாக்கு கருநாக்கு என்று  பேச்சுவாக்கில் என் மனைவி ஒரு முறை சொல்லி இருக்கின்றாள்..ஒருவேளை இவள் சொன்னதால் கண்டிப்பாக கிடைத்து விடும் அல்லவா? என்று எனக்கு நானே மனதை தேற்றிக்கொண்டேன்.. பிரச்சனை ஏற்ப்படும் போது மனது என்ன விரைவாக வேலை செய்கின்றது என்று இலக்கியவாதி போல யோசித்தபடி நடக்க ஆரம்பிதேன்.

 அப்படி கிடைக்கவில்லை என்றால் போலிஸ்காரனுங்க கிட்ட போய் நிற்க்கனும்.... ஏகப்பட்ட கிரஸ் கேள்வி கேட்கறதை கூட ஏத்துக்கலாம்... கேட்டு முடிச்சிட்டு இது நம்ம பீட்டு இல்லை, கிண்டி போலிஸ் ஸ்டேஷன்ல கம்ளெயின்ட் பண்ணுங்கன்னு  சொல்லி இழுத்து அடிப்பானுங்களே... என்ற கவலை வேறு ஒரு புறமாக ஓடிக்கொண்டு இருந்தது.

பிளாட்பாரம் டிக்கெட் வாங்கி கொண்டு எக்மோர் புறநகர் ரயில் நிலையத்து பிளாட் பாரத்தை நோக்கி நடந்தேன்...  போனில் பேசியபடி எதிர்பாராமல் என் மீது தனது சின்ன மார்பால் இடித்து விட்டு, சாரி சொன்ன பெண்ணின் சாரியை உதாசினப்படுத்தி விட்டு  மிக வேகமாக நடந்தேன்... 

என் மனைவியை பார்த்தேன்.. மிக  சோர்வாக காணப்பட்டாள். சரி இதுக்கு மேல் எதுக்கும் திட்டிவிடக்கூடாது... ரொம்ப உடைடந்து போய் இருந்தாள்... எதுக்கும் ஸ்டேஷன்  மாஸ்டரிம் கேட்டு பார்த்து விடுவோம் என்று அவரிடம் விசாரிக்க.. எத்தனை மணிக்கு  வண்டியில ஏறினங்க.. என்று  விசாரித்து  அதே வண்டி தற்போது வந்து கொண்டு இருப்பதாக சொல்ல..ஓடி  லேடிஸ் கம்பார்ட்மென்ட்டில்  என் மனைவி உட்கார்ந்து வந்த சீட்டை ஒரு முறை பார்த்தால் அங்கேயும் இல்லை...

வண்டி புறப்படும் முன் இறங்க அவளை அவசரப்படுத்தினேன். அவள் இறங்க வண்டி மின்னல்  வேகத்தில பறக்க ஆரம்பித்தது.. ஸ்டேஷன் மாஸ்டரிடம் போன் நம்பரை கொடுத்து விட்டு  சாட்டிபிகேட் கிடைத்தால் போன் செய்யுங்கள் என்று சொல்லி விட்டு ஸ்டேஷன் விட்டு என் டூவீலரை எடுத்தேன்..

மணி ஆறரை.. ஏதுக்கும் ஐசிடபிள்யூ ஆபிஸ் போய் பார்த்துடுவோம் என்றேன்... என் மனைவி வெறுத்து போய் பதில் ஏதும்  பேசாமல் ,கமுக்கமாக அம்மாவின் அமைச்சரவை சகாக்கள் போல என் பின்னால் அமைதியாக வண்டியில் டிஸ்டன்சுடன் அமர்ந்தாள்....

 நல்லவேளை ஐசிடபிள்யூ ஆபிஸ் திறந்து இருந்தது...

 உள்ளே வேலை செய்து கொண்டு இருந்தார்கள்.. உள்ளே போனதும் ஒரு காது  மெஷின் வைத்து இருக்கும் அலுவலக நபர் ஒருவர்... என்ன? ஏது? என்று  விசாரித்தார்... என்னை கவுண்டர் அருகில் வெயிட் பண்ண சொன்னார்...

கருநாக்கு,சிட்டோஸ்,பாதங்கீர், போலிஸ்டேஷன்,ஆட்டோ, எப்ஐஆர்  என்று எல்லாம் என் நினைவில் ஷாட் கட்டாக வந்து என் மனது பிளான்காக இருந்தது... அடுத்து ஆட்டோ ஸ்டேன்ட் சென்று விசாரிக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்....



பணம்  கட்டி விட்டு சீல் வாங்க அந்த ரூமுக்கு போனேன்.. சர்ட்டிபிகேட் மிஸ் ஆயிடுச்சி அதான் செக் பண்ண வந்தேன் என்று அவள் சொல்ல.. அவர் முதலில்  தப்பான அறையை சுட்டிக்காட்ட  ..

என்  மனைவி அடுத்த  அறையை சுட்டிக்காட்டினாள்.. அவர் அழைத்து சென்றார்.. எக்சிகியூட்டிவ்  சூப்பர்வைசர் என்ற கண்ணாடி அறைக்குள்அழைத்து சென்றார்... என்ன பேசினார்கள் என்று எட்ட இருந்து பார்த்த எனக்கு எதுவும் தெரியவில்லை... அங்கே அதிகாரியாக இருந்த பெண்மணி என் மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்தார்... கீழே குனிந்து டிராயரை திறந்தார், என் மனைவி உடைந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.... (என்னடி மயிறு  பிளாங்கா இருக்கு என்று நான் திட்டியது சட்டென அவளுக்கு நினைவுக்கு வந்து இருக்கலாம்...)


நான் சட்டென அலுவலகத்தை விட்டு வெளியே வந்து  கைகள் நடுங்க.... ஒரு சிகரேட்டை உதட்டுக்கு கொடுத்து பற்றவைக்க ஆரம்பித்தேன்...



(சிகரேட் குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது..)




பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

18 comments:

  1. பதினெட்டு வருட உழைப்பு தொலைந்த மண உளைச்சலை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறீர்கள்,முடிவில் டிராயரில் சர்டிபிகேட் இருந்ததாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  2. சர்டிபிகேட் கிடைத்ததா..? இப்போ எனக்கு பிளாங்கா இருக்கு ஜாக்கி.. :(

    ReplyDelete
  3. கதையினை படிக்கும் போது ப்ளைட்க்கு முதல் நாள் என்னுடைய பாஸ்போர்டை எனது அம்மா ஆட்டோவில் தொலைத்து ஒரு நாள் தாமதமாக சிங்கை சென்ற ஞாபகம் வருகிறது .

    ReplyDelete
  4. கிடைச்சிருச்சா? கிடைச்சுருச்சுதானே?

    ReplyDelete
  5. தலைவா கிடைச்சதா? இல்லையா?

    ReplyDelete
  6. சர்டிபிகேட் missing விட story tencen over ,
    கருநாக்கு -- மனது பிளான்காக இருந்தது... Nice

    ReplyDelete
  7. பாஸ். எது நடக்கணுமோ அது நடந்தே தீரும்... அதை என்ன பண்ணாலும் மாத்த முடியாது. என்ன இருந்தாலும் நீங்க அப்படி திட்டி இருக்கக்கூடாது.

    யோசிச்சு பாருங்க... அதையே நினைச்சு அண்ணி நாலு நாள் உங்க கூட பேசாம இருந்தா எப்படி இருக்கும்?

    (சிறுகதைன்னு சொன்னாலும் போன வாரம் நடந்த விசயத்தை எழுதி இருக்கீங்கன்னு தெரியுது.)

    ReplyDelete
  8. பாஸ். எது நடக்கணுமோ அது நடந்தே தீரும்... அதை என்ன பண்ணாலும் மாத்த முடியாது. என்ன இருந்தாலும் நீங்க அப்படி திட்டி இருக்கக்கூடாது.

    யோசிச்சு பாருங்க... அதையே நினைச்சு அண்ணி நாலு நாள் உங்க கூட பேசாம இருந்தா எப்படி இருக்கும்?

    (சிறுகதைன்னு சொன்னாலும் போன வாரம் நடந்த விசயத்தை எழுதி இருக்கீங்கன்னு தெரியுது.)

    ReplyDelete
  9. பங்காளி கிடைச்சிருச்சுல்ல...

    கிடைச்சிருக்கும் என்கிறது என் மனது....

    ReplyDelete
  10. பிளாங்காக இருந்தது என்று சொன்னதற்கு மனைவியை வசைபாடிய உங்கள் மனதும் கடைசியில் பிளாங்காகத்தானே இருந்திருக்கிறது.
    எப்படியோ சர்டிபிகேட் கிடைத்ததே.... சந்தோஷனம்

    ReplyDelete
  11. I hope u will get that
    If it was happened ysterday
    It was may be with my curse
    I chased u untill Ramapuram signal to say a hello
    But after That u was very fast couldn't able to catch u
    U was in blue checked shirt and ur wife was in yellow colour chudi

    ReplyDelete
  12. முத விஷயம் சர்ட்டிபிகேட் கிடைச்சிடுச்சி...ஆக்ஷுவலா மெரிஸ் ஆப் மாடர்ன்னு ஒரு படம் அந்த படத்து கிளைமாக்சை இன்னைக்கு வரைக்கு என்னால மறக்கவே முடியாது.. அந்த கிளைமாக்ஸ் பத்தி ஒரு மணி நேரத்துக்கு மேல விவாதம் பண்ணலாம்.. சோ அது போல இதுல கிளைமாக்ஸ் வைப்போம்னு நினைச்சேன்...எக்சிகியூட்டிவ் சூப்பரவைசர் அறையில் பேசுவது போலவும், அவர் டிராயர் திறப்பது போலவும் அதுவரை அமைதியாக இருந்த மனைவி குலுங்கி அழுதது போலவும் அமைத்து இருந்தேன்... சர்ட்டிபிகேட் கிடைத்த பிலிங்குக்கா வெளியே வந்து ஒரு சிகரேட் பத்த வைப்பதாக எழுதி இருந்தேன்..இந்த காட்சி விவரிப்பு என் நண்பர்கள் நிறைய பேருக்கு புரிந்து இருக்கின்றது..

    உண்மைக்கு மிக நெருக்கமாக எழுதுவது எனக்கு ரொம்பவே பிடிக்கும் சார்ட்டிபிகேட் தொலைஞ்சி சேஸ் செய்தது மட்டுமே உண்மை... மற்றபடி நிறைய மிக்ஸ செய்து இருக்கின்றேன்..

    அண்ணி வருத்தப்படுவாங்க என்று எல்லாம் பீல் செய்ய வேண்டாம்...

    அன்பின் ராஜா.. நானே உங்களை சந்திக்கலாம் என்று நினைத்தேன்... போன் செய்யவும் அல்லது எங்கே இருக்கின்றிர்கள் என்று சொல்லவும்......... ஆம் நீங்கள் சொல்வது உண்மைதான்.

    ReplyDelete
  13. <>

    அந்த அவசரத்துலயும் ஒரு கிளுகிளுப்பு. என்னமோ போடா மாதவா. ஜாக்கி அண்ணனுக்கு மட்டும் இப்படி நடக்குது.

    <>

    ஜாக்கி இப்படி எழுத மாட்டரே ன்னு நினச்சேன், அதே மாதிரி நீங்க சிறுகதைக்காக அப்படி எழுதி இருக்கிறீர்கள்.

    கோபம் எப்படி வருது தெரியுமா. நம்ம நினைக்கிற மாதிரி ஒரு விஷயம் நடக்காத போது கோபம் வருகிறது. இந்த ஒரு விஷயம் நல்ல ஞாபகம் வச்சுகிட்டா, கோபம் வரதா ? வரும் அனா அதுக்கு ரியாக்ட் பண்ணாம நடந்து போன visayathai எப்படி சரி செய்வதுன்னு யோசிக்க ஆரம்பித்து விடுவோம்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner