கால ஓட்டத்தில் காணாமல் போனவை வரிசையில் நாம்
பார்க்க போகின்ற விஷயம் மரப்பாச்சி பொம்மை..
இன்றைய கணணி யுகத்தில் குழந்தைகள் விளையாட எகப்பட்ட
பொம்மைகள் வந்து விட்டன..
அன்றைய காலத்தில்
கார் பொம்மைகளே பெரிய விஷயம்.. முக்கியமாக கர்ர்ர்ர்ர் என்று
கத்திக்கொண்டு ஓடும் அந்த காரே அன்றைய காலத்தில் ஆச்சர்யமாய் பார்த்து இருக்கின்றோம்..… அதன் தலையில் சிவப்பு விளக்கு வேறு மினுக்கு
மினுக்கு என்று எரிந்து கொண்டு இருக்கும்.
இரவு நேரத்தில் அந்த வண்டியை ஓட்டுவதே செமை ஜாலியான அனுபவம். காரணம் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் வாழ்த்து கொண்டு இருக்கும் எங்களை போன்ற பிள்ளைகளுக்கு , தலையில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டு இரவு நேரத்தில் விர்ரும் என்று ஓடும் அந்த கார் வியப்பின் உச்சமாகும்-
அதே போல அன்றைக்கு மரத்தாலான பொருட்கள்தான் அதிக அளவில் பயண்படுத்தப்பட்டன..
அப்படி குழந்தைகள்
விளையாடும் பொருளாக மரப்பாச்சி
பொம்மைகள் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டன..
பொதுவாக மரப்பாச்சி பொம்மைகளை ஆண் குழந்தைகளை
விட பெண் குழந்தைகள்தான் அதிகமாக வைத்து விளையாடிக்கொண்டு இருப்பார்கள்..
மரப்பாச்சி
பொம்மைகளுக்கு தாவணி கட்டி அதுக்கு பவுடர், பொட்டு,
மை போன்றவற்றை, எப்படி அம்மா தன் குழந்தைகளுக்கு பவுடர் அடித்து பொட்டு
வைத்து அழகு பார்க்கின்றார்களோ..? அதே போல
பெண்குழந்தைகள் தாங்கள் வைத்து இருக்கும் மரப்பாச்சி பொம்மைகளை தங்கள் பெற்ற
குழந்தைகள் போலவே பாவிப்பார்கள்…
மரப்பாச்சி பொம்மைகள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கை மாறிக்கொண்டே இருப்பதால்
மழ மழ வென இருக்கும். பொதுவாக ஈட்டி மரத்தில்
மரப்பாச்சி பொம்மைகள் செய்யப்படும்… பிள்ளைகள் வாயில்
வைத்தாலும் உடலுக்கு நல்லது… மரப்பாச்சி பொம்மைக்கு என மருத்துவகுணங்கள் நிறையவே இருக்கின்றன என்று ஒரு சாரர்
சொல்லுகின்றார்கள்..
மரப்பாச்சி பொம்மைகளின் முகங்கள் அழகு பதுமை
போல காட்சி அளிக்காமல் அவசர அடியில் செதுக்கியது
போல மொக்கை மோகனை போல இருக்கும்.
மரப்பாச்சி பொம்மைகளுக்கு செல்ல பெயர்
வைப்பதும் தான் சாப்பிடும் போது மரப்பாச்சி பொம்மைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு
பிறகு சாப்பிடுவது, தன் கூடவே மரப்பாச்சி
பொம்மைகளை படுக்க வைத்து அதுக்கு தலைக்கானி,பெட் போன்றவற்றை செட் செய்வது என்று உணர்வு பூர்வமாய்
நடக்கும்.
என் உறவுக்கார பெண் மரப்பாச்சி பொம்மையை
குளிப்பாட்ட, எங்கள் ஊர்
வாய்க்காலில் , மோட்டர் கொட்டைகளில் குளிக்கும் போது
எப்படி ஊர் பெண்கள் மக்கிட்டு கட்டிக்கொண்டு குளிப்பார்களோ, அது போலவே அந்த
பொம்மைக்கு மார்புக்கு மேல் துணியை கட்டி குளிக்க வைப்பார்கள்….
எல்லாவற்றையும் விட கொடுமை மரப்பாச்சி
பொம்மைகளுக்கு ஊசிப்போடுவதும், ஊசி போட்ட இடத்தை சின்ன துணி வைத்து தேய்த்து விடுவதும் என்று
மிக நுணுக்கமாக சிலவற்றை பிள்ளைகள் செய்வார்கள்..
இவ்வளவு நுணுக்கமாக அன்றைய பிள்ளைகள் தான்
பார்த்தவற்றை உயிருள்ள குழந்தைகளுக்கு செய்வதை போல பார்த்து பார்த்து மரப்பாச்சி பொம்மைகளுக்கு செய்ய
காரணம்….அன்றைய பிள்ளைகளுக்கு மரப்பாச்சி பொம்மையை
விட்டால் விளையாட வேறு நாதியில்லை.
ஆனால் இன்று வீடியோ கேம், பத்துக்குமேல் குழந்தைகளுக்கான சேட்டிலைட்
சேனல்கள் என்று குழந்தைகள் கவனம் சிதற நிறைய விஷயங்கள்
இருக்கின்றன..
நாகரீக வளர்ச்சியில் மரப்பாச்சி பொம்மைகள்
இன்று காண அறிதாகி விட்டன.
முன்பெல்லாம் பரண் மீது இருக்கும் கூடையிலாவது மரப்பாச்சி பொம்மைகள் காணக்கிடைத்தது.. ஆனால் இன்று எவர் வீட்டிலும் பரணும் இல்லை.. மரப்பாச்சி பொம்மையும் இல்லை.
கால ஓட்டத்தில்
காணமல் போய் விட்டன-. திரும்பவும் வேறு ஒரு கால
ஓட்டத்தில் காணமல் போன பொருளுடன்....
--
பிரியங்களுடன்/
பிரியங்களுடன்/
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

நல்ல பகிர்வு...
ReplyDeleteதற்கால பெண் குழந்தைகள் TEDDY BEAR, BARBE பொம்மைகளை வைத்து விளையாடுகின்றன. என்ன கொஞ்சம் காஸ்ட்லியானது. பரம்பரையாக விளையாட முடியாது. பம்பரம் கூட தறசமயம் அரிதாகத்தான் காண முடிகிறது. சிறுவயதில் பம்பரம் விடுவதில் நான் எக்ஸ்பர்ட்
ReplyDeleteகுழந்தைகளுக்கு விளையாட மரப்பாச்சி பொம்மைகள் இப்போதெல்லாம் கொடுப்பதில்லையே தவிர.... கொலு வைக்கும் வழக்கமுள்ள வீடுகளில் கட்டாயம் ஒரு செட் மரப்பாச்சி பொம்மைகள் இருக்கும் ஜாக்கி.
ReplyDeleteபெருமாள் அண்ட் தாயாரை மரப்பாச்சியில்தான் உருவகப்படுத்தி கொலுவில் முதலில் வைக்கணும்.
மரப்பாச்சிகளுக்கு நகைநட்டு துணிமணின்னு தனியா இன்னொரு கலை வளர்ந்து காசு பார்க்க ஆரம்பிச்சு பலவருசங்கள் ஆச்சு.
250 இல் ஆரம்பிச்சு 5000 வரை இருக்கு!
ஒருநாள் மயிலை குளக்கரையாண்டை மாடவீதியில் போய்ப் பாருங்க. சரவணபவன் அருகில் இருக்கும் விஜயா ஸ்டோர்ஸ் போனால்கூடப்போதும்!
மறந்து போன மறுக்கப்பட்ட பொம்மைகள் மறுபடி புத்துயிர் பெற்று வந்தாள் நன்றாகத் தானிருக்கும் .
ReplyDeleteகுழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று நாம் குழந்தைகளிடம் தான் கற்க வேண்டும் (அவர்கள் தனது பொம்மைகளை கொஞ்சும்போதும் அவற்றுடன் விளையாடும் போது அவர்களை அறியாமல் கவனியுங்கள்)
ReplyDeleteகுழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை
ReplyDeleteநாம் குழந்தைகளிடமிருந்துதான் கற்கவேண்டும் (குழந்தைகள் தனியே பொம்மைகளுடன் விளையாடும்போது அவர்களை அறியாமல் கவனிக்கும்போது தெரியவரும்)
மிக அருமையான பகிர்வு ஜாக்கி .மரப்பாச்சி பொம்மையின் அருமை இக்காலத்து பிள்ளைகளுக்கு தெரியாமலே போகுது .எல்லாம் ஷாருக்கானும் காஜோலும் கூட பார்பி பொம்மைகளா வந்துவிட்ட காலமிது .இப்ப குட்டிஸ் சின்ன ப்ராம் பொம்மைக்கின்னே அதுக்குள்ளே ஒரு குட்டி பொம்மை அதை எடுத்துக்கொண்டு போகுதுங்க .ஏதோ பழைய படத்தில் பார்த்திட்டு கயறு கட்டி இழுக்கும் பொம்மலாட பொம்மைகள் வேணும்னு என் மக கேக்கிறாள் , பல்லாங்குழி தேடி அலுத்து விட்டேன் சென்ற முறை ,கடைகளில் இருக்கு ஆனா மொற மொரப்ப மகள் கை பட்டு கீர்ருமொன்னு பயம் .துளசிக்கா சொன்ன இடத்தில தேடி ஒரு பொம்மை வாங்கி வைங்க யாழினி குட்டி பின்னாளில் படம் பார்த்து கேட்டா காட்டவாது பயன்படும் .
ReplyDeleteYou can buy in saravanastores. wooden piece Pallanguli.
DeleteYou can buy a pallanguzhi made in wood @ TNAGAR saravana stores
Deleteநல்ல பதிவு ! அந்தக் கால ஞாபகம் வந்தது சார் ! நன்றி !
ReplyDeleteexcellent Jackie..
ReplyDeleteExcellent jackie sir.
ReplyDeleteEn palaya kala kiramathu valkaum. ciruvayathi nan vilayanta vilayatai mentum ninaithu parka vaithatharku NANRI NANBA
ReplyDeleteen kiramthu ciruvayathu valkkaiyai mentum ninaivu patuthiyatharku mika nanri Nanba
ReplyDeleteஏஞ்சலீன்,
ReplyDeleteநான் மதுரையில் ஒரு பல்லாங்குழி வாங்கினேன். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல். நீண்ட செவ்வகப்பெட்டி போல மூடி வச்சுக்கலாம். கனமும் இல்லை. நடப்பைப்பார்த்தால் பேசாம அதுக்கு ஒரு பதிவு போடணும் போல இருக்கே:-)))))
Nice blog entry, Jackie.
ReplyDeleteWe have a set of மரப்பாச்சி பொம்மை in our household. It was given to my grandmother during her wedding. It is slightly damaged and is very heavy. But, I treasure that 80 year artifact.
மரப்பாச்சி பொம்மை நெல்லையப்பர் திருக்கோவில், திருநெல்வேலியில் கிடைக்கின்றன.
ReplyDelete