சமையல் எண்ணை உயர்வை பற்றியும்  , மின்சார கட்டண  உயர்வு பற்றியும் கிஞ்சித்தும் கவலை கொள்ளாத மேல்தட்டு சமுகம் வாழும் சென்னை பெசன்ட்நகர் பகுதியில் ஒரு பங்களா விட்டின் சுவற்றின் மீது அற்புதமான வாசகம் எழுதி வைத்து இருந்தார்கள் .  "சுவற்றில் சிறுநீர் கழிப்பவன் மிருகம்"  கிழே யாரோ ஒரு பொதுஜனம் கரித்துண்டால்  பார்த்திபனின்  கிறுக்கல் போல் ஒரு வாசகம் எழுதி வைத்து  போய் இருந்தார்  அது இப்படித்தான் இருந்தது
        
       "  இங்கு  சுவற்றில் சிறுநீர் கழிப்பவன் மிருகம்
         நான்  அவசரத்திற்க்கு   மிருகமாகி விடுவேன்"
   அன்புடன்   ஜாக்கி சேகர்
  
 
 
அவசரத்துக்கு மிருகமாகும் மனிதனை குறை சொல்லி பயனில்லை .. வழியெங்கும் வழிபாட்டுத்தலங்களை கட்டி வரும் சமூகமும் , முறையான கழிப்பறை கட்டா அரசாங்கமும் மாறவேண்டும்
ReplyDeleteநன்றி யாத்ரிகன் , வாசிக்க வந்தமைக்கு . எ,கா கிண்டி மேம்பாலம் திறக்கப்பட்டது , பல லட்சக்கணக்கானோர் தினமும் வருகிறார்கள் , எங்காவது ஒரு இடத்திலாவது கழிப்பிடம் கட்டி இருக்கிறார்களா ? பஸ்ஸில் வந்து இறங்குபவர்கள் எல்லாம் ரோபோக்களா? மனிதர்கள் தானே?
ReplyDelete//பஸ்ஸில் வந்து இறங்குபவர்கள் எல்லாம் ரோபோக்களா? மனிதர்கள் தானே?//
ReplyDeleteசரிதான்... மேலும் சரிதான்...
நன்றி கண்ணன், பதிவை படித்து பதில் சொல்லியதற்க்கு.
ReplyDeleteநல்ல ரசனையுள்ள மிருகம்.
ReplyDeleteஇதே ஆட்கள் வெளிநாட்டில் எத்தனை அர்ஜெண்ட் என்றாலும் மிருகமாவதில்லை. ஆனால் ஆங்காங்கே பொது கழிவறை உண்டு. நம்ம கிட்ட அது இல்லை என்பது தான் பிரச்சனை.
எங்கோ சில பகுதிகளில் கட்டப்பட்டிருக்கும் கழிவறைகளும் ஆக்கிரமிப்பில் உள்ளன. அரசு மட்டுமல்ல தொண்டு நிறுவனங்களும் முயற்சிக்கலாம்.
ReplyDeleteகோவில் கட்டப்படுவதற்கு பக்தி காரணமல்ல, பணம் கிடைக்கும் என்பதுதான் காரணம். ஒரு வேளை கழிவறைகளிலும் அதிக பணம் கிடைக்க ஏற்பாடு செய்தால் நலம்.
சென்னையின் பல சந்துகள், பிளாட்பாரங்கள் கழிவறையாகவே இருக்கின்றன.
Nice post . .
ReplyDelete