உலக தமிழர்களே உங்களுக்கு ஒருஅறிவிப்பு, சென்னை போடா வெண்ணை என்றும் சொல்லும்...
நீங்கள் வெகு தூரத்தில் இருந்து , இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான நம் தலைநகர் சென்னைக்கு வருகிறீர்கள் , நீங்கள் சென்னையில் கால் வைக்கும் போது இரவு மணி 11•30 என்று வைத்துக்கொள்ளுங்குகள்,நீங்கள் உங்கள் மனைவி குழந்தையுடன் இருக்கிறீர்கள், உங்கள் பண கையிருப்பு 500 ருபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் குடும்பத்தினரால் பசியார முடியாது. ஏன் என்றால் எந்த கடையும் திறந்து இருக்காது , குழந்தை பசியால் அழும் உங்களால் எதுவும் செய்ய முடியாது. ஒரு டீக்கடை கூட திறந்து இருக்காது, நிலமை புரியாது உங்கள் மனைவி ஏங்க ஏதாவது செய்யுங்க என்பாள், நாம் எப்போதுமே ஸ்பைடர் மேன் இல்லை என்பதை மனைவிக்கு புரிய வைக்கவும் முடியாது. கையில் பணம் இருந்தும் குடும்பத்தினர் பசி ஆற்ற முடியாத நிலை எவருக்கும் வர கூடாது ,இரவு 11•30 மணிக்குமேல் ஏந்த கடை சென்னையில் திறந்து இருந்தாலும் சென்னை காவல் துறைக்கு வேர்த்து விடும் உடனே கடையை அடைக்க சொல்லி விடுகிறார்கள், ஏன் என்றால் காவல்துறை சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறதாம். உஙக்ள் குடும்பத்தினர் பசிஆற ஒரு வழி இருக்கிறது, உடனே ஒரு ஆட்டோ பிடியுங்கள் , உங்கள் சொத்தில் பாதி கேட்பான் கொடுத்து விடுங்கள் ஏனென்றால் உங்கள் குடும்பத்தினர் பசி கலைவது உங்கள் கடமை அல்லவா? நேராக கன்னிமார, தாஜ் ,போன்ற நட்சத்திர ஒட்டல்களுக்கு செல்லுங்கள் ஏனெனில் அவைகள் மட்டுமே நடு இரவிலும் திறந்து இருக்கும் . காசு வைத்திருப்பவனுக்கும் , காரில் செல்பவனுக்கு மட்டுமே சென்னையில் நடு இரவில் பசி ஆற முழுத்தகுதியும் இருக்கின்றது என்பேன் . ஒரு ரகசியம் சொல்கிறேன் சென்னையில் நடு இரவில் டீ குடிக்க ஒரே வழி ,சென்னையில் உள்ள எல்லா போலிஸ்டேஷன் எதிரில் உள்ள டீ கடைகள் அனைத்தும் திறந்து இருக்கும் . அதுவும் கஞ்சா விற்பது பொல் பாதி ஷட்டர் திறந்த வியாபாரம் செய்வார்கள் . உங்களுக்கு ஒரு வேண்டுகோள் , யாரும் இரவில் குடும்பத்துடன் சென்னையில் வந்து பசியுடன் இறங்காதீர்கள் உங்களுக்கு சனி பிடித்துஇருக்கிறது என்று அர்த்தம், சென்னையில் அண்ணா சாலையில் விடியற்காலை 3 மணிக்கு போய் புகாரி ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டதெல்லாம் ஒரு காலம் என்று இப்போதே சொல்லுவோம் அன்புடன் / ஜாக்கி சேகர்
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
அடடா, திண்டாடிட்டீங்க போலிருக்கே ஜாக்கி சேகர்
ReplyDelete7-eleven மாதிரி 24 மணிநேரக்கடைக்கள் இருந்தால் இதுபோன்ற நேரங்களில் உதவுமே
நன்றி மாதங்கி, நிச்சயமாக , காஷ்மீர் போல் சென்னையும் இரவில் இருப்பது கேவலம்
ReplyDeleteஒ௫ பழமொழி தெரியுமா? "யானை போறது தெரியாது பூனைபோறதுதான் தெரியும்" அதுதான் இங்௧ நடக்குது
ReplyDeleteநன்றி திரு தாவுத், நீங்கள் சொல்வது சரிதான்
ReplyDeleteyes sekar.. jackie is so simple in that function.. we have to learn a lot from jackie.. - ganeshraja
ReplyDeletethanks ganesh, thanks your valuble comment
ReplyDelete