
சரியாக 18 வருடங்களுக்கு முன் நான் ஆட்டோ ஓட்டியிருக்கிறேன் , மெரினா பீச்சில் டீ விற்று இருக்கிறேன் , அப்போது வாழ்க்கை பற்றிய பயம் அதிகம் இருந்தது. அந்த கஷ்டங்களி்ன் போது சொல்லிதர எவரும் எனக்கு இல்லாதபோது, armor of god படம் வெளியானது ,என் வாழ்வின் சோக பக்கங்களுக்கு அந்த படமே பெரிய ஆறுதல் , உங்களில் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம் . அந்த நடிகனின் சிரிப்பு என்னை கவர்ந்தது , இயல்பான குறும்பு , 3 குத்து வாங்கி உதடு கிழிந்து வீரம் வரும் தமிழ் ஹீரோக்களுக்கு மத்தியில் நன்றாக உதை வாங்கி திருப்பி அடிக்கும் போது , என்னை சுழற்றி அடிக்கும் வாழ்வை நானே திருப்பி அடிபபது போல் இருந்தது என்பேன் . முக்கியமாக தான் எந்த அளவுக்கு ரத்தம் சிந்தி உழைத்தோம் என்பதை படத்தின் கடைசி டைட்டிலில் பகிர்ந்து கொன்ட நேர்த்தி என்னை மிகவும் கவர்ந்தது . அதன் பிறகு 5வருடங்களுக்கு முன்பு வரை அவரின் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் முதல் காட்சீயில் நான் இருந்தேன் , தான் எது செய்தாலும் தம் ரசிகர் அதனை பின் பற்றுவார்கள் என்பதால் TWIN BROTHER படத்தை தவிர எந்த படத்திலும் ஜாக்கி சிகரேட் பிடிப்பது போல் எந்த படத்திலும் காட்சி வைத்ததில்லை , தாசவதாரம் பட பாடல் வெளியீட்டு விழாவில் கூட எவ்வளவு அடக்கமாக உட்கார்ந்து இருந்தார் பாருங்கள் அதுதான் ஜாக்கி. அவர் ஹாலிவுட்டின் உச்ச நடிகர், கேசட் வெளியிட்டதும் அந்த ரிப்பன் கிழே கிடக்க அதனை


நல்ல மொழிபெயர்ப்பாளர் மட்டும் இருந்திருந்தால் தலைவர் அள்ளி வீசிய புள்ளி விவரங்களைக் கண்டு ஜாக்கி மிரண்டிருப்பார்.
ReplyDeleteஎந்தச் செயலிலும் முழுமையான ஈடுபாடு.அதுதான் தலைவர் கலைஞர்.
ஒரு குழந்தையைப் போன்று உற்சாகமும்,குதுகலமுமாயிருந்த ஜாக்கியைப் பார்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
Nice post
ReplyDelete