சீக்ரேட் சூப்பர் ஸ்டார் திரைவிமர்சனம்.
அமீர்கானின் தாரே சமீன் பர் திரைப்படத்தின் கிளைமாக்சை தியேட்டரில் பார்த்து நெகிழ்ச்சியில் கண் கலங்கி யாருக்கும் தெரியாமல் கர்சிப் துடைத்த ஆளா நீங்கள்.. அப்ப இந்த திரைப்படம் உங்களுக்கானது.
ஒரு முஸ்லிம் பள்ளி சிறுமி… தடைகள் பல இருப்பினும் தான் கண்ட கனவில் எப்படி வெல்கின்றாள் என்பதே கதை…
ஆனால் காட்சிக்கு காட்சி சுவாரஸ்யபடுத்தி இருக்கின்றார்கள்.. தங்கல் திரைப்படத்தில் சின்ன பசங்க போர்ஷனில் அக்காவாக நடித்த சாய்ராவாசிம் பெண்தான் இதில் கனவுகளை துரத்தும் பெண் பாத்திரத்தை எடுத்து நடித்து இருக்கின்றார்.
சான்சே இல்லை.. பிரேமுக்கு பிரேம்.. அதுவும் அந்த வயதுக்கே உரிய பூனை மூடி மீசை.. இன்னும் குழந்தைதனத்தை கூட்டுகின்றது..
அமீர்கானை கட்டிபித்து தன் நன்றியை தெரிவிப்பதில் ஆகட்டும்…பாஸ்வேர்ட் சொல்லி விட்டு வெட்கம் படும் அந்த காட்சி ஆயிரம் காதல் லிப்லாக்கிற்கு சமமான காட்சி அது..
சிந்தனாக நடித்து இருக்கும் பையன் சரியாக தேர்வு அழகான பெண் அம்சமான பையன் பார்மூலாவை உடைத்து அழகான பெண் அறிவான சுமாரான டேக்கேரான பெண் என்ற பார்மூலாவில் எடுத்து இருப்பதற்கு வாழ்த்துகள்.
பெண்ணின் அம்மா சான்சே இல்லை.. சிரித்த முகம்… அதே நேரத்தில் சோகத்தை வெளிப்படுத்தும் காட்சி… பெண்ணோடு சிநேகிதாயாக டிராவல் செய்யும் பாங்கு என்று பின்னி இருக்கின்றார்… முக்கியாமாக கிளைமாக்சில் பின்னி இருக்கின்றார்..
அமீர்கான் என்ன மனுசன்யா.. சான்சே இல்லை…
படத்துக்கு படம் வெள்ளாடுறான் மனுசன்..
எல்லாத்தையும் விட தண்ணி கொடுக்காத ரிசப்ஷனிஸ்ட்டை பேசி கவிழ்த்து போன் நம்பர் வாங்கும் காட்சி அதகளம்.
இயக்குனர் அத்வித் சந்தனுக்கு எந்த காட்சிகள் எல்லாம் நெகிழ்ச்சிபடுத்தும் என்ற வித்தை தெரிந்து எல்லா பாலையும் சிக்சர் அடித்து இருக்கின்றார்.. வாழ்த்துகள்.
பெண் பிள்ளை பெற்ற அம்மாக்கள் அவசியம் தங்கள் மகளை அழைத்துக்கொண்டு இந்த படத்தை கண்டிப்பாகவே பார்த்தே தீரவேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன்.
முக்கியமாக அம்மாவை கொண்டாடும் பெண்களுக்கும் தன் பெண்ணை சிநேகிதியாக பாவிக்கும் அம்மாக்களும் இந்த படத்தை பார்க்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஆனந்த கண்ணீர் விடுவது உறுதி..
படம் பார்த்து விட்டு இரவு படுக்கையில் அம்மாவை இன்னும் இறுக்கமாய் அணைத்துக்கொண்டு.. வயதுக்கு வந்த பெண்ணாக இருந்தாலும் அம்மா மேல் கால் போடுக்கொண்டு அந்த இளஞ்சூட்டுடன் தன்னை அம்மாவின் இதத்தோடு பொருத்திக்கொண்டு அந்த பாச பாச கதகதப்பில் நல் உறக்கம் கொள்வாள் என்பதை நான் எழுதி தருகின்றேன்.
#SecretSuperstar
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment