வாழ்த்த வஞ்சனை வேண்டாம்.




அதுக்கு முன்னாடியே  அவளை  தெரியும் சின்ன பொண்ணா.. அவுங்க அப்பா  டிவிஎஸ் 50 ல  பெமிலியே  அதுல ஒக்காற வச்சி  ஏத்திக்கிட்டு போவாரு… அவ புட்ரெஸ்ட்ல உட்கார்ந்துகிட்டு  போறதை நான் பார்த்து இருக்கேன்….
98   ஆம் வருஷம்தான் பேசினது… கண்ண மூடி கண்ணை திறந்து பார்த்தா  19 வருஷம் ஆயிடுச்சி..




 இந்த 19 வருஷத்துல  பத்து வருஷம் காதலிச்சி… கல்யாணம் பண்ணி  ஒன்பது வருஷம் ஆயிடுச்சின்னி பேஸ் புக் நினைவுபடுத்துகின்றது. அதுல மூணு வருஷம் ஊரெல்லாம் சுத்தி ஆறு வருஷத்துக்கு முன்ன  யாழினியை பெத்து, ஏற்ற தாழ்வுகளோடு  வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கின்றது..
ஆனால் இன்னமும் பாவடை தாவணியில் எனக்காய் மாடிப்படியில் மூன்று மணிநேரம்  காத்திருந்த பெண்தான் தினமும் என் எதிரில் நிற்கிறாள்…
 அம்மா எங்களை விட்டு  மறைந்த உடன் அப்பா சொன்னார்… கள்ளக்குறிச்சியில் ஒரு பொண்ணு இருக்கு 25 லருந்து 40 பவுன் போடுவாங்க… ஒரே பொண்ணு  ஹோட்டல்  வச்சி நடத்தறாங்க.. கட்டிக்கோ என்று  சொன்னார்.. நான் மறுத்தேன்…


நீ எப்படி அம்மாவை   கல்யாணம் பண்ணிக்கிட்டேப்பா.... வரதட்சனை  இல்லாம.. எனக்கும் அப்படித்தான் கல்யாணம் நடக்கும்.. அப்படி  நடந்தா நடக்கட்டும்  இல்லேன்னா வேண்டாம் என்று சொன்னேன். அப்ப எல்லாம் அவளை நான் சந்தித்தும்  இல்லை பேசியதும்…
நாலு தங்கை இருப்பதால்  காதல்  கல்யாணம் என்பதெல்லாம் சாத்தியம் இல்லாத விஷயம் என்றே நினைத்தேன்..


ரொம்ப கோவக்காரன்னு தெரிஞ்சி ,  கொவத்துல வாயில  வரும்  வார்த்தைகளை பொறுத்து, எனக்கு அசரடிக்கும் அழகில்லைன்னு தெரிஞ்சும், பத்தாவது மட்டுமே படிச்சவன்னு  அதுவும்  பத்தாவதுல டோட்டல்  277 மார்க்குதான் தெரிஞ்சி ,  பெரிய சொத்து பத்து இல்லைன்னு தெரிஞ்சி,  தனக்கு  வந்த அரசாங்க உத்தியோக மாப்பிளைகளை புறக்கணிச்சி, எனக்காக காத்து இருந்து , என்னை கல்யாணம் பண்ணிக்கட்டா…  அப்படி என்ன என் கிட்ட இருக்கு?  எட்டாவது  முடிச்சதில் இருந்து இதுவரை நான்  கண்ணாடி முன்ன  ஐந்து செகன்டுக்கு மேல செலவு செஞ்சது எதேஷ்ட்டம். ஆனா எதுக்கு என்னை பொறுத்துக்கிட்டு  என்னை  காத்திருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டா…  என்று  யோசித்து இருக்கின்றேன்… அவளிடம் கேட்டும்  இருக்கேன்.


முதல்ல நீ திறமைக்காரன், கோவக்காரனா இருந்தாலும் நீ நல்லவன், தங்கச்சிங்க எதிர்ல பொதுவுல ஒன்னு பேசறது, பெட்ரூம்ல வந்து என்னை சமாதானப்படுத்த  மாத்தி பேசறது அல்லது  கெஞ்சி பேசறது எல்லாம்  என்னைக்கும்  நான்  உன்கிட்ட பார்த்தது இல்லை… எல்லா  இடத்திலேயும் ஒரே பேச்சுதான் அந்த கெத்து  உன்கிட்ட பிடிச்சது... அதே போல  நீ  என்னை பாத்துக்கறது, எனக்கு நீ  கொடுக்கும் சுதந்திரம். இதெல்லாம்  நான்  எவன கட்டி இருந்தாலும் எனக்கு கிடைச்சி இருக்காது…


என்னோட மனைவியோட அத்தை ஒருத்தங்க இருக்காங்க.. அவங்க கல்யாணத்துக்கு  முன்ன எங்கிட்ட பேசி  இருக்காங்க.. இப்ப பேசறது இல்லை..
அவங்க அவகிட்ட சொல்லி இருக்காக…  ஒருவேளை நீ   பெரிய அளவுல உன் கேரியர்ல ஜெயிச்சன்னா  அதுக்கு காரணம் தனுசு(ஜாக்கிசேகர்)தான் சுதா  என்று சொன்னார் என்று  என்னிடம் என் மனைவி  சொன்னார்..
எங்க அப்பா கொஞ்சமே  கொஞ்சம் என் அம்மாவின் திறமையையும் அவள் சொன்னதையும் காது கொடுத்து 20 பர்சென்ட் கேட்டு இருந்தாலே என் குடும்பம்   இன்னும் நல்ல  நிலைமையில்  இருந்து இருக்கும்.
 கல்யாணம் ஆகி  ஒன்பது வருடங்கள் ஆகி விட்டன … நேற்றுதான் கடலூர் முருகாலாய கல்யாண மண்டபத்தில் ஒரு பெரு மழையில் திருமணம் செய்துக்கொண்டது  போல   இருக்கின்றது.. அதுக்குள்ள  ஒன்பது முடிந்து விட்டது…


சண்டைன்னு ஆரம்பிச்சா.. ங்கோத்தா கொம்மான்னு  போவும்.. ஆனா 24  மணி நேரத்துல அந்த  சண்டை எங்க போவும்ன்னு தெரியாது.. என் கோவம் எதிர்கொள்வது ரொம்ப கஷ்டம்தான்… அதே நேரத்துல விட்டுக்கொடுக்கறதுல அதுவும் ஈகோ பார்க்காம விட்டுக்கொடுக்கறதுல நான்தான் முதல் ஆளா இருப்பேன். அது நான் குளோசா நேசிக்கற அத்தனை பெண்களும்  ஆண்களும் அறிவார்கள்.


 காதலிக்கும் போது  ஒரு முறைக்கூட ஐ லவ் யூ ஐலைக் யூ  நேரில்   பார்க்கும் போது   சொல்லிக்கொண்டது  இல்லை…
காதல் என்பது உணர்வது அல்லது  உணர்த்துவது..


 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
19/10/2017


குறிப்பு…
வழக்கம் போல உங்கள்  நேசமான  வாழ்த்தும் ஆசியும் இன்றி இந்த நாள் நிறைவு பெற்றதில்லை என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்..




நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner