பிளேடுரன்னர் 2049 விமர்சனம்




#பிளேடுரன்னர் 2049 விமர்சனம்

1982 இல் ஹாரிசன் போர்டு நடிப்பில் பிளேடு ரன்னர் வந்துச்சி. மனுசன் பின்னு இருப்பார்…கதைன்னு பார்த்தா 2019 இல… ரோபோக்கள் மனிதர்களோடு மனிதர்களா கலந்து இருக்கும் அதுங்களுக்கு ரிப்ளிகென்ட் என்று பெயர்.. அந்த ரோபோக்களை கண்டு பிடித்து  அழித்து மனித குலத்தை காத்தார்கள்..  முதல் பாகத்தில்… 



  அதுல என்ன காமெடின்னா… 1982  இல் 2019 இல் நடப்பது போன்ற கதை… கார் எல்லாம் பறக்கும்…  அப்படியான கற்பனை.. இன்னும் ரெண்டு வருஷத்துல கார் பறக்கும்ன்னு  நினைக்கறிங்க..???
ஆனா  அப்போதைக்கு  அப்படியான யோசிப்பு பெரிய விஷயம்… அதனாலதான்  அந்த படம் அப்ப பெரிய வெற்றி..  அர்னால்ட் நடித்த  டோட்டல் ரீக்கால் இன்னும்  அசத்தி இருப்பாங்க..

இரண்டாம்  பாகத்தில்  அதாவது கதை நடப்பது 2049 புளேடு ரன்னராக லாலா லேண்ட் நாயகன் ரேயன் கோஸ்லிங் நடித்து இருக்கின்றார்…  கே  என்ற போலிஸ் கதாபாத்திரத்தில் வருகின்றார்…

கதைப்படி நாயகனுக்கு சில தடயங்கள் கிடைக்கின்றன… அவர் அதன் மூலம்   தன்னை அறிய முனைகின்றான்… அவன் தன்னை   அறிந்தனா இல்லையா? என்பதை  வெண்திரையில் பாருங்கள்.

1982 ஆம்  ஆண்டு படம் வெளிவந்த போது  கொடுத்த அந்த அனுபவத்தை தற்போது வெளிவந்து இருக்கும்   இந்த திரைப்படம் கண்டிப்பாக தரப்போவதில்லை.. ஆனால் தரவரிசையில் இந்த படம் முதலில் இருக்கின்றது..

 ஆனால் படம் ரொம்ப ஸ்லோ… மேட்மேக்ஸ் திரைப்படம்  போல பரபரப்பாய் இருந்து இருந்தால் இந்த திரைப்படம் வேற லெவல்.


ஆனால் செம மெலோ டிராமாவாக   எல்லாத்தையும் விட  இரண்டே முக்கா மணி நேரம் வச்சி செய்யறாங்க..

விருட்சுவல் காதலி அவள் மனித பெண்ணோடு  மிக்ஸ் ஆகி அனுபவிக்கும்  காமம் என்று  சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் இருந்தாலும் முழு படத்தையும் பார்க்க கொஞ்சம் பொறுமை அவசியம்…

ஜாக்கிசேகர்.






நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner