எவ்வளவுய்யா கூட்டம் வந்துச்சி... சார் பத்து லட்சத்துக்கு மேல....
ஓ அப்படியா?
ஆமாம் சார்.
மயிலை சித்திரக்குளத்துக்கிட்ட இன்பமே உந்தன் பேர் பெண்மையோன்னு தலைவர் பாட்டுக்கு ஆட்டக்கார பொண்ணோட மாரை குலுக்கி ஆட்டிகூட பத்து பேரை உட்கார வைக்க முடியலை....
ஆனா ரொம்ப சாதாரணமாக 300 பேரோட ஆரம்பிச்ச கூட்டம் ஐஞ்சாவது நாள்ல பத்து லட்சத்துக்கு மேல போயிடுச்சி சார்...
கூட்டத்துல நம்ம பேர் ரொம்ப டேமேஜ் ஆயிடுச்சாய்யா ..?
பின்ன... அம்மா இருக்கும் போது அந்த ஆறு வருஷத்துல பத்திரிக்கையாளர்களையோ... அல்லது மக்களையோ நேர்ல சந்திக்கலைன்னு கேட்க துப்பு இல்லாதவன் எல்லாம்... உங்களை நேர்ல வந்து எங்ககிட்ட பேச சொல்லுன்னு சொல்ற அளவுக்கு கூட்டம் தைரியத்தை கொடுத்துடுச்சிங்க.....
அறவழி அறவழின்னு பசங்க புகழ் ஏறிக்கிட்டே இருக்குங்க...
திமுக மேல பழி போட்டு பாத்திங்க...
நம்ம பீ டீம் அதை சரியா பண்ணிக்கிட்டு இருக்குங்க...
சரி... திமுகாவை திட்றாங்களா?
பெரிசா இல்லைங்க.. காரணம்...ஊறுகாய் போல தொட்டுக்கறாங்க..ஸ்டாலின் முதன் முதலில் அலங்காநல்லுரில் போராட்டம் நடத்தியதையும்.... அவுங்க ஆட்சியில இருந்தவரைக்கு ஜல்லிக்கட்டு நடத்தினதையும் இணைய பேராளிங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம்.. நம்ம பி டீம் கம்பு சுத்தி மறக்க வைக்கலாம்.. நாம எப்படிங்க மறுக்க முடியும் சொல்லுங்க.?
சரி என்ன பண்ணலாம்...
நல்ல பசங்கற பேரை... இவனுங்க தட்டிக்கிட்டு போனா... நாம எதுக்குன்னு பொது மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவாங்க..
அதனால் அந்த குட் நேமை உடைக்கனும்...
யோவ் அந்த அளவுக்கு குட் நேம் இருக்கா..?
இந்தியாவுக்கே முன்னுதாரணமா மாணவர்கள் அறவழி போராட்டம் இருக்குன்னு நேஷனல் மீடியாவுல இருந்து கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி வரை சொல்லிட்டாங்க...
அப்ப என்ன செய்யலாம்...?
அவனுங்க பேரை கெடுத்து மாணவர்கள் ஒரு நாளும் அறவழி போராட்டத்துக்கு சரியில்லைன்னு நிரூபிக்கனும்...
சரி இன்னைக்கு வரைக்கும் அவனுங்கதான் வன்முறையில இறங்கலையே?-
இறங்கனாமாதிரி நம்ம ஆட்கள் ஜோடிக்கறதுல கில்லாடிங்க... விசாரனை படம் பார்க்கலை...??
அது மட்டுமல்ல.. அப்படியே சொதப்புனாலும்.. திமுக செஞ்சிடுச்சின்னு சொன்னா இணைய போராளிங்க கேள்வி கேட்காம பொங்கி பார்வேட் செய்வானுங்க... ஏன்னா நம்ம பக்கம் கம்பு சுத்தி அடக்குறது போல திமுக பக்கம் பெரிசா ஆள் இல்லை... செயல் தலைவரே புறக்கணிக்கற ஊடகங்கள் கிட்ட போய் வெட்கமே இல்லாம நிக்கும் போது நமக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..
சரி என்ன பண்ணலாம்... எப்படி பண்ண போறிங்க..??
ரொம்ப சிம்பிள்.. கடற்கரைக்கு போற வழியை தடுத்தா போதும் மாணவர்கள் பொங்குவாங்க... அதே நேரத்துல பள்ளி கல்லூரி உண்டுன்னு வரசெல்லி... ... கலவரத்தை உண்டு பண்ணி ரெண்டு ஆட்டோவை எரிச்சி... போக்குவரத்தை தடை பண்ணா.. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிச்ச பெற்றோர் அலறி அடிச்சி பிள்ளைய கூட்டிக்கிட்டு போவான்...
அப்ப அவன் கோவம் போராட்ட மாணவர்கள் மேல திரும்பும்.. ரயிலையும் பஸ்சையும் நிறுத்திட்ட வேலைக்கு போனவங்க திகச்சி போயிடுவாங்க... அப்ப அவுங்க கோவம் வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது பாயும்.. அப்ப நாம கலவரக்காரர்களை அடக்கறது போல நாம மாணவர்களை வெளுத்து வாங்கிடலாம்...
எல்லாம்சரி கலவரத்தை எப்படி ஆரம்பிப்பிங்க...??
அதெல்லாம் பிரச்சனையே இல்ல...நம்ம ஆளுங்க அம்பேத்கர் பாலம் கிட்ட இருக்காங்க...
ஆனால் என்ன பிரச்சனை என்றால் இப்போது எல்லாம் எல்லோருடைய கையிலும் செல்போன் கேமரா இருப்பதை மறந்து விட்டு சிட்டி சென்டர் அருகே ஆட்டோவுக்கு தீ வைக்கும் போது...
சிட்டி சென்டர் மேலே இருந்து பெண் போலிஸ் ஆட்டோவுக்கு தீ வைப்பது வீடியோவில் பதிவாகிவிட்டது... அது மட்டுமல்ல... வண்டிகளை உடைத்த கலவர மேகத்தை உருவாக்கிய வீடியோக்க இணையத்தில் உலா வர ஆரம்பித்து விட்டன..
திமுகமேலும், மாணவர்கள் மேலும் பழி போடும் உபாயம் வெளிச்சத்துக்கு வந்தது...
வீடியோ எடுத்த ஒவ்வோரு செல்போன் நிருபருக்கும் வாழ்த்துகள்..
அதிகாரம் தன்னை தக்கவைத்து கொள்ள எந்த முடிவையும் எடுக்கும் என்பதுதான் நடைமுறை உண்மை..
மீடியா மக்கள் கையில போயிடுச்சின்றது இதுதான்..
ஜாக்கிசேகர்.
24/01/2017
#jallikattu #Marina #chennaimerina
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.
தலிவரே, நீதான் சனங்க மனசை நல்லா புரிஞ்சுருக்கீங்க. அடுத்த முதல் மந்திரி நீங்கதான்.
ReplyDelete100% true
ReplyDelete100% True
ReplyDeleteWHY DONT YOU SHARE IT IN FACE BOOK
ReplyDeleteNIYAZ SRILANKA