#jallikkattu
#MarinaProtest
#JusticeForJallikattu
48 மணி நேரம்தாண்டி வெற்றிகரமா ஜல்லிக்கட்டு போராட்டம் சென்னை மெரினாவில போய்கிட்டு இருக்கு...
தலைமை இல்லாத காரணத்தாலே இது சாத்தியமானது.. காரணம் தலைமை இருந்து இருந்தால் அழைந்து பேசி அன்பாகவோ அல்லது மிரட்டியோ பணிய வைத்து இருப்பார்கள்...
போராட்டத்தின் 20 வது மணி நேரத்தில் போலிஸ் பத்து பேரை அழைத்து சென்று பேச்சு வார்த்தை என்று ஒரு படம் காட்டியது... இளைஞர் அதை யாரும் நம்பவில்லை.. இங்க வந்து பேச்சுவார்த்தை நடத்த சொல்லுங்க என்று சொன்னார்கள்...
சரி போராட்டம் எந்த புள்ளியில் வெற்றி பெற்றது தெரியுமா?
அறவழி..
மாணவர்கள் தேர்ந்து எடுத்த பாதையே இந்த போரட்டம் 48 மணி நேரத்துக்கு மேல் சென்று கொண்டுள்ளது...
அராஜகமாக பேருந்து மீது கல் எரிந்து இருந்தாலோ? போக்குவரத்து இடைஞ்சலாக இருந்து இருந்தாலோ வன்முறையை கட்டுப்படுத்த தடியடி என்று கதை விட்டு லட்டியை சுழற்றி இருந்தால் எப்போதோ சோலி முடிஞ்சி இருக்கும்..
ஆனால் போக்குவரத்தை இளைஞர்களே சரி செய்கின்றார்கள்....
சாப்பிட்ட குப்பைகளை கூட சேகரித்து குப்பை கூடையில் போடும் அந்த ஒழுங்கு கவனிக்க வேண்டிய அதே நேரத்தில் பாராட்ட பட வேண்டிய ஒழுங்கு....
தமிழக போலிஸ் இந்த எழுச்சியை அவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதே நிதர்சனம்.... இதே போல தேனி கூட்டின் மீது கை வைக்க பயம்.. யார் நாட்டாமை என்று தெரிந்தால் பேசி தொலையலாம் என்றால் அதுவும் இல்லை...
அதனாலே இந்த போராட்டம் வெற்றிகரமாக நடக்கின்றது.,.
ஒரு வேளை அவர்களின் அறவழி போராட்டத்தில் லத்தி சார்ஜ் செய்தால் அதனை வீடியோ எடுத்து வாட்சப்பில் ஓட விட்டால்...????? அவ்வளவுதான் தமிழகத்தின் லா அன்டு ஆர்டர் சர்வ நிச்சயமாக மோசமாகி விடும் என்று தெரியும்..
அதனாலே கை பிசைந்து காவல் துறை 48 மணி நேரமாக தூக்கம் தொலைத்து கண் சிவந்து விவேகானந்தர் இல்லம் எதிரில் அமைதி காத்து செய்வதறியாது நின்றுக்கொண்டு இருக்கின்றது..
தற்போது மெரினாவில் உள்ள இலவச கழிவறைகளை மூடி உள்ளது... அதே போல கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளித்துள்ளது..
முதல்வர் பன்னீர் மோடியை சந்தித்து.... என்ன ரிசல்ட் என்பது பதினோரு மணிக்கு தெரிந்து விடும்... பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று...???
ஜாக்கிசேகர்
19/01/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment