சென்னை மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களின் எழுச்சி.





#jallikattuprotest
#justiceforjallikattu
#saveourculturejallikattu
#ஜல்லிக்கட்டு

தமிழக வரலாற்றில் முதல் முறையாக  ஜல்லிக்கட்டுக்காக  இளைஞர் போராட்டம் எந்த அரசியல் சாயமும் இல்லாமல்  மெரினாவில் ஒரு லட்சம்  இளைஞர்கள் ஒன்று  கூட  வைத்திருக்கின்றது…

 அதுவும் அறவழியில்….



நடிகர்களுக்காக கட் அவுட் வைக்கவும் டுவிட்டரில் சண்டை போடவுமே இளைய சமுதாயத்தின் மனித சக்தியும் அறிவும்  சமுக ஊடகங்களில்  வீணாவதாக  நான் வருத்தப்படுவது உண்டு…
 ஆனால் அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கியுள்ளார்கள் இளைஞர்கள்… ஆம் கட்டுகோப்பாக எந்த நயவஞ்சக வலையிலும் சிக்காமல்  அவர்கள் இலக்கை நோக்கி சென்று  கொண்டு இருக்கின்றார்கள்…

சென்னை காவல் துறையோ..  வன்முறையால் பொது சொத்துக்கு சேதம் ஏற்படாத வரைக்கும் நாங்களும் உங்களை கலைக்க  போவதில்லை என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது  தமிழகத்தில் பார்க்க முடியாத அறிதான விஷயம் அது மட்டுமல்ல தமிழகம் எங்கும் மக்கள்  போராட்டத்தில் குதித்து இருக்கின்றார்கள்..

நல்ல வேளை ஜெயலலிதா என்ற இரும்பு பெண்மணி உயிரோடு இல்லை..( இரும்பு பெண்மணி என்பது ஊடகங்கள் நக்கி பிழைக்க வைத்த பெயர்) அப்படி இருந்து இருந்தால்... மாணவர்கள் அறவழி போராட்டமே நடத்தி இருந்தாலும் தமிழக மாணவர்களின் வீரம் பத்து நிமிடத்துக்கு மேல் தாக்கு பிடிக்க விட்டு இருக்கமாட்டார் என்பதே நிதர்சனம்.

கார்த்திகை மாதத்தில் கோவிலுக்கு எதிரே கொளுத்தும்  சொக்க பானை போல 40 பேருந்துகள் எரிக்கப்படவில்லை.. உயிருக்கு அஞ்சி யாரும்  வீட்டை விட்டு வெளியே வராமல் இல்லை..
ஆனாலும்  போராட்டம் தமிழகம் எங்கும்  வலுவாக நடைபெற்று வருகின்றது… இத்தனைக்கு மெரினாவில் 18/01/2017 இரவு 20 ஆயிரம் பேர் விடிய விடிய கூடி இருந்தார்கள்…
பகலில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சம்.

இயற்கை உபாதைக்கு  அருகில் இருந்த இலவச கட்டண கழிப்பிடம் போதாது இருப்பினும்   நடுங்கும் கடற்காற்று குளிரில் டீயும் தம்முமாக  பேராட்ட வடிவத்தை கட்டுக்கோப்பாக முன்னெடுத்து சென்றார்கள்..

 வாட்டர் பாக்கெட் , சினாக்ஸ் மற்றும் உணவு பொருட்களை தன்னார்வலர்கள் வாங்கி குவிக்க… தொண்டை  தண்ணி வற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதராவாக 36 மணி நேரத்தையும் தாண்டி இளைஞர்களின்  போராட்டம்  எந்த இடையுறும் இல்லாமல் நடந்துக்கொண்டு இருப்பது  நம்ப முடியாது விஷயம்தான்.. இதனை சமுக வலைதளங்களின் மூலம் இளைஞர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்.

ஜல்லிக்கட்டு குறித்து எனக்கு மாற்றுக்கருத்துகள் உண்டு… அதே போல இந்த போட்டிக்காக இவ்வளவு கூவல் அவசியம்  இல்லை என்றே கருதுகிறேன்… ஆனால் டெல்லியில் அன்னா ஹசாரேவுக்கு கூடிய கூட்டம் போல தமிழகத்தில்  சாத்தியம் இல்லை என்று நினைத்து ஏங்கிய போது.. இந்த  ஜல்லிக்கட்டுக்கு தமிழன் என்ற டேக் லைனோடோ அல்லது ஏதோ ஒரு கருமத்தோடோ ஒன்று சேர்ந்து இருப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி..

 அது மட்டுமல்ல…  போராட்டத்தை அறவழியில் தொடர்ந்து போராடிக்கொண்டு இருப்பது…. சான்சே இல்லை என்பேன்.

இளைஞர்களின் இந்த ஒன்று  கூடல் நிச்சயம்  ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணிதான் என்பதில் எந்த  மாற்றுக்கருத்தும் இல்லை..

 இதே போராட்டம்  மற்ற அத்தியாவசிய போராட்டாங்களிலும் வெளிப்படும் என்றே எண்ணுகிறேன்…

எனக்கு ஆங்கிலத்தில் மிகவும் பிடித்தமான வாக்கியம்…

something is better than nothing

ஜாக்கிசேகர்
19/01/2017









நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner