எளிமையான தலைவர் கலைஞர்




h1b வீசாவுக்கு கட்டுபாடுகளை விதிக்கின்றார்… அமெரிக்க அதிபர் டிரம்ப்… உடனே மக்கள் போரட்டத்தை ஆரம்பிக்கின்றார்கள்.. ஜல்லிக்கட்டுக்கு நாம் மெரினாவை தேர்ந்து எடுத்தோமே அப்படி எல்லாம் அவர்கள் வேறு இடத்தை தேர்வு செய்யவில்லை… அவர்கள் வெள்ளை மாளிகை முன், அதாவது டிரம்ப் வசிக்கும் வீட்டுக்கு முன் ஆர்பாட்டத்தை தொடர்கின்றார்கள்…


காரணம் யார் இந்த விதியை அமல் படுத்த சொன்னது…? டிரம்ப் … அப்போ யாருக்கு எதிராக போராட வேண்டும்..? டிரம்புக்கு எதிராக… ? டிரம்புக்கு எதிராக என்றால்? எங்கே போராட வேண்டும்…???? அவர் வசிக்கும் வீட்டு அருகே.? ரைட்.. ஏன் அங்கே போராட வேண்டும்..? அப்போதுதான் அவருக்கு தெரியும் தான் அமுல் படுத்திய விதி தவறேன்று….

ஏன் நியூயார்க் நகர வீதிகளில் போராடவில்லை.. மக்கள் பாதிக்கப்படுவார்கள்… அல்லவா..? ஓட்டுக்கேட்டு நல்லது செய்கின்றேன் என்று மக்களிடம் பேசிய டிரம்ப் தானே ,. அதனால் அவரிடம் தான் போராட வேண்டும்… அவருடை செவிகளில் விழ போராட வேண்டும்… அதனாலே அமெரிக்க மக்கள் வெள்ளை மாளிகை எதிரில் போராட்டம் நடத்துகின்றார்கள்..

இத்தனைக்கும் டிரம்ப் இந்திய பிரதமரோ… அல்லது இந்தியாவின் மாநில முதலமைச்சரோ அல்ல.. அவர் உலகத்தில் ராஜா… அவர்கள் நினைத்தால் எந்த நாட்டில் புகுந்து புறப்பட்டு அழித்து யாரையும் கேள்வி கேட்காமல் வர முடியும் … அப்படிபட்ட அதிபர் வீட்டு எதிரில் போராட்டம்…

அங்கே இருக்கும் காவல்துறை ஏவல் துறையாக மாறவில்லை… உலகத்தில் மற்ற நாடுகளில் ஜனநாயகத்தை அமெரிக்க தன் சுயநலத்துக்காக வேர் அறுத்தாலும்… தன் சொந்த மக்களிடம் இன்னமும் ஜனநாயகத்தின் மான்பை இறக்காமல் வைத்து இருக்கின்றது…

விஷயம் அதுவல்ல.. ஒரு ஜனநாயக தேசத்தில் அதிபர் ஒன்றும் கடவுள் அல்ல அவரும் மக்களின் பிரதிநிதி அவர்களை கேள்வி கேட்கவும் அவர்கள் வீட்டு வாசலில் போராடவும் உரிமை உண்டு என்று அமெரிக்கர்கள் வகுப்பெடுக்கின்றார்கள்…


ஆனால் நம் நாட்டில் என்றாவது பிரதமர் இல்லம் எதிரோ அல்லது முதலமைச்சர் இல்லம் எதிரிலோ போராட்டம் செய்வதை பார்த்து இருக்கின்றோமா? அட்லீஸ்ட் பொது ஜனங்கள் அந்த விழயாக கடந்து செல்ல முடியுமா?


மற்ற மாநிலங்களில் எப்படி என்று தெரியவில்லை… அனால்… சென்னையில்..??????,
நான் 20 வருடம் சென்னை வாசம். ஒரு நாளும் போய்ஸ் தோட்டம் பக்கம் சென்று காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை பார்த்தது இல்லை… சரி அவர் உயிரோடு இருந்தவரை ஓகே.. அவர் மறைந்த பின்பும் அவர் இல்லம் சென்று ஒரு எளிய மனிதனாக பார்க்க முடிவதில்லை.. கட்சிககாரர்களோடு கும்பலோடு கோவிந்தா போட்டு ஓடிப்போய் பார்க்க வேண்டும் என்றால் பார்த்து விட்டு வரலாம். அதுவும் இப்போது சின்னம்மா இருக்கும் இல்லம் அதைவிட இன்னும் இரண்டு மடங்கு பாதுகாப்பாக இருக்கின்றது..


மற்ற நாட்களில் அந்த பக்கம் போகவே முடியாது.. காவல்துறை ஏகத்துக்கு போட்டு நம்மையே டரியல் ஆக்குவார்கள்.. இத்தனைக்கு பின்னி மில் சாலையில் சென்று அம்மா வீட்டு வழியாக கஸ்தூ’ரி ரங்கன் சாலையை அடைந்து விடலாம்.. ஆனால் வாகன சத்தம் மற்றும் பொது மக்களில் போக்குவரத்தை மக்களுக்காகவே வாழ்ந்த அந்த அம்மாவுக்கு பிடிக்குமா? என்ன ??


அந்த பஞ்சாயத்தில் வெறுத்து போய்தான் ரஜினி அம்மாவுக்கு எதிராகவே குரல் கொடுத்தார்…. அது மட்டுமல்ல போயஸ் தோட்டத்தில் அம்மா வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் அத்தனை பேருக்கும் ஐடி கார்ட் போட்டு… காவலர்களிடம் கார்ட்டை காட்டினால்தான் சொந்த வீட்டுக்கே போக முடியும்.. இன்னும் சொந்தக்காராகள் என்றால்..? கேட்கவே வேண்டாம் ஏன்டா அவன் வீட்டுக்கு போகனும் என்று டரியல் ஆக்கி விட்டுதான் மறுவேளை..


ஆனால் சென்னை வருபவர்கள் கலைஞர் வீடு எப்படி இருக்கும் என்று கேட்டால் ??? கோபலபுரத்தில் இருக்கும் அவர் இல்லத்தை அந்த வழியாக செல்லும் போது காட்டலாம்.. இத்தனைக்கு அவர் தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர்… அது மட்டுமல்ல அவர் வீட்டுக்கு எதிரில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் வழிபடலாம்…

அவர் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சாலையில் தினமும் பயணிக்கலாம்…மிக முக்கியமாக கலைஞர் வீட்டுக்கு பக்கத்தில் சுற்று சுவரே இல்லை… சாலை ஓரத்திலேயே கலைஞர் வீட்டின் தாய் சுவர் இருக்கும்….ஒரு லாரியை அல்லது பொக்கலைன்னை எடுத்துக்கொண்டு கண்ணகி சிலை மீது மோதுவது போல் மோதினால்… அவ்வளவுதான்... ஆனாலும் அங்கேதான் அந்த தலைவர் வசிக்கின்றார்..


இத்தனைக்கு அவர் வீட்டு அருகே.. இரண்டு நான்கு பள்ளிகூடங்கள் இருக்கின்றன… அத்தனை பிள்ளைகளும்… தினமும் காலை மாலை ராதா கிருஷ்ணன் சாலையில் இருந்து கோபாலபுரம் வழியாக ஆயிரக்கனக்கான வாகனங்கள் அவர் விட்டு வழியாக செல்கின்றன.

கடந்த வருடத்தில் கலைஞர் அவர்களை பார்க்க சொந்தங்களுடன் சந்திக்க சென்ற போது..தம்பியண்ணன் அப்துல்லாவும் நானும் பேசிக்கொண்டு இருந்த போது.. அவர் சொன்னார்.....

இந்தியாவில் எந்த அரசியல் தலைவரின் வீட்டு தாய் சுவர் அருகே இப்படி வாகனங்கள் பயணிக்கின்றன??? சொல்லுங்கள்.. ???? என்றார் அதில் உண்மை இல்லாமல் இல்லை.



சென்னைக்கு அருகே இருக்கும் திருவள்ளுரூக்கே அரசு பணத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ஜெவுக்கும் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட ரயில் பயணத்தை தேர்ந்து எடுத்து மக்களோடு மக்களாக பயணிக்கும் கலைஞருக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது…

அப்படியான எளிமையான தலைவர் அண்ணா பிறந்தநாளுக்கு வருடா வருடம் தவராது மெரினாவரும் இந்த வருடம் வரவில்லை காரணம் அவருக்கு முதுமை காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றார். 47 ஆண்டுகள் தொடர்ச்சியாக தன் தலைவன் அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த வருபவர் .. இந்த முறை அவரால் வர முடியவில்லை..

அது மட்டுமல்ல.. கலைஞர் தனது சொந்த சம்பாத்தியத்தில் உழைத்து வாங்கிய வீட்டை மக்களுக்கு மருத்துமனையாக மாற்றி உயில் எழுதி வைத்து விட்டார்…. மக்களுக்காகவே வாழ்ந்து அப்பல்லோவில் மரித்து போன அம்மா யாருக்கு என்ன செய்தார் என்பதை உங்கள் ஊகத்துக்க்கே விட்டு விடுகின்றேன்.

அந்த எளிமைக்காகவே நான் கலைஞரை ரசிக்கின்றேன் நேசிக்கிறேன்.…. எந்த முதலமைச்சரும் காதலர் தினத்துக்கு வாழ்த்து சொன்னது இல்லை… காதலர் தினத்துக்கு வாழ்த்து சொல்லும் ஒரே முதல்வர் ஒரே தலைவர் கலைஞர்தான் அதற்காகவே வேணும் காதலர் தினத்துக்கு வாழ்த்து சொல்ல வா கலைஞனே.

ஜாக்கிசேகர்
03/02/2017

M.m. Abdulla



#கலைஞர் #கருணாநிதி #காதலர்தினம் #காதலர் #சென்னை #கோபாலபுரம் #போயஸ்கார்டன் #ஜெ #ஜெயலலிதா #ரஜினி #அமெரிக்கா



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. எளிமை அப்படின்னா அவர் வீட்டு வாசலில் நிறைய வண்டி போவது மட்டும் இல்லை .... மகன், மகள், மருமகன் , மருமகள் , மச்சான் , பேரன் , இன்னும் யார் யாரோ லிஸ்ட் ரொம்ப பெருசு . அவர்கள் எல்லாம் எப்படி பட்ட வீட்டில் உள்ளார்கள் , எத்தனை வண்டி வீட்டிற்குள் உள்ளது , ...அவர்கள் தொழில் என்ன , எப்படி இத்தனை சொத்து சேர்த்தார்கள் ... இதையெல்லாம் எதில் சேர்ப்பது , எளிமையா .... இல்லை வேறு பேர் இருக்கா ?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner