வாழ்க்கை சிறந்த ஆசிரியர்… ஏதாவது ஒரு மனிதன் மூலம் தினம் தினம் நமக்கு வாழ்வியல் சூட்சமங்களையும் பணிவையும் கற்றுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றது… அப்படி ஒரு விஷயத்தை மூவநல்லூரில் பணியாற்றிய முன்னால் ஆசிரியர் திரு ராஜகோபால் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்..
கடந்த மாதம் டிசம்பர் 18 ஆம் தேதி நண்பர் வெட்டிக்காடு ரவி மற்றும் அவருடைய மனைவி எழுதிய கீதா எழுதிய கீதா கபே புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது… என்னை அவர் அழைத்து இருந்தார்…. நான் விழாவினை வீடியோ பதிவு செய்து தருவதாக சொல்லி இருந்தேன்…
ஒரு புத்தக வெளியீட்டு விழா இவ்வளவு கூட்டத்தோடு அதுவும் தஞ்சையில் நடந்தது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்….நீண்ட நாட்களுக்கு பிறகு வலையுலக நண்பர்களை சந்தித்தேன்..
அப்துல்லா, மணிஜி, கேபிள், சுரேகா, ஈரோடு கதிர், கிருஷ்ணமூர்த்தி, ஓர்பிராஜா, செந்தில்,புருனோ, ஜோதிஜி, போன்றவர்களை சந்தித்ததோடு மட்டுமல்ல வெகு நாட்களுக்கு பிறகு நான் கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழா.
நண்பர் ரவியை பற்றி நிறைய எழுதி இருக்கிறேன்… வெட்டிக்காடு மற்றும் கீதா கபே புத்தகங்களின் விற்பனை வருமானத்தை அப்படியே அவரது ஊர் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு அந்த பணத்தை செலவிட உள்ளார்…
எல்லாவற்றையும் விட ஹைலைட்.. நண்பர் ரவி செய்த விஷயம்தான்… தற்போது ரவி சிங்கபூரில் இருக்கும் Ixia Communications நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதோடு ஐந்தாம் அலைக்கற்றை தொழில் நுட்பத்தில் பிசியாக இருக்கின்றார்..
அவ்வளவு உயரத்துக்கு சென்று விட்டார் நேரம் கிடைக்கும் போது அவரது சொந்தகிராமமான வெட்டிக்காடு குறித்து அங்கு வாழ்ந்து வரும் மனிதர்கள் குறித்தும் பிளாக்கில் எழுதுகின்றார்… பின்பு அதனை தொகுத்து வெட்டிக்காடு புத்தகமாக வெளியிடுகின்றார்..
… அந்த புத்தக வெளியீட்டு விழாவில் தனக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்களை அழைத்து விழா மேடையில் சிறப்பு செய்கின்றார். அது எவ்வளவு பெரிய விஷயம்… அந்த ஆசிரியர்களை பொருத்தவரை அது எவ்வளவு பெரிய கொடுப்பினை….
விழாவில் கலந்துக்கொண்டு பேசி இரண்டு ஆசிரியர்கள்… மனதில் நின்றார்கள்… ஒருவர் ராஜகோபால் மற்றவர் பழனி அரங்கசாமி. நண்பர் ரவியின் ஆசிரியர் ராஜகோபல்...
ராஜகோபால் சார் எளிமையானவர்… தன்னிடம் படித்த மாணவன்… தற்போது சிங்கபூரில் உயர் பதவியில் இருக்கின்றான் என்று அலட்டவில்லை… ரவி எப்படி பள்ளிக்கு வருவான் தெரியுமா? அவன் கணக்குல மக்கு நான்தான் அடிச்சி அடிச்சி கணக்கை புரியவைச்சேன் என்று பீத்த வில்லை…
ராஜகோபால் சொல்கின்றார்… என்னோடு பணிபுரியும் ஆசரியர்கள் உயர் பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களை பார்த்து அந்த பையன் என்னிடம் படித்தவன் என்று சொல்லி பெருமைபட்டுக்கொள்வார்கள்..
ஆனால் நான் அப்படி சொல்லமாட்டேன்… நான் எப்படி சொல்வேன் என்றால்…?
அந்த பிள்ளை படிக்கற காலத்துல அந்த பள்ளிக்கூடத்துல நான் வேலை பார்த்தேன்னு சொல்லுவேன்… ஏன்னா அந்த பையன் கூடவே நிறைய பசங்க படிச்சி இருப்பாங்க… அவ்வளவு ஏன் என்க புள்ளைங்கள கூடத்தான் படிக்க வைக்கேறோம். ஆனா யாரும் ரவி அளவுக்கு பெரிசா சோபிக்கலை… என்று பட்டவர்தனமாக பேசினார்..
ஏதோ அந்த வாத்தியரின் அலட்டல் இல்லாத அந்த டவுன்டு எர்த் பேச்சு என்னை நெகிழ செய்தது எனலாம்..
வாழ்க்கை சிறந்த ஆசிரியர்… ஏதாவது ஒரு மனிதன் மூலம் தினம் தினம் நமக்கு வாழ்வியல் சூட்சமங்களையும் பணிவையும் கற்றுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றது…
நன்றி ரவி.
Ravichandran Somu
கீழே ராஜகோபால் ஆசிரியர் விழாவில் பேசிய சுட்டி…
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment