கடலூர் வேல்முருகன் தியேட்டர்....




பதினொன்றரை மணி காலைகாட்சிக்கு வெயிலில் இரண்டு ரூபாய் டிக்கெட்டுக்கு  கேட் முன் தவம் கிடந்து  கழுத்து  வியர்வை கசகசக்க  அந்த நீண்ட சுரங்க பாதை போன்ற கவுண்டரில்  திரும்பி வளைந்து திரும்பி வளைந்து பயணித்து டிக்கெட் எடுத்து  முத டிக்கெட்டுக்கு  பத்து ரூபாய் தாளை நீட்டினா என்ன செய்யறது ? என்று தலையில் அடித்துக்கொண்டு முனறிக்கொண்டே டிக்கெட் கொடுப்பவர் சில்லரை கொடுக்க டிக்கெட் வாங்கி வாயில்  நிற்பவரிடம் டிக்கெட் கிழித்து உள்ளே செல்லும் முன் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு தியேட்டர் உள்ளே சென்றால்......




பினாயில் மனம் கமழும்....
சரியான  சீட் தேடி உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் சைடில் இருக்கும் மின் விசிறிகள் சல சலக்கும் சத்தத்தோடுமு காற்றை வீசத்தொடங்கும்....


வெண்திரை அவுத்து போட்ட படி இருக்கும்.... ஆனால்  ஒரு காலத்தில் ஸ்கிரின் வளைவான மஞ்சள் ஸ்கிரின் ஆங்கில இசைக்கு ஏற்ற படி கொஞ்சம் கொஞ்சமாக  தூக்கும்.... அது ரிப்பேர் ஆனதும்  அப்படியே உடைப்பில் போட்டு விட்டார்கள்.

அகலமான திரை....


வெண் திரைக்கு பின்னே இருக்கும் ஸ்பீக்கருக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டவுடன்  கரிக்  பிரிக் என்று சத்தம் எழுப்பி தன் இருப்பை காட்டிக்கொள்ளும்...


டப் டிப் என்று சத்தம் போட்டு மிக மெதுவாக  ஒரு பாடல் வரும் பாருங்கள்...

அந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்..... சரியாக பதினோன்னே முக்காவுக்கு அந்த பாடலை போடுவார்கள்...


உள்ளம்  உருகுதைய்யா முருகா உன்னடி காண்கையிலே....


இதே பாடலை கோவில் திருவிழாக்களில்  நிறைய முறை கேட்டாலும் ...
மின் விசிறி சுற்றி  வரும் காற்றில், வியர்வை அடங்கி. பெனாயில் வாசத்தோடு ஒரு பெரிய அரங்கில் இந்த பாடலை கேட்கும் போது...பக்தி மனம் கமழும்.


முருகனை டிஎம்எஸ் கெஞ்சும் போது  அதுவும் தியேட்டரில்  கொடுத்த இன்பத்தை எந்த கோவிலிலும் நான் உணர்ந்ததில்லை.... கடலூர் வேல்முருகன் தியேட்டரில் மட்டும்தான் இந்த பாடல் போடுவார்கள்.. அதனால் காலைகாட்சிக்கு சென்று பார்த்த  திரைப்படங்கள் ஏராளம்..... அது மட்டுமல்ல... அம்மாவோடு போய் தாய் வீடு, படிக்காதவன் முதல் குருதிப்புனல் வரை பார்த்த நினைவுகளை எங்கனம் அழிப்பது...



அப்படியான தியேட்டர் தன்  பவுசை இழந்தது… பாண்டிக்கு போய் ஆனந்தா , பாலஆனந்த , பாலஜி என்று பார்த்த காரணத்தால் வேல்முருகன் தியேட்டர் பிடிக்காமலே போனது… கடைசியாக பால்கனியில் கல்கி திரைப்படம் பார்த்ததாக  நியாபகம்..
அதன் பின் அந்த தியேட்டருக்கு  சென்றதே இல்லை… தமிழகத்தில் வெளியாகும்  கார்கள் அனைத்தும் ஏசி ஆக்கப்பட்டும்… வேல்முருகன் தியேட்டர் பார்ட்லி ஏசியில் குப்பை கொட்டிக்கொண்டு இருந்தது  அந்த திரையரங்கம்.

அதனால் அந்த திரையரங்கை வெறுத்தேன்.

எனது நண்பட் சுபாஷுடன் பேச… அப்படியே வாசலில் இருக்கும் டிபன் கடையில் சாப்பிட்டு விட்டு நடையை கட்டி இருக்கின்றேன்… நான் முதன் முதலில் தனியாக  டிக்கெட் எடுத்து பார்த்த விடுதலை திரைப்படம் இந்த தியேட்டரில்தான் வெளியானது..

பேப்பரில் ஐந்து காட்சி என்று போட்டு இருந்த அஞ்சலி திரைப்படத்துக்கு காலை ஒன்பது மணிக்கே சென்று தேவுடு காத்து நாலு காட்சியாக மாற்றி பதினோரு மணிக்காட்சிக்கு போய்   அஞ்சலி திரைப்படம் பார்த்தது என் சொல்லிக்கொண்டே போகலாம்…

எல்லாம் இருந்தும் இந்த தியேட்டர் கண் எதிரில் வீணாகி போவதை ஒரு காலும் மனது ஏற்றுக்கொள்ளவில்லை…., இந்த தியேட்டர் இடித்து விடுவார்கள் என்றே எண்ணினேன்.. ஆனால் தற்போது புது ரத்தம் பாய்ச்சப்பட்டு வரும் பொங்கலுக்கு  வேல்முருகன் தியேட்டர் புதுப்பொலிவோடு திறந்து விடுவார்கள் என்று  எண்ணுகிறேன்… எனக்கு சினிமா மீதான அதீத காதலுக்கு இந்த தியேட்டரும் ஒரு காரணம்.

கேசட் கொடுத்தவர்கள் எல்லாம் சின்னம்மாவாக வளம் வரும் போது கடலூரின் அடையாளம் வேல்முருகன் தியேட்டர் புதுப்பொலிவுடன் வளர்கையில் மிகுந்த மகிழ்ச்சி.

வேல்முருகன் தியேட்டர்ருக்கும் அதை புதுப்பொலிவோடு அதனை மீண்டும் வழி நடத்தும் நிர்வாகிகளுக்கும் என்   வாழ்த்தும் நன்றியும்..

குறிப்பு…
ஒரு தியேட்டருக்கும் இத்தனை பெரிய பதிவா..? என்று கேட்பவர்களுக்கு மட்டும்.
சினிமா பேரடைசோ  இத்தாலி திரைப்படம் பாருங்க...

ஜாக்கிசேகர்.
11/01/2017





நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner