மயிலையில் நான் ரொம்பவே ரசிக்கும் விஷயம் மயிலாப்பூர் பெஸ்ட்டிவல்...தொடர்ந்து அதனை வருடா வருடம் நடத்தும் விழா குழுவினருக்கு எனது நன்றிகள்.
ஒரு கிராம நாகரீகமும், நகர நாகரீகமும் சங்கமிக்கும் ஒரு அற்புதமான விழா அது என்றால் மிகையில்லை...
இந்த வருடம் இனிதே மயிலை பெஸ்ட்டிவல் நடந்தேறியது... மயிலை பெஸ்ட்டிவலில் நான் கலந்து கொள்வது இது மூன்றாவது வருடம்.
இந்த விழாவில் பெரும்பாலும் அழகான பெண்களை கடக்கும் போது எல்லாம் ஆங்கில சம்பாஷனைகள் அதிகம் இருக்கும்... இந்த வருடம் என்னவென்று தெரியவில்லை.,.
யாருமே ஆங்கிலத்தில் பேசி கடக்கவில்லை. சில நேரங்களில் நியூயார்க் நகர விதியில் நடப்பது போல உணர்வே ஏற்படுத்தி விடுவார்கள்..
ஆல்ட்ரா மார்டன் யுவதிகள் கூட தமிழில் பேசி கடந்தனர்... சரி... ஏதோ ஒன்னு ரெண்டு பேர் அப்படி பேசுவாங்க... ஆனா யாராவது நம்மை கடக்கும் போது ஆங்கிலத்தில் பேசி கடப்பார்கள் என்று ஆர்வமாய் காத்து இருந்தேன்.ம்ஹும் யாருமே இல்லை....
ஏமாற்றத்தை தந்து விட்டடார்கள்... மயிலை பெண்கள்...
யாருமே இல்லையா-? இல்லை... நம்புங்கள் யுவர் ஆனர்... ஆனால்...............
அப்பா..
என்னம்மா...?
ஐ வான்ட் தட் ஆர்ட்டின் ரெட் பலூன் என்றாள்... யாழினி...
ஜாக்கிசேகர்
09/01/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment