பொண்டாட்டி தேவை , சுகமான சுமைகள், புதிய பாதை ஹவுஸ்புல் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஆர் பார்த்திபான்… சாரி ராதா கிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் கிரைம் திரில்லர் கோடிட்ட இடங்களை நிரப்புக…
சாந்தனு பாக்யராஜ் மற்றும் பார்வதி நாயர் லீட்ஸ் ரோல் செய்து இருக்கின்றார்கள்… இதில் பார்த்திபனும் நடித்து இருக்கின்றார்.
கோடிட்ட இடங்களை நிரப்பு திரைப்படத்தின் கதை என்ன?
சாந்தனு (கெவின்) பாரின்ல இருந்து சென்னைக்கு வந்து சில டீல் முடிக்க வரார்.. அவருக்கு கார் டிரைவர் பார்த்திபன் அவருடைய மனைவி பார்வது நாயர்… 20 வயது இடைவெளி வித்தியாசம்.. ஹோட்டலில் தங்க செல்லாமல் ஹோம்லி டைப்புக்கு ஆசைப்பட்டு சாந்தனு, பார்வதி நாயர், பார்த்திபன் ஒரே வீட்டில் இருக்க அடுத்து என்ன நடந்து இருக்கும் என்பதை திரையில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
====
சாந்தனு அவர் பாத்திரத்தை மிக சிறப்பாக செய்து இருக்கின்றார்… படம் எதுவும் இல்லை என்பதால் மொக்கையான படங்களில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம்..
பார்வதி நாயர் ஹாட்.. சில இடங்களில் கவர்ச்சி மூலம் டரியல் ஏற்படுத்துகின்றார்.
தம்பிராமைய்யா.. மனதில் நிற்கவே இல்ல.
ஆனால் பார்த்திபனின் வழக்கமாக நக்கல் வசனங்கள் பெரிய பிளஸ்.
அதேபோல ரெண்டு பேருக்கும் இன்டர் கோர்ஸ் நடக்கும் போது போர்கிரவுண்டில் கதகளி ஆட விட்டு இருப்பது லவ்வபிள்.
மைனஸ் என்று பார்த்தால் திரைக்கதைபலவீனம்தான்… அதிகம் ஆராயாமல் டைம்பாஸ் படமா பார்த்துட்டு வரலாம் தட்ஸ் ஆல்…
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
0 comments:
Post a Comment