ஜல்லிக்கட்டு போராட்டம்... என்னவாகும்.?
முதல்வர் நல்ல செய்தி சொல்வார் என்ற எதிர்பார்ப்பில் மண்.
இந்த போராட்டம் இளைஞர்கள் கத்தி கத்தி டயர்டாக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் யுக்தி...
இலக்கு தெரியாமல் கத்தி கத்தி ஒரு கட்டத்தில் இந்த போராட்டத்தினை தூக்கி போட்டுவிட்டு பொழப்பை பார்க்க போக வைக்க அல்லது வெறுத்து ஒதுங்க வைக்க எல்லா வேலைகளையும் பன்னீர் அரசு செய்கின்றது...
அப்படியே தொடர்ந்தாலும் இரண்டு நாளைக்கு ஒரு ஸ்டேட்மென்ட் விட்டு... இளைஞர்களை கோபபப்படுத்தி..
வன்முறையை தூண்ட செய்து அவர்களை வெளு வெளு என்று வெளுக்க வேண்டும் என்பதுதான் அரசின் ஒரே நோக்கம்..
48 மணி நேர தொடர் போராட்டத்துக்கு பிறகு... நாங்கள் மத்திய மாநில அரசுகள் சேர்ந்து நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் சொல்லும் போது... 40 நாள் கழித்து போராட்டம் முடிந்து கேட்டாலும் இதே பதிலை சொன்னால் உங்களால் என்ன செய்ய முடியும்..??
அதற்குள் கரண்ட் பில், ஈஎம்ஐ , பொழப்பு என்று புத்தி போய் விடும்... அதைதான் அவர்கள் விருப்புகின்றார்கள்...
எனது தோழியிடம் சொன்னேன்...
இந்த போராட்டம் விழலுக்கு இரைத்த நீர்தான்.. காரணம் இவர்கள் முன் வைக்கும் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்க வாய்ப்பே இல்லை என்று சொன்னேன்.
இல்லை இவ்வளவு எழுச்சியான போராட்டம்... அவ்வளவும் வீணா? என்று அங்கலாய்த்தார்..
ஒரே பிளஸ் இளைஞர் ஒரு விஷயத்துக்கு ஒன்று கூடி அற வழியில்48 மணி நேரம் போராட முடியும் என்று நிரூபீத்து காட்டியதே இந்த போராட்டத்தின் வெற்றிதான்...
அதே வேளையில்
நல்ல தலைமையை தேர்ந்து எடுக்க தவறிவிட்டு...அடிமை சேவகம் செய்பவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு அவர்களிடம் ஜனநாயக போராட்ட வடிவத்துக்கு ரிசல்ட் எதிர்பார்ப்பது காளை மாட்டிடம் பால் கறக்கும் செயல் என்றேன்...
அவர்கள் போராடிக்கொண்டேதான் இருக்க வேண்டும்....இவர்களும் நடவடிக்கை எடுத்தோம் என்று சொல்லிக்கொண்டு இருக்க போகின்றார்கள்..
புரிந்தும் புரியாதது போல தலையசைத்தாள் என் தோழி... உங்களுக்காகவாவது நான் சொல்வது புரிகின்றதா?
ஜாக்கிசேகர்
19/01/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.
நன்றாக சொன்னீர்கள்! அடிமைகளிடம் போய் நாம் பரிசை எதிர்பார்க்க முடியாதுதான்!
ReplyDeleteada ungalukku ivvalu seekiram purindu vittade neenga gnani sir.
ReplyDelete
ReplyDeleteமிக சரியான பார்வை. At least Let us keep away from Pepsi Coke KFC etc ...
இந்த அறவழி போராட்டமும் வீண்தான்னா, வேற என்ன தான் வழி?
ReplyDelete