சம்பாதிச்சிக்குவோம்





இரவு பத்து மணி... எங்கள் காருக்கு முன் அந்த கால் டாக்சி சென்று கொண்டு இருந்தது… அந்த கால் டாக்சி டிரைவருக்கு சென்னை புதிதாக இருக்க வேண்டும்..
அம்மா காலில் விழுத்தோம் சின்னம்மா காலிலும் விழ வேண்டுமா? வேண்டாமா-? என்ற தயக்கம் கொண்ட தற்போதைய அதிமுக தொண்டன் போல . எனக்கு முன்னே அந்த கால் டாக்சி தயங்கி தயங்கி சென்று கொண்டு இருந்தது.. அடையார் கேட் ஓட்டலின் உள் செல்ல வேண்டும்…. ஆனால் அதற்கு முன் ஒரு பங்களாவின் பெரிய வாசல் இருக்கும் காரணத்தால் டிரைவருக்கு குழப்பம்… சடார் என்று பிரேக் போட்டுவிட்டார்… நான் சென்னையில் ஆட்டோ மற்றும் முக்கியமாக ஷேர் ஆட்டோ, கால் டாக்சி பின்னே செல்லும் போது மிகுந்தகவனத்தோடு செல்வேன்.. காரணம் அது அவர்களுடைய சாலை… அவர்கள் கொள்ளுதாத்தாவில் இருந்து தற்போது வாழ்ந்து வரும் அவர்கள் அப்பா வரை சென்னை சாலைகளில் அவர்கள் பங்களிப்பு அதிகம் என்பதால் அவர்கள் வைத்ததுதான் சட்டம்… அதனால் நாம் ஜாக்கிரதையாக இருப்பதுதானே சரி.. நான் ஜாக்கிரதையாக இருந்தகாரணத்தால் பிரேக் இட்டு வண்டியை நிறுத்தினேன். நான் பிரேக் இட்டு காரை நிறுத்திய சரியாக ஆறாவது வினாடி என் காரின் பின் பக்கம் டொம் என்று சத்தம்… யாழினி கலவரம் ஆனாள்… ஆறு வினாடி என்பது எத்தனை கால இடைவெளி என்பதை படித்தால் புரிந்து கொள்ள முடியாது.,. அதனால் கையால் எண்ணுங்கள்…. கார் நின்று விட்டது ஒன்று இரண்டு மூன்று ரைட் .. சரியாக ஆறு வினாடி கழித்து டொம் என்றால் கோபம் வருமா? வராதா? எனக்கு பத்திக்கொண்டு வந்தது… காரை விட்டு இறங்கினேன்…. அவன் மார்வாடி வாயில் மாவா கொதப்பி அது வாய் ஓரம் சிவப்பாய் எட்டிப்பார்த்தது.. ஆக்ட்டிவா பின்னால் அவன் மனைவி கைக்குழந்தை வேகமாக வந்து மோதிய வேகத்தில் தரையில் விழப்போய் சுதாரித்து பயத்தோடு நின்று இருந்தார்… சில்க் சாரி கட்டிக்கொண்டு ஒற்றை பக்கம் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்ததோடு பிடிப்பில்லா வண்டியில் குழந்தையையும் வைத்துக்கொண்டு சடன் பிரேக் அடிக்க குழந்தையோடு விழப்போய் சுதாரித்து நின்றதை என்னால் உணர முடிந்தது…….மாவா வாய் மார்வாடியின் கொழுக் மொழுக் குழந்தை பயத்தில் அழ ஆரம்பித்து…. நான் காரின் பின்னே என்ன சேதம் என்று பார்த்தேன்… டேஞ்சர் லைட் கொஞ்சம் ஒடுக்கு… எப்படியும் 2500 செலவு….. மாவா இறங்கவே ஆக்ட்டிவா விட்டு இறங்கவே இல்லை… நான் கார் பின்னாடி பார்த்த அந்த கேப்பில் பொண்டாட்டிக்கு சிக்னல் கொடுத்து வண்டியில் பின்னால் உட்கார வைத்து …. வண்டியை வேகம் எடுத்து என்னை கடந்தான்… நான் ங்கோத்தா பாடு நில்லுடா என்று கத்தினேன்…. நான் காரில் உட்கார்ந்து காரை வேகம் எடுத்தேன்… பில்ராத் ஆஸ்பிட்டல் சிக்னலுக்கு முன் வேகமாக போய்க்கொண்டு இருந்தான்…. அவன் மனைவி எங்கள் காரை பார்த்து அவனிடம் சொல்ல அவன் முன்னை விட அதிவேகமாக ஆக்ட்டிவாவை ஓட்டினான். சிக்னல் போட்டு இருக்கும் போதே எதிர்திசையில் வாகனம் வரும் போதே வேகமாக கடந்தான்… நானும் சிக்னலில் கடந்து இருக்கலாம்.. நான் காரை சிக்னலில் காரை நிறுத்தினேன். மனைவி சொன்னார்.. அந்த லாரி போனதும் போயிடலாம் அவனை விரட்டி பிடிச்சிடலாம் என்றார்… நான் வேண்டாம் என்றேன்… ஜாக்கி ஒரு சாரி கூட சொல்லமா போறான் என்று கடுப்பானார்.. பிடிச்சி திட்டலாம்…. ஆனா துரத்தும் போது நமக்கு பயந்து பொண்டாட்டி குழந்தையோடு போறவன்… இங்க சிக்னலையே மதிக்காம பயத்துல வேகமா போறவன் பதட்டத்துல பயத்துல எதன் மீதாவது மோதி பொண்டாட்டி குழந்தையோடு ரோட்டுல விழுந்து கிடக்கறான் வையி… அதை பார்த்தா நம்ம மனசு எவ்வளவு கஷ்டப்படும்… யாழினி கேட்டாள்…? என்ன ஆச்சிப்பா… என்றாள்…. நான் ஒன்னுமில்லம்மா என்றேன்… விடு …. 2500 ரூபாய்தானே சம்பாதிச்சிக்குவோம்…. என்று சொல்லி விட்டு அவனை விரட்டாமல் காரை பிசி ராமசாமி ரோட்டில் வண்டியை பொறுமையாக வளைத்தேன்… நண்பர் அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்... ஜாக்கிசேகர் 31/12/2016 நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ..... EVER YOURS...
ஜாக்கிசேகர்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner