துரத்தும் கேள்விகள்.






மேலே  உள்ள புகைப்படத்தை பார்த்த  கணத்தில் மனம் சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்தது என்பேன்.

சிலபுகைப்படங்கள் நிறைய  சேதிகளையும் கேள்விகளையும்விட்டு செல்லும் அப்படியான புகைப்படம் இது...




அன்றே எழுதி இருப்பேன்.. ஆனால் அன்று இருந்து மன நிலையில் எழுதி இருந்தால்  வார்த்தைகள் தடித்து  இருக்கும்... கொஞ்சம் நஞ்சம்  பெண் நட்புகள்  கூட அன்பிரண்டு செய்து விட்டு போய் இருப்பார்கள்...  சரி.. திரும்ப எழுதலாம் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன்...  அப்படியே மறந்துவிட்டேன்.


நேற்று விகடனில்  ஒரு  அடிப்பட்ட தெருநாயை காப்பாற்ற போய்...  காப்பாற்றிய குடும்பத்தில் உள்ள எல்லோரை/யும்  அந்த வெறிநாய்  கடித்து விட்டது.. கடித்த நாய்க்கு ரேபிஸ்  நோய்... இருந்ததோடு அது இறந்தும் போய் விட்டது... பல அலைச்சல்களுக்கு பிறகு ரேபிஸ் இன்ஜக்ஷன் போடப்பட்டு அந்த குடும்பம் பிழைத்து இருக்கின்றது...


எல்லோரையும் போல   எனக்கு என்ன என்று சென்று இருந்தால் அவர்களுக்கு இந்த நாய்க்கடி பிரச்னை வந்து இருக்காது...தேவையற்ற மன உளைச்சல்... நல்லது செய்ய போனவர்களுக்காகத்தான் இந்த பெருத்த தண்டனை....


நானும் பார்த்து விட்டேன்.. நீங்கள் நல்லதே  நினைப்பீர்.. கடைசியில் அவன் உங்களுக்கே குழி வெட்டுவான்... அதே போல அவனுக்கு கண்ணுக்கு எதிரில் விஷம் கலந்து கொடுத்து இருப்பான் ... அவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவான்...


இது என்ன மாதிரி டிசைன் மயிருன்னே தெரியலை... எங்க அம்மா நிறைய நல்லது செய்தா புண்ணியவதி...... வலியோட  சின்ன வயசுல போய் சேர்ந்தா... பெரிய  சந்தோஷத்தை எல்லாம் அவள் அனுபவிக்கவேயில்லை..


வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை  உயரை பணயம் வைத்து  காப்பாற்றிய  வீரச்செயலுக்ககாக வும் தீவிரவாதிகளை பிடித்த  தீரச்செயலுக்காகவும்.... கடந்த குடியரசு தினத்து அன்னைக்கு   இராணுவ வீரர் கலோனல் எம் என் ராயிக்கு  விருது வழங்கறாங்க... அடுத்த நாள் காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதி இருக்கும் வீட்டை சுற்றி வளைக்க செல்கின்றார்...... முதலில்  வீட்டில் இருந்து வெளிய வந்த வயதான பெரியவர் தன் பிள்ளைகளை ஒன்றும் செய்ய வேண்டாம் அவர்களை சரணடைய   சொல்கின்றேன் என்று கெஞ்சுகின்றார்...  இரக்க சுபாவத்தால் அசந்து இருக்கும் வேளையில்.... வெளியே வந்த தீவிரவாதிகள் திடும் என துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்த... அந்த  தாக்குதலில் ராயும் அவரோடு ஒரு போலிஸ்காரரும் சம்பவ இடத்திலேயே மரித்து போகின்றார்கள்..


ஜனவரி 28 ஆம் தேதி நடந்த ராயின்  உடல்  தகனத்தின் போது ராயின் மகள் அப்பாவின் உடலுக்கு  வீரவணக்கம்  செலுத்தியபடி  வெடித்து  அழுத புகைப்படம் கல் நெஞ்சையும் கலங்க வைக்கும்...


 இரக்கப்பட்டதற்கு  கிடைத்த பரிசா... ???? வெகுமதியா???


இரண்டு நாளைக்கு முன் இரக்கத்திற்கு இந்திய அரசின் விருதி வாங்கியவன்   அதே  இரக்கத்திற்காக மறுநாளே பினமாக தன் தந்தை வருவான்  என்று  அந்த பெண் நினைத்து பார்த்து  இருப்பளா??

கொடுமையிலும் கொடுமை...


என்ன நடந்தாலும் இரக்கப்பட்ட  பழகியவர்களை எளிதில்  மாற்ற முடியாது... உயிரே போனாலும்... தேள் கொட்டும் இயல்புடையது.. மனிதன்   காப்பாற்றும் இயல்புடையவன் என்ற ஜென் கதை நினைவுக்கு வருவதை  தடுக்க முடியவில்லை.

இரண்டு நாளைக்கு ஒரு முறை  பிரஷ் செய்ததும் பீத்த நீரை எடுப்பது என் வழக்கம்.....பாத்ரூம் கதவி சாத்திக்கொண்டு  வாயில் இருக்கும் கோழையையும் பித்த நீரையும் எடுக்க கையை உள் நாக்கில் பட்டதும்    வாந்தி வருவது போல பெரிய சத்தம் எழுப்புவேன்...

யாழினி  ஒடி வந்து பாத்ரூம் கதவை தட்டி அப்பா.. அப்பா .. என்னாச்சிப்பா...???? என்று அலறுவாள்.... சின்ன சத்தத்துக்கே குழந்தை கலவரமாகின்றது..

நினைவு தெரிந்து அவள்  மீது பாசத்தை பொழிந்த தந்தை... அவள் தேவைகளை  முகம் கோணாமல் நிறைவேற்றிய தந்தை , இரண்டு நாளைக்கு மூன் விருது அறிவிக்கப்பட்ட கம்பீரமான தந்தை... ஒரு நொடியில்  சவப்பெட்டியின் உள்ளே  எதிரில் இருந்தால்....?

வேலைக்கு செல்லும் முன் வெடித்து அழும் குழந்தையிடம் என்ன பேசி விட்டு  சென்று இருப்பார்.... எம் என் ராய் ?????

எப்போது  அந்த புகைப்படத்தை பார்த்தாலும் கேள்விகள் துரத்துகின்றன....


ஜாக்கிசேகர்
18/02/2014




நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

6 comments:

  1. பார்க்கவே பாவமாக இருக்கிறது!

    மலர்

    ReplyDelete
  2. American sniper movie is a nice portrait about the life of a soldier. Must watch movie for youngsters. s

    ReplyDelete
  3. இந்த இரண்டு செய்திகளையுமே நான் படித்தேன். உங்கள் ஓப்பீடு மிகச்சரி.
    தந்தையை இழந்த ஒரு மகளின் அழுகை மனகை என்னவோ செய்கிறது

    ReplyDelete
  4. ஆம் ! இப்படம் வேதனையையும், என் நாடு, உறவுகளையும் ஞாபகப்படுத்துகிறது.கதறும் எத்தனை படங்கள், காணொளிகள், உறவுகளில் தொலைபேசி உரையாடல்கள், கடிதங்கள்... எதைச் சொல்லது, எதை விடுவது..
    இந்தப் பெண்ணுக்கு அப்பா மாத்திரம் இல்லை. நம் நாட்டில் பலருக்கு ஏதும் இல்லை.
    விதியே என வாழப்பழகிவிட்டோம்.

    ReplyDelete
  5. இது என்ன மாதிரி டிசைன் மயிருன்னே தெரியலை... எங்க அம்மா நிறைய நல்லது செய்தா புண்ணியவதி...... வலியோட சின்ன வயசுல போய் சேர்ந்தா... பெரிய சந்தோஷத்தை எல்லாம் அவள் அனுபவிக்கவேயில்லை..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner