Meaghamann-2014- மீகாமன் திரைவிமர்சனம்.




தடையறதாக்க மகிழ்திருமேனியின் இரண்டாவது  திரைப்படம் முதல் படம் முன் தினம் பார்த்தேனே..  செவன்த் சேனலுக்காக செய்த படம்… பத்தோடு பதினொன்றாக போய் விட்டது..

மகிழ் செல்வராகவன், மற்றும் கவுதமிடம் அசிஸ்டென்டாக இருந்தவர்… அதனால் தனது இரண்டாவது திரைப்படமான தடையற தாக்க திரைப்படத்தை  ஆக்ஷன் மூலம் பூசி கொடுத்தார்… இதில் பெரிய விஷயம் என்னவென்றால் அருன் விஜய் போன்ற  பிரேக்  இல்லாத நடிகரை வைத்து தன்னம்பிக்கையோடு  ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை கொடுக்க செம தில் வேண்டும்… தடையறதாக்க மகிழ் பெயரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த திரைப்படம் என்றே சொல்ல  வேண்டும்…


 அடுத்து ஆர்யாவுக்கு  கதை சொல்லி ஓகே வாங்கிய  மகிழ் மீகாமன் என்று பெயர் வைக்க  தலைப்பே தாறுமாறாகி மீகாமன்   என்றால் என்ன என்று தமிழ் அகராதியில் தேடதொடங்கினான் தமிழ் திரைப்பட ரசிகன்… மீகாமன் என்றால்  மாலுமி என்று பொருள்…


கவுதம் அசிஸ்டென்ட் என்பதால் அவர் இயக்கிய மூன்று திரைப்படங்கள்  எல்லா டைட்டிலிலுமே தமிழ் புகுந்து விளையாடும் தலைப்புகள்.. அதற்க ஒரு ஸ்பெஷல் பொக்கே மகிழுக்கு கொடுத்து விடுவோம்.

சரி மீகாமன் என்றால் என்ன..?? மாலுமி... கேப்டன் ஆப் த ஷிப்.... இரண்டு போலிஸ் துறை மற்றும் போதை மருந்து கடத்தல் இரண்டு பக்கமும் இருக்கும்  கேப்டன்  அப் த ஷிப்புகளுக்கு நடக்கும் விறு விறுப்பான  விளையாட்டே இந்த திரைப்படம்.


தன் குருநாதர் காக்க காக்க திரைப்படம் போல ஒரு திரைப்படம் செய்ய வேண்டும் என்று மகிழ் நினைத்து இருக்கலாம் அதன் வெளிப்படாடாய் மீகாமன் என்பது என் அபிப்பராயம்.
அப்படியான அட்டகாசமான ஸ்டைலிஷ் மேக்கிங்… ஆவ்சம்…
சரி மீகாமன் கதை என்னவென்று பார்த்துவிடலாம்..

 படம் கோவாவில் நடக்கின்றது… உங்களுடைய மரமண்டைக்கு புரிய வேண்டும் என்பதால் கதாபாத்திரங்கள் தமிழில் பேசுவதாக சித்தரித்து இருக்கின்றோம் என்று  நச் என்று  முதல் டைட்டிலில் நம்மை நிமிர்ந்து அட போட வைக்கின்றார்கள்.

கோவாவில் போதை மருந்து கடத்தல்   வெகு சாதாரணம்… வருடத்துக்கு 500 கோடிருபாய் பணம் புழங்கும் இடம். ஜோதி என்ற டாக் போதை மருந்து கூட்ட தலைவன்… ஆனால் இதுவரை அவன் யார் என்று யாருக்குமே தெரியாது. அதுதான் அவன் பலம்… இரக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவன்…. அவனை பிடிக்க அவன்  கூட்டத்தில் ஊடுருவும் போலிஸ் ஆபிசர்  ஆர்யா என்கின்ற அருள் சிவாவாக மாறி அந்த கூட்டத்தில் புகுந்து குற்றவாளியை கைது  செய்தானா இல்லையா? அவன்  என்னவானன் என்பதுததான் படத்தின் மைய சரடு.

படத்தின்சுவாரஸ்யங்களை பார்த்து விடுவோம்...

ஆர்யா எத்தனையோ படம் பண்ணி இருக்கலாம்... ஆனால்  அவருடைய பெஸ்ட் என்று என்னைன்கேட்டால் நான் கடவுள், அவன் இவன்,ராஜாராணி,மீகாமன்.. என்று சொல்ல வேண்டும்.

மீகாமன் ஆர்யா கேரியரில் ரொம்ப ஸ்டைலிஸ் ஆனா திரைப்படம்... முதல்  பதினைந்து நிமிட காட்சிகளில்  டான் ஜோதி கேரக்டர் எப்படி அவன் கேங் எப்படி என்று புட்டு புட்டு வைக்க ஆர்யா என்ன கேரக்டர் என்று சுத்தி சுத்தி கண்ணாமூச்சி ஆடும் காட்சிகள் ரசிப்பின் உச்சம்... முதல்  பதினைந்து நிமிடங்கள் அதாவது ஆர்யா  பிளாக் டஸ்டர் காரில் வந்து அனுபமா குமாரை  காணும் காட்சி வரை அதகளம்...

நிறைய படங்களில்  ஆர்யா விமல் போல எக்ஸ்பிரஷன் காண்பிக்காமல் மண்ணு போல இருப்பார் என்ற குற்றச்சாட்டினை சினிமா ஆட்கள் அவர் மேல் வைப்பதுண்டு... பட்.. இந்த திரைப்படம் அவர் முகம் இருக்கமான அந்த விஷயமே அவருக்கு பிளஸ் ஆகி இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்..

ஜோதி கேரக்டரில் ஆஷூடோஷ் ராணா  மிரட்டி இருக்கார் என்றே சொல்ல வேண்டும்... ஜோதி டானை அறிமுகப்படுத்துவதோடு அவனது குழு அவர்கள் எப்படி என்பதை முதலில் 5 நிமிடத்தில் குழப்பம் இல்லாமல் புரிய வைத்ததே என்னை பொருத்தவரை மிகப்பெரிய சாதனை.

ஹன்ஷிகா... படத்தில் பெரிய ஸ்கோப் இல்லை.. சின்ன சின்ன ரிலிப்க்கு இவர் பயண்பட்டு இருந்தாலும் மாடியில் எக்சைஸ் செய்யும் போது அவர் செய்யும்   சேட்டைகள்... மாடி வீட்டில் இருந்தாலும் எதிர் வீட்டில் இப்படி டான்ஸ் பிராக்டிஸ் செய்யும் பெண் இல்லையே என்று  ஏங்க வைக்கின்றார்... முக்கியமாக காதல்  காமமும் ஒரே  சேர ஹன்ஷிகாவை தாக்க அவள் படும் பாடுகளை மிக அழகாக கவித்துவமாக காட்சி படுத்தபட்டு இருப்பதும்  ஆர்யாவை நினைத்துக்கொண்டு தன் நண்பியின் மேல் கால் வைத்து விரகதாபம் ஊற்று எடுக்கும் போது என்னை கேட்டா? நீ இப்ப கிளம்பறதுதான் நல்லதுன்னு தோணுதுன்னு சொல்லும் கட்டம் அருமை.


காம்பரமைஸ் செய்துக்கொள்ளாமல் கதை சொன்னதற்கே மகிழ்திருமேனிக்கு ஒரு பொக்கேவை நீட்டலாம்...

பல வருஷமா  தண்ணி காட்டிக்கிட்டு வரும் ஜோதி எப்படி இருப்பான்... ?? நம்ம கூட்டத்து புகுந்த போலிஸ் கருப்பு ஆடு யார்...??
ஜோதி கேங்குல இருக்கற பெரிய கேள்வி...? ஹூ ஈஸ் த பிளாக் ஷிப்.. அதே போல  ஆர்யா சைடுல... ஹூ ஈஸ் த பிளாக் ஷிப் இந்த ரெண்டு கேள்வியும்தான் படத்தை படபடப்போட பார்க்க வைக்குது....

 டார்ச்சர் பண்ணி யார் அந்த போலிஸ் கருப்பு ஆடுன்னு  கேட்கும் இடங்கள்  வன்முறையின் உச்சம் என்றாலும் மானே தேனே சொல்லி சொல்லுராஜா என்று கேட்கும் இடம் அதுவல்ல...

ஜோதி இத்தனை கோடி ரூபாய் பணத்தின் மீது வைத்து இருக்கும் ஆசை ஏன்??  பொம்பளை ஆசை.. டிஸ்கோத்தே அது  இது  என்று எதன் மேலும்  ஆசை இல்லை.. ஆனால்   இந்த கேள்வி படம்  நெடுக சுற்றினாலும் ஒரே ஒரு இட்த்தில் ஹார்பரில்  5ரூபாய்  35 பைசா கதையை  சொன்ன விதம்... அது போல ஒட்டு மொத்த ஜோதியின்  வாழ்க்கை வரலாற்றை விவரிக்க... வெல்டன் மகிழ்.


கேமராமேன் சதிஷ்குமார்  நிறைய காட்சிகளில் பின்னி இருக்கின்றார்... அந்த பர்ஸ்ட் சாங்...  ஐடம் சாங் மேங்கிங் அருமை.. அதே போல வில்லன் ஜோதி வரும் காட்சிகளில் லைட்டிங் சான்சே இல்லை...

=========
படத்தின் டிரைலர்..


=====
படக்குழுவினர் விபரம்

Directed by Magizh Thirumeni
Produced by Nemichand Jhabak
V. Hitesh Jhabak
Written by Magizh Thirumeni
Starring Arya
Hansika Motwani
Music by S. Thaman
Cinematography S. R. Sathish Kumar
Edited by N. B. Srikanth
Production
company
Nemichand Jhabak
Release dates 25 Dec 2014
Country India
Language Tamil

=====
பைனல் கிக்.
ஆரம்ப்ம் முதல் இறுதிவரை காம்பரமைஸ் செய்துக்கொள்ளாமல் படம் எடுத்த காரணத்தால் இந்த படம் ரசிக்கும் படியான கிரைம் திரில்லர் என்று தைரியமாக சொல்லலாம்... கிளைமாக்ஸ் ஹன்ஷிகாவுக்கும் கொடுக்கும் அட்வைஸ் பெரிய உதாரணம். அதே போல அதை  தியேட்டரில் படம் பார்த்த  இளைஞர்கள் இரண்டு பேரில் ஒருவன் சொன்னான் .. என்ன மச்சி இப்படி முடிச்சிட்டான்..??? பின்ன அவனுக்கு எவ்வளவு வேலை இருக்கு.. ??? அவன் போய்  அதையெல்லாம் சரிபடுத்த வேண்டாமா? அதை விட்டு விட்டு காதல்  செஞ்சிக்கினு இருப்பானா? என்பதாக  அவன் சொல்லியது... மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.. காரணம்  படம் பார்க்கும் ரசிகனின் மனநிலை இந்த அளவுக்கு மாறி இருக்கின்றது... மற்றது... ஹன்ஷிகாக வழிந்தாலும்  ஆர்யா காதல் வயப்படவில்லை என்பதாலே  படத்தை ரசிக்கும் ரசிகன் ஆர்யாவின் வேலை மீது காதல் கொள்கின்றான்...

ஆப்பரேஷன் முடிஞ்சிடுச்சி என்று சொல்ல இதுக்கு மேல  இந்த ஆப்ரேஷன்ல இருப்பது தற்கொலைக்கு சமம்ன்னு சொல்ல வேற வழி இல்லை மேடம் ஆப்பரேஷன் ஸ்டில் ஆன்.. ஒரு ஆட்டம் ஆடி பார்த்துட வேண்டியதுதான் என்று சொல்லும் காட்சி அருமை..
அதை விட அந்த கிளைமாக்ஸ் எப்படி தப்பிக்க போகின்றான் என்ற பதபதைப்பு..  ஒட்டு மொம்ம படத்தோட பலம்..

அதை விட தப்பித்து ஷூவில் கடல் தண்ணியோடு தமன் பின்னனி இசையோடு ஆர்யா நடந்து வரும் போது கைதட்டலில் தியேட்டர் உள்ளவர்களின் காது  கிழிகின்றது என்றே சொல்ல வேண்டும்..

ஆரம்பத்தில் இருந்தே பிளேடு மேட்டரை அடக்கி வாசித்த விதம் அருமை.

கண்டிப்பாக  பார்க்க வேண்டிய திரைப்படம் மீகாமன்.

=========
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு ஏழு...

=======
மீகாமன் படத்தை பற்றிய வீடியோ விமர்சனம்... வீடியோ பிடித்து இருந்தால் நண்பர்களிடத்தில் அறிமுகப்படுத்துவோம்..
நன்றி.


======
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner