எனது சிறுவயது ரோல் மாடல்.



யாரையாவது   ரோல் மாடலாக வைத்துக்கொண்டு வளர்ச்சி பெறுவது என்பது எல்லோருடைய வாழ்விலும்  நடக்கும் செயல்தான்... அதே போல நாம் யாரை  ரோல்  மாடல்களாக வைத்து இருக்கின்றோம் என்பது அவர்களுக்கே தெரியது என்பதுதான் நிதர்சனம்.



சின்ன வயதில் கடலூர் கூத்தப்பாக்கத்தில்  முழுக்க முழுக்க என் அத்தை வீட்டில்  வளர்ந்தவன் நான்.. காரணம்.. அத்தைக்கு மூன்று ஆண் பிள்ளைகள் அதனாலே அந்த வீட்டில்  நானும் ஒருவனாக வளர்ந்தேன்..

 என்மாமா நாதமுனி வாத்தியார்.... புனிதவளனார் மேல்நிலைபள்ளியில்  ஆசிரியராக இருந்தவர்... அதனாலே நூலகத்தில் இருக்கும் நூல்களை  வீட்டுக்கு எடுத்து வந்து வாசிப்பார்.. அப்படித்தான்   புத்தகம் வாசிக்கும் பழக்கம் உருவானது என்று சொல்ல  வேண்டும். 

 என்   அத்தை மகன் பெரியவன் தாமோதரன் அப்பா போலவே  நிறைய புத்தகங்கள் வாசிக்கு பழக்கம் உடையவன்... எந்த விஷயம் கேட்டாலும் விரல் நுனியில்  வைத்திருப்பவன்... கம்யூட்டர் வருவதற்கு முன்னே எல்லா விபரங்களையும் தன் நினைவு  அடுக்குகளில் சேகரித்து வைத்து இருப்பான்... வளிமண்டலத்தில் இருந்து செந்தூரப்பூவே  பாட்டை யார் பாடியது என்பது வரை எதை பற்றி   கேட்டாலும் அவனிடம் கேட்டு தெளிவு பெறலாம்..

அவனை போல  நிறைய படித்து எந்த விஷயத்தை பற்றி கேட்டாலும் அரைமணி நேரம் பேச வேண்டும் என்று  சின்ன வயதில் இருந்து ஒரு வெறி... என்னை கேட்டால் சின்ன வயதில் நான்  இவன்  அளவுக்கு  விஷய ஞானம் தெரியவேண்டும் என்று   நினைத்து இருக்கின்றேன். 

 நிறைய ஞாபக சக்தி... அதனாலே அவனிடம் எனக்கு மரியாதை கலந்த  ஈர்ப்பு உண்டு..  எவரையும் மன நோகச்செய்து நான் இதுவரை பார்த்ததில்லை... அதனாலே அவனின் மனதை   நிறைய பேர் நோகச்செய்துள்ளார்கள்..

 எவ்வளவு  மனது சஞ்சலம் என்றாலும்  வெளியே காட்டிக்கொள்ளாத மனிதன்..  பாதிரிக்குப்பத்தில் இருந்த ஜெகதாம்பிகா   டென்ட் கொட்டகையில்  நிறைய படங்கள் பார்த்து இருக்கின்றோம்.. ஒன்றாக நிறைய சுத்தி இருக்கின்றோம்...

ஒரு முறை காலையில் கொள்ளி பக்கம் போகும் போது நிரோத் ஒன்று கிழிந்த நிலையில் கடந்தது...இப்போதுதான் கலர் மற்றும் வாசனை பிளேவர்கள் அப்போது வெள்ளைகலர்தான்.... இது என்ன என்று  நான் அவனிடம் கேட்க.... இதுதான் நிரோத் என்று  எனக்கு அறிமுகப்படுத்தியவன் அவன்தான்.. நிரோத் என்றால்.. அது குழந்தை பெறுவதை தடுக்கும் என்று அறிவியல் பூர்வமாய்  விளக்கி சொன்னவன்...

அவன் பண்ணிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு நாளில் மாமா  ஆசிரியர் பணியில் இருக்கும் போதே  உடல்நிலை சரியில்லாமல்  மரித்து போனார்... அதன் பின் திண்டிவனத்தில் டீச்சர் டிரெயினிங் முடித்து... மாமா பணிபுரிந்த அதே கம்பியம்பேட்டை  புனிதவளனார் பள்ளியில் ஆசிரியராக  பணிபுரிந்து... ஒரு  குடும்ப தலைவனாக  தன் குடும்பத்தை காப்பாற்றியவன்..

தனக்கு என ஒரு பைசா எடுத்து வைத்துக்கொண்டது இல்லை... சிகரேட். தண்ணி, எந்த கெட்டபழக்கமும் இல்லை... எனக்கு தெரிந்து எங்கள் சர்கிளில் ஆங்கிலம் பேசியவன் அவன் மட்டும்தான்..

என்னை விட மூன்று வயது அதிகம்...   அதனாலே என்னைவோ என்னை விட அதிக வயதுள்ள  நண்பர்களோடு பழக்கம் இன்று வரை தொடர அவனும் ஒரு காரணம்.. எனெனில் அனுபவம் அவர்களுக்கு அதிகம் அல்லவா?

எல்லாரும் ஒரே பார்வையில் சிந்தித்துக்கொண்டு இருக்கும் போது மூன்றாம் நான்காம் ஐந்தாம் கோணத்தில் லாஜிக்காக சிந்திக்கும் மனிதனவன்.. சிறுவயதில் யோசிப்பும் பார்வைகளையும்  அவனை பார்த்து கற்றுனர்திருக்கின்றேன்.. 

கையெழுத்து மிக அழகாக மணி மணியாக இருக்கும்.

 அவன் தம்பிகளுக்கு என்ன முக்கியத்துவம் கொடுப்பானோ.. அதே முக்கியத்துவம்தான் எனக்கும்... இன்பேக்ட் சைக்கிளில் இருந்து டிவிஎஸ் பிப்ட்டி வரை  அவன் பயண்படுத்திய வாகனங்களை  உரிமையோடு பயண்படுத்தி இருக்கின்றேன்..


அவனுக்கு திருமணம் முடிந்தது....

அண்ணி என்று வாயார மனதார அழைத்தது அவன் மனைவியை மட்டும்தான்...
ஒரே ஒரு பெண் குழந்தை... 

சாமியார் பேட்டை பள்ளியில்  அரசு ஆசிரியர் பணி.. நேரம் முக்கியம் ஒருநாளும் பள்ளிக்கு  லேட்டாக சென்றதில்லை... நேர்மையானவன்...தற்போது தலைமை ஆசிரியர்.

சிறு வயது ரோல் மாடல்... மூன்று வயது பெரியவன் என்றாலும் அண்ணா என்று அழைத்து இல்லை.. எப்போதாவது  வாடா போடா என்று கூப்பிட்டு இருக்கின்றேன்... வா தாமோ...  போ தாமோ என்றுதான் எப்போதும்  அழைத்து இருக்கின்றேன்...

ஒரு அண்ணனாக ஒரு நண்பனாக ஒரு பிலாசபராக  என் வாழ்வின் ரோல்மாட்லாக, என் உறவினராக  இருக்கும் , ஆசிரியர் திரு தாமோதரன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்..

இந்த நாளில் இன்னும் அவர் நினைத்த காரியங்கள் எல்லாம் ஜெயம் பெறவும்...
 அவரை சூழ்ந்த துன்ப நிகழ்வுகள் மார்கழி பனி போல  விலகி  இன்னும் பல சாதனைகளை அவர் பணிபுரியும் ஆசிரியர் துறையில்  சாதிக்க  எல்லாம் வல்ல பரம்பொருளிடம் வேண்டிக்கொள்கின்றேன்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
15/12/2014





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

8 comments:

  1. Very good. Conveying your birthday wishes differently.

    ReplyDelete
  2. அருமை! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை நானும் உங்கள் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  3. #இனிய_பிறந்த_நாள்_வாழ்த்துக்கள், நண்பரே…!!!!

    இறையுணர்வும், அறநெறியும், கல்வி, தனம்,
    தான்யம், இளமை, வலிவு, துணிவு, நன்மக்கட்பேறு
    அறிவிலுயர்ந்தோர் நட்பு, அன்புடமை, அகத்தவம்
    அழகு, புகழ், மனித படிப்புணர்ந்த்தொழுகும் பண்பு,
    பொறையுடைமை எனும் பேறு பதினாறும் பெற்று
    போற்றலுக்கும் தூற்றலுக்கும் வாழ்த்துக்களே கூறி.
    இன்னும் இது போல பல பிறந்த நாள்கள் எந்த வித குறையும்
    இல்லாமல் எல்லா வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துக்கள்..
    இறை அருளும், குரு அருளும் துணைபுரியட்டும்.

    #வாழ்க_வையகம், #வாழ்க_வளமுடன், #நலமுடன்

    ReplyDelete
  4. #இனிய_பிறந்த_நாள்_வாழ்த்துக்கள், நண்பரே…!!!!

    இறையுணர்வும், அறநெறியும், கல்வி, தனம்,
    தான்யம், இளமை, வலிவு, துணிவு, நன்மக்கட்பேறு
    அறிவிலுயர்ந்தோர் நட்பு, அன்புடமை, அகத்தவம்
    அழகு, புகழ், மனித படிப்புணர்ந்த்தொழுகும் பண்பு,
    பொறையுடைமை எனும் பேறு பதினாறும் பெற்று
    போற்றலுக்கும் தூற்றலுக்கும் வாழ்த்துக்களே கூறி.
    இன்னும் இது போல பல பிறந்த நாள்கள் எந்த வித குறையும்
    இல்லாமல் எல்லா வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துக்கள்..
    இறை அருளும், குரு அருளும் துணைபுரியட்டும்.

    #வாழ்க_வையகம், #வாழ்க_வளமுடன், #நலமுடன்

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு.... நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner