சென்னை மவுண்ட்ரோடு மெட்ரோ ரயில் பணிகளால் களையிழந்த காணப்பட்டது என்றே சொல்ல வேண்டும்... முன்பெல்லாம் புத்தாண்டின் போது மவுட் ரோடின் இருபுறமும் மக்கள் நின்றுக்கொண்டு தாராபபூர் டவர் கடிகாரத்தை பார்த்த படி இருப்பார்கள்...
அங்கே 11.40க்கு ஆரம்பிக்கும் உற்சாகம் 11,59 வரும் போது உற்சாக சத்தம் விண்ணை பிளக்கும் 00,00 என்று டிஜிட்டல் கடிகாரம் மாறியதும் உற்சாகம் பெருக்கெடுக்கும்.
ஆனால் தாராபூர் டவர் கடிகாரத்தை ஆப் செய்து வைத்து இருந்தார்கள் ஏன் என்று தெரியவில்லை.
20 வருடத்துக்கு முன் நான் செக்யூரிட்டியாக எல்ஐ சி பில்டிங் எதிரே வேலை பார்த்த சென்டிகோ ஸ்கூட்டர்ஸ், அண்ணலக்ஷ்மி ஓட்டல், அதன் பக்கத்தில் இருந்த பிரமாண்ட அரசமரம் எல்லாவற்றையும் மெட்ரோரயில் கபளிகரம் செய்து விட்டது...
அந்த இடத்தில் இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன...
ஒரு வயதான செக்யூரிட்டி சேரில் உட்கார்ந்து தூக்கத்தையும், கொசுவையும் விரட்டிக்கொண்டு இருந்தார்.
மனைவி குழந்தையோடு அந்த இடத்துக்கு சென்றேன்.... தொள தொள பேண்டும் பொருந்ததாத பூட்ஸ் போட்டுக்கொண்டு கையில் குச்சி வைத்துக்கொண்டு மவுட் ரோட்டினை தட்டிக்கொண்டு தூக்கத்தை விரட்டிக்கொண்டு இருந்தது நினைவுக்கு வந்தது..
2015 புத்தாண்டு பிறந்த அந்த கணத்தில் மனைவி மற்றும் யாழினியோடு 20 வருடத்துக்கு முன் நான் செக்யூரிட்டியாக வேலை பார்த்த இடத்தில் எடுத்துக்கொண்ட இந்த புத்தாண்டின் முதல் செல்பி.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்தகள்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
01/01/2015
==============
அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தின் டிரைலர் ரிவியூவ்... டிரைலரை வைச்சி பார்க்கும் போது குழந்தையோடு இருக்கும் அஜித்தின் பிளாஷ் பேக்கில் திரிஷாவும்...தற்போதைய கதையில் அனுஷ்காவும் வருவாங்கன்னு நினைக்கறேன்...
ஸ்கிரிப்ட்டில் கவுதமோடு இரண்டு ஜாம்பவான்கள் இணைந்த இருக்கின்றார்கள்... அது யார் என்று டிரைலர் ரிவியூவில் பார்த்துக்கொள்ளுங்கள்..
வீடியோ ரிவியூவ் பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள்.. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை ஜாக்கிசினிமாசும் ஜாக்கி டாக்கிசும் தெரிவித்துக்கொள்கின்றது...
நன்றி.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
வாழ்க வளமுடன்.
ReplyDeleteSuper.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா !
ReplyDeleteஎன் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். அனால் என் பதிவுகளை tamilmanam.net பார்க்க முடியவில்லை. எப்படி பார்ப்பது.? my blog thamaraithamizan.blogspot.in.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்க்கையை ரசிக்க வைத்த செல்பி...
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜாக்கி...
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDelete