மாம்பலம் ரயில் விபத்து



சென்ட்ரலில் இருந்து வீடு நோக்கி மாலை ஆறுமணிக்கு வந்துக்கொண்டு இருந்தேன்...

ரங்கராஜபுரம் ரயில்வே பாலத்தை கடக்கும் போது  பாலத்தில் இருந்து  பெரிய கூட்டம்... என்னவென்று எட்டி பார்த்தால் 55 வயது மதிக்க தக்க பெண்மணி ரயில் அடிபட்டு இறந்து  கிடந்தார்...

நிறைய கூட்டம்

108க்கு போன் செய்து  ஆம்புலன்ஸ் வந்து நின்றுக்கொண்டு இருந்தது.

ஒரு பெண் நர்ஸ் மற்றும் இரண்டு கம்பவுன்டர்கள் ஸ்டெச்சரை ரயில்வேடிராக்கில் எடுத்து வர  அந்த பெண்மணியிடம் உயிர் இல்லை அதனால் மார்சுவரி வண்டிக்கு போன் செய்யுங்கள்.. நாங்கள் உயிருக்கு போராடுபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்போம் என்று சொல்லி விட்டு அவர்கள் போய் விட்டார்கள்.

புதியதலைமுறை  மூக்கில் வேர்த்து படம் பிடித்துக்கொண்டு இருந்தது... 

ரயில்வே போலிசார்  இடத்துக்கு வரவே இல்லை.. ஆனால் நம்ம லோக்கல் போலிசார்... வாக்கி டாக்கியில்  தகவல் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்..


55 வயது  மதிக்கதக்க பெண்மணி என்பதால் சுற்றி உள்ள அப்பார்ட்டுமென்டுகளில் குடித்தனம் இருப்பவர்கள் தங்கள் வீட்டு பெண்மணியா என்று பயத்தோடு உடலை பார்த்து விட்டு சென்றார்கள்... இறந்த பெண் பிராமண பெண்மணி போல இருந்தார்...  சிவப்பில் கட்டம் பட்ட  சேலை  கட்டி இருந்தார்....

கணவன் மனைவி  இரண்டு பேர் டிராக்கில் ஓடி  வந்தார்கள்... தங்கள் அம்மாவோ, மாமியாரோ, பெரியம்மாவோ என்று பயந்துடன்   திகிலோடு வர அந்த பெண்மணி பயத்தில் துரத்திலேயே நின்று விட, கணவன் மட்டும் முன்னே வந்து பார்த்து விட்டு இல்லை என்று  சைகையில்  சொல்ல, மனைவி மார்பில் கை வைத்து நிம்மதி பெரு மூச்சு விட்டார்...

அது போன்ற பல குடும்பங்கள் திகில் முகத்துடன் அடையாளம் பார்த்து விட்டு சென்றன... அப்படி பார்தது விட்டு சென்றது பெருங்கொடுமையாக இருந்தது....

ரயில் வரும் போது எல்லாம் கூட்டம் வேடிக்கை பார்க்க வந்தவர்களை எச்சரிக்கை செய்த படி இருந்தது...

 மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து டிராக்கில் நடந்த வந்த போது பீச் பக்கம்   போகும்  மின்சார ரயில் மோதி ரயிலில் சிக்கி இறந்து போனவரை ஓரமாக  கிடத்தி  விட்டு ரயில் சென்றது  என்றும்.,... ரயில் முன் பாய்ந்து விட்டார் என்றும்  வேடிக்கை பார்த்தவர்கள்...வதந்திகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.

பீச் , தாம்பரம்  மார்கத்தில்  17 ரயில் நிலையங்கள் இருக்கின்றது.... மாதத்துக்கு சராசரியாக 15 பேர் ரயிலில் அடிபட்டு இறக்கின்றார்கள்... இதில் செல்போன் பேசியபடி கவனக்குறைவாக இறப்பவர்கள் மிக அதிகம்...

2011 ஆம் வருடம் மட்டும் இந்த  மார்கத்தில் ரயில் அடிபட்டு பலியானவர்கள் எண்ணிக்கை 181  பேர்..

கரி என்ஜின் என்றால் வரும் போதே மிரள வைக்கும்... டீசல் என்ஜின் கூட சத்தத்தில் கொஞ்சம்  சேர்த்தி, ஆனால் மின்சார ரயில்கள் வருவதே தெரியாது.... நல்ல பாம்பு சீறுவது போல புஸ் என்ற சத்தம் பத்தடியில்தான் கேட்கும் .... நன்றாக காது  கேட்பவர்களுக்கே  இதுதான் நிலை.

55 வயது காது கேட்கவில்லையா?-
தற்கொலை முயற்சியா?
 என்ன கனவுகளோ?

பல வருடங்களுக்கு முன் மாம்பலம் ஸ்டேஷனுக்கு குரோம்பேட்டையில் இருந்து  பிராட் கேஜ்  ரயிலில்  வந்தேன்... அப்போது மீட்டர் கேஜ் இருந்தது....ரயில் பிச் நோக்கி கிளம்பியது.... அது போன அடுத்த நொடி ஜாக்கிசான் போல பிராட்கேஜ் டிராக்கில் குதித்தேன். அடுத்த ஒரு ஜம்ப் பிராட்கேஜூக்கு மீட்டர் கேஜூக்கு இடைப்பட்ட பகுதியில் குதித்தேன்... அடுத்த ஜம்ப் மீட்டர் கேஜில் குதித்தேன்....ஸ்டேஷன் அலறியது... அப்போதுதான் டிராக்கை கவனித்தேன்....5 அடியில் தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில் என்னை நோக்கி வந்துகொண்டு இருந்தது.... 


எதை பற்றியும் யோசிக்கவில்லை அடுத்த ஜம்ப் பிளாட்பாரம், அப்புறம் எதை பற்றியும் யோசிக்கவில்லை..  பின்கால் பிடறியில்  பட ஓடி விட்டேன்...காரணம் அட்வைஸ் மற்றும் திட்டி பாடாய் படுத்தி விடுவார்கள் என்பதால்....

இத்தனைக்கும் காது எனக்கு நல்லவே  கேட்கும்...ஆனால் கவனமின்மை....

ரயில் டிராக் என்பது அதிக கவனத்தோடு கடக்கவேண்டிய இடம்..  நிறைய நேரம் பதட்டத்திலேயே விபத்தில் சிக்கி கொண்டவர்கள்தான் ஏராளம்.

மின்சார ரயில்  கடந்து போவது போல,அந்த விபத்து நடந்த  இடத்தை விட்டு வேடிக்கை பார்த்த ரங்காராஜபுர  மக்கள் பாலத்தில் இருந்து  மெல்ல கடந்து போக ஆரம்பித்தார்கள்... கடந்து போன அந்த பெருங்கூட்டத்தில் நானும் ஒருவன்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 


12 comments:

  1. //அப்போதுதான் டிராக்கை கவனித்தேன்....5 அடியில் தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில் என்னை நோக்கி வந்துகொண்டு இருந்தது..

    லூசாப்பா நீ?

    ReplyDelete
  2. ஓர் உயிர் இழப்பு என்பது ஒரு குடும்பத்தையே முடக்கி விடும். வருடத்திற்கு 180 குடும்பங்கள் வேர்வரை பாதிக்கப்படுவதை எண்ணும்போது நெஞ்சு பதை பதைக்கிறது. தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து சுரங்கப் பாதையையோ மேம்பாலத்தையோ அதிகப்படுத்த வேண்டும். தவறு மக்களிடமும் தான் இருக்கிறதது. ரயில்வே கேட்டுகளில் நம்மில் எத்தனை பேர் வண்டியுடன் குனிந்து கடந்து போகிறார்கள். நெருக்கடி மிக்க நமது சாலைகளில் செல்போன் பேசவே கூடாது. எந்தக் கட்டத்திலும் ரயில் பாதையைக் கடக்காமல் மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால் நம் நாட்டில் எத்தனயோ பேர் படி ஏறி மேம்பாலத்தை கடக்க முடியாமல், சுகவீனமாய். என்ன செய்வது உங்களை போலவே நானும் அந்தக் கூட்டத்தில் கடந்து போகின்ற ஒருவனாக தான் இருந்திருக்க முடியும. சிந்திக்க வைக்கும் பதிவு ஜாக்கி. நன்றிகள்.

    ReplyDelete
  3. வருத்தமான விஷயம்

    ReplyDelete
  4. It is not like you should cross railway track carefully. It is like you should not cross railway track.

    There are foot over bridges to use. Use that.

    ReplyDelete
  5. படிக்க படிக்க சோகத்தை விட கோபம் தான் வருகிறது.ரயில் வரும் தடத்தை ஆட்கள் கடக்கிறார்கள்? இப்படி கடப்பது சட்டவிரோதம் என்றாலும் அதை தடுக்க நம் ஆட்களுக்கு தோனவில்லை அல்லது அதை செய்ய மனது இல்லை.என்னடா தேசம் இது!
    ரயில் நிலைய படிகளை வயது முதிந்தவர்கள் எப்படி ஏறுவது / இறங்குவது என்பதை யாராவது இந்த அமைசகத்துக்கு புரியும்படி விளக்கினால் தேவலை.கிட்டத்தட்ட 50 வருடகாலமாக ஒரே Design,எந்தவித முன்னேற்றம் இல்லாமல் இதிலிருந்தே அவர்கள் யோசிக்கும் திறமையை இழந்து பல வருடங்களாகிறது என்பதை காட்டுகிறது.எதை தான் சொல்வது!!

    ReplyDelete
  6. \\கடந்து போன அந்த பெருங்கூட்டத்தில் நானும் ஒருவன்//
    we can do like that only.

    ReplyDelete
  7. சாலையை கடக்கும் போதும்,ரயில் நிலையங்களிலும் நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் ( முடிந்த வரை நம் உயிரை நாம் தான் பாதுகாக்க வேண்டும் )Entertainment gallery

    ReplyDelete
  8. வருத்தமான பகிர்வு...

    இனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. எதிரி புதிரி.... அது ஒரு காலம்....

    ReplyDelete
  10. அருன் எதிர்பில்லாமல் வாழ பழகி விட்டோம் அதுதான் பிரச்சனை...

    ReplyDelete
  11. குமார் சார் இங்க மட்டும் அல்ல இந்தியா புல்லா பிரிட்டிஷ்காரன் கட்டி வச்ச நடைமேடைதான்... என்ன செய்ய...?இவனுங்க ஒருதுரும்பையும் கிள்ளி போட்டதில்லை.

    ReplyDelete
  12. உங்களை சுற்றி நடக்கும் எத்தனை நிகழ்வுகளை கூர்ந்து நோக்கும் நீங்களா இப்படி? இதில் அரசாங்கத்தை சொல்லி என்ன பயன்? ரயில் தண்டவாளத்தை தாண்டி நடக்காதே என்று கரடியாய் கத்தினாலும் நம்மவர்ற்கு கேட்பதில்லையே நடப்பது நடக்கட்டும் எதிர்பாராமல் நடந்தால் விபத்து எதிர்த்து நடந்தால்?---- போகிறபோக்கில் பதிவிட உங்களுக்கு ஒரு மேட்டர் சரியா? விழிப்புணர்வு பதிவை இடவில்லை அதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன் பல பதிவுகளில் அதை படித்திருக்கிறேன்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner