அழுகை





அழுகை பெண்களுக்கானது... 
ஆண் அழவே கூடாது.... கம்பீரம் புருசலட்சனம்...

ஒரு ஆண்   என்றால் எப்போதும்  அழாமல் கம்பீரமாக இருக்கவேண்டும் என்று காலம் காலமாக ஆண்களுக்கு சொல்லப்பட்டு வருகின்றது... அல்லது அப்படி சொல்லப்படுவதை  கேட்கப்பட்டே வளர்ந்து வருகின்றோம்...

சிறு வயதில்  எதுக்கெடுத்தாலும் அழுகைதான்... அதிக பட்சம் அடி பட்டு நிறைய முறை வலிதாங்கமல் அழுத கணங்கள் ஏராளம் ,என்  பலப்பம் எடுத்துக்கிட்டான்... என் சிலேட்டை உடைச்சிட்டான், என் பாலகோவாவை  என்கிட்ட இருந்து புடுங்கி தின்னுட்டான் என்று புகார்களோடு கண்ணீர் வெள்ளத்தையும்  சேர்த்தேதான் நாம் வாழ்ந்து கரைத்து இருக்கின்றோம்.


  அப்படியே சிறுவயதில் நம்மையறியாமல் துயரத்தின் பால் அழ நோர்ந்தால் நம் உடன் படிக்கும்  குட்டி குசுமான்கன்  அழகையுனுடே  ஏதாவது செய்து, ஜோக் அடித்து  அழுத புள்ளை சிரிக்குதாம் கழுத பாலை குடிக்குதாம் என்று பாடி வெறிப்பேற்றுவார்கள்....


அம்மா  அப்பா சொல் பேச்சு  கேட்காமல்   திருட்டுதனமாக விளையாடுவது, கோலி குண்டு விளையாடி அம்மாவிடம் உதைவாங்குவது என்று  உதை விழும் கணத்தின் பொருட்டு அழுகைகள் நீட்டி முழங்கி இருக்கலாம்.


டுரிங் தியேட்டர்களில் பாலும்பழமும், துலாபாரம், கர்ணம் பார்த்து விட்டு அம்மா அழுவதை பார்துது விட்டு நாமும் நிறைய முறை அழுது இருக்கின்றோம்...

 சிறுவயதில் ஆணும் பெண்ணும் அழுவதை யாரும் சீரியாசாக  எடுத்துக்கொள்வதில்லை... ஆனால்  பதின்மவயதை கடந்த ஆணின் உதட்டுக்கு மேலே கம்பளிபூச்சி  மீசை வளர்ச்சி காணும் போது, ஒரு ஆண் அழுவது என்பது நகைப்புக்குறியதாகவும்,தகுதியற்ற ஆணாகவும் உருவகபடுத்தபடுகின்றான்.


பதின்ம வயதை கடக்கும் போது மரியாதை, ஏமாற்றம் , கழிவிரக்கம் போன்ற கட்டங்களை ஒரு ஆண் எதிர்கொள்கையில் அழுகை அத்தி பூத்தது போல எப்போதாவது நேர்கின்றது.
 இவன் வயசுல இருக்கறது எல்லாம் ஆசாரி  வேலைக்கும் நகைகடைன்னு வேலை செஞ்சி செட்டில் ஆகுது... இது என்ன பண்ண போவுதுன்னு தெரியலை என்று அப்பா திட்டும் போது  லேசாக கண்ணீர் எட்டிப்பார்த்து இருக்கின்றது.


ஏன்டா இப்பதான் வீட்டை கழுவி விட்டேன்... அதுக்குள்ள உள்ள  நடந்து  நாஸ்த்தி பண்ணிட்டே,  காலையில எழுந்ததுமே என் வீட்டுக்கு வரனுமா? என்று என்  அத்தை திட்ட பொசுக்குன்னு கண்ணீர்...


தாத்தா பாட்டி இறந்த போது அழுத சின்ன சின்ன அழுகைகள்...

மாமா இறந்த போது என் மாமா பையன் தாமோதரன் , ஜாக்கி நம்மளை எல்லாம் விட்டு விட்டு மாமா போயிட்டாருடா ....என்று கதறியது போது நானும் கதறினேன்.

காலில் டிவிஎஸ்பிப்ட்டி  ஸ்டேன்ட் கிழித்து  தையல் போட்ட போது கண்கலங்கி இருக்கின்றேன்.

வெவ்வேறு கால கட்டங்களில் என்னிடம் காதலை  சொன்ன நான்கு  காதலிகளை என் குடும்ப சூழல் காரணமாக   ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த போது  வந்த கட்டுப்படுத்த முடியாத அழுகை.

 பாண்டி  நெஞ்சக நோய் மருத்துவமணைக்கு கையில் காசு இல்லாமல் சைக்கிளில் அழுத்து போக அம்மா என்னிடம் சைக்கிள் ஓட்டறது கஷ்ட்டமா இருக்கா என்று  கேட்க , அம்மாவிடம் எறிந்து விழுந்து விட்டு தனிமையில் மருத்துவமணை யூக்கிலிப்டஸ் மரத்துக்கு கீழே நின்று குலுங்கி அழுத அழுகை.


அம்மா ரொம்ப மோசமா இருக்கா நான் கள்ளக்குறிச்சிவரை டயர் எடுக்க போறேன்,... நீ அம்மாவை  போய் பார்த்துக்கோ என்று மாமமரத்துக்கு கீழ் நின்று அப்பா  அழுத அழுகை.

ஹலோ இருப்புக்கடை செல்வராசா?

நான் ஜாக்கி..... பாண்டியில் இருந்து பேசறேன்.

டேய் ஜாக்கி பாடி இங்க வந்துடுச்சி சீக்கிரம் கடலூர் வா....

சிலமணிநேரம் முன் ஜெயா, ஜாக்கி அம்மா என்று அழைக்கப்பட்ட அம்மா ....இறந்த உடனே பாடியாக  பெயர் மாற்றம் கண்ட அந்த வார்த்தை கொடுத்த வலியில் எஸ்டிடி பூத் வாசலில் ஓ ராமா என்று சுற்றம் பார்க்காமல் பெருங்குரல் எடுத்து அழுத அழுகை.


 இரண்டு நாட்கள் என் மீது  அம்மா உடலை பார்த்து  துக்கம் விசாரித்தவர்கள்  பெருங்குரலேடுத்து  அழுத போதும், நான் கலங்காமல் நின்றேன்...ஆனால் குழியில் அம்மாவை கிடத்தி..... முகம் பார்க்கறவங்க கடைசியா முகம் பார்க்கலாம், என்ற போது கூட் வராத அழுகை முதல்  மம்முட்டி மண்  மஞ்சள் பூசிய அம்மாவின் சலனமற்ற முகத்தின்  மீது  சொத் என்று விழ, அதுவரை கட்டுபடுத்தி வைத்து இருந்த அழுகை பீரிட்டு கெடிலம் நதிக்கரை திரும்பி பார்க்கும் அளவுக்கு கதறிய அழுகை.

என் வீட்டில் உட்கார்ந்து என் தங்கைகளோடு பேசிக்கொண்டு இருக்கும் போது ஏதோ திடிர் என்று  அம்மா நியாபகம் வர திடிர் என்ற கண் கலங்கி இருக்கின்றேன்.


 ஹார்ட் அட்டாக்கில் இறந்து போன என்  மாமானாரை பார்த்து என் மனைவி கதற அவளை பார்த்து நானும் அழுது இருக்கின்றேன்...

நெகிழ்ச்சியான உலகபடங்கள் பார்க்கும் போது கண்கள் கலங்கி விடும்.

யாழினி வயிற்றில் வைத்துக்கொண்டு மனைவி  பிரசவ வலியில் துடிக்க, லேபர் வார்ட்டில் யாரும் இல்லை  நீங்க அவுங்க புருஷன்தானே? நீங்க கூட சப்போர்ட்டுக்கு இருங்க, என்று சொல்ல மனைவி  பிரசவ வலிதாங்காமல் கதறிக்கொண்டு இருக்க, நான் செய்வதறியாது அவள் கரம் பற்றி  நானும் கதறினேன் ....அவளுக்கு மட்டும் வலி கொடுத்து விட்டாயே இறைவா என்று...


எப்போது  சிவாஜி நடித்த தெய்வமகன் பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்கும்...

 உங்களை அப்பான்னு ஒரு முறை கூப்பிடலாமா?

 என் பேர் கண்ணன் ... நீங்க சொல்லி தெரிஞ்சிக்க வேண்டிய என் பேரை நான் சொல்லி தெரிஞ்சிக்கற ஒரு கொடுமையான சூழல் போன்ற டயலாக்குகள் கண்களை கலங்க வைத்து விடுகின்றது...

மகாநதி எப்போது பார்த்தாலும் கண்ணீர் கேரன்ட்டி.  செல்வராகவனின் மயக்கம் என்ன திரைப்படமும் அதில் வரும் பிறைதேடும் நிலவிலே பாட்டினை  எப்போதும் கேட்டாலும் பார்த்தாலும்   கண்ணீர் ஊற்றை தட்டி விடும் திரைப்படம்அது..

சமீபத்தில்  சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர் வந்த படம்..... நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்...

நேற்று சென்னை  கீழ் கட்டளை மயான பூமியில் மணிஜி மனைவியின் உடல் தகனம் நடந்தது... கடைசியா ஐயோ என்று பெருங்குரலை  அவர் மகள்  எழுப்ப, சகலமும் உடைந்து ஒரு பெரும் அழுகை, கட்டுப்படுத்தி வெளியே வந்தால் கே ஆர் பி செந்தில் தோள் சாய அது  இன்னும் பீரிட்டு வெடித்து  கிளம்பியது.

மணிஜி மனைவியை இரண்டு முறை பார்த்து இருக்கின்றேன்...  ஒரு முறை வணக்கம் கூறி இருக்கின்றேன்.

ஏன் அப்படி ஒரு அழுகை தெரியவில்லை...

ஆனால் அழுது  முடித்த போது மனம் தியானத்துக்கு பின்னான அமைதியோடு இருந்தது. என்னவோ பெனாயில் போட்டு மனதை தகுழுவி தொடைச்சது போல பளிச் என்று இருந்தது....  கடந்து மூன்று மாதங்களாக இருந்த மனசோர்வு அந்த  அழுகையின் கண்ணீரோடு கரைந்து போனது போல லேசாய் மாறிப்போனது.

 சிறு வயதில் துக்க வீடுகளில் அம்மாவோ ,ஆயாவோ,  அத்தைகளோ, சம்பந்தமே இல்லாமல் எப்படி காலையில் இருந்து இறுதி  ஊர்வலம் கிளம்பும் வரை  அழுது மூக்கு சளி சிந்தி புடவை முந்தியில்  துடைச்ச படி, எப்படி தொடர்ந்து  அழ முடிகின்றது என்ற கேள்வி என்னுள் எழும்...

பிரிந்து போனவருக்காக 10 பர்சன்ட் அழுதால் தன் செர்ந்த வாழ்க்கை துயரங்களை துக்க வீடுகளின்  போர்வையில் அழுது தீர்த்து இருக்கின்றார்கள் என்பது  இப்போது புரிகின்றது.

எவன் சொன்னது அழுகை பெண்களுக்கானது மட்டும் என்று??

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

31 comments:

  1. அழுகை என்பது இயலாமையின் , புரியாமையின் , வலியின் , வேதனையின்,அன்பின் என பல வேறு உணர்ச்சிகளின் மொழி

    வாருங்கள் வந்து இணையுங்கள் நாடி கவிதையில்

    ReplyDelete
  2. I believe crying is human. No gender bias. It's an emotional outburst that should better not be controlled. There is no need to be ashamed about it. Crying is a laudable quality in a man or a woman - more so, when we are moved by the plight of someone else. We are part of the human race and crying not only conveys our heartfelt sympathy to the other person but also helps to lighten our heavy feelings. Many a times, we may not cry loudly, but are touched and moved by, for instance, even reading some of your writings - including this blog.

    ReplyDelete
  3. I believe crying is human. No gender bias. It's an emotional outburst that should better not be controlled. There is no need to be ashamed about it. Crying is a laudable quality in a man or a woman - more so, when we are moved by the plight of someone else. We are part of the human race and crying not only conveys our heartfelt sympathy to the other person but also helps to lighten our heavy feelings. Many a times, we may not cry loudly, but are touched and moved by, for instance, even reading some of your writings - including this blog.

    ReplyDelete
  4. Two drops of tears were about to roll out in my cheeks, while reading your various sorrowful incidents, but I controlled it with bit difficulty because now I am in my office.

    ReplyDelete
  5. நீங்கள் சொன்னது போல் அழுகை என்பது மனதை கழுவி விடப்படும் தண்ணீர் என்று தான் நானும் உணர்கிறேன் அழுகை என்பது சில நேரம் மிக பெரிய விடுதலை உணரவும் கூட

    ReplyDelete
  6. மிக நல்ல பகிர்வு,, ஏன் நான் கூட சில நேரங்களில் என்ன சில, பல நேரங்களில் அழுது இருக்கிறேன்... எவன் சொன்னது அழுகை பெண்களுக்கானது மட்டும் என்று?? கலங்கிய கண்களுடன்.... பிரபு

    ReplyDelete
  7. neenga "Form"ku vanduteenga thala.... inimae jackiesekar blog pattaya kelapapogudhu "world movies"oda......

    ReplyDelete
  8. neenga "Form"ku vanduteenga thala.... inimae jackiesekar blog pattaya kelapapogudhu "world movies"oda......

    ReplyDelete
  9. உண்மையான அன்பிருந்தால் ஆண்களுக்கும் கண்ணீர் வரும்.அதீத அன்பின் வெளிப்பாடே அது.

    ReplyDelete
  10. ஆண்களுக்கும் கண்ணீர் வரும்.அதீத அன்பின் வெளிப்பாடே அது.

    ReplyDelete
  11. Super sir.... Na enoda appa azhudhu parthadhe ila. Enga patti deathku appa azhudhadha na marakave maten. Adhe pola appavoda deathla na azhudhadhai en lifetimela marakaten. Ini andha mathiri oru situation enaku vandhudave kudadhunu pray panran.

    ReplyDelete
  12. அழுகை அற்புதமான மருந்தும் கூட
    சோகங்களைக் கழுவிடும்.
    சிலருக்கு அது ஆயுதமாகிவிடுவதுண்டு.

    ReplyDelete
  13. கானம் அழுவது இசை எனும் போது ! கவிஞன் நான் அழுதால் கவிதை ஆகாதோ ! என்ற கண்ணதாசன் வரிகள் ஞாபகம் வருகிறது! நான் கூட அழுதிருக்கிறேன் ! என் தங்கை இறந்த பின் அவள் முகம் பார்த்து, அவள் பெற்ற அழகான இரு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து மேலும் தாங்கள் குறிப்பிட்ட அததனை படங்களையும் சொல்ல மறந்த கதையில் சேரனை நானாக பாவித்து இன்னும் எத்தனையோ சந்தர்ப்பத்தில் ! யார் சொன்னது ஆண் மகன் அழக் கூடாதென்று? ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றெல்லா ரும் செத்தாருள் வைக்கப்படும் என்றானே வள்ளுவப் பெருந்தகை !! என்னை பொறுத்தவரை அழுகை என்பது மெல்லிய இதயம் படைத்த ஒவ்வொருவருக்கும் சொந்தமானது !!

    ReplyDelete
  14. anna,Last one or two month i saw only few article inyour blog.sudennly you wrote 3 article within couple of days gap. I felt you come out of your financial issue compeletely or partly. It is confirmed after your article.may the soul rest in peace... "Time will heal all the wounds" na...

    ReplyDelete
  15. அழுகை என்பது இயலாமையின் , புரியாமையின் , வலியின் , வேதனையின்,அன்பின் என பல வேறு உணர்ச்சிகளின் மொழி //


    நீங்கள் சொல்வது உண்மைதான் மணி.....

    ReplyDelete
  16. மவுலிசார் பொதுபுத்தியில் படிந்து இருக்கும் கருத்தை சொன்னேன் நீங்கள் சொல்வது உண்மைதான்.

    ReplyDelete
  17. Two drops of tears were about to roll out in my cheeks, while reading your various sorrowful incidents, but I controlled it with bit difficulty because now I am in my office.//
    மோகன் சார் ரிலாக்ஸ்..... பிசியா இருந்தேன்... அதான் போன் எடுக்க முடியலை..

    ReplyDelete
  18. நீங்கள் சொன்னது போல் அழுகை என்பது மனதை கழுவி விடப்படும் தண்ணீர் என்று தான் நானும் உணர்கிறேன் அழுகை என்பது சில நேரம் மிக பெரிய விடுதலை உணரவும் கூட// நன்றி பூவிழி

    ReplyDelete
  19. neenga "Form"ku vanduteenga thala.... inimae jackiesekar blog pattaya kelapapogudhu "world movies"oda......// சிவா உன்னோட கணிப்புக்கும் சந்தோஷத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  20. பிரபு, ரிவ்தியோனா, அசோகர் கலியபெருமாள் அனைவர் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  21. அழுகை அற்புதமான மருந்தும் கூட
    சோகங்களைக் கழுவிடும்.
    சிலருக்கு அது ஆயுதமாகிவிடுவதுண்டு.// முரளிதரன் சார் நச்.

    ReplyDelete
  22. Super sir.... Na enoda appa azhudhu parthadhe ila. Enga patti deathku appa azhudhadha na marakave maten. Adhe pola appavoda deathla na azhudhadhai en lifetimela marakaten. Ini andha mathiri oru situation enaku vandhudave kudadhunu pray panran.//
    உண்மைதான் சீதா... சிலர் பிம்பங்கள் உடையும் இடம் துக்க வீடுகளில்தான்.

    ReplyDelete
  23. ராஜவேலு... தங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  24. anna,Last one or two month i saw only few article inyour blog.sudennly you wrote 3 article within couple of days gap. I felt you come out of your financial issue compeletely or partly. It is confirmed after your article.may the soul rest in peace... "Time will heal all the wounds" na...//

    நன்றி தம்பி பாலமுருகன்... உங்களை போன்ற நிறைய தம்பிகளை பெற்று இருக்கின்றேன் என்பதில் எனக்கு கர்வமே உண்டு... பார்ட்லி வெளிய வந்து இருக்கேன்.

    ReplyDelete
  25. பகிர்தலுக்கும், புரிதலுக்கும் நன்றி ஜாக்கி !!

    ReplyDelete
  26. எவன் சொன்னது அழுகை பெண்களுக்கானது என்று-உண்மை அது அன்பை தருகிற எல்லாருக்கும் உரிமையானது.பெண்ணை கல்யாணகோலத்தில் பார்க்கும் அப்பா,பிரசவித்த மனைவியையும் குழந்தையும் பார்க்கும் கணவன் மகன் படித்து வேலைகிடைத்ததும் அப்பா மரணபடுக்கையில் தான் பெற்ற மக்களை பார்க்கும் முதியவர் இதுபோன்ற கண்ணீருக்கும் அர்த்தம் உள்ளது நல்லபதிவு இன்னும் நீங்கள் நிறைய பதிவிடலாம்

    ReplyDelete
  27. Anna..
    How r u..
    What about anni & Yazhini..
    Romba toching article anna.. Eno padikkumpothe azhukai varuthu....

    romba nala neenga neraya ezhutharathillai... analum daily unga blog oruvatti parthuvittu povathu nadakkum.
    15 days urla illa... vandhu partha neraiya ezhuthiyirukkenga..

    unga ezhuthoda special ithuthan.. Neenga ezhuthurathu romba unarvoda,athmarthamaga vesam illama irukkunna.. regulara ezhuthunganna (atleast one post for a week please)

    unga problems ellam oralavu solve ayirichinna... Sariyadum.. kavalapadathenna.. nanum ungalukkaka samikitta vendikiren...

    - Kavitha Saran





    ReplyDelete
  28. எழுதுவது குறைந்து போய் விட்டது...ஆனால் எழுத வேண்டும் என்று எனக்கு உத்வேகத்தை கொடுப்பவர்கள் இப்படியாக எனக்கு கடிதம் எழுதுபவர்கள்தான்....ஒரு நிமிடம் என்னை கலங்க வைத்த கடிதம்... யார் பெற்ற மகளோ, எனக்காய் என் குடும்பத்துக்காய் வேண்டிக்கொள்கின்றேன் என்கின்றாளே... இது போதும் எனக்கு......... இது போதுமே ..............

    நன்றி கவிதா உன் குடும்பத்துக்கு என் அன்பும் கனிவும்.

    Anna..
    How r u..
    What about anni & Yazhini..
    Romba toching article anna.. Eno padikkumpothe azhukai varuthu....

    romba nala neenga neraya ezhutharathillai... analum daily unga blog oruvatti parthuvittu povathu nadakkum.
    15 days urla illa... vandhu partha neraiya ezhuthiyirukkenga..

    unga ezhuthoda special ithuthan.. Neenga ezhuthurathu romba unarvoda,athmarthamaga vesam illama irukkunna.. regulara ezhuthunganna (atleast one post for a week please)

    unga problems ellam oralavu solve ayirichinna... Sariyadum.. kavalapadathenna.. nanum ungalukkaka samikitta vendikiren...

    - Kavitha Saran

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner