விஸ்வரூபம் Dth ரிலீசில் கமலஹாசன் தோற்று விட்டாரா?



டெல்லி பாலியல் செய்திக்கு அப்புறம் தமிழ்நாட்டில் அதிகம் அடிபடுவது விஸ்வரூபம்  பிரச்சனைதான்...


வழக்கம் போல ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டின்னு சொல்றது போல.....கமலை போட்டு காட்டமாக விமர்சித்துக்கொண்டு இருக்கின்றார்கள்...

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
 போன்ற குறள்கள் உதாரணத்துக்கு துணைக்கு அழைத்துக்கொள்ளபடுகின்றன..... 


தோற்று விட்டார் வாய் தான் வழுதாவூர் வரை இருக்கின்றது என்ற விமர்சனங்கள் அவர்  மீது வைக்கப்படுகின்றன...

டிடிஎச்க்கு பணம் கட்டி இருந்தேன்...என் பணம் எங்கே? என்று பைனான்ஸ் கம்பெனி திவால் செய்து விட்டு ஓடும் அளவுக்கு அவரிடம் கட்டியபணத்தை  கேட்கின்றார்கள்....

பிரஸ் மீட்டில் தெளிவாக  சொல்லி விட்டார்... டிடிஎச்சில் பணம் கட்டியவர்களுக்கு ரீபன்ட்  செய்யப்படும்.. அல்லது  அதே பணத்தை திரும்ப ஒளிபரப்பும் போது விருப்பம் இருந்தால் அதே பணத்தில் பார்க்க்கலாம் என்று சொல்லி விட்டார்....

இன்றளவும் நேர்மையாக தொழில் செய்து வருமானவரி கட்டி வரும் ஒரு நடிகர்...வருமானவரி  விளம்பரத்தில் நடித்தும் இருக்கின்றார்... வேறு எந்த உச்ச நடிகரும்  தமிழகத்தில் வருமானவரி விளம்பரத்தில்  நடித்தது இல்லை நண்பர்களே...


அதை விட்டு தள்ளுங்கள்... எயிட்ஸ்  விளம்பரத்தில் தன் முகம் காட்டினாளே அசிங்கம் என்று  நினைத்துக்கொண்டு இருந்தவர்கள் மத்தியில் கமல்  எயிட்ஸ் விளம்பரத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர்...


 சென்னை எக்மோர் மியூசியம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகள்  மருத்துவைமணைக்கு பக்கத்தில் பெரிய எயிட்ஸ் பேனரில் பல காலம் தாடி வைத்த முகத்தோடு காட்சிக்கொடுத்தவர்... தமிழன் தமிழ் என்று அவர் ஒரு போதும் ஜல்லி அடித்தது  இல்லை...
தன் விசிலடிச்சான் குஞ்சுகளை திசை திருப்பி நற்பணி மன்றமாக்கி ரத்ததானம் செய்யவைத்தவர் என்று  சொல்லிக்கொண்டு போகலாம்..


என் பணம் கோவிந்தாவா? என் நேரம் திருடப்பட்டுவிட்டது.. அந்த நேரத்தில் நான் கோடிகளை சம்பாதித்து இருப்பேன்... படத்தை டிடிஎச்சில் ரிலிஸ் செய்கின்றேன் என்று ஏமாற்றி விட்டார்... என்ற ரிதியில் அவர் மீது விமர்சனங்கள் எழுகின்றன...


கிரிக்கெட் பார்க்க பணம் கட்டுகின்றீர்கள்... மழை பெய்கின்றது... ஆட்டம் ரத்து என்றால்  என்ன  செய்வீர்கள்... படம் ஓடிக்கொண்டு இருக்கின்றது.. டெக்னிக்ல் எரர்.. நாளை இதே காட்சிக்கு வந்து படத்தை பாருங்கள் அல்லத பணத்தை திருப்பி தருகின்றோம் என்று சொல்லுவார்கள்.... அதை  கேட்டுக்கொண்டு வந்து இருக்கின்றோம்....


இரண்டு மணி நேர மின்வெட்டை  அறவே ஒழித்து விடுவோம் என்று சூளுரைத்து  விட்டு ஆட்சிக்கு வந்து  பதினெட்டு மணி நேரம் கரண்ட் இல்லை என்பதற்கு எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை...

டிடிஎச்சில் கட்டிய  பணத்தை திருப்பி தருகின்றேன் என்று சொல்லி விட்டார்கள்.. ஆனாலும் எங்கே என் பணம் என்ற ரீதியில் ஒரு கடிதம் கமலை நோக்கி வீசப்பட்டு இருக்கின்றது.. டிடிஎச்சில ரிலிஸ் பண்ணறேன்னு சொல்லிட்டு இப்படி பேக் அடிச்சிட்டேளே? என் பொண்ணு ஆர்வமா படம் பார்க்க இருந்தா  அதுக்கு என்ன பதில் ?என்று ஒரு தகப்பன் பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு கடித்ம் எழுதி இருக்கின்றார்...அந்த  பிரபல ஆங்கில  இதழில்  செய்தியாக வெளி வந்து இருக்கின்றது.... நான் முன்பே சொன்னது போல ... N என்பவர் அமெரிக்காவில் இருந்து  விளாவரியாக அவருக்கு மொத்தமாக  பதில் சொல்லி இருக்கின்றார்..


This article is silly, cheap and stinks of motivated propaganda by the detractors of Kamal Haasan.

 People buy tickets to watch live cricket match and then unfortunately it rains. What happens?

 Tourist visit a museum and it turns out tha the museum is closed due to some reason. What happens?

 You book a flight to Delhi and the flight is delayed or cancelled due to some reason? What happens?

 One can keep listing such examples.

 Now to respond to the writer's really dumb question...

 Mr. Kamal haasan will not help you to get your money back. If you had the sense to contact your DTH operator and seek a refund then the money would have already been returned.

 Those who subscribed to DTH for the first time because of this movie have a choice to cancel and get their money back or wait for the DTH release which could be announced in the next few days.

 As far as your daughter's "disappointment" is concerned, instead of explaining to her the complex business matrix be a good father and explain to her that entertainment is not an essential service. And, tell her that she will get to watch the movie in theaters and DTH in a just a couple more weeks.

 ...and last but not the least, do not worry about Kamal Haasan fans. They are all solidly behind the star as he takes Indian cinema a few steps forward. With any luck he may be able to get a smoother world wide release on theaters and all India release in DTH which he needs to recover his money.

 People like you who have the uncontrollable itch to scribble garbage at the drop of a hat for a movie don't seem to have any qualms about the corruption and real betrayals that politicians and bureaucrats. You belong to the group that is most likely happy to pay the Rs. 500 bribe to the cop who catches you talking on mobile as you drive or when you break the lights rather than paying the full fine. You people find it more important to write an article on Kamal Haasan's Vishwaroopam than about the jawans who were killed and mutilated in the Border.

 In a way thanks for writing. It reveals more about you and your priorities in life!
===============

நன்றி திரு. என்.


 பொதுவான கமல் டிடிஎச்சில் ரிலிஸ் செய்ய ஒரே காரணம்...  சேட்டிலைட் டீவி மற்றும் தியேட்டர்  டிக்கெட் விலையேற்றத்துக்கு பிறகு திரைப்பட ரசிகர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து இருக்கின்றார்கள்...


தியேட்டரில் போய் படத்தை பார்க்கும் குரூப்..ஒரு மாதம் கழித்து டிவியிலோ அல்லது  கள்ள டிவிடியிலோ படம் பார்க்கும் குரூப் என்று பிரிந்த கிடக்கின்றார்கள்..  இதில் தியேட்டருக்கு வராத மக்களிடம் தன் படத்தை கொண்டு போய் சேர்ப்பது அந்த பணத்தை அவர்களிடம் இருந்து பெறுவதுமே திட்டம்...


ஆனால் தியேட்டர்காரார்கள் ஒத்துழைப்பு இருந்து இருந்தால் இந்த பிரச்சனை வந்து இருக்காது.. இந்த படம் டிடிஎச்சில் பரிச்சார்த்த முயற்சியாக இருந்து இருக்கும் லாபம் வந்தாலும் நஷ்டம்  வந்தாலும் இது ஒரு முயற்சி... இது சக்சஸ் ஆகும் பட்சத்தில் தமிழ்சினிமா வளம் பெறும் என்பது மட்டும் தின்னம்.


இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும்.


தியேட்டரில் படம் ரிலிஸ் ஆகி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.... கடைசி நேரத்தில் தியேட்டர் கிடைக்காமல் போனது ஒர காரணம்... கமல் ரசிகர்கள் அத்தனை பேரும் டிடிஎச் வைத்து இருக்கவில்லை...500 தியேட்டரில் 200 தியேட்டரில் ரிலிஸ் செய்தால் சாமன்ய ரசிகன் படம் பார்க்க முடியாமல் போய் விடுவான்  என்று  சொன்ன போது.... அதை கமலை  ஆட்டி பார்த்த்து என்று சொல்லுகின்றார்கள்...


யாருக்காக படம் எடுக்கின்றோம்  எல்லோருக்கும்தான்...ஆனால் தியேட்டரில் ரிலிஸ் ஆகாமல் போனால் அவன் வெறுத்து போய் விடுவான்... அவன் சந்தோஷம் முக்கியம் என்பதாலும், பெரிய பெரிய இடங்களில்  இருந்து  வந்த ஆலோசனைகள் படியும் தியேட்டர் அதிபர்களும் திரும்ப பேச்சுவார்த்தைக்கு வந்த காரணத்தாலும் அவர் சவுகர்யத்துக்கு வரும் 25 ஆம் தேதி மாற்றி இருக்கின்றார்.... காரணம் தியேட்டர் கிடைக்க வேண்டும் அல்லவா?


 அதே போல டிடிஎச்புக்கிங்  பர்சென்ட்டேஜ் எத்தனை என்பதை படம் ஒளிபரப்பாகும் ஒரு மணிநேரத்துக்கு முன்தான் கனிக்க முடியும்....காரணம்  தியேட்டர் 600 சீட் என்று உதாரணத்த்துக்கு வைத்தக்கொள்வோம்... அதுக்கு அடித்து பிடித்துதான் டிக்கெட் புக்கிங் இருக்கும்... ஆனால் வீட்டில் பார்க்கும் போது பொறுமையாக  கடைசி நேரத்தில் அதாவது படம் ஒளிபராப்பாக போகும் ஒரு மணி நேரத்துக்கு முன் பணம் பட்டி பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் அனேகம் பேரிடம் இருக்கின்றது....  காரணம்,... பணம்  ஆயிரம் கட்டி விட்டு ஏதாவது வேலை வந்து விட்டால் ஆயிரம் ரூபாய் வேஸ்ட் என்பதால் பலர்  பொறுமையாகத்தான் பண்ண வேண்டும் என்ற பேசிக்கொண்டு இருந்தார்கள் அதனால்  கடைசி நேரம் வரை புக்கிங் ஆனாதை வைத்துதான் சதவீத்த்தை முடிவு செய்ய வேண்டும்....

அட ஆயிரம் பேர் தான் டிடிஎச்சில் புக் செய்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்... அதுவும் பணம்தானே....


இன்று கமலோடு பயணித்த  நடிகர்கள் மவுனித்து இருக்கின்றார்கள்... கமல் உயிரை பணயம் வைத்து வேட்டையாடி விட்டு வந்தால் கறி விருந்த உண்ண ஒரு பெருங்கூட்டம் காத்து இருக்கின்றது...


வேட்டை தோல்வியில் முடியலாம்.. எல்லா நாளும் முயல்.... வேட்டையில் கிடைத்து விடுவதில்லை.. அப்படி கிடைத்து விட்டால் அது   அடர்ந்த கானகமும் இல்லை .. அது வேட்டையும் இல்லை என்று அர்த்தம்....


சம்திங் இஸ் பெட்டர்தன்  நத்திங் என்று சொல்லுவார்கள்.. எதையுமே செய்யாமல் இருப்பதை விட எதையாவது செய்வது மேல் அல்லவா?

கமல் அதைதான் செய்து இருக்கின்றார்...

ஆயிரம் முறை தோல்விகளை சந்தித்து  பல்பு கண்டு பிடிச்ச எடிசன் சொன்ன  எளிய வாசகம்...999 முறைகளை தோல்விகளாக எடுத்துக்கொள்ளவில்லை... என்ன செய்ய வேண்டும் என்ன செய்யகூடாது என்று கற்றுக்கொள்ள வைத்த 999 படிகள்  அவை என்று சொல்லி இருக்கின்றார்...


டிடிஎச்சில் படம் ஒரு வாரம் கழித்து கூட ரிலிஸ் ஆகலாம்...அல்லது ஆகாமலும் போகலாம்...ஆனால் இந்த சிந்தனை நிச்சயம் வெற்றி பெறும்.. அதுவரை கமல் மீதி தூற்றல்கள் இருந்து கொண்டே இருக்கும்...ஒரு போதும் அவர் அதை பற்றி கவலைகொண்டதே இல்லை.


என் தானை தலைவன் சுஜாதா அன்றே சொல்லி இருக்கின்றார்...







பிரபலங்களை உடனே தாக்குவது சம்பிரதாய சந்தோஷங்களில் ஒன்று...


 இது கமலுக்கும் அதிகம்  பொருந்தும்.


நன்றி குமுதம்..

=================

பிரியங்களுடன் 
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

32 comments:

  1. //பிரபலங்களை உடனே தாக்குவது சம்பிரதாய சந்தோஷங்களில் ஒன்று...


    இது கமலுக்கும் அதிகம் பொருந்தும்.
    //

    Applies to Jackie too.

    ReplyDelete
  2. First time I am with you 100% on every single word.
    rgds-surya

    ReplyDelete
  3. கமலுக்கு சாதகமான வாதங்களில் இது மிகப்பொருத்தமானது திரு N க்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. Ultimately I undersatand one thing. Everything is a publicity stunt. And Viswaroopam got a lot of publicity than even Rajani's Kochadaiyan or RANA or ENTHIRAN.

    ReplyDelete
  5. "என்"னுடைய பதில்(கேள்வி)தான் என்னுதும்....

    ReplyDelete
  6. "இரண்டு மணி நேர மின்வெட்டை அறவே ஒழித்து விடுவோம் என்று சூளுரைத்து விட்டு ஆட்சிக்கு வந்து பதினெட்டு மணி நேரம் கரண்ட் இல்லை " cycle gapla போன ஆட்சில ரெண்டு மணி நேரம் கரண்ட் கட் தான்னு பிட்ட போட்டுடீங்களே தல,,,ஜூப்பரு

    ReplyDelete
  7. cycle gapla போன ஆட்சில ரெண்டு மணி நேரம் கரண்ட் கட் தான்னு பிட்ட போட்டுடீங்களே தல,,,ஜூப்பரு

    ReplyDelete
  8. //கமல் உயிரை பணயம் வைத்து வேட்டையாடி விட்டு வந்தால் கறி விருந்த உண்ண ஒரு பெருங்கூட்டம் காத்து இருக்கின்றது///

    நன்றி ஜாக்கி....

    இதற்கு மேல் தொடை நடுங்கி நடிகர்களை பற்றி தெளிவாக கூறமுடியாது.....

    ReplyDelete
  9. //இன்றளவும் நேர்மையாக தொழில் செய்து வருமானவரி கட்டி வரும் ஒரு நடிகர்...வருமானவரி விளம்பரத்தில் நடித்தும் இருக்கின்றார்... வேறு எந்த உச்ச நடிகரும் தமிழகத்தில் வருமானவரி விளம்பரத்தில் நடித்தது இல்லை//

    வரி போட்டா கருப்பு பணம் அதிகரிக்கும் என்று மிரட்டுரானுங்க.... அவனுங்க எப்படி வரியை முழுவதும் கட்டுவானுங்க???

    ReplyDelete
  10. தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் இருதியி ல் தர்மமே வெல்லும். கமல் நாமம் வாழ்க.

    ReplyDelete
  11. //பிரஸ் மீட்டில் தெளிவாக சொல்லி விட்டார்... டிடிஎச்சில் பணம் கட்டியவர்களுக்கு ரீபன்ட் செய்யப்படும்.. அல்லது அதே பணத்தை திரும்ப ஒளிபரப்பும் போது விருப்பம் இருந்தால் அதே பணத்தில் பார்க்க்கலாம் என்று சொல்லி விட்டார்//
    I got refund to my Account in Dish TV & the same amount used for for dish tv recharge.
    Boopathy - Dubai

    ReplyDelete
  12. i had never been a fan to any fellow.
    but i have become a fan to kamal,thanks to his foresightedness.Hatsoff kamaL.

    ReplyDelete
  13. சக நடிகர்கள் கள்ள மௌனம் சாதிப்பது, அவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்று நன்றாகவே தெரிகிறது. கமலை ஆதரிக்க வேண்டாம், ஆனால் கமலையும், தியேட்டர் காரர்களையும் இணைத்து பேச வைக்கலாம். ஆலோசனை சொல்லலாம், மாற்று வழிகளை கூறலாம். ஆனால் கமல் தோல்வி அடைந்தாலும், வெற்றி அடைந்தாலும் அதை மெளனமாக பார்த்துக் கொண்டு அதில் இருந்து பாடம் கற்று தங்கள் காய்களை நகர்த்திக் கொள்ளலாம் என்று பொத்திக் கொண்டு இருப்பது திரை உலகிற்கே உள்ள நாதாரித்தனம்.

    ReplyDelete
  14. You are absolutely correct. You wrote the way I have thought about the issue. One thing Kamal is not a selfish person. Only he thinks always about tamil cinema industry and tries to move it one step forward in all areas such as technology, business strategy etc..

    ReplyDelete
  15. சூப்பர்டா மச்சி..வரிக்கு வரி...சூப்பர்..

    ReplyDelete
  16. சென்னை தவிர வேறு எங்கும் மல்டிப்ளெக்ஸ் இல்ல, அதாவது ஒரே விலையில டிக்கெட் விக்கிறவன் இல்ல! குடும்ப்பதோட அல்லது நண்பர்களோட போயி பிளாக்ல டிக்கெட் வாங்கி படம் பாக்கிரதவிட டிடிஹெச் சீப். பெரும்பாலான மக்கள் சவுண்டு க்ககாக படம்பாக வர்ரதில்ல. இது தியேட்டேர்காரங்களுக்கு நல்லா தெரியும். அதுனாலதான் அவுங்க மறுக்குறாங்க. ஒரு தயாரிப்பாளர கமல் அத அவர் வாங்க பார்க்கிறார்.

    ReplyDelete
  17. தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் இருதியி ல் தர்மமே வெல்லும். கமல் நாமம் வாழ்க.

    ReplyDelete
  18. சேகர், நல்ல கட்டுரை. புதுமை செய்ய வேண்டுமென நினைத்து அதனால் தனிமைப்படுத்தப்படுவது கமலுக்கு ஒன்றும் புதிதல்ல. நம் இந்திய திரையுலகில் சிந்திக்கத் தெரிந்த/சிந்திக்க வைக்கத் தெரிந்த ஒரு சில நடிகர்களில் கமலும் ஒருவர். (உங்களைப் போலவே எனக்கும் தானைத் தலைவனான) சுஜாதாவைப் பற்றி கமல் ஒரு முறை சொல்லும் போது தமிழ்த் திரையுலகம் அவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றார். இந்த கூற்று கமலுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  19. சேகர், நல்ல கட்டுரை. புதுமை செய்ய வேண்டுமென நினைத்து அதனால் தனிமைப்படுத்தப்படுவது கமலுக்கு ஒன்றும் புதிதல்ல. நம் இந்திய திரையுலகில் சிந்திக்கத் தெரிந்த/சிந்திக்க வைக்கத் தெரிந்த ஒரு சில நடிகர்களில் கமலும் ஒருவர். (உங்களைப் போலவே எனக்கும் தானைத் தலைவனான) சுஜாதாவைப் பற்றி கமல் ஒரு முறை சொல்லும் போது தமிழ்த் திரையுலகம் அவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றார். இந்த கூற்று கமலுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  20. You failed to understand that the 1000 rupees charge was for viewing the film 'BEFORE' its theatrical release. The price tag was for the exclusivity that people get to watch the movie before its release. Now if the movie is released in DTH even after one day from theatrical release, the exclusivity will no longer be there! Therefore it wont justify the Rs.1000 price tag. Kamal should, therefore, talk with DTH operators to refund half the money atleast to the subscribers if the movie is released in DTH after its theater release.

    ReplyDelete
  21. சூப்பர் சூப்பர் சூப்பர் சார் சரியாய் சொன்னிர்கள்

    ReplyDelete
  22. Unmai..

    இன்று கமலோடு பயணித்த நடிகர்கள் மவுனித்து இருக்கின்றார்கள்... கமல் உயிரை பணயம் வைத்து வேட்டையாடி விட்டு வந்தால் கறி விருந்த உண்ண ஒரு பெருங்கூட்டம் காத்து இருக்கின்றது...

    To M. Karthik, "Kamal should, therefore, talk with DTH operators to refund half the money "
    Kamal will do it for you.. no worries. (still you have option to withrdraw your 1000rupees)..

    ReplyDelete
  23. மிக அற்புதமான பதிவு, நல்ல விமர்சனம் ,பிச்சுபுட்டீங்க போங்க ........கதிர் ஆக்ஸ்போர்ட்

    ReplyDelete
  24. மிக அற்புதமான பதிவு, நல்ல விமர்சனம் ,பிச்சுபுட்டீங்க போங்க ........கதிர் ஆக்ஸ்போர்ட்

    ReplyDelete
  25. கமல் தோற்றதில்லை,,,

    ReplyDelete
  26. அன்புடன் வணக்கம் அன்பரே...
    இதை திரு கமல் படித்தால் மிகவும் சந்தோசபடுவார்..
    சக நடிகர்களை போல் சந்தர்ப்ப வாதிகளாக இல்லாது மிகவும் சரியாக பதிவு இட்டுள்ளீர்கள்
    சபாஷ் !!!!

    ReplyDelete
  27. KAMAL ENGIRA VIYABARI,
    TAMILARGALAI KENAYANGALAGA PAVITHU,
    VILAMBARATHITKAGA ETHAIYUM SEIYA THUNIGINDRAN.

    UNGALAI PONDRA ILICHCHA VAYARGALUM,
    ETHAI SONNALUM NAMBUM APPAVIGALUM,
    IDHARKU THUNAI NITKINDRANAR.

    TAMIL NATTIL MATTUME ORU NADIGAN SEIYUM NALLA VIDAYANGAL AVAN NADIKUM PADATHIRKU VILAMBARAMAGA AMAIGINDRANA... UDHARANAM INDHA KATTURAI.

    ULAGA CINEMA RASIGAN KOODA ORU NADIGAN NALLAVANA ENDRU PARPATHU UNDU. AANAL IPPADI ILLAI ADHU VERU VIDHAM.
    MUTHA KATTCHI VENDUM ENDRU RAGALAI SEIYUM NADIGAN THIRAI PADATHAI AVAN VIRUMBUVATHU KIDAIYATHU. BCZ ANDHA PADATHIN KATCHIGAL POLIYAGA SEYATKAI THANAMA AMAIYUM.

    TAMILAN THIRUNDHANUM...
    INDHA COMMENT.A REMOVE PANNAMA IRUKA MR.JACKIE UNGALUKU DHAIRIYAM IRUKUM ENDRU NAMBUGIREN. BCZ U GOT SOMETHING CALLED ELUTHTHU AALUMAI..!!!

    ReplyDelete
  28. First comment for your writings though I am with you through your writings since April 2011. Good analysis.Not all can become tree for others to sit and relax ,but Kamal in his field. Kamal is the first gear in vehicle (cine field ) , on getting good move , others are there for speedy drive with good profit.
    If not for Viswaroopam today , this DTH system will become viable nearby future and it is inevitable , but Kamal can not claim any patent right for this ( though this is not his 100 % own idea as per him) .Life is like that , that too for Kamal , he can easily overcome this situation. Well done for your nice presentation.

    Best Regards ,
    P.PAUL VANNAN.

    ReplyDelete
  29. very nice presentation, good analysis .

    Kamal is the Initiator ,other are followers .

    kamal is the good shock absorber ,he knows how to come out from all troubles and to lead further .

    DTH - getting success -others will have nice meal , on failure ,Kamal will get one more experience , only this man have the capability to stand and proceed further.(உயிரை பணயம் வைத்து வேட்டையாடி விட்டு வந்தால் கறி விருந்த உண்ண ஒரு பெருங்கூட்டம் காத்து இருக்கின்றது...)MOST POWERFUL STATEMENT.

    LIFE IS LIKE THAT , WE SHOULD ADJUST AND WE SHOULD NOT EXPECT OTHERS WILL SUPPORT IN OUR TOUGH TIME.
    HOPE , KAMAL IS CLEAR AND HE DO NOT EXPECT OTHER SUPPORT WHEN HE IS MENTALLY PREPARED FOR THIS BATTLE.

    ReplyDelete
  30. இரண்டு மணி நேர மின்வெட்டை அறவே ஒழித்து விடுவோம் என்று சூளுரைத்து விட்டு ஆட்சிக்கு வந்து பதினெட்டு மணி நேரம் கரண்ட் இல்லை என்பதற்கு எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை... - Factu factu factu ...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner