nee thane en ponvasantham -2012-நீ தானே என் பொன் வசந்தம்…




ஊர்லன்னா ஏதாவது ஒரு சின்ன தியேட்டர்ல கூட இந்த படத்தை பார்த்துடலாம்...
பட் பெங்களூர்ல அப்படி கிடையாது.. செல்க்ட்டிவ்வான தியேட்டர்லதான் படத்தை ரிலிஸ் செய்வாங்க.. அதனால் டிக்கெட் புக் பண்ணித்தான் பார்க்கனும் என்பதால் மதியத்துக்கு மேல்  டிக்கெட் புக் பண்ண இணையத்தில் தேடினேன்.

கோபாலன் சினிமாவில் டிக்கெட் இருந்தது.... மனைவியை டிக்கெட் புக் பண்ண சொன்னேன்.....

கல்யாணத்துக்கு முன்ன  எந்த படம் வந்தாலும் ரெண்டு டிக்கெட் புக் பண்ணி என்னையும் அழைச்சிக்கிட்டு போவே....யாழினி  பொறந்த பிறகு என்னை எந்த படத்துக்கும் அழைச்சிக்கிட்டு போறதே இல்லை... அட்லிஸ்ட் படத்துக்கு வரியான்னு உன் வாயலை  கேட்பேன்னு நினைச்சேன்..ஆனா கடைசி வரை அப்படி கேட்கவேயில்லை  என்பதாய் அந்த பார்வை இருந்தது...


நானே சீட் செலக்ட் செய்த காரணத்தால் 150 பிளஸ் 16 ரூபாய் எக்ஸ்ட்ரா புடுங்கி கொண்டது...

என் மொபைலுக்கு மேசேஜ் வரவில்லை...  பிரின்ட்டுக்கு என்ன செய்வது என்று யோசித்தேன்.... சட்டென என் மொபைல் போனை எடுத்து அதை படம் பிடித்தேன்..

பெயர் வேண்டாம் ......ஜாக்கி பெங்களூர்லயா? இருக்கிங்க.. நைட்டு எம்ஜிரோட்டுல சரக்கு சாப்பிடலாமா-? இல்லைங்க படத்துக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன்...  சாரி.... நோ பிராப்ளம்...

ஒன்பது மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினேன்...கோபாலன் சினிமாவுக்கு  போகும் முன் வயிற்றை சிக்கன் ரைசால் நிரப்பிக்கொண்டேன்.

பைக் டோக்கனுக்கு  கம்யூட்டர் பில் கொடுத்தார்கள்.... வண்டியை விட்டேன்... ஹெல்மட்டை சுமப்பதா வேண்டாமா? என்று கன்பியூஷனில் ஒரு முடிவு எடுத்து வண்டி ரிவ்ர்வியூ மிரரில் மாட்டினேன்.

நான்காம் தளத்தில் இருக்கும் இரண்டு வருடம் பூர்த்தியாகி விழா கொண்டாடும் கோபாலனை பார்க்க எக்ஸ்லெட்டரில் ஏறினேன்.


இண்டர்நெட்டில் புக் செய்தவர்களுக்கு தனி கியூ நின்றது... நான் கியூவில் என்னை பொருத்திக்கொண்டேன்.

மற்ற கியூ குறைவாக இருந்த காரணத்தால் மற்ற கவுண்டரில் இண்டர்நெட் புக்கிங்காரர்கள் டிக்கெட் வாங்கி கொள்ளலாம் என்று சொன்னதுதான் தாமதம்... ஒரு பெண் அவசரமா கியூ மாற அவருக்கு முன்னே போய் அவசரமாக பக்கத்து கியூவில் மிஸ்டர் பீன் போல நின்று அந்த பெண்ணை நக்கலாக பார்த்தேன்....

போய் தொலை என்பது போல பதில் பார்வை பார்த்தாள்.....

பிரின்டுக்கு பதில் மொபைலை  காட்டினேன்... அதில் இருந்த போட்டோவை அவனுக்கு படிக்க வசதியாக அந்த போட்டோவை சூம் செய்து காட்டினேன்.


அவன் கண்கள் சுருங்கின..
பிரின்ட் இல்லைன்னா மேசேஜ் காட்டுங்க என்று சொல்லப்போகின்றான்... அவனிடம்  சண்டை போடலாம் என்று யோசிக்க தொடங்கினேன்...

நான் கவுண்டர் மாறி வேகமாக வந்து நின்றதை அவன் பார்த்தான்...அவன் நக்கலாக சிரித்தான்... சார்... இது இந்த கோபாலன் சினிமா இல்லை...மைசூர் ரோடு கோபாலன் சினிமா என்றான்....

எனக்கு உலகம் காலடியில் நழுவியது....மண்ல் கயிறு படத்தில் வரும் ஏமாந்த சோனகிரி பாட்டு மனதில் ஒலித்தது....

அந்த பெண் இதுக்குதான் இவ்வளவு அளப்பறியா ? என்பது போல என்னை பார்த்தாள்... எனக்கு வெட்கம் பிடுங்கி தின்றது... நான் அவனிடம் எதுவும் பேசவில்லை...

அதாவது பெரம்பூர் சத்தியம் தியேட்டர்ல டிக்கெட் புக் பண்ணிட்டு மவுண்ட் ரோடு சத்தியம் தியேட்டர்ல டிக்கெட்டை நீட்டினா அவன் என்ன செய்வான்.
                                                        
மொபைலை வாங்கிக்கொண்டு சர சர என கீழே இறங்கினேன்.. மைசூர் ரோடு கோபாலனுக்கு போக விரைந்தேன்...மச்சானிடம்  போன் பண்ணி வழி கேட்டேன்..

ஒம்போதே முக்காலுக்கு படம்ன்னு  சொல்லறிங்க.... அங்க போறதுக்கு எப்படியும் நாற்பது நிமிஷமாவது ஆவும்....அங்கேயே அந்த படத்துக்கு டிக்கெட் இருக்கான்னு பாருங்க என்றான்....

திரும்ப நாலு மாடிக்கு லோ லோன்னு எக்ஸ்சிலேட்டரில் ஓடினேன். அங்க லைப் ஆப் பை  அப்புறம் இரண்டு மயிறு படம் ஓடிச்சி...இப்ப  அந்த ரெண்டு படமா முக்கியம்.. -? நானே டென்ஷன்ல இருக்கேன்...

தளர்ந்து கீழே இறங்கினேன்.. வண்டியை எடுத்தேன்... ஒரு மணி நேரத்துக்கு பத்து ரூபாய் தண்டம் அழுதேன்....

இரவு எங்கோ அவளை விட்டு கிளம்புகின்றேன் என்பதால் யாழினி உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு எனக்கு டாடா காட்டினாள்....

திரும்ப வீட்டுக்கு போனேன்... என்னை விட்டுட்டு படத்துக்கு போன இல்லை நல்லா வேணும் என்பதாய் என் மனைவியின் சிரிப்பு இருந்தது....
என்னை பார்த்ததும் யாழினி அப்பா என்று  கத்திக்கொண்டு ஓடி வந்து என்னை கட்டிக்கொண்டாள்...சட்டென என் கன்னத்தில் முத்தமிட்டால்....அவளை பாத்து சொன்னேன்... நீ தானே என்  பொன்வசந்தம்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.





நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

30 comments:

  1. செம பல்பு :)

    ..ஒவ்வொரு முறையும் கோபாலன் சினிமாஸில் சீட்டு முன்பதிவு செய்யும் போதும் பனர்கட்டாகோபாலன் சினிமாஸ் என்பதை உறுதி செய்துகொண்டுதான் பதிவு செய்வேன்.

    நாளை மாலை சந்திக்கலாமா.?

    அன்புடன்
    அரவிந்தன்

    ReplyDelete
  2. /*அவளை பாத்து சொன்னேன்... நீ தானே என் பொன்வசந்தம்.*/

    :) :) நல்லா இருந்துது அண்ணா :)

    ReplyDelete
  3. எதிர்பாராத முடிவு..!! :)அருமை.

    ReplyDelete
  4. ஹெஹெஹெஹெஹீஈஈஈஎ

    ReplyDelete
  5. THIS IS TOOOOOOOOOOOOOOO MUUUUUUUUUUUUUUUUCH OF MMMMM OOOOO KKKKK KKKKKK AAAAAA IIIIII.

    ReplyDelete
  6. அதுக்கு தான் மாமியார் வீட்ல அளவோட சாப்பிடவும் ஒ.சி கிடைகுதுன்னு வயிறு முட்ட சாப்பிட்டு எந்த தியேட்டருக்கு புக் பண்ணுறேம் கூட தெரியல என்ன பிரதர் இதெல்லாம்

    ReplyDelete
  7. vaazhkaiyoda thatthuvathai one linele soliteenga. arumai.

    ReplyDelete
  8. Nice one. U have simply told the fact of the life in a single line

    ReplyDelete
  9. ""//பெயர் வேண்டாம் ......ஜாக்கி பெங்களூர்லயா? இருக்கிங்க.. நைட்டு எம்ஜிரோட்டுல சரக்கு சாப்பிடலாமா-? இல்லைங்க படத்துக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன்... சாரி.... நோ பிராப்ளம்...

    ஒன்பது மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினேன்...//""

    Jackie Naduvula Konjam Pakkathai Kanom....

    ReplyDelete
  10. படம் பார்க்கலைன்னாலும் உங்க பொன்வசந்தம் கொடுத்த முத்தம் போதுமே அண்ணா.... நூறு படம் பாத்ததுக்கு சமம்...

    ReplyDelete
  11. ஏன் அய்யா உன் அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா ?? அவசரமா விமர்ச்சனம் படிக்கலாம்னு பார்த்தா ..............சரி கும்கி க்கு னாச்சும் படத்த பத்தி எழுதுங்க ....யாழினி க்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  12. அண்ணே படத்தோட கதையை விட படம் பாக்க போன உங்க கதை சூப்பர்

    ReplyDelete
  13. யாழினி மாதிரியே படமும் சூப்பரா இருக்கும் என்று சொல்லாம சொல்றீங்க போல

    ReplyDelete
  14. nalla velai. neenga antha karumatha paarkkala. ponathu panathodu poachu-nu vidunga boss..

    ReplyDelete
  15. Enna Jackie,

    Another producer have come from your favorite DMK party. Professor Anbazhagan producing 50 crores budget film Adhi Bagawan starring Jayam Ravi.

    Any comments on that ?
    I am not supporter of ADMK or any politial parties.

    Everyone knows that DMK is producing films from the public money they had looted. Inspite of that you are still writing blogs praising DMK ?
    உங்களுக்கு மன சாட்சியே இல்லையா ?

    ReplyDelete
  16. ..சட்டென என் கன்னத்தில் முத்தமிட்டால்....அவளை பாத்து சொன்னேன்... நீ தானே என் பொன்வசந்தம்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner