நடிகர் கமலஹாசன் தியேட்டர்களை அழிக்க போகின்றாரா?விஸ்வரூபம் ஒரு அலசல்….



  எந்த ஒரு புது முயற்சியை முன் வைக்கும் போது  உலகம் முதலில் புது முயற்சியை முன் வைப்பவனுக்கு  பைத்தியக்கார பட்ட சூட்டி மகிழும்…
இது இன்று நேற்று நடக்கும் விஷயம் அல்ல… காலம் காலமாக மனித சமுகம் இந்த  பிரச்சனைகளை எதிர்கொண்டு  அதனை அசமடக்கி சமாளித்துதான் முன்னேறி சென்றுக்கொண்டு இருக்கின்றது..


முதலில் ரயில் வண்டி   அறிமுகப்படுத்திய போதும் ,கலிலியோ பூமி  சூரியனை சுற்றி வருகின்றது என்று சொன்ன போது எழுந்த எதிர்ப்புகள்  உலகம் அறிந்த ஒன்றுதான்…

கமல் தனது விஸ்வரூபம் படத்தை தியேட்டரில்  வெளியிடும் நேரத்துக்கு எட்டு மணி நேரத்துக்கு முன்பு டிடிஎச் ஒளிபரப்பில்  இந்த திரைப்படத்தினை  ரிலிஸ் செய்ய இருக்கின்றார்... இதுதான்  இப்போதைக்கு பெரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருக்கின்றது...

தியேட்டரில் படம் ரிலிசுக்கு முன் டிடிஎச் இணைப்பில் படத்தை ரிலிஸ் செய்தால் திரை அரங்கிற்கு  யாரும் படம் பார்க்க வர மாட்டார்கள் என்று திரையரைங்கை மூட வேண்டிய சூழல் ஏற்ப்பட்டு விடும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கொடி  பிடிக்கின்றார்கள்....

அதுக்குமுன்ன தியேட்டர்காரங்க பயப்பட இதில் நியாயமான காரணங்கள் இருக்கு...  

அதை முதல்ல பார்த்துடுவோம்....புதுப்படம்  புதுப்பொண்ணு போலத்தான்... கல்யாணத்துக்கு முன்ன பழகி, பார்த்து முடிஞ்சிட்டா ஆர்வம் குறைஞ்சிடும்ன்னு  பயப்படுறாங்க...

 நியாம்தான் இல்லைன்னு சொல்ல வரலை...கல்யாணம் முடிஞ்சி பர்ஸ்ட் நைட்டை மண்டபத்திலேயோ அல்லது வீட்டிலேயோ வச்சிக்கிட்டா கூட,அட பார்த்த  பொண்ணுதான்யா.... பழகிய பொண்ணுதான்... அப்புறம் எதுக்கு ஹனிமுன்னு அவ்வளவு செலவு பண்ணி சிம்லா, டாஜிலிங்கின்னு மலைக்கு மேல  எதுக்கு வச்சிக்கினும்... அது போலத்தான் ஹனிமூன் போல ரசிச்சி  செய்ய.... ச்சே ரசிச்சி பார்க்க தியேட்டர்க்கு கண்டிப்பா  படம்  பார்க்க கூட்டம் வரும்... 

சோ இது சும்மா ஜாலியான உதாரணத்துக்குதான்....  நோ சீரிஸ் மேட்டர்.....இதுல முக்கியமான விஷயம்.... படம் நல்லா இருந்தா தியேட்டருக்கு வருவாங்க.. சப்போஸ் படம் நல்லா இல்லைன்னா டிடிஎச்சில் பார்துட்டு தியேட்டருக்கு படம் பார்க்க ஒரு ஐம்பது பர்சென்ட் பேர்தான் தியேட்டருக்கு வருவாங்க... இதுதான் தியேட்டர்காரங்களோட அடிப்படை பயம்...


ஏற்கனவே தியேட்டர்லு முன்ன போல கூட்டம் வருவதில்லை.... நிறைய செலவு பண்ணி வச்சாலும் வரமாட்டேன்கிறாங்க... என்று தியேட்ர்காரார்கள் புலம்புவது காதில்  கேட்கின்றது...

இப்ப தியேட்டர்காரர்கள் கிட்ட வரேன்..

எந்த ஒரு  தொழில் நட்பம் வந்தாலும் அதுக்கு எற்றது போல மாற பழகிக்கனும்... அதுக்கு முன்ன இந்த நிலை ஏன் ஏற்ப்பட்டுச்சின்னு பார்க்கலாம்...

ஒரு காலத்துல டிடியில  ஒளியும்  ஒளியும் ஒளிபரப்பும் போது   வெள்ளிக்கிழமை  நைட்டு ரோட்டுல ஒரு பய  இருக்க மாட்டான்.... அது போல வியாழக்கிழமை   படத்தோட ஏதாவது ஒரு காட்சியை போடும் திரைமாலை நிகழ்ச்சிக்கும் அப்படியே.....

மாதத்தில் ஒரு முறை தேசிய ஒளிபரப்பில் தமிழ் படம் போடுவாங்க.. அதுக்கு என்னம்மா கூட்டம் மொய்க்கும்.... ஆனா 1993இல் சன் டிவி தொடங்கப்பட்ட பிறகு எல்லார் வீட்டிலும் கேபிள் கனேக்ஷன் இழுக்க.. ஆனானப்பட்ட டிடியே  மண்ணை கவ்வியது வரலாறு...

இந்த டீவி மீடியாவை யாராலும்  தடுக்க முடியாது.... டெய்லி படம் போட்ட தியேட்டருக்கு எப்படி வருவாங்க...? 24 அவர்ஸ்  இங்கிலிஷ் மூவி சேனல் நிறைய வருது.. அப்படி இருந்தும் தியேட்டர்ல போய் அங்க படம் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க... காரணம் தியேட்டருக்கு படம் பார்க்க வருபவனை  அங்க மதிக்கின்றாங்க... இங்க   அடிமை போல நடத்தினா  எவன் வருவான்...??????

சென்னையை  மல்ட்டிபிளக்ஸ் தவிர்த்து எந்த தியேட்டர்லாயவது அரசு நிர்ணியிச்ச கட்டணம் வாங்கறாங்களா?  புதுப்படம் போட்டா...எங்க ஊர்ல 150ரூபாய்ல இருந்து 200 ரூபாய் வரை டிக்கெட் வச்சி வித்தா எவன்  வந்து குடும்பத்தோட  படம் பார்ப்பான்....

சரிய்யா நான்  விக்கலைன்னா பிளாக்ல அதே அமவுண்டுக்கு விக்கறான்... அதனால் படம் ரிலிஸ் ஆன ரெண்டு  நாளைக்கு டிக்கெட் விலைய ஏத்திக்கறேன்.... தியேட்டர் வச்சி நடத்தற நானாவது லாபம் பார்ப்பேன் இல்லை..குட் செய்யுங்க... ஆனா இரண்டு மூனு நாளைக்கு மேல அரசு நிர்ணியத்த கட்டணத்தை எந்த தியேட்டராவது இதுவரை வசூலிச்சி இருக்கான்னா இல்லை....இல்லவே இல்லை.

படம் ரிலிஸ் ஆயி நாலு நாலுதான்... இந்த ரசிக குஞ்சா மணிங்க கூட்டம்....முக்கியமா இரண்டு நாளைக்கு மட்டும்தான்.... அதுக்கு அப்புறம் இரண்டு நாள் படம் நல்லா இருந்தா ரிப்பிட்டு பார்க்க வருங்க...ஆனா  நாலு  நாளைக்கு அப்புறம்தான் படத்தோட  வெற்றியை  தீர்மாணிக்கற பொதுமக்கள் வருவாங்க...குடும்பத்தோட படம் பார்க்க  வருபவன் கிட்ட 50 ரூபாய் டிக்கெட்டை என்பது ருபாய்க்கு வித்தா எவன் படம் பார்க்க வருவான்...? அப்ப என்ன செய்வான்...30ரூபாய்க்கு திருட்டு  சிடி எங்க விக்கும்ன்னு  தேடுவான்...

டிவியில் படம் டெய்லி போட்ட போது கூட நான் பார்த்த படத்தை திரும்ப போய் பார்ப்பேன்.... ஒரு  படத்தை நிறைய  வாட்டி பார்க்கும் போது  நிறைய விஷயம் கத்துக்கலாம்.. நான் இப்படி பார்க்கறேன்னு வச்சிக்கோங்க... அப்ப என்னை போல நிறைய ரிப்பிட் ஆடியன்ஸ் இருந்தாங்க.. முக்கியமா கட்டிட தொழிலாளிகள், தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள் என்று தொழிலாளர்கள் வர்க்கம்   பார்த்தா படத்தை டெய்லி  செக்ன்ட் ஷோ பார்ப்பாங்க.... அவிங்க தான்  ரிப்பிட்டு ஆடியன்ஸ்...ஏன்டா அந்த படம் தான் பார்த்துட்டியே என்றால்...,  செமையா போர் அடிச்சிது தூக்கத் வரலை.. அதான் தியேட்டர்ல போய் உட்கார்ந்து படத்தை பார்த்து  சிரிச்சிட்டு அப்படியே தேவயானியையும் பார்த்துட்டு வரலாம்ன்னுதான் என்று கேஷூவலாக சொல்லுவார்கள்...ஆனால் அந்த ரிப்பிட் ஆடியன்ஸ் திரும்பி  படம் பார்க்க வராத அளவுக்கு அரசு  நிர்னியத்தை விட அதிகமா டிக்கெட் ரேட் வித்தா எவன்  பார்த்த படத்தை திரும்ப பார்க்க வருவான்ங்கறேன்...

சென்னை போரூர்  கோபால கிருஷ்ணா  தியேட்டருக்கு ஸ்கை பால் படம் பார்க்க போறேன்... 
சார் இன்னைக்கு நைட் ஷோ கிடையாது... 

ஏம்பா.. ?
உங்களையும் சேர்த்து அஞ்சி   பேர்தான்..... 

எட்டு பேர் இருந்தா கூட படம் போடலாம்...
ஆனா 5 பேருக்கு படம் எப்படி போடறதுன்னு சொல்லுங்க....?

ரொம்ப நாளைக்கு அப்புறம் அந்த தியேட்டரை டிடிஎஸ் பண்ணி சேர் எல்லாம் மாத்தி கியுப் புரேஜக்ஷன் போட்டு இருக்காங்க,.. டூலேட்... டெக்னாலஜி மாறும் போதே  மாறி இருந்தா.. இன்னைக்கு   அந்த தியேட்டர்ல கூட்டம் ரெகுலரா கூட்டம் வர ஆரம்பிச்சி இருக்கும் பட்... இப்ப கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் வர ஆரம்பிச்சி இருக்கு....

100 நாள்  125 நாள் போஸ்டர் எல்லாம் இப்ப கிடையவே கிடையாது..25 நாள் ஓடறதே குதிரைக்கொம்பா இருக்கு... அப்படி எந்த படமும் இனிமேல் ஓடாது..
100 நாள் 125 படத்தை ஓட்டினவங்க யாரு  தெரியுமா?

 ரிப்பிட் ஆடியின்ஸ் இப்ப  யாரும் இல்லை... தியேட்டர் கட்டணம் அவுங்களை பயமுறுத்துது...

குடும்பதோட படம் பார்க்க வருவாங்க... ஆனா அவுங்களுக்கும் தியேட்டர் கட்டணம் பயமுறுத்துது  அதனால் பேமிலியா தியேட்டர்  வர யோசிக்கறாங்க...ஊர்லயே குடும்பத்தோட படம் பார்க்க வந்தா 80 ரூபாய் டிக்கெட்  கட்டணம் 5 பேர் 400 ரூபாய்... மொய் வைக்கனும்...50 ரூபாய் இருக்கும் அரசு நிர்ணியத்தை கட்டணத்தை 80 ரூபாய்க்கு வித்தா  எவன் வருவான்..


அப்பறம் அப்ப எல்லாம் பொம்பளைங்க கூட்டம் நிறைய வரும்... முக்கியமா  காலைக்காட்சியும் மேட்னி ஷோவுக்கும் பொம்பளைங்க கூட்டம் அள்ளும்... பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிச்சிட்டு, காலை காட்சி பார்க்கும் பெண்கள் அப்போதெல்லாம் நிறைய... புருசனை வேலைக்கு அனுப்பி விட்டு அக்கத்து பக்கத்து வீட்டு பெண்களோடு ஜமாவாக தியேட்டருக்கு கிளம்பி மதிய காட்சிக்கு சென்ற பெண்கள் யாரும்.... இன்னைக்கு திரை அரங்குக்கு வருவதில்லை...

காரணம் அவர்கள்  விரும்பி  பார்க்கும்  அளவுக்கு குடும்ப உறவுகளை   விவரித்து சொல்லும் படங்கள் குறைத்து போய் விட்டன... சின்னதாக டபுள் மீனிங்கோடு பாக்கியராஜ் எடுத்த படங்களும், விசு எடுத்த அனைத்து லோ பட்ஜெட் படங்களும்  சக்கை போடு போட்டன...அதனாலதான் மவுன கீதங்கள் பண்ண பாக்கியராஜ் எடுத்த திரில்லர் கிரைம் சப்ஜெக்ட்டான  விடியும் வரை  காத்திரு தோல்வி படமாயிடுச்சி....ஆனால் இன்று இளைஞர்கள்தான் படம் பார்க்க அதிகம் வருகின்றார்கள் என்று, அவர்களுக்கு ஏற்றது போல ஆக்ஷன் படங்கள் வருகின்ற  காரணத்தால், திரை அரங்கிற்கு பெண்கள் கூட்டம் வருவதில்லை.. 

ஆனால் அவர்களுக்கு தீனிப்போடும் விதமாக டிவி சீரியல்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு விட்டன... விசு எடுத்தது போல குடும்ப பிரச்சனையும்... பாக்கியராஜ் எடுத்தது போல சின்ன வீட்டு பிரச்சனையும் இப்போது டிவி  தொடர்களில் வந்து  கொண்டு இருக்கின்றன.....

முன்னாடி எல்லாம் புள்ளைங்க...  மாசத்துக்கு  ஒருக்கா..  எம்மா.... சினிமாவுக்கு கூட்டிகிட்டு போன்னு  மல்லுகட்டுவோம்... எங்க   தொல்லை தாங்காம  இரண்டு மாசத்துக்கு ஒரு படமாவது  கூட்டிக்கிட்டு போவாங்க.. இப்ப சின்ன  பசங்க பார்க்கறதுக்கு  கார்ட்டூன் சேனல்கள் நிறைய வந்துடுச்சி... அதனால அந்த  வாய்ப்பும் இப்ப இல்லை...

ஆனா ஆந்திராவுல இப்படி இல்லை.. தியேட்டர் கட்டணம் எல்லாம் நியாயமா இருக்கு.... குடும்பத்தோட திரை அரங்குக்கு வராங்க...  சினிமாவை கொண்டாடுறாங்க...

மல்டடிபிளக்ஸ் தியேட்டர்ங்கதான்  இன்னைக்கு வாழுது....600 பேர் உட்காரும் தியேட்டரை இரண்டா மாத்தி 300, 300 பேரா உட்கார வச்சி....120 ரூபாய் டிக்கெட் போட்டு,மூன்று ஷோ நடத்தி எடுக்கற காசை....ஒன்னுக்கு அடிக்கற எடத்துலை  எல்லாம் டிவியை வச்சி ஒரே ஷோவுல எடுக்கறாங்க... அவ்வளவுதான்... இதை பார்த்துட்டு புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட கதை எல்லாம் பல தியேட்டர்ல நடந்து துண்டை போட்டு உட்கார்ந்துகிட்டதுதான் மிச்சம்.. உதாரணத்துக்கு தேவி தியேட்டர்...

டைம்பாஸ் என்று யாரும் படத்துக்கு போறது இல்லை.... படம் நல்லா இருந்தா  மட்டும்தமான் தியேட்டருக்கு போறான்... சிறு முதலீட்டு படங்கள் சின்ன சின்ன அதம்பாக்கம் ஜெயலட்சுமி போன்ற தியேட்டர்களில் வெளியானது... டைம்பாசுக்கு படம் பார்க்க போனான்.... ரிப்பிட் ஆடியன்சும், டைம்பாசுக்கு பார்க்கறவனும்தான் லோ பட்ஜெட் படத்தை வாழ வச்சான்....ஆனா இன்னைக்கு அப்படி இல்லை...

யாருக்கு தெரியும்ன்னு ஒரு திரில்லர் கிரைம் படம் ரிலிஸ் ஆச்சு....யாருக்கும் தெரியாமலேயே போயிடுச்சி....டைம்பாசுக்கு படம் பார்க்கும் ஒரு ஆட்டோக்காரர் மற்றும் தினத்தொழிலாளிகள் யாரும்  அந்த படத்தை பார்த்து கொண்டாடவில்லை... காரணம் டிக்கெட் கட்டணம்...

சென்னையில எக்ஸ்பிரஸ்மாலில் 5 பேர்  குடும்பத்தோடு படம் பார்க்க  போறாங்கன்னு வையுங்க.....120x5=600 ரூபாய்... காரா இருந்தா  பார்க்கிங் 100ரூபாய் , மக்கு பாப்பகான் 120 X5=600 என்று வச்சிக்கோங்க...1300 காலி...இன்றைய தலைமுறைக்கு அது சீப்பா இருக்கும் அது வெறும் 15 பர்சென்ட் பேர்தான்... செலவு பண்ணற  அப்பங்காரன்.... போன தலைமுறை...  அவன் வாயிலேயும் வயித்திலேயும்தான் அடிச்சிக்குவான்...

இப்படி கட்டணத்தை ஏற்றி விட்டால் படம் பார்க்க எப்படி வருவான்..? சோ அவன்  திருட்டு விசிடி வாங்கி படம் பார்க்க போறான்... திருட்டு விசிடியை யாராலும் ஒழிக்க முடியாது...அரசு நினைச்சா முடியும்... பட் லஞ்சம், மாமுல் எல்லாம்  விளையாடும் போது ஒரே ஒரு இடத்துல திருட்டு விசிடி வித்தாக்கூட லாஸ்தான்...அது மட்டும் அல்ல. படம் ரிலிஸ் ஆனா ஒரு  வாரத்துல இணையத்துல படம்  வந்துடுது ....இணையத்துல படத்தை டவுன்லோட் போட்டு குடும்பதோட பார்த்துடறாங்க...

சோ டிக்கெட்  கட்டணம் உயர்வாலும் நல்ல படைப்புகள் இல்லாத காரணத்தாலும், டைம்பாசுக்கு படம்பார்க்கறவன் , ரிப்பிட் அடியன்ஸ், ஹவஸ் ஒய்ப் பெண்கள் ஏன படம்ரிலிஸ் ஆகி பத்து  நாளைக்கு மேல் படத்தை ஒட்டும் இந்த ஆடியின்ஸ் படம் பார்க்க வரவில்லை....

கோடிகணக்குல படம் போட்டு படம் எடுக்கற தயாரிப்பாளன் நடுத்தெருவுல இருக்கான்... அதுவும் சமாளிக்க முடியாதவர்கள் ஜிவி  போல தூக்கு கயிற்றை தேடுவது பெரம சோகம்....ஒரு காலத்தில் கோலோச்சிய நிறைய தயாரிப்பாளர்கள் வாழ வழி இன்றி தவிக்கின்றார்கள்... அந்த வெற்றி படத்தை எடுத்தது நான்தான் என்று வெளியே சொல்ல வெட்கப்படுகின்றார்கள் காரணம்... அவர்கள் தோற்றத்தில் இருக்கும் வறுமை....

இந்த நிலை தனக்கு வந்து விடக்கூடாது என்பதால்தான்.....கமல் தான் தயாரிப்பாளராய் படம் எடுத்து  தலையில் துண்டு போட்டுக்கொண்டு உட்கார்ந்து விடக்கூடாது என்பதால்தான்.... 
படத்தை டிடிஎச்சில் ஒரே ஒரு  காட்சி  ரிலிஸ் செய்கின்றார்...இண்டர்நெட்டில் டவுண்லோட் பண்ணி படத்தை பார்ப்பவர்கள்...டிவி சிரியலில் மூழ்கி இருக்கும் ஹவுஸ் ஒய்ப்புகள், திருட்டு விசிடி வாங்கி படம் பார்ப்பவர்கள், என எல்லோரையும் நல்ல பிரிண்ட்டில் படம் பார்க்க  வைக்க போகின்றார்.. அதன் முழு பலனும்  படத்தை தயாரித்த தயாரிப்பளருக்கே கண்டிப்பாக வரும்....

அதே போல டிடிஎச்சில்  தினசரி  நாலு காட்சிகளாக வெற்றி நடை விஸ்வரூபம்  போடுவதெல்லாம் இல்லை.. ஒரு முறைதான் காட்டப்படும்... அதுவும்  ஆயிரம்  ருபாய் பணம் கட்டினால் ஒரு முறை படம் பார்க்கலாம்....

உதாரணத்துக்கு 1500 பேர் வசிக்கு காலணியில் கமல் ரசிகர் 200 பேர் தியேட்டருக்குபோய்தான் படம் பார்ப்பார்கள்... கமல் ரசிகர் அல்லாத சினிமா ஆர்வலர்கள் 400 பேர் என்று வைத்துக்கொள்ளுங்கள்... அவர்களும் தியேட்டரில்தான் போய் படத்தை பார்க்க போகின்றார்கள்.. ஆனால் மீதம்  எட்டுநூறு பேரில் தியேட்டருக்கு போய், பார்க்கிங் பண்ணி, படத்தை பார்த்து போய்யா அடுத்த வாரம் போலம்ன்னு நினைக்கறாங்க பாருங்க... அந்த குருப்பை வீட்டுல ஒட்கார்ந்தே படத்தை பார்த்துடுன்னு கமல் சொல்றார்... அது மட்டும் அல்ல.. ஒரு வாரம் கழிச்சி தியேட்டர் போகாம அந்த 800 பேரும் திருட்டு விசிடி மற்றும் இண்டர்நெட்டுல டவுண்லோட் பெஸ்ட் பிரின்ட் எங்க கிடைக்கும்ன்னு   தேடுமே தவிர  கண்டிப்பா தியேட்டருக்கு போய் படத்தை பார்க்க போறதில்லை.... அவுங்க கிட்டதான்  படத்தை கொண்டு போய் கமல்  சேர்கின்றார்... இதுல கமல் ரசிகர்கள் 10 சதவிகித பேர் ஆர்வத்துல டிவியில முதல்ல பார்க்கனும்ன்னு பார்க்கலாம்...

100 கோடி பட்ஜெட்... டிடிஎச்ல படத்தை போடறதக்கு 50 கோடி   வருமானம் வரும்ன்னு கணிச்சிட்டாங்க....படம் நல்லா இருக்கா இல்லையான்ன்னு தெரியாமைலேயே 50 கோடி வந்துடுச்சி  இதை விட ஒரு தயாரிப்பாளருக்கு என்ன வேனும்... அதே போல டிடிஎச் கனெக்ஷன் எல்லார் வீட்டுலேயும் இல்லை....

அதே போல படம் ரிலிஸ் ஆனா இரண்டு வாரத்துல நல்ல பிரிண்ட் டிவிடியில கொடுத்தா இன்னும்  தயாரிப்பாளர் லாபம் பார்க்க முடியும்...

கமராஜரை பற்றி எடுத்த காமராஜ் படம்... பெரிய கலெக்ஷ்ன் எடுக்கவில்லை.. டிவிடியாக மாற்றி 100 ரூபாய் விலை வைத்தார் படம் போட்ட  பணத்தை  தயாரிப்பாளர் எடுத்து விட்டதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்....

மதுபானக்கடை  படத்தினை டிவிடியாக இறங்கி இருக்கின்றார்கள்... தியேட்டரில் படத்தை மிஸ் செய்தவர்கள்.. ஒரிஜினில் டிவிடி வாங்கி பார்க்கின்றார்கள்... இன்று வரை ஆரண்யகாண்டம்  படத்தை தேடு தேடு என்று இணையத்தில்   தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்... ஒரிஜினல்   டிவிடி கொடுத்தால் நிச்சயம் அந்த படத்தை வாங்கி பார்பார்கள்....

டிடிஎச்சில் படம் ஒளிபரப்புவது என்பது சோதனை முயற்சிதான்... ஹாலிவுட்டில் கூட இப்படி யாரும்  யோசித்தது இல்லை... இந்தியாசில் கூட யோசிக்க வில்லை கமல் யோசித்து இருக்கின்றார்... தினசரி நாலு காட்சி போடவில்லை...ஒரே . ஒரு காட்சி மட்டுமே டிவியில்  ஒளிபரப்புகின்றேன் என்கின்றார்....  படம் வெளியாகி முதல் காட்சி பார்த்துக்கொண்டு இருக்கும் போதே, டுவிட்ரில், பேஸ்புக்கில் படம் சொதப்பல் என்று ஒரு பேச்சுக்கு சொல்லி விட்டால் கமல்  பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும்... ஆனால் படம் ரிலுசுக்கு முன்னே 50 கோடி பார்த்து விடுகின்றார்.. அதன் பின் தியேட்டர் கலெக்ஷன் இருக்கின்றது....பெரிய அடியில் இருந்து கமல் தம்பித்து விடுவார்... படம் நன்றாக இருந்தால் லாபமோ லாபம்.. ஆனால் படம் நஷ்டமடைந்தால் கமலுக்கு ஆதாரவு சொல்லக்கூட திரையுலகில் எவரும் இருக்கமாட்டார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை.




ஹனிமூன்னா மலைமேலேன்னு இருக்கும் பொது புத்தி போல, படம்ன்னா தியேட்டர்ன்ற பொது புத்தி  கண்டிப்பா மாறாது...அதே போல இது சோதனை முயற்சிதான்...ஒரு காட்சி ஒளிபரப்புவதால் எல்லாம் தியேட்டரும் ஒரே நாளில் கல்யாணமண்டபமாகி விடாது... இதுக்கு முன் மாறிய தியேட்டர்கள் திருமண மண்டப்ங்களாக மாற கமல்  மட்டும் காரணம்  அல்ல...... இது ஒரு முயற்சி மட்டுமே.... திரும்பவும் இந்த கட்டுரையின் முதல் வரியை படியுங்கள்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

31 comments:

  1. படம் நன்றாக இருந்தால் லாபமோ லாபம்.. ஆனால் படம் நஷ்டமடைந்தால் கமலுக்கு ஆதாரவு சொல்லக்கூட திரையுலகில் எவரும் இருக்கமாட்டார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை. ithuthan enaku bayama irukun. its ok. Be possitive. நல்லதே நடக்கட்டும்

    ReplyDelete
  2. நானும் டி டி எச் லே பார்க்கலாமான்னு யோசிச்சேன். கட்டணம் 1000 ரூபாயா..... வயசாயிடுச்சு.... முன்னே போல ப்டத்தை ரசிக்க முடியல்லை... அப்புறம் பார்க்கலாம் ... என ஒரு காரணத்தை யோசிக்க வேண்டியதுதான்......

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை... விரிவான அலசல்...
    எல்லாமே உண்மை...

    ReplyDelete
  4. விரிவான அலசல் ஜாக்கி ஸார்... நிறை குறைகளை தெளிவா சொல்லியிருக்கீங்க. DTH, DVD, INTERNET ரிலீஸ் எல்லாம் காலப்போக்கில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அவற்றை தடுக்கவே முடியாது. அதைவிட்டு விட்டு ஆர்ப்பாட்டம் செய்வதெல்லாம் வேஸ்ட் தான்.

    கமல் விஸவரூபத்தை AIRTEL / STAR DTH ல் ரிலீஸ் செய்கிறார் என்பதற்காக அவரை எதிர்க்கிறார்கள். இப்பொழுது SUN DIRECT எங்கே தங்களது கஸ்டமர்கள் அனைவரும் AIRTEL க்கு போய்விடுவர்களோ என்று பயந்து, ஸ்டுடியோ கிரீனிடம் அலெக்ஸ் பாண்டியன் DTH உரிமத்தை 20 கோடிக்கு வாங்க பேச்சு நடத்திக்கொண்டிருக்கிறார்களாம்! டெக்னாலஜி வளர்ச்சி என்பது தடுக்க முடியாத ஒன்று, நமக்கு எது வசதி என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். சுற்றி இருப்பவர்கள் எல்லாம் வளர்ந்துகொண்டிருக்கும் போது, நாம் மட்டும் பழையதை மட்டுமே கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தால், நமக்கு தான் நஷ்டம்...

    ReplyDelete
  5. good one. If you find aaranyagaandam DVD, Let us know. I love that movie it is a must in the rack DVD

    ReplyDelete
  6. Good one

    If you know Aaranayagaandam DVD is available somewhere, let us know..

    ReplyDelete
  7. Mr.Jackie.. Excellent & detailed article.. 100% agree with all points.. This is the same field, which never think about OR never wanted to help out Mr.GV OR other failed producers.. Eventhough they had given so many good films, a single film change their entire life. I believe Kamal will win and he need to. Wish him good luck and my best wishes for your detailed article.

    ReplyDelete
  8. என்ன பண்ணிணாலும் நான் இன்டர்நெட்டில் நல்ல பிரிண்ட் வந்தால் பார்ப்பேன். என்னத்துக்கு 1000 ரூபாய் கொடுத்து டி.டி.ஹெச் ல பாக்கணும்?
    தியேட்டரில் நியாயமான விலைக்கு டிக்கெட் கொடுத்தால் போய்ப் பார்பேன்.

    'நான் ஈ ' படத்தை தியேட்டரில் போய்த்தான் பார்த்தேன். விஸ்வரூபம் படமும் நல்லா இருந்துச்சுனா தியேட்டரில் பார்ப்பேன். இல்லேன்னா இன்டர்நெட் தான்.

    துப்பாக்கி படமும் இன்டர்நெட்டில் நல்ல பிரிண்டுக்காக காத்திருக்கேண்.

    கமலின் அன்பே சிவம் படத்தை தியேட்டரில் தான் பார்த்தேன். திருட்டு விசிடியில பார்க்கல.

    ReplyDelete
  9. காலையில் ஆறு மணிக்கு உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன்...9 மணிக்குதான் முடிந்தேன்... இன்னும் எழுதி இருப்பேன்... அலுவலகத்துக்கு நேரம் ஆகி விட்டபடியால்.... சட்டென முடித்து விட்டு கிளம்பிவிட்டேன்... வாழ்த்துகள் எஸ்எம்எஸ் மூலம் குவிகின்றது.. போன் செய்து நன்றாக இருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள்... இதை விட வேறு என்ன வேண்டும்.??

    நன்றி நண்பர்களே பின்னுட்டமிட்ட கருத்துக்களை தெரிவித்தமைக்கு,...

    பிரியங்களுடன்
    ஜாக்கிசேகர்....

    ReplyDelete
  10. ஆழமான, விரிவான அலசல்...
    வாழ்த்துக்கள் ஜாக்கி...
    தொடரட்டும்......

    ReplyDelete
  11. நல்ல அலசல்! தியேட்டர் கட்டணம் உயர்ந்ததுதான் மக்கள் சினிமாவுக்கு வராதது காரணம் என்பது நிஜமே! எனக்கும் சில நல்ல படங்களை டிவிடியில் நல்ல பிரிண்டில் கிடைத்தால் பார்க்கலாம் என்று தோணும்! திரையில் ஒரே வாரத்தில் காணாமல் போய்விடும் சிலபடங்க்ளை இப்படி டிவிடியில் குறைந்த விலையில் தரமாக தர முயற்சிக்கலாம்!

    ReplyDelete
  12. பல நல்ல படங்கள் கூட தோல்வியடைந்ததுதான் கமல் அவர்களின் இம்மாதிரியான முயற்சிகளுக்கு காரணமாக இருந்திருக்கலாம். மிக நல்ல முயற்சி. ஆனால் ஆயிரம் ரூபாய் கொடுத்து டிடிஎச் சில் பார்ப்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது. மிக சிறப்பான அலசல்.

    ReplyDelete
  13. இந்த 1000 ரூபாயை சமாளிக்க ஒரு யோசனை. ஒரு பத்து அல்லது பதினைந்து பேர் சேர்ந்து ஒரு DTH ஒளிபரப்புக்கு பணம் கட்டி, ஒரே இடத்தில், LCD Projection or Big LED TV, 5.1 Home Theater ல் இணைத்து ஒன்றாக அமர்ந்து பார்க்கலாம். கரண்ட் ஒரு பிரச்சினை. படம் ஓடும் நேரம் முழுதும் UPS ல் connection கொடுத்து விட வேண்டியது தான். இப்படி செய்தால் ஆளுக்கு ஒரு 100 ரூபாயோடு முடிந்து விடும். முக்கியமான விஷயம், என்ன தான் DTH ஒளிபரப்பு என்றாலும், இது போன்ற படம், நல்ல TV or Projection and Good Sound System இருந்தால் தான் பார்க்க நன்றாக இருக்கும். விளம்பர இடைஞ்சல்களும் இருக்கக்கூடாது. ஆனாலும் Auro 3D ஒலியில் சத்தியம் திரை அரங்கில் இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும். இன்னொன்று, கமல், இந்த படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று அபார நம்பிக்கை வைத்து இருப்பதால் தான் DTH முயற்சி செய்கிறார் என்று நினைக்கிறேன். இல்லை படம் டமால் ஆனாலும் ஆகலாம், அதனால் வந்தவரை லாபம் பார்க்கலாம் என்று நினைக்கிறாரோ என்றும் தோன்றுகிறது.

    ReplyDelete
  14. Good detailed article.. thanks..
    I like your punch lines

    ஹனிமூன்னா மலைமேலேன்னு இருக்கும் பொது புத்தி போல, படம்ன்னா தியேட்டர்ன்ற பொது புத்தி கண்டிப்பா மாறாது..

    ReplyDelete
  15. நேர்மையான நடுநிலமையான விமர்சமனம்.
    நீங்கள் தெரிவித்த விசயங்களை திரை அரங்கங்கள் பின்பற்றினால் நல்லதே நடக்கும். நல்லதுக்கு காலம் இருக்கா!
    திரைத்தொழில் புதுமை கமலஹாசனால் மட்டுமே முடியும்

    ReplyDelete
  16. ஆரண்யகாண்டம் தயாரிப்பாளரிடம் சொல்லி டிவிடி போட சொல்லுங்கள்.

    ReplyDelete
  17. SUCH A LONG N VERY VERY VERY NICE REVIEW JACKIE SIR..... GUD.....V R EXPECTING MORE N MORE FROM U..... YAZHINI PAPA vai rombo kettatha sollunga....

    ReplyDelete
  18. Really true. We've to think in all dimensions, as u said, aaranya kandam and other good movies are not known by many people. When they came to know, they can't find them in theatres. Because, on every friday, new films are released, repeat audience are occupying theatres because of ticket rate.

    On the whole, its a right move by a kamal, as a producer as a cinema lover. He wanted to make the cine industry living. Theatre owners looking their income, they not ready to realise that films are their major source of income. Much the films produced much they gain..

    Let it be a matter of time..

    ReplyDelete
  19. கமல் பற்றி தெரியாதவர்களுக்கு அவருடைய பாடல் சொல்லும்.....
    யார் என்று புரிகிறதா
    இவன் தீ என்று தெரிகிறதா
    தடைகளை வென்றே
    சரித்திரம் படைத்தவன்
    ஞாபகம் வருகிறதா ;)

    ReplyDelete
  20. நண்பரே எனது இதயங் கனிந்த கிருத்துவ மற்றும் புது வருட நல் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  21. orey kallil irundu mango adika myrichi seikirar ."ulaga nayagn " avrudiya myarchiku enathu valthukal.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner