ஸ்டீம் ரைஸ்…



சாப்பாட்டில் சுவையை எதிர்பார்ப்பேன்.. ஆனால் சமையல் தெரியாத நபர் சமைக்கும் போது, அதில் நொட்டை நொள்ளை சொல்லும் நபர் நான் அல்ல....


சமையலில்  பெரிய எக்ஸ்பர்ட் எல்லாம் இல்லை ஆனாலும் அவசரத்துக்கு சாப்பாடு வைத்து தயிர் ஊற்றி ஊறுகாய் தொட்டு சாப்பிடும் அளவுக்கு நான் எக்ஸ்பர்ட் என்பதை இங்கே பதிவு செய்கின்றேன்.

நாலு தங்கைகள் ஒரே பையன் என்பதால், சாப்பாடு சாப்பிடும் போது எனக்கு எப்பவுமே தனி மரியாதை உண்டு...எனக்காய் என் தங்கைகள் மீன்ழகும்பு வைத்து அசத்துவார்கள்...முட்டை இல்லாமல்  நான் சாப்பிட்டதே இல்லை...ஒரு முறை என் தங்கை சாப்பாடு எடுத்து வைத்து விட்டு ஆம்லேட் போட்டு வைக்கவில்லை என்று தயங்கி தயங்கி  சொன்னாள்...அவ்வளவுதான்.. வானுக்கும் மண்ணுக்கு குதித்தேன் சாப்பாடு  தட்டை போட்டு உடைத்தேன்.

கடவுள் என் சேட்டைகளை பார்த்தார்..சுத்த சைவமான பெண்ணை எனக்கு மனைவியாக்கினார்...அதில் இருந்து உணவு ருசி விஷயங்களில்  ரொம்ப அடக்கியே வாசிக்கின்றேன்...

அதே போல எந்த ஓட்டலுக்கு போனாலும் எந்த உணவு பிடித்த உணவோ... அதை சாப்பிடுவதே எனக்கு மிகவும் பிடிக்கும்... புதிய பெயரில் வரும் உணவை டிரை பண்ணவே ரொம்பவே யோசிப்பேன்...சிக்கன் பிரைட் ரைஸ் தந்தூரி சிக்கன் இதுதான் நான் அடிக்கடி ஆர்டர் செய்வேன்...

ஏங்க வித்தியாசமா  ஏதாவது  ஆர்டர் பண்ணி சாப்பிடுங்களேன்  என்று என் மனைவி எப்போதும் கடிந்துக்கொள்ளுவாள்... பசிக்கும் ருசிக்கும் சாப்பிடறேன்‘..புதியதாய் வந்த உணவை ஆர்டர் சொல்லி நிம்மதியாக சாப்பிடாமல் நெளிவதை நான் விரும்புவதில்லை என்பேன்......

பெயர் வருவதை அவர் விரும்பவில்லை..

ஜாக்கி  இந்த வாட்டி பெங்களூர் வந்தா அவசியம்  சந்திக்கனும்... போனவாட்டி  எம்ஜி ரோட்டுல இருக்கற சைனிஸ் ரெஸ்ட்டாரண்டுக்கு போனோம்... இந்த வாட்டி திபேத் ரெஸ்ட்டாரண்டுக்கு போலாம்.... நானும் என் பிரண்ட்ஸ்சும் அந்த ஓட்டலுக்கு  அடிக்கடி போவோம் கண்டிப்பாக அங்க  மீட் பண்ணுவோம்.... வெள்ளிக்கிழமை லஞ்சுக்கு அங்கதான் மீட் பண்ணறோம் என்றார்...ஒரு டூ அவர் பிரி பண்ணிக்கோங்க என்று முன்பே சொல்லி  விட்டார்...

இன் ஒர்க் என்ற  அந்த ஓட்டல் ரிச்மர்ன்ட் சர்க்கிள் போகும் வழியில் பால்வீன்  பெண்கள் பள்ளிக்கு சற்று முன்னே அந்த ஓட்டல்  இருக்கின்றது....

ஜாக்கி ஓட்டல் எப்படி இருக்கு? என்றார்...முன்பு இந்த ஓட்டல் அண்டர்கிரவுண்டில் இருந்ததாகவும் தற்போது பர்ஸ்ட் புலோரில் இயங்குகின்றது என்றார்...  சின்ன ஓட்டல்  சிம்பிளாக இருந்தது...வெயிட்டர்கள் திபேத் பசங்கள் போல...அயன் பாக்ஸ் வைத்து  மூஞ்சியில் தேய்த்தது போல முகம் சப்பையாக இருந்தது...

 அக்குள் தெரிவது போல ஆறு பெண்கள் கலகலப்பாக சிரித்து பேசி மகிழ்ச்சியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்... ஒரு  நண்பர்கள் கூட்டம் டீரிட்டுக்கு வந்து இருக்க வேண்டும்... சகலத்தையும் ஆர்டர் செய்து கொண்டு இருந்தார்கள்...



இரண்டு பேர் ஷேர் மார்க்கெட் பற்றி ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டு இருந்தார்கள்...

நாங்க தமிழில் உரையாடிக்கொண்டு இருந்தோம்...

பாஸ் இந்த இடத்தையும் இந்த ரோட்டையும் என்னால மறக்கவே முடியாது...

ஏன் ஜாக்கி...

இங்க இருந்து மூன்றாவது லெப்ட்டு வளைஞ்சா ரிபப்ளிக் ஆஸ்பிட்டல்லதான் யாழினி பொறந்தா... அதனால இந்த ஏரியா புல்லா அத்துப்படி. என்றேன்....

 என்ன சாப்பிடலாம்.ஜாக்கி??.. இங்க என்ன நல்லா இருக்குமோ அதை சொல்லுங்க என்றேன்.

இல்லை நீங்க சொல்லுங்க என்றார்...

இங்க பாருங்க நான் ஆர்டர் சொன்னா ... சிக்கன் ரைஸ் சில்லி சாஸ்ன்னு சொல்லி  சாப்பிட்டு விட்டு எழுந்து போயிடுவேன் அதுதான் எனக்கு  தெரியும் என்றேன்.

Momo  என்று மேனுக்கார்டில் பார்த்தேன்.. அது என்ன?? எப்படி இருக்கும்  என்று கேட்டேன்... ?

ஜாக்கி நம்ம ஊர்ல வெள்ளைக்கொழுக்கட்டை  செய்வாங்களே அதான் அது என்றார்... பட் ஸ்டீம் நுடுல்ஸ் மற்றும் ஸ்டீம் ரைஸ் இங்க நல்லா இருக்கும் என்றார்...

சரி அதையே ஆர்டர் செய்யுங்க என்றேன்.

அவருக்கு ஸ்டீம் நூடுல்சும், எனக்கு சிக்கன் ஸ்டீம்  ரைசும் ஆர்டர் செய்தோம்..


ஒருவர்  தனியாக வந்தார்... அவரது காதில் ஹெட்செட் வைத்து இருந்தார்...சைகையில் ஆர்டர் செய்தார்... யாரையும் பார்க்கவில்லை... பாட்டுக்கேட்டுக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்...

 எங்கள் பக்கத்தில் ஒரு கப்பிள் வந்து  உட்கார்ந்தார்கள்...அந்த பெண் தமிழும் தெலுங்கும் கலந்த கலைவையாக இருந்தார்.. முகம் திருத்தமாக இருந்தது-..குசு குசு என்று பேசிக்கொட்ணடார்கள்...

 ஆர்டர் செய்த அரைமணிநேரத்துக்கு பிறகு ... பவுலில் நாங்கள் ஆர்டர் செய்த அயிட்டம் வந்து சேர்ந்தது,.. மேலே இலை தழைகளை பரப்பி ஆவி  வந்துகொண்டு இருந்தது.....

ரைசில் சூப் மிக்ஸ் செய்தது போல இருந்தது... நீர் விட்டு இருந்தது.. வாயில் எடுத்து ஒரு வாய் வைத்தேன்... அடப்பாவிங்களா கழினி தண்ணியில  கொஞ்சம் மசாலாவை போட்டு, வேக வைத்து கொடுத்து இருக்கின்றார்கள்.. எத்தனை வாட்டி வடி கஞ்சியில  உப்பு போட்டு அம்மா ஆத்தி பசிக்கு கொடுத்து இருக்காங்க.,..?

அடப்பாவிங்களா? இதுதானாட ஸ்டீம் ரைஸ்..??????

தங்கச்சியும், மனைவியும் குக்கரில்  சாப்பாடு வைக்கும் போது விவில் மறந்து ஒரு விசிலுக்கு முன்ன இறக்கிட்ட சாப்பாடு சொத சொதன்னு இருக்கும் பசிக்கு சட்டுன்னு எடுத்து வந்து வச்சிட்டா..?

 வெளித்தெருவுக்கு போயிட்டு பசியோடு வீட்டுக்கு வரேன்... ஒரு சாப்பாடை உருப்படியா வடிச்சி போட துப்பில்லை... ஒம்மால வாய் மட்டும் வழுதாஊரு  வரைக்கும் இருக்கும்... ஒரு   சோத்தை வடிக்க துப்பில்லை என்று எகிறி குதித்தது நியாபகத்துக்கு வந்து தொலைத்தது..


தென் ஜாக்கி, ஹவ் ஈஸ் ஸ்டீம் சிக்கன் ரைஸ்... என்றார்...

வடிகஞ்சி சிக்கன் ரைஸ்...ச்சே ஸ்டீம் சிக்கன் ரைஸ், இட் வாஸ் ஆவ்சம் என்றேன்...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

13 comments:

  1. anne, chennai film festivalla padam paarthu engaluku review eluthuiveenganu paartha, bangalorela irukeenga.

    ReplyDelete
  2. ரைசில் சூப் மிக்ஸ் செய்தது போல இருந்தது... நீர் விட்டு இருந்தது.. வாயில் எடுத்து ஒரு வாய் வைத்தேன்... அடப்பாவிங்களா கழினி தண்ணியில கொஞ்சம் மசாலாவை போட்டு, வேக வைத்து கொடுத்து இருக்கின்றார்கள்.. எத்தனை வாட்டி வடி கஞ்சியில உப்பு போட்டு அம்மா ஆத்தி பசிக்கு கொடுத்து இருக்காங்க.,..?

    அடப்பாவிங்களா? இதுதானாட ஸ்டீம் ரைஸ்..??????

    கழினி தண்ணிய கூட ஏ.சி ரெஸ்டாரென்ட் சாப்பிடரது ஒரு passion ஆகி போச்சு அந்ந காலத்து ஆயா செஞ்ச ஆயிட்டாம் எல்லாம் இப்ப இவங்க Special item னு சொல்லறாங்க

    ReplyDelete
  3. கண்ட இடங்களுக்குப் போய் கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்காதீங்க....

    ReplyDelete
  4. இதுக்கு பெங்களூரு எதுக்குப் போகணும்? வூட்லயே பழைய சோத்தைக் கரைச்சு குடிச்சிருக்கலாமே?

    ReplyDelete
  5. Momo saapttu paarunga Brother... Enakku romba pudikkum. veg Momo, chicken Momo and Mutton Momo... superaa irukkum... But ungalukku epdinu theriyalai... try panni paarunga...

    ReplyDelete
  6. In Wok or Silver Wok used to be a very good Chinese restaurant, the taste might have gone poor.

    ReplyDelete
  7. இதுக்கு தானே நான் எப்பவும் உங்க பானியே கடை பிடிக்கிறது.எந்த ஹோட்டல் ரெஸ்டாரன்ட் போனாலும் சிக்கன் பிரியானி ஆடர் செய்து விட்டுதான் ருசி பார்க்கும் அயிட்டத்தை ஆடர் செய்வது.முதலெ நம்ம வயிறு நிரம்பனும்.அப்பறம் தான் அடுத்த அயிட்டம் டேஸ்ட் பார்க்குறது.னக்கு பிடிக்காத அயிட்டத்த முதல சாப்பிடுற வழக்கம் எப்பவும் வாய் வைக்கிரதுஇல்லை.

    ReplyDelete
  8. கண்ட இடங்களுக்குப் போய் கண்டதையும் சாப்பிடுவது நல்லதல்ல என்று நன்கு புரிந்து கொண்டேன்

    ReplyDelete
  9. ஜாக்கி சார்ருக்கே பல்பு ahhhh..........யாழினிக்கு என் அன்பை தெரிவியுகள்.....

    ReplyDelete
  10. ஜாக்கி சார்ருக்கே பல்பு ahhhh..........யாழினிக்கு என் அன்பை தெரிவியுகள்.....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner