சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(02/12/2012)ஞாயிறு.


ஆல்பம்...

ஒரு சொட்டு தண்ணீர்  கூட கொடுக்கமாட்டேன் என்று சொன்னார் என்று நம் முதல்வர் சொல்கின்றார்..
நான் அப்படி ஒரு வாக்கியத்தை  சொல்லிவே இல்லை என்று ஷெட்டர் சொல்கின்றார்... யார் சொல்லுவதை நம்புவது  என்று தெரியவில்லை...அனால் தினமலரில்  அன்று போட்டு இருந்த கார்ட்டூன் செமை டைமிங்...
============
நீர் இருப்பு என்ன? நீர்  தேவை என்ன என்று உச்சநீதி மன்றம்  கேள்வி   கேட்டு இருக்கும் இந்தவேளையில் புதிய காற்றுழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கின்றது...  மழை அதிகம் பெய்தால்  இந்த வருடம் அப்படியே மறந்த விட்டு அடுத்த வருடம் இதே நேரத்தில் மாரி  மழை பொய்த்து போனால் திரும்ப உச்ச நீதி மன்ற கதவை தட்டுவோம்...
===========
என்கவுண்டர் நடந்தமைக்கு வழக்கமான கதைதான் கூறப்பட்டு இருக்கின்றது....இருந்தாலும் மனித உரிமை ஆர்வலர்கள் இரண்டு பேர்.... போலி என்கவுண்டர் என்று மதுரையில் போஸ்டர் அடித்து ஒட்டிய போது போலிசார் இருவரையும்  கைது செய்து இருக்கின்றார்கள் என்று செய்தி வந்து இருக்கின்றது...
===========
ha ha ha  

==============
புத்தக அறிமுகம்..

நமக்கும் ஆங்கிலத்துக்கும் ரொம்ப  பெரிய இடைவெளின்னாலும் நண்பர் செல்லமுத்து குப்புசாமி இரண்டு புத்தகங்கள் எழுதி இருக்கின்றார்...  


எந்த பதிப்பாளரின் உதவியும் இன்றி தானே வெளியிட்டு இருக்கின்றார்.....


தேவைப்படும்நபர்கள் வாங்கி பயண்அடைய கேட்டுக்கொள்கின்றேன்...


மேல் விபரங்களுக்கு.,..


===================

மிக்சர்..

இந்த  மாதத்தில் 5 ஞாயிற்றுகிழமை....4 சனிக்கிழமை வர இருக்கின்றது..835 வருசத்தக்கு ஒரு கா இது போல வரும்ன்னு சொல்லறாங்க..... 
==================
ரயிலில் பயணம் செய்ய இனி அடையாள அட்டை அவசியம் என்ற சட்டம் வரவேற்க்க தக்கது என்றாலும் அடையாள அட்டை கடை கோடி இந்தியனுக்கும் ஒரே  மாதிரியான அட்டை கொடுக்கப்படவேண்டும் என்பது என் கருத்து.
==============
சென்னை மாம்பலத்தில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்று செய்திகள் கசிகின்றன.... அடக்கடவுளே.....
==============
5முறை தமிழ்நாட்டின் முதலமைச்சாரகவும், 12 முறை எம்எல்ஏவாக இருந்த கலைஞருக்கு சட்டசபையின் வைரவிழாவில் முறையான அழைப்பு இல்லை... அதுதான் தமிழக அரசியல் நாகரீகம்....அதை விடுங்க.. ஆனால் வைரவிழாவை தலைமை தாங்க வந்த முதல் குடிமகன் பிரனாப் முதலில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியை சந்தித்து அதன் பின் வைரவிழாவில் கலந்து கொண்டது மட்டும் அல்ல... சபையில் அமைச்சர்கள் அம்மா புகழை பாடிக்கொண்டு இருக்கும் போது பிரனாப் பேசுகையில்..... எதிர்கட்சித்தலைவரும் என் அருமை நண்பருமான திரு.கருணாநிதி அவர்கள் 12 முறை உறுப்பினராகவும் 5 முறை முதல்வராகவும் இருந்த மாமன்றம் இது என்று பேசி சட்டசபை வைரவிழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஒரு கவுரவத்தை கொடுத்தார் என்றே சொல்லவேண்டும்...
=============
பச்சாதாபமே பார்க்கதிங்க... முக்கியமா கூட வேலை செய்யற பொம்பளை பசங்க பேனா கேட்டா கொடுக்கவே கொடுக்காதிங்க... கைய வீசிக்கிட்டு வந்து ஜாக்கி சார் பேனா பிளிஸ் அப்படின்னு கேட்டா..? கொடுக்கமுடியாது போ.... அம்மா வையும் என்று சொல்ல வாய் வரமாட்டடேன் என்கின்றது...பேனா இரவல் கேட்டா அப்பிடியே ஆபிட்டு உட்டுடறானுங்கன்னுதான் மூடியை கழட்டி வச்சிக்கிட்டு கொடுக்கறது... அப்படியும் போன போன பேனா திரும்பி வருவதில்லை... இதுவரை 15 மூடிகள் சேர்த்து வச்சி இருக்கறதுதான் மிச்சம். ;-) இப்படிக்கு டெய்லி பேனா எடுத்து போய் தர்மம் பண்ணி விட்டு வருவோம் சங்கம்.
==============
நானே மாசக்கடைசியில கடுப்புல…… என்னைக்கு ஒன்னாம் தேதி வரும்ன்னு மோட்டுவாளையை பார்த்து ஒட்கார்ந்துக்கிட்டு இருக்கேன்ஒரு பொண்ணு போன் பண்ணி, சார் ஒரு இன்வெஸ்ட்மென்ட் பிளான் பத்தி 10 நிமிஷம் பேசலாமான்னு கேட்டா? கண்டிப்பாஇரண்டு லட்சம் என்கிட்டு முதல்ல கொடுத்துட்டு இன்வெஸ்ட்மென்ட் பிளான் பத்தி கண்டிப்பா பேசலாம்னு சொன்னேன்…. டொக்ன்னு போன் வச்ச சத்தம் மட்டும்தான் கேட்டுச்சி…:-)
===========
18 மணி நேரம் மின்வெட்டில்  சென்னை தவிர்த்து  வடமாவட்டம் மற்றும் தென் மாவட்டங்கள் வாடிப்போய்  இருக்கின்றன.... எனக்கு தெரிந்து சென்னையிலும் மின்சாரத்தை கட் செய்து சம்மாக பகிர்ந்து கொடுக்க வேண்டும்...சென்னை மட்டும்தான் தமிழ்நாடா?- இன்றைய தினகரனில் அரைபக்கத்துக்க இரண்டு தமிழகத்தை பற்றி செய்தி வெளியிட்டு இருக்கின்றார்கள். என்றாலும்
பேஸ்புக்கில் தம்பி அப்துல்லா..  பகிர்ந்து செய்தியை நான் உங்களோடு  பகிர்ந்து கொள்கின்றேன்.........
=========
தலைவர் கலைஞர் ஆட்சியில் மின்சாரத் துறையில் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்றதால் 5 ஆண்டுகளில் 40000 கோடி நஷ்டம் என்று இந்த அறிவுலக மாமேதை ஆக்ஸ்போர்ட் பொருளாதார நிபுணர் சுப்ரமணியம் சாமி ஒருமுறை திருவாய் மலர்ந்தார். ஆமாம் அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்குத்தான் குடுத்தார். அதனால் 5 ஆண்டுகளில் 40000 கோடி மின்சார வாரியத்திற்கு இழப்புதான்! இதைச் சொல்ல பொருளாதார மேதையான நீங்கள் எதற்கு? சிறு குழந்தையும் இதைச் சொல்லுமே! ஆனால் இதன் உண்மையான பிண்ணனி என்ன தெரியுமா? அப்படி கலைஞர் செய்ததால்தான் தொழிற்சாலைகளில் பெரிய அளவில் உற்பத்தி பாதிப்பு இல்லை. வணிகம் நன்றாக இருந்தது. அதனால் அரசுக்கு பொருள்களின் உற்பத்தி விற்பனை மூலம் கிட்டும் வரியில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. தனக்கு ஆண்டு ஒன்றுக்கு வரி மூலம் கிட்டியதில் ஒரு பங்கை மின்சார வாரியத்திற்கு அதிக விலைக்கு வாங்க விட்டுக்குடுத்தார். ஆக நேரடிக் கண்ணில் நஷ்டம் என்றால் மறைமுக கண்ணில் நஷ்டம் இல்லை. ஆனால் இன்றைய நிலை என்ன? சில மேதைகளின் அறிவுரை ஏற்று மின்சாரா வாரியத்தை சீரமைக்கும் முகமாக அம்மையார் அதிக விலைக்கு வாங்குவதை நஷ்டம் என்று கூறி தடை செய்துவிட்டார். விளைவு? 18 மனி நேர பவர்கட். உற்பத்தி வணிக இழப்பு. கடந்த 6 மாத காலத்தில் மட்டும் ஏற்பட்டுள்ள உற்பத்தி இழப்புகளின் எண்ணிகை சுமார் 70 ஆயிரம் கோடிக்கும் மேல் என்று வணிக இதழ்கள் எழுதுகின்றன. ஆட்சிக்கு அம்மையார் வந்து ஒன்னரை ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்படியானால் கடந்த ஒன்னரை ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் கோடிகளுக்கும் மேல் உற்பத்தி மற்றும் வணிக நடவடிக்கை இழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம். இது மாநிலத்தில் பொருளாதாரச் சூழலைப் பெரிதும் பாதிக்கும் காரணி இல்லையா? இதன் மூலம் அரசு இழக்கும் வரிகள் பல ஆயிரம் கோடிகள் போகுமே! இப்ப சொல்லுங்க டாக்டர்.சுபரமணியம்சாமி... ஆக்ஸ்போர்டில் படிச்ச நீங்க பொருளியல் மேதையா? திருவாரூர் மு.ரா.சன்ஸ் ஜவுளிக்ககடை மஞ்சள் பையில் வெறும் சிலேட்டு மட்டும் எடுத்து சென்று போர்டு ஸ்கூலில் படித்து அதிலும் பெயிலாகி பாதியில் ஓடி வந்த தலைவர் கலைஞர் பெரிய பொருளியல் மேதையா? # படிப்புக்கும்,அறிவுக்கும் ஒருபோதும் சம்மந்தம் இல்லை என்பதை வரலாறு மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபித்து உள்ளது.
=============
அவனுங்க பண்ணுவானுங்க ... உனக்கு எங்க போச்சி புத்தி.....


==============
தத்துவம்...




===================
அனுபவம்.

வேளச்சேரி டூ தரமணி சாலையில் அந்த சிவப்பு சுடிதார் உட்கார்ந்து இருந்த பைக் .பேய் வேகத்தில் பறந்து கொண்டு இருந்தது... அந்த சிவப்பு சுடிதார்,தன் மார்பு கசங்கும் அளவுக்கு ,காதலன் முதுகில் பெவிக்காலின் பலமான இணைப்பு போல ஒட்டிக்கொண்டு பறந்தார்..

அவன் ஹெல்மெட் போட்டு இருந்தான்…. அந்த சிவப்பு சுடியின் ஷால் சாமி வந்து ஆடும் பெண்ணின் கூந்தல் போல ரோடு வரை அலைபாய்ந்து கொண்டு இருந்தது... அது விலை உயர்ந்த பைக் என்பதால் செயின் கார்டு எல்லாம் போடவில்லை..டேர்ட்டி பிக்சர் வித்யா பாலன் போல செயின் கார்டு இல்லாத செயின் தன் முக்கால் வாசியை காட்டிக்கொண்டு தன் இயக்கத்தில் கருமமே கண்ணாக இருந்தது... நானும் விரட்டி போய் பிடிக்க மூன்று மூறை முயற்சித்தேன்... மூன்று முறையும் சிவப்பு சுடிதாரும் ஹெல்மெட்டும் தப்பிக்கொண்டே இருந்தார்கள்.

ஒரு ஆட்டோ புண்ணியத்தில் அவர்கள் ஸ்லோவாக அவர்களை பிடித்து விட்டேன்...பாருங்க ஷாலு தரையை பெருக்குது பார்த்துக்கோங்க என்றேன்... என்னை பார்த்து அலட்சியமாக....அதுக்கு என்ன இப்ப? என்பது போல சிவப்பு சுடி பார்வையை என் மேல் வீசியது... எனக்கு ஒன்னும் இல்லைதான்....ஆனா இந்த வண்டிக்கு செயின் கார்டு கிடையாது ஷாலு போய் மாட்டிக்கிட்டா... அப்படியே கழுத்தை இருக்கிடும்...இப்படித்தான் சில மாதத்துக்கு முன்ன இதே டைப் வண்டியில ஒரு பொண்னோட ஷால் பிச் ரோட்டுல மாட்டிகிச்சி... அப்படியே கழுத்து அறுத்து புசுக்குன்னு அப்படியே ஒன்னுக்கும் பேண்டுலேயே வுட்டுக்கிச்சி என்று சொல்லவும்...

சின்னதாக தொங்க விட்டு இருந்த ஷாலும் சட்டென மடியில் சுருட்டி வைத்துக்கொண்டாள் அந்த சிவப்பு சுடி... இப்போது அவள் பார்வையில் முன்பு இருந்த அலட்சியம் இல்லை.. பயம் இருந்தது... அதுவரை அந்த பயல் ஹெல்மெட்டை கழட்டவே இல்லை... அவன் ஹெல்மெட் கண்ணாடி மேல்தூக்கி எனக்கு நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினான்...அவன் கண்களை எங்கேயோ பார்த்து இருக்கின்றேன்.. ரொம்ப பரிட்சயமான கண்கள்... இன்னும் யோசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்... விடை தெரிந்தால் சுவாரஸ்யம் இருந்தால் சொல்லுகிறேன்....
================
காலையில அவசரத்துல கௌம்பும் போது பேன்ட் ஜிப்பை போட மறந்து போய், வண்டியை ஸ்டைலா ஓட்டிக்கிட்டு போகும் போது ஜிப்பு போடலையேன்னு பார்த்துட்டு ஒரு கூச்சம் வந்து தொலைச்சி, யார் யார் பார்த்து சிரிச்சிட்டு போயிருப்பானோன்னு மனசு கெடந்து அடிச்சிக்கும்... இப்படி எல்லாம் திடுதிப்புன்னு  நடந்தா என்ன பண்ணறது?-




==================
சினிமா..
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்... படம் நன்றாக இருப்பதாக ரிசல்ட் வந்து கொண்டு இருக்கின்றது.... அதே போல நீர்பறவை படத்தின் ரிசல்ட்டும் நல்லவிதமாகவே வந்துக்கொண்டு இருக்கின்றது.. முக்கியமாக நீர்ப்பறவை படத்து டீசரில்  சமுத்திரகனி பேசும் வசனங்கள்   அருமையாக இருந்தது.... படத்தை பார்த்து விட்டு எழுதுவோம்... அதே போல போடா போடி திரைப்படம் வேஸ்ட் என்றார்கள்.. இப்போது படம் நன்றாக இருக்கின்றது என்கின்றார்கள்.... சரி இரண்டையும்  பார்த்து விட்டு முடிவு செய்வோம்..

===============
 எல்லா தமிழ் படத்துக்கும் உலக சினிமான்னு எழுதறிங்க உலகசினிமா என்றால் என்ன என்று  சிலர் கேட்கின்றார்கள்....தரமான சினிமாவைதான் உலகசினிமா என்று குறிப்பிடுகின்றேன்... நான் குறிப்பிட்ட சில படங்கள் மொக்கையாக   இருக்கின்றது என்று சிலர் கருதலாம்.... அதுக்கு  நான் ஒன்றும்  செய்ய முடியாது... தரமான படங்களை நான் அப்படித்தான் குறிப்பிடுவேன்....
==================


நான்வெஜ்18+

ஒரு பய டெய்லி  பார்ட்டிக்கு போயி பொண்ணுங்க கூட ஆட்டம்  போட்டு விட்டு ரொம்ப லேட்டா வீட்டுக்கு  வந்துக்கிட்டு இருந்தானாம்....பொண்டாட்டியும் பொறுமையா சொல்லி பார்த்தாளாம்... பயபுள்ளை கேட்கலை... இன்னைக்கும்  பார்ட்டிக்கு போய் விட்டு வீட்டுக்கு லேட்டாக வந்தால் ........என்று கீழ் இருக்கும் படத்தை எம்எம்எஸ்ல அவ புருஷனுக்கு அனுப்பிச்சாலாம்... சாயங்காலம் 5 மணிக்கு எல்லாம் அவ புருசன் வீட்டுக்கு வந்து வீட்டுக்கதவை தட்ட ஆரம்பிச்சானம்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

4 comments:

  1. நான் வெஜ்லே பயலை பயமுறுத்த அனுப்பிய படம் சூப்பர் சேகர்ஜி.

    ReplyDelete
  2. நான் அதிகமாக எதையும் விரும்பி படிப்பதில்லை ஆனால் உங்களது பகிர்வுகளை எதையும் விட்டு வைப்பதில்லை

    ReplyDelete
  3. நன்றி விவேக், அஜிம்பாஷா

    ReplyDelete
  4. .. இன்னைக்கும் பார்ட்டிக்கு போய் விட்டு வீட்டுக்கு லேட்டாக வந்தால் .......
    இனி ஆட்டம் போடுவானா........

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner