சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (26/11/2012)திங்கள்.


ஆல்பம்.
இரண்டு மணி நேர மின்வெட்டுக்கு சலித்துக்கொள்ளும்  சென்னை வாசிகள்....
சென்னையை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் 18 மணி நேரம் மின்வெட்டு இருக்கின்றது....18 மணி நேர மின்வெட்டில் என்ன கிழித்து  விட முடியும்....  என்  வீட்டில் யாரும் நிம்மதியாக தூங்க வில்லை.. நைட்டு இரண்டு மணி நேரம் போச்சின்னா  ஒரு மணி நேரம்தான் வருது எப்படி தூங்கறதுன்னு தெரியலை என்று தங்கை வருத்தப்படுகின்றாள்...  அட நம்மை விட்டு விடுங்க... அப்பாவால சுத்தமா முடியலை...சரி இதை  எல்லாம் விட்டு தள்ளுங்க .....எந்த தொழிலும் செய்ய முடியலை... எப்ப  கரண்டு  போவும்ன்னு பயந்து கிட்டு வேலை பாக்கறது போல ஒரு கொடுமை உலகத்துலயே இல்லை.... என்கின்றார்கள்.. தொழில் செய்பவர்கள். ஆனால் இது குறித்து எந்த பத்திரிக்கையும் கட்டுரை எழுதவில்லை... மக்கள் பிரச்சனையை முன்னிருத்தவில்லை... பொதுமக்களே வாய் மூடி மவுனித்து இருக்கும் போது அவர்களுக்கு என்ன கவலை...
============
அணு உலை கழிவுகளை.... கோலார் பகுதியில் கொட்ட புதைக்க கடும் எதிர்ப்பு எல்லாம்  பெரிய அளவில்  தெரிவிக்கவில்லை.... ஒரு நாள்  கடை அடைப்பு நடத்தினார்கள்.. அவ்வளவுதான்... மத்திய அமைச்சர் நாரயணசாமி  அங்கு அணுக்கழிவுகளை கொட்டி புதைக்கமாட்டோம் என்று ஒரே நாளில் ஜகா வாங்கி அறிக்கை விடுகின்றார்.... தண்ணி கொடுக்க மாட்டாங்க...   நெய்வேலி கரண்ட் மட்டும்  கர்நாடகாவுக்கு போகும்.... முல்லை பெரியாறுக்கு பிரச்சனை பண்ணுவாங்க.. இங்க விளையற பொருள் வேணும்... கூடங்கூளம் அணுக்கழிவு வேண்டாம்.. ஆனா  மின்சாரம்  மட்டும் வேண்டும்.. தமிழன் எப்பவுமே இளிச்சவாயன்தான்... தமிழ் நண்டு கதை போல....
=====================
பால்தேக்ரா பற்றி பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தமைக்கு கைது செய்யப்பட்டது கொடுமையிலும் கொடுமை...அதிகாரம்  இருந்தால் எதையும செய்வோம் என்று இந்தியாவில் ஆளும் அரசுகள் செய்யும் என்பது இந்த கைதுகளின் மூலம் வெளியாகி இருக்கின்றது... தொடர்ந்து சமுகவலைதளங்களை கண்காணக்கபடுவதுக்கு முக்கிய காரணம்.. ஆளும் அரசுகளில் அவலட்சனங்கள் உடனுக்குடன் படித்தவர்கள் இடையே பரவுவதை  அரசு விரும்பவில்லை.... ஆனால் இதை பற்றி  எந்த அரசும் பெரிசாக அலட்டிக்கொள்ள  தேவையில்லை... காரணம் சமுகவலைதளங்களில்  பொங்கும் பல பேர்   வாக்களிக்க  செல்வதே இல்லை... என்ன நடக்கின்றது என்று அறியாமல் தேர்தலின் போது காசு வாங்கி கொண்டு ஓட்டுப்போடும் பாமர மக்களை பார்த்து தான் ஆளும் அரசு பயப்பட வேண்டும் என்பது என்  கருத்து...
=====================
மரணதண்டனை வேண்டுமா?   வேண்டாமா? எனக்கு இதில்   மாற்றுக்கருத்து  இருந்தாலும்... கண் எதிரில் குருவி சூடுவது போல பொது மக்களை  சூட்டுக்கொன்றவனுக்கு கண்டிப்பாக மரணதண்டனை கொடுக்கத்தான் வேண்டும்...ஆனால் ராஜிவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இறந்து போக பேட்ரி  வாங்கி கொடுத்தவனுக்கு எல்லாம் மரணதண்டனை கொடுப்பதை எதிர்கின்றேன்.... அதே போல சமுக வலைதளங்களில்  மரணதண்டனையை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தவர்களை நான் அறிவேன்... ஆனால்  எல்லோரும் எதிர்க்கின்றார்கள் என்பதால் திடிர் குபிர் என்று  மரணதண்டனையை எதிர்த்தவர்கள் நிறைய பேர்களை பார்க்க முடிந்தது.
====================
2ஜி  ஏலம் வெறம் ஒன்பதாயிரத்துக்கு போய் இருக்கின்றது.. ஒரு லட்சத்தி எழுபத்தி எட்டாயிரம் கோடி  என்று என்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள் என்று இப்போது திருவாய் மலர்ந்து இருக்கின்றார்ஆர்பி சிங்...
=================
மீண்டும் ஜாதிக்கலவரங்கள் தொடங்கி விட்டன.... முளையிலேயே  கிள்ளி எரியவேண்டிய நேரம் இது.... எனக்கு  தெரிந்து பாமரார்களை விட படித்தவர்கள் இடையேதான் ஜாதி பார்த்து பழகுவது  அதிகம் இருக்கின்றது என்பேன்.
=============
மிக்சர்..
சென்னையில்  என்டிஎல் கால்டாக்சி என்ற புதிய கால் டாக்சியை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள்...லக்சூரி கார்களை கால் டாக்சிக்கு பயண்படுத்தி இருக்கின்றார்கள்... சென்னையில் பல இடங்களில் நிறைய கால்டாக்சிகளை பார்க்க  முடிகின்றது.
=============
சென்னை போலிசாருக்கு  ரவுண்ட்ஸ்க்கு  இன்னோவோ கொடுத்து இருக்கின்றார்கள்... அதிலும் சிகப்பு கலர்.... வெள்ளை கலர் கொடுத்தால்  சரியாக மெயின்டெயின் செய்ய மாட்டார்கள் என்பதால்  சிவப்பு  கொடுத்துவிட்டார்கள் போல.,.. ச்சே போலிஸ் ஸ்டேஷன் கலர் சிவப்பு இல்லை...???
==========
திமுகவுக்கு சோதனை வாரம் போல...வீரபாண்டி ஆறுமுகம் இரண்டு நாளைக்கு முன்...சமையபுரம் செல்வராஜ் சீரியஸ்...தமிழரசி விபத்து என்று..........

===============
டெங்கு பீவர்  இல்லை ஊடகங்கள்தான் பெரிதாக்குகின்றன என்றார்கள்... அப்படி அறிக்கை விட்ட இரண்டு நாளில் நடிகர் கார்த்தி தியேட்டர்களில் படம் போடும் முன் டெங்கு எப்படி வரும் ?அதை எப்படி தவிர்க்கலாம் என்று விளக்கினார்... கடலூர் கலெக்டர் 144  தடையுத்தரவே போட்டு போராடினார்.. ஆனால் டெங்குவை கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று எட்டாம் பிறந்தநாள் காணவேண்டிய சிறுமி டெங்கு காய்சலால்  மரித்து போய் இருக்கின்றார்.,..

இந்த இங்கிலிபீசு இன்னும் எத்தனை வருசத்துக்குதான் என்கிட்ட சடுகுடு ஆட்டம் காமிக்கும்ன்னு பார்த்துடறேன். ஆபிஸ்ல இருக்கும் போது முத முதல்ல "லைப் ஆப் பை " திரைப்பட விளம்பரத்தை பேப்பர்ல பார்த்துட்டு சத்தம் போட்டு "லைப் ஆப் பீ "ன்னு படிச்சி தொலைச்சி இருப்பேன்... பக்கத்துல இருந்த காம்பயர் பொண்ணு... ஹை..."லைப் ஆப் பை" மூவி....எப்ப ரீலிஸ் ஆகுது ஜாக்கின்னா...?( வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்) நான் அப்படியே என் இங்கிலிஷை நினைச்சு ஷாக்காயிட்டேன்...:-) :-) :-) :-)
நடிகை சோனா மீது கிரிமினல் வழக்கு- ஆண்கள் பாதுகாப்பு சங்கம்…//.டிஷ்யூ பேப்பர்ங்க எல்லாம் ஒன்னு சேர்ந்துடுச்சிங்க போல

எங்க அப்பாவை எப்படி எல்லாம் நக்கல் விட்டோனோ அது எல்லாம் ரொம்ப தப்புன்னு எனக்கு இப்ப தோனுதுஅப்பா அயம் சாரி….. ஒரு அப்பாவா நான் மாறிய போதுதான் அந்த வலியும் வேதனையும் என்னால் உணர முடிகின்றது…. எங்க அப்பா சொல்லுவார்ஒரு கட்டத்துக்கு மேல நான் எங்க எனக்காக வாழ்ந்தேன். உங்களுக்காகத்தான் வாழ்ந்தேன்னு சொல்லுவார்….அப்பல்லாம் யோசிப்பேன்டேய் தகப்பா யாருக்கிட்ட இந்த டகால்ட்டி கதையெல்லாம் உடறேன்னு யோசிப்பேன்….ஒரு கட்டத்துல அவருக்காக எதையுமே அவரு செஞ்சிக்கலைஎங்க அஞ்சு பேருக்குதான் செலவு செஞ்சார்அவருக்குன்னு ஒரு நல்ல சட்டைகூட எடுத்துக்கலைபத்துவருசத்துக்கு மேல அவுது.. நான் பட்டாசு வாங்கி வெடிச்சிபட் இந்த தீபாவளிக்கு 750ரூபாய்க்கு பட்டாசு வாங்கினேன் காசு செம டைட்தான் இருந்தாலும்.. யாழினியின் மகிழ்ச்சிக்காக வாங்கினேன்….இப்படித்தான் அப்பா புள்ளைங்களுக்கு , புள்ளைங்களுக்குன்னு நிறைய செலவு எங்களுக்காக செஞ்சி இருக்கார்அப்பா உங்க வலியை புரிந்துகொண்டேன்
குழந்தை குட்டியோடு டூவிலரில் வந்தவன் என்கிட்ட பாய்க்கடை பஸ்ஸ்டாப்புக்கு வழி கேட்டான்...நானும் குழந்தைகுட்டியோட டூவிலர்ல் உட்கார்ந்துகிட்டே கிளிப்புள்ளைக்கு வழி சொல்லறது போல ரொம்ப எளிமையா வழி சொன்னேன்... பத்தாவது கணக்கு பாடத்து கிளாஸ்ல வாத்தியார் சொல்ல சொல்ல நான் மண்டையாட்டியது போல அவனும் ஆட்டினான்..ஒரு கட்டத்துல அவன் டவுட்டை புரிஞ்சிக்கிட்டு குச்சால ஸ்கெட்ச் போட்டும் காண்பிச்சேன்....

நான் வழி சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டேன்...பத்து நிமிஷம் கழிச்சி,வண்டி கவர்ல சீடி வச்சி இருந்ததை மறந்து போயிட்டேன் சரி அதை எடுத்து வராலம்ன்னு வெளியே போனேன்...என் பின்னாடி ஒரு வண்டி வந்து நின்னுச்சி... சார் பாய்கடை பஸ்ஸடாப்புக்கு எப்படி போவனும்னு அதே குரல் கேட்க.. நான் திரும்ப என் முகத்தை பார்த்துட்டு உடனே வண்டியை கிளப்பிகிட்டு விட்டான் சவாரி... த்தா கையில மட்டும் அவன் சிக்கி இருந்தான்... அவன் அவ்வளவுதான்...எனக்கு என்ன வருத்தம்ன்னா.... வண்டியை விட்டு கிழ எல்லாம் இறங்கி குச்சி எடுத்து ஸ்கெட்ச் போட்டு வழி சொன்னேன்...அவன் மண்டையை மண்டை ஆட்டும் போதே லைட்டா டவுட்டை ஸ்மெல் பண்ணேன்... உஷாராயிருக்கனும்.... என்ன செய்ய விதி வலியது..

================

நான்வெஜ் 18+
anta Singh's wife was expecting and the baby was due any day.
Santa was very confident it would be a boy and was looking forward to the delivery day.

As fate would have it, he was transferred to another
city and had to go immediately.

Before going, he asked his father-in-law to send a telegram confirming the birth of his son.

But in order to avoid giving a party to his office colleagues, he asks his father -in-law to write "the clock has arrived" and he will understand that the son is born.

The D-day arrived. His wife delivered a cute little baby girl.

Now Santa's father-in-law didn't know what to do. If he writes "the clock has arrived" Santa will think he has a son.

If he writes "the clock has not arrived", Santa will get worried that something serious has happened. But being a very intelligent person, he finds a solution and sends the telegram.


Just read below, you will love it.
Santa received the telegram, opened it eagerly and reads:-


"The clock has arrived, but the 'pendulum' is missing."

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

11 comments:

  1. சான்ட்வெஜ் சூப்பர் .

    ReplyDelete
  2. //"The clock has arrived, but the 'pendulum' is missing."
    //
    சுப்பர்.
    என்ன? ஜக்கி இதெல்லாம் 18+ ஆ!

    ReplyDelete
  3. அப்பாவை பற்றி சொன்ன செய்திகள் உண்மையே, அன்னையும் அப்படியே. பிள்ளைகளுக்காக விட்டுக்கொடுத்து வாழும் வாழ்வே சுகம். அருகில் இருந்து பார்போருக்குத்தான் அது புரியும், மற்றவருக்கு அது வெறு கதையே........

    வாழ்த்துக்கள் யாழினி அப்பா.

    ReplyDelete
  4. Anna....

    Yazhini pappa, Unga wife eppadi irukkanga...

    Samuga akkarayoda nejaththai solliyirukkinga....

    (Power cut, cast, social site, Tamizhan, thookku thandanai ellame, ellame....)

    unga alavukku yarum velippadaya ezhuthalanna...

    Non veg nalla illanna.....

    -Kavitha Saran

    ReplyDelete
  5. Dear Mr.Jackie,

    sandwich & Noveg is super....and very touching when you say abt your father....

    Niraya Ezhuthungal......

    Regards

    Victor

    ReplyDelete
  6. ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் தளத்துக்கு வந்தேன் - அன்று போல் இன்றும் சாண்ட்விட்ச் அப்படியே அதே சுவை - பரிமாறியமைக்கு நன்றி

    ReplyDelete
  7. எந்த தொழிலும் செய்ய முடியலை... எப்ப கரண்டு போவும்ன்னு பயந்து கிட்டு வேலை பாக்கறது போல ஒரு கொடுமை உலகத்துலயே இல்லை.... என்கின்றார்கள்.. தொழில் செய்பவர்கள்

    yes

    சூப்பர் சான்ட்வெஜ்

    ReplyDelete
  8. ஜாக்கி அன்னே, அந்த லைப் ஆப் பை படத்தை பார்த்தேன் ஒரே அறுவை.இதுல வாடானு சொல்லி என் அன்னனே வேற கூட்டி போய் எனக்கு சரி திட்டு.

    ReplyDelete
  9. "LIFE OF PI" SAME FEELING THAN NA ENAKKUM

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner