ஆல்பம்.
நிறைய பிரச்சனைகள்...
நிறைய மனக்காயங்கள்... மீண்டு வரவே ஒரு மாதத்துக்கு மேல் ஆகி விட்டது... அது மட்டும் அல்லாமல் வேலைபளு அதனால் எழுத சோம்பேறிதனம்..யாழினியையும் பார்த்துக்கொண்டு மூன்று பாரா எழுதுவது பெரிய விஷயமாகி விட்டபடியால் பெரிய இடைவெளி விழுந்து விட்டது... இப்படி வருடா வருடம் நேர்வதுண்டு... பார்ப்போம்.
நிறைய மனக்காயங்கள்... மீண்டு வரவே ஒரு மாதத்துக்கு மேல் ஆகி விட்டது... அது மட்டும் அல்லாமல் வேலைபளு அதனால் எழுத சோம்பேறிதனம்..யாழினியையும் பார்த்துக்கொண்டு மூன்று பாரா எழுதுவது பெரிய விஷயமாகி விட்டபடியால் பெரிய இடைவெளி விழுந்து விட்டது... இப்படி வருடா வருடம் நேர்வதுண்டு... பார்ப்போம்.
==========
ஒரு வழியாக தீபாவளி முடிந்து
விட்டது...போனவருடம் தீபாவளி பண்டிக்கையுன் போது வாழ்வின் மிக முக்கியமானவர்கள்
என்று கருதியவர்கள் இந்த தீபாவளியின் போது அவர்கள் வீட்டு வாசலை கூட
மிதிக்கவில்லை.....ச்சே வாழ்க்கைதான் எவ்வளவு ஆச்சர்யங்களை ஒளித்து வைத்து
இருக்கின்றது..
============
மின்சாரம் இல்லாமல் தென் மாவட்டத்து மக்கள் இந்த ஆட்சியை வறுத்து எடுத்துக்கொண்டு இருந்தாலும்....ஒரு விஷயத்தில் பாராட்டியே ஆக வேண்டும்.. ஆம்னி பஸ் கொள்ளயை தடுக்க.... கடந்த வியாழக்கிழமையே சேலம், ஈரோடு, தேனி, கம்பம், என்று அனைத்து ஊர்களில்ஓடும் பாயிண்டு பாயிண்ட்டு லோக்கல் பஸ் எல்லாம் சென்னைக்கு வந்து விட்டன.. இதனால் மக்கள் எளிதாக ஊருக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்ய முடிந்தது....முன்னெச்செரிக்கையாக இந்த ஐடியாவை செயல்படுத்திய போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும், துறை அமைச்சருக்கும், அம்மாவுக்கும் நன்றி.
=============
பெரிய வெடிச்சத்தங்கள் இந்த முறை இல்லை... மழையும் இல்லை என்பதால் சென்னை மக்கள் பட்டாசை வெடித்து தள்ளி விட்டார்கள்....அதே போல பகலில் வெடிப்பதை விட இரவில் வெடிப்பதையே மக்கள் விரும்புகின்றார்கள்.
=========
சமுகவலைதளங்கள் மற்றும் போனில் வாழ்த்து சொன்ன
அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி....
============
ஒரு கப்பல் சென்னையை போட்டு கலக்கு கலக்கு
என்று கலக்கி விட்டது... கடந்த ஞாயிறு அன்று கடற்கரையில் செமக்கூட்டம். நானே அவ்வளவு பெரிய கப்பலை
அருகில் பார்த்தது இல்லை..குழந்தைகள்
எப்படி உணருவார்கள் என்பதை யோசித்து பாருங்கள்..
மிக்சர்.
========
டுவீட்டர் மேட்டருக்கு ஏன் கருத்து சொல்லவில்லை...
நான் என்ன கருத்து கண்ணாயிரமா? பட் என்னை
பற்றி சொல்ல முடியும்...அதிகமாக கோபம் எனக்கு உண்டு...அதை பல பதிவுகளில் காட்டி
இருக்கின்றேன்... நேரில் பழகி இருக்கும் அனைவருக்கும் அது தெரியும்... ஆனால் ஒரு போதும் நான் இணையத்தில்
பெரிய வாதம் நடத்தியதில்லை... அதுவும்...
லக்கியோடுஒரே ஒரு முறை மட்டுமே.. ஒரு முழுநாளை அந்த வாதம் முழுங்கி ஏப்பம்
விட்டது... அன்றிலிருந்து வாதம்
செய்வதில்லை... முக்கியமாக பெண்களிடம் நான் வாதமே செய்வதில்லை... அது ரொம்ப
டேஞ்சரஸ் சோன்.... என்னை மிக மோசமாக
சில பெண்கள் சீண்டி இருக்கின்றார்கள்.. ஆனால் அவர்களை மதித்ததே இல்லை என் அம்மா என்னிடம் என் கோபத்தை பார்த்து அடிக்கடி சொன்ன
விஷயம்… எல்லார்கிட்டயும் உன் கோபத்தை காட்டாதே தகுதியான ஆளுங்ககிட்ட
காட்டு… என்று .....
ஒருவரோடு பழகும் போதோ அல்லது பேசும் போதோ நாம் அலைவரிசையில்
பழகும் நபரா… அல்லது லாஜிக்கான வாதத்தை செய்வாரா? என்று தெரிந்த பிறகே நான் அவரிடத்தில் பேசுவேன்… அப்படி
பேசாத நபர்களை புறக்கணித்து இருக்கின்றேன்… இன்னும் சின்ன
பிள்ளைதனமாக வாதம் செய்தவர்களை புறக்கணித்து இருக்கின்றேன்...அதுவும் முடியவில்லையா?
பிளாக் செய்து விட்டு அடுத்தவேளை செய்ய போய் விடுவேன்… நமக்கு ஆயிரம் வேலை இருக்கு….ஒரு ஓட்டலுக்கு போறோம் சாப்பாடு
சரியில்லை… திரும்ப போறோம் அப்படியும் சரியில்லை..பக்கத்துலேயே இருக்கற ஓட்டலாச்சேன்னு மூன்றாவது முறையாக போகின்றோம் அப்போதும்
சரியில்லை…. ஆனால் நான்காவது
முறை நான் அந்த தவறை ஒரு போதும் செய்தது இல்லை....
என் கோபத்தை என் மனைவியும் குழந்தையும்
நிறையவே மாற்றி இருக்கின்றார்கள்…நிறைய தளங்கள் என்னை சீண்டின.. என்னோடு தோளில் கை போட்டு போட்டோ எடுத்து விட்டு, என்னை பற்றி மிக மோசமாக எழுதியவர்கள் எனக்கு தெரியும்….நாலு பேருக்கு தெரிய ஆரம்பிச்சிட்டோம்… காண்டுல என்ன
வேன்னா பேசுவான்… எல்லாத்துக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா?
நான் எப்படின்னு எனக்கு தெரியும்… எவன் கொடுக்கற
ஐஎஸ்ஓ சர்ட்டிபிகேட்டும்
எனக்கு தேவையில்லை. முக்கு
மேல் கோபம் வந்து இருக்கின்றது…நானே வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போய் இருக்கின்றேன்…பட் அனுபவம் மெல்ல மெல்ல பாடம் எடுக்க அமைதியாக இருக்கின்றேன்…
=================
மைதிலியை நேற்று வீட்டுக்கு வரச்சொல்லி இருந்தேன்... பரோடாவில் இருந்து வாசக நண்பர் மோகன் அனுப்பிய டிரஸ் பார்சலை கொடுத்து அவருக்கு நன்றி சொல்ல சொன்னேன்... ஈரோட்டில் இருந்து கார்மென்ட் பிசினஸ் செய்யும் ரமேஷ் இரவு உடைகள் மைதிலுக்கு அனுப்பிய பார்சல் இன்னும் கிடைக்கவில்லை... அதனால் பிறகு வந்து வாங்கி கொள்ள சொல்லி இருக்கின்றேன்....3500க்கு கூடிதார் செட்டும் செலவுக்கு 500 பணமும் கொடுத்து அனுப்பினேன்..அவளுக்கு உடை பிரச்சனை ஒரு வழியாக தீர்த்தது... நிறைய உடைகள் கண்ணில் பார்த்ததும் அந்த பெண் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... மைதிலிக்கு பரந்த உள்ளத்தோடு உதவி செய்த அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்...
(நண்பர் மோகன் பரோடாவில் இருந்து அனுப்பிய பார்சல்..... சரியாக துபாவளி அன்று மைதிலிக்கு கொடுக்கப்பட்டது...)
================
மைதிலியை நேற்று வீட்டுக்கு வரச்சொல்லி இருந்தேன்... பரோடாவில் இருந்து வாசக நண்பர் மோகன் அனுப்பிய டிரஸ் பார்சலை கொடுத்து அவருக்கு நன்றி சொல்ல சொன்னேன்... ஈரோட்டில் இருந்து கார்மென்ட் பிசினஸ் செய்யும் ரமேஷ் இரவு உடைகள் மைதிலுக்கு அனுப்பிய பார்சல் இன்னும் கிடைக்கவில்லை... அதனால் பிறகு வந்து வாங்கி கொள்ள சொல்லி இருக்கின்றேன்....3500க்கு கூடிதார் செட்டும் செலவுக்கு 500 பணமும் கொடுத்து அனுப்பினேன்..அவளுக்கு உடை பிரச்சனை ஒரு வழியாக தீர்த்தது... நிறைய உடைகள் கண்ணில் பார்த்ததும் அந்த பெண் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... மைதிலிக்கு பரந்த உள்ளத்தோடு உதவி செய்த அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்...
(நண்பர் மோகன் பரோடாவில் இருந்து அனுப்பிய பார்சல்..... சரியாக துபாவளி அன்று மைதிலிக்கு கொடுக்கப்பட்டது...)
================
இந்த வார விகடனில் வடிவேலுவின் பேட்டி
சூப்பர்... அனுபவம் மட்டுமே அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் ஆசான் என்பது கீழ்
இருக்கும் பேட்டி வரிகளில் தெரிகின்றது....
====
'முதல்வருக்கு உங்கள் மீது கோபம் ஏதும்
இருப்பதாக நினைக்கிறீர்களா?''
''ம்ஹூம்... சும்மா சொல்லக் கூடாது. அவங்க
பாட்டுக்கு அரசாங்க வேலையில கவனத்தைக் காட்டுறாங்க. அவங்களுக்கு இருக்குற வேலைக்கு
முன்னால நாம எல்லாம் ஒரு பொருட்டா? அப்புறம், அவங்க என் மேல கோவப்படற மாதிரி நான்
நடந்துக்கவும் இல்லையே? அவங்க இன்னைக்குச் சொல்றதைத்தானே நான்
அன்னைக்கே சொன்னேன்? இது வேற கதை. நம்மகூடவே திரிஞ்சுக்கிட்டு
எப்படா நாம கீழ விழுவோம்னு பார்த்துக்கிட்டு இருப்பாய்ங்க இல்ல... அப்படி ஒரு
கூட்டம் இதுக்குப் பின்னாடி இருக்கு.''
''தொழில் போட்டியைச் சொல்கிறீர்களா?''
''இருக்கும். நீங்க கண்ணாலகூட ஒருத்தரைப்
பார்த்திருக்க மாட்டீங்க. ஆனா, அவரு உங்களை எதிரியா நெனைச்சுக்கிட்டு இருப்பாரு. ஒருத்தரை
நேசிக்க எப்படி நியாயம் வேணாமோ, அதேபோல வெறுக்கவும் நியாயம் வேணாம். பச்சப்புள்ளகூட
என்னையப் பார்த்தா, 'வடிவேலு... வடிவேலு’னு குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும். எவ்வ ளவு
பெரிய வரம் இது? ஒருத்தருக்குக் கூட உறுத்தாமலா இருக்கும்?''
வாவ்....வடிவேலு சார் சூப்பரோ சூப்பர்.
===========
வாரம், வாரம் வெள்ளிக்கிழமை காலையையும் மிக சுவாரஸ்யம்
ஆக்குவது... தினகரனின் வெள்ளிமலர் இலவச இணைப்பு.... நண்பர் பைத்தியக்காரன் (எ)
சிவராமன் எழுதும் சுவாரஸ்யமான சினிமா தகவல்கள் பாமரரும் புரியும் மொழிநடையில்
தென்னகத்து மற்றும் ஹாலிவுட் சினிமா செய்திகளை எழுதி அசத்துகின்றார்... தென்னகத்து
இளைஞர்களிடம் மெல்லிதாய் மாற்று சினிமாவை பற்றிய விழிப்புணர்வையும் பரப்பி
வருகின்றார்... அவர் உழைப்புக்கு என் வந்தனங்கள்.
==============
முதலில் பூலான் தேவி போல முகத்தை மூடி
டூவிலரில் சென்றார்கள்… அடுத்து ஒரு சில பெண்கள்
ஆட்டோக்களில் இதே போல கொள்ளக்கூட்ட பாஸ் ரேஞ்சிக்கு முகமூடி அணிந்து சென்றார்கள்…ஆனால் இப்போது பேருந்திலும் முகமூடி கலாச்சாரம் பூட் போர்டு ஏறி இருக்கின்றது…இவ்வளவு நடந்தும் அழகு சாதனை பொருட்கள் விலை குறைந்து இருக்கின்றதா
என்றால்?- இல்லவே இல்லை.
====================
மை பீலிங்ஸ்..
நீயும் நானும் சந்திக்க நிறைய வாய்ப்புகள்
இருந்தும் சந்திக்க இரண்டு பேரிடமும் பெருத்த தயக்கம் இருக்கின்றது..…காரணம் பெரியதாய் ஒன்றும் இல்லை….
நீயும், நானும் ரொம்பவே நேசித்து தொலைத்துவிட்டோம்
என்பதை மட்டும் என்னால் உணர முடிகின்றது….:-)
=========================
தீபாவளி ரிலிஸ் படங்களில் இதுவரை துப்பாக்கி பற்றி மட்டுமே ரிசல்ட் வந்து இருக்கின்றது... போடா போடி பற்றி யாரும் எழுதவேயில்லை...ஒரே ஒரு பதிவு கண்ணில் பட்டது... கவிதை வீதி சவுந்தர் எழுதி இருக்கின்றார்..... அதை வாசிக்க.... இங்கே கிளிக்கவும்.
==========
நான்வெஜ்18+
என் பையன் ரொம்ப மோசம்
என்ன செஞ்சுட்டான்
என்னோட வேலைக்காரி கர்ப்பமாக காரணமாகிட்டான்
அடப்பாவி, அவனுக்கு 9 வயசுதானே ஆகுது…
ஆமா, ஆனா என்னோட ஆணுறைகளையெல்லாம் எடுத்து ஓட்டைப்
போட்டுட்டானே…
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...

ஒருவரோடு பழகும் போதோ அல்லது பேசும் போதோ நாம் அலைவரிசையில் பழகும் நபரா… அல்லது லாஜிக்கான வாதத்தை செய்வாரா? என்று தெரிந்த பிறகே நான் அவரிடத்தில் பேசுவேன்… அப்படி பேசாத நபர்களை புறக்கணித்து இருக்கின்றேன்… இன்னும் சின்ன பிள்ளைதனமாக வாதம் செய்தவர்களை புறக்கணித்து இருக்கின்றேன்...அதுவும் முடியவில்லையா? பிளாக் செய்து விட்டு அடுத்தவேளை செய்ய போய் விடுவேன்… நமக்கு ஆயிரம் வேலை இருக்கு…
ReplyDeleteஅருமையான அனுபவம வரிகள் அண்ணே எல்லாரும் இதையே கடைபிடித்தால் பிரச்சனைகள் குறைந்து போகும்
Dear Thala...
ReplyDeleteMore wishes...
Naanga..irukom...neenga..etharkum..worry..vendam..
Always..reading and following u.
So keep smile and make us 2 smile.
NTR
ps..Dress supeeeeeeeeeeeer...
இந்த பதிவு ஏனோ சுணங்குகிறது.
ReplyDeleteநல்லதொரு பகிர்வு! சின்மயி விசயத்தில் உங்கள் கருத்தும் வடிவேலு பேட்டியும் மிகவும் யதார்த்தமான உண்மையான கருத்துக்கள்! அருமை!
ReplyDeletenice post
ReplyDeletegood post
ReplyDeleteபதிவுகள் பல விதம் அதில் அண்ணே ஜாக்கி ஒரு விதம்.
ReplyDeleteGood post. I am coming to your site after a while. Nice to know that you are staying busy and life is going fine. Your daughter is growing big. :-)
ReplyDeleteJackie,
ReplyDeleteNice post.
Your daughter is growing big. Nice to see her picture.
அருமை
ReplyDelete