உப்புக்காத்து....12கட்டிய கணவனோ அல்லது மனைவியோ ஒருவருக்கு ஒருவர்  பிடிக்க வில்லை என்றால் விவாகரத்து ஒன்று மட்டுமே நிரந்தர தீர்வாகும்.


ஆனாலும் ஒரு சில ஆண்கள் விவாகரத்து கொடுத்து விட்டு தன்னுடைய மனைவி பிரிந்து,  வேறு  ஒருவரை மணந்து பிள்ளை குட்டிகளுடன் செட்டில் ஆகி விட்டாலும்  தொடர்ந்து தொல்லைகொடுக்கும் ஆண்கள் இந்த சமுகத்தில் ஏராளம்..

காரணம்..  பெண்ணை ரொம்ப கீழ்த்தரமான பிறவியாக நினைத்துக்கொள்வது.. விவாகர்த்து கொடுத்து விட்டால் அவளோடு எந்த ப பந்தமும் இல்லை என்று சட்டம் சொல்லுகின்றது...  

கண்டாற ஓழி  என்னை விட்டு விட்டு அவன் கூட சந்தோஷமா புள்ளை குட்டியோட வாழறியா?  உன்னை நிம்மதியா இருக்க விடமாட்டேன்டி என்று,  தன் வாழ்க்கையையும் அழித்துக்கொண்டு பிரிந்து  போன முன்னாள் மனைவி வாழ்க்கையையும் அழிக்க ஏதோ  ஒரு வேள்விக்கு தயாராவது போல தயாராகின்றார்கள்.


 தமிழகத்தில் மனம் ஒத்து வரவில்லை என்றால் பிரிந்து வாழ்வது இந்த காலத்தில் ரொம்ப சர்வசாதரணமாக மாறிவிட்ட அதே வேளையில், திருமணம் முடிந்து ஹனி முனுக்கு அழைத்து போய் முன்னாள் காதலனுடன் சேர்ந்து கொலை செய்யும் சம்பவங்கள்  முன்னை காட்டிலும் அதிகரித்து விட்டன..
காதலனும்  காதலியும் ஹனிமூன் பிளேசுக்கு போய்  கொலைசெய்யற அளவுக்கு உங்கள் காதல் உசத்தின்னா...?  

 பொண்ணு பார்த்து மண்டபம் புக் பண்ணி சமையளுக்கு ஆள் வச்சி, கல்யாணம்  பண்ணிக்கற  வரைக்கு  அப்படி என்னடா மயிரை ரெண்டு பேரும் புடுங்கிட்டு இருந்திங்கன்னுதான் கேட்கத்தோனுது...??? கொலை பண்ணற அளவுக்கு போறதுக்கு வீட்டை வீட்டு ஓடிப்போயி கல்யாணமாவது செஞ்சித்தொலையிலாமே...? கொலை செய்யற அளவுக்கு வரும் தைரியம் வீட்டை வீட்டு ஓடிப்போக தைரியம் வரலைன்னு  சொன்னா காமெடியா இருக்கு...


 சரி மேலே உள்ள படத்தை  பாருங்கள்...

மீன் பிடித்துக்கொண்டு இருப்பது  பிரபல ஹாலிவுட் நடிகர் புருஸ் வில்லிஸ்...  பின்னால்  உட்கார்நது இருப்பவர் நடிகர்  ஆஸ்டின் ஹட்டசர்.. அவர் மடியில் கிஸ் பண்ணிக்கொண்டு ரொமான்டிக்  மூடீல் இருப்பவர் புகைபடத்தின் மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் புருஸ்வில்லிஸ்சோடு 11 வருடம் குடித்தனம் நடத்திய மனைவி.. ஆனால் இருவரும் விவாகரத்து பெற்று விட்டார்கள்..இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள்... அவர்கள் பிக்னிக் செல்ல விரும்ப முன்னாள் கணவர் இன்நாள் குடும்பத்தோடு வந்து பிக்னிக்கில்  இணைத்துக்கொண்டார்...

இப்படி ஒரு போட்டோ தமிழ் சூழலுக்கு  வாய்ப்பே இல்லை... சரி.. விவாகரத்து பெற்று விட்டு முகத்தை திருப்பிக்கிட்டு மூஞ்சிலேயே முழுக்கமாட்டேன்னு போனாலும்  போவாங்க.. இப்படி ஒரு போட்டோ எடுக்க சான்சே இல்லை..

 இதுவே நம்ம ஆளுங்க இந்த போட்டோவுல இருந்தா? மீன் புடிச்சிகிட்டே இருக்கறவன், இரண்டு பேரும்  முத்தம் கொடுக்கற சத்தம் வந்ததுமே டென்ஷன் அகி பக்கத்துல கெடக்கற  ஸ்பேனரை எடுத்து  இரண்டு பேரு மண்டையையும் உடைச்சி பரலோகத்து அனுப்பிச்சிட்டு, ஜெயில்ல களி திங்க போயிடுவானுங்க,. காரணம் நம் குடும்பமும் வாழ்க்கை முறை அப்படியானது... வளர்ந்த முறை அப்படி....

இன்னைக்கு டைவர்ஸ் அதிகமானதுக்கு மிக முக்கியகாரணம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதைஞ்சி போனதுதான் முக்கியகாரணம்...ஆனால் காலம்  ழுவதும் கணவனே கண் கண்ட தெய்வம் மனைவியே கண் கண்ட தெய்வம் என்று பழமையில் உழலாமல் பிடித்த வாழ்க்கையை  தோந்து எடுத்து வாழுகின்றார்கள்..

சரி லெட் மீ  கம் டூ த பாயிண்ட் சப்ஜெக்ட் எங்கேயோ போயிடுச்சி..

இந்த கதை  சமீபத்துல நடந்துச்சி... பேப்பர்ல படிச்சிட்டு சிரிப்பு வந்தாலும் இதை  பதிவு செய்யனும்னு தொணுச்சி...

இதுல மூன்று கேரக்டர்   மெயின் கேரக்டர்... கதை முடியும் போது... எல்லா கேரக்டர்  பக்கத்தில இருந்தும் யோசிச்சி பாருங்க..

பட் இந்த செய்தியை நான் கணவனுடைய பாயிண்ட் ஆப் வியூவில சொல்லறேன்.. இப்படி ஒரு சம்பவத்தை எந்த கணவனும் தமிழகத்துல சந்திச்சி இருக்க மாட்டான்.. அப்படியே சந்திச்சி இருந்தாலும் பேப்பர் அளவுக்கு நியுஸ் வந்து இருக்காது??

கணவன்  மனைவி  இரண்டு பேருமே ஆசிரியர்கள்... மனைவியோட வேல பார்க்கும் ஒரு பெண்மணியின் குடும்பம் இவர்களோடு இணக்கமானது.. இரண்டு குடும்பமும் ஒன்றாக இருந்தது..கணவனும் மனைவியின் நண்பியோட கணவனோட   சேர்ந்து மருந்துக்கடை வச்சி நடத்தி இருக்காங்க..

மனைவியோட பெஸ்ட் பிரண்டு புருஷனோட லிங்க் ஆயிடுச்சி... கணவன் கேட்டு இருக்கான் ஏன் அடிக்கடி  உன் பிரண்டு புருசன் நம்ம வீட்டுக்கு வாரான்னு.. அதுக்கு இந்தம்மா  நம்ம மருந்துகடை  மேட்டரை  பத்தி பேச வந்தான்னு சொல்லி  சமாளிச்சி இருக்கு...


இருந்தாலும் புருசனுக்கு  சந்தேகம்.. ஒரு நாள்  நைட்டு தன் பெட் ரூம்ல அசந்து தூங்கிகிட்டு இருக்கும் போது  தூக்கம் களைஞ்சி எழுந்து பார்த்தா   பொண்டாடியும் பிரண்டும் துணியில்லாம இருந்து இருக்காங்க.. இதை பார்த்து கணவன் கத்தி இருக்கான்.. மனைவியும் பிரண்டு புருசனும் டிவி சத்தத்தை அதிகமா வச்சி,  புருசனை  கொலை பண்ண முயற்சி செஞ்சி இருக்காங்க...  
கள்ளக்காதலன்  அவன் முகத்துல தலைக்கானி வச்சி அழுத்த..  தாலிகாட்டிய பொண்டாட்டி என்ன செய்யறதுன்னு  தெரியாமா?  கணவனை சாகடிக்க    கணவனோட விறைக்கொட்டையை  நசுக்க...


 கணவன் வலியில லபோ திபோன்னு உயிர் போற பயத்துல கத்த... பக்கத்துல அக்கத்துல ஒன்னு கூட  செய்தி தீயா பரவி ஊர் கூடிடுச்சி.. டீச்சருக்கு  அசிங்கம் தாங்காம மருந்து குடிச்சிடுச்சி..

புருசனுக்கு தங்கள் பார்ட்னாரா நடத்தற மெடிக்கல்ல இருந்து தூக்க மாத்திரை எடுத்து வந்து  நைட்டு பால்ல கலந்து கொடுத்துட்டு, புருசன் நல்லா தூங்குவான்னு நினைச்சி இரண்டு பேரும் செக்ஸ் வச்சிகிட்டாங்க.. அது காலாவதியான தூக்க மாத்திரை போல, நட்ட நடு ஜாமத்திலேயே புருசன் எத்திரிச்சிக்க ரசபாசம் ஆயிடுச்சி..

 இது போல பல  சம்பவங்கள் நிறைய நடக்குது  ஒன்னு ரெண்டு தெரியுது--? நிறைய குடும்பங்களில் இது போல விஷயங்கள் நடந்தாலும்.. குழந்தைகளுக்காக பொருத்துக்கொண்டு போகும் நிறைய கணவன்  மற்றும் மனைவிகள் நிறைய பேர் இருக்கின்றார்கள்..

 நல்லவேளையாக அந்த கணவன் கத்தி ஊரைக்கூட்ட வில்லை என்றால்.. அவன் நிச்சயம் கொலையாகி இருப்பான்.. முக்கியமாக ரெண்டு பேருமே காமத்தில் திளைத்த போது கணவன்  பார்த்து விட்டான்..  தீர்வை எட்டாத காமம்...  வெறியாகி  கணவனை கண்டிப்பாக கொலையே செய்து இருப்பார்கள்.. நல்லவேளை... கணவன் தப்பித்தான்.. கொலை செய்து இருந்தால்  அவர்கள் இருவரும் ஜெயிலில் வாழ்க்கையை தொலைத்து இருப்பார்கள்....

இந்த கதை சொல்ல வரும் சேதி என்ன?? பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்யுங்கள்..  நடிகர் புரூஸ் வில்லிஸ் போல ஒரே படகில் பயணிக்கையில்  முன்னாள் மனைவி வேறு ஒருவருடன் சல்லாபிக்கும் போது கூட இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை...  விறைக்கொட்டை அழுத்தி சாகடிக்க முயற்சி செய்வதற்கு, முகத்தை திருப்பிக்கொண்டு அவரவர் வழியில் செல்வது  எவ்வளவோ மேல் அல்லவா?பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

15 comments:

 1. உண்மைகள் பல நம்ப முடியாதவையாக இருக்கின்றன. ஆனாலும் அவை நடந்துகொண்டுதான் இருக்கின்றன. காமம் அறிவை மழுங்க அடித்துவிடுகிறது.
  நல்ல பதிவு

  ReplyDelete
 2. எப்பவும் வாழ்க்கை ஒரு புரியாத ஆனால் புரிந்த மாத்ரி
  தெரிகிற புதிர் அம்புட்டுத்தான் .அப்படி பார்த்தால்
  இங்கு ஒருவகை அங்கு ஒருவகை ....
  அதாவது ....எப்படி சொல்வது ... அட போங்க சார் ....
  உங்கள் எழுத்து நடை வழக்கம் போல சூப்பர் .
  வாழ்த்துக்கள்
  " யானைக்குட்டி " ஞானேந்திரன் . திருநெல்வேலி

  ReplyDelete
 3. (அப்பாட ....கருத்து சொல்ல இம்புட்டு பாடுனா !!!!
  பதிவு போட்ட ஜாக்கி....உங்கள் டைபிங் வேகம் . கருத்து வேகம் கலக்கல் .)

  ReplyDelete
 4. இன்றைய காலகட்டத்தில் அனைத்து தம்பதியினரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய பதிவு இது

  ReplyDelete
 5. இன்றைய காலகட்டத்தில் அனைத்து தம்பதியினரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய பதிவு இது

  ReplyDelete
 6. True Jackie I also red this in paper... Very pathetic ...

  ReplyDelete
 7. ஆனாலும் ப்ரூஸ் வில்லிஸ்-க்கு பெரிய மனசு சார். சாவதனாமா மீன் புடிகிறாரு !! எல்லாரும் இவரை மாதிரி இருந்த தமிழ்நாட்டில் தந்தி பேப்பரே வராது!!!

  ReplyDelete
 8. //மீன் புடிச்சிகிட்டே இருக்கறவன், இரண்டு பேரும் முத்தம் கொடுக்கற சத்தம் வந்ததுமே டென்ஷன் அகி பக்கத்துல கெடக்கற ஸ்பேனரை எடுத்து இரண்டு பேரு மண்டையையும் உடைச்சி பரலோகத்து அனுப்பிச்சிட்டு,//
  "வசந்த கால நதிகளிலேன்னு கொடூரமா பாடிட்டு" இதையும் சேத்துக்கங்க! ;)

  ReplyDelete
 9. நல்ல பதிவு... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. மக்களுக்கு அறிவுரையான பதிவு . நன்றி

  ReplyDelete
 11. unmai than anna, en weetil kooda ipadi nadandu kondirukiradu,oru mudivukkaga kathu kondiruken,anegamaga adutha kilamayleye theervu kidaithuwidum endru ninaikiren.

  ReplyDelete
 12. Unmai than anna, en weetil kooda ipadi nadandu kondirukiradu, oru mudivukkaga kathu kondirukkiren anegamaga adutha thingalkul mudivu kidaithuwidum endru ninaikiren.

  ReplyDelete
 13. great one Jackie. now we understand how you wrote your other "உப்புக்காத்து"'s... really super!

  ReplyDelete
 14. டியர் ஜாக்கி ,
  சூப்பரான பதிவு.
  ''கணவனுக்கு பிடித்த பெண்ணுடன் உறவை தொடர அனுமதிக்கும் மனைவி - அதே போலான கணவன்''
  இந்த மாதிரி வெளிப்படையான மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இது போன்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறையும். நான் சொல்வது ரொம்ப ஓவரா, அசிங்கமான விசயமா தெரியலாம். ஆனால் ஒரு பன்னிரண்டு வருசம் கழித்து இது சாதாரன விசயமாக மாறலாம்.
  வெயிட் அண்ட் ஸீ.

  பாப் மார்லி போட்டோ, அவரோட வோர்ட்ஸ் - கலக்குறீங்க ஜாக்கி.
  என்னோட முதல் கம்மென்ட் இது. பதில் சொல்லலைன்னா ஒரு வாரம் உங்க சைட்டு பக்கமே வர மாட்டேன்.

  வில்லேஜ் வாசி.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner