சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 15/05/2012



ஆல்பம்..
மதுரை ஆதினம் கனவில் வந்த சிவபெருமான், ஜெயேந்திரர் மீது வழக்கு  தொடர்ந்த ரஞ்சிதா, மதுரை ஆதீனத்தை மீட்க ஒரு குழு...
24 அணிறேர கேமரா இருக்கும் அறையில் தங்க நித்தி சவால் போன்றவை தமிழகத்தின் டாப் டென் செய்திகளில் தினமும் ஆக்கிரமித்துக்கொண்டு உயிரை எடுக்கின்றது.
================
 திரும்பவும் கேரளா சண்டித்தனம் செய்கின்றது.. முல்லை பெரியாறு அனை பலமாக இருக்கின்றது என்று தெரிவித்தும் அணை கட்ட எந்த தடையும் ஐவர் குழு விதிக்க வில்லை என்று பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக மீண்டும் பிரச்சனையை எழுப்ப ஆரம்பிக்கின்றது..
=========
பிரபல பத்திரிக்கை ஜூவி நடத்திய சர்வேயில் தமிழக முதல்வரின் ஒரு வருடகால ஆட்சி 100/35 மார்க்தான் வாங்கி இருக்கின்றது.. இதைத்தான் நாங்க எலெக்ஷனுக்கு முன்ன இருந்து சொன்னோம்.. அவர் மாறிவிட்டார் தமிழகத்தினை அப்படியே புரட்டி போட்டு விடுவார் என்று எலெக்ஷனுக்கு முன் குதித்த பத்திரிக்கை இன்று இம்புட்டுதான் எடுத்து இருக்கின்றார் என்று சொல்லுகின்றது..
மிக்சர்..
சிக்னல் போட்டாதான் போக முடியும் என்று தெரிந்தும், நிறுத்துக்கோட்டை தாண்டி ஸ்டைலா நின்னுகிட்டு, சிக்னல் விழுந்து போறவனுக்கு வழிவிடாம முந்திரிக்கொட்டை போல முன்னாடி வந்து நிக்கற  பண்ணாடைகளை என்ன   செய்யலாம்...? இருப்புக்கை மாயாவி போல  சட்டுன்னு மறைஞ்சி போயி  நடு மண்டையில நங்குன்னு கொட்டனும்னு தோனுது..
=============
சென்னையில் மூளைக்கு மூளை போலிஸ்  நிற்கின்றது... நகரில்  செயின் ஸ்நாட்சிங் அதிமானதுத்தான் காரணம்... நல்ல விஷயம் தொடருங்கள்..
==========
சென்னையில் போக்குவரத்து போலிசாருக்கு  அவர்கள் செயலில் புதிய மாற்றம்... நவநாகரிக பெண்ணாக இருந்தால்  எதையும் கேட்காமல் விட்டு விடுவார்கள்.. இப்போது பல ஜீன்ஸ்கள் லைசென்ஸ் இல்லாமல் ஆர்சி புக் இல்லாமல் உதட்டு மேல் பூத்த வியர்வையை துடைத்த படி  என்னையே புடிச்சிட்டியே என்று கண்களில் வெறியோடு கை  பிசைந்து நிற்கும் காட்சிகளை சென்னை தெருக்களில் இப்போதேல்லாம் காண முடிகின்றது.
===========
ஏன்டா ஷேர் ஆட்டோவுல போவப்போறேன்னு தெரியுது.. மேல் பாக்கெட்டுல இரண்டு பத்து ருபாய் எடுத்து வச்சிக்க வேண்டியதுதானே?? பீக் அவர்ல டிராபிக்ல ஓரமா ஷோ ஆட்டோ வண்டியை நிறுத்தி, வண்டிக்குள்ள இறக்கறவன் அத்தனை பேரும் ஆபிஸ் போற அவசரத்துல வேர்வை கசகசப்புல உட்கார்ந்து இருக்கும் போது , வண்டியை உட்டு இறங்கி பேண்ட் பின்னால இறக்கற பர்சை எடுத்து பத்து ரூபாயை தடவி தடவி எடுத்துக்கொடுக்க ஸ்டைல் காட்டறவனுங்களை இழுத்து போட்டு உதைக்கலாமான்னு கோவம் வருது...லேடிஸ் ஒரு சிலரைத்தவிரை எல்லோரும் கையில் சில்லரையோடு உட்கார்ந்து இருக்கின்றார்கள்.
சென்னை நங்கநல்லூரில் 1000 சதுர அடி பரப்பளவில் தண்ணீர் பிரச்சனை இல்லாத ஏரியாவில் , அடுக்கு மாடி குடியிருப்பில் வாங்கி 5 முதல் எழு வருடங்கள் ஆன பழைய பிளாட் நண்பருக்கு அவசரமாக விலைக்கு வேண்டும்... தனி வீடாக இருந்தாலும் பரவாயில்லை..தொடர்புக்கு 98402 29629

===========
பிடித்துது..


=========
இந்த வாரகடிதம்...
Hi Jackie!

I m seetha. 22 yrs. Ungaloda blo(i)g (ur writing) fan. Romba reala, casuala ezhudhuringa. Some times theva ilama bad words use panringalonu thonum. Bt irundhalum avoid pana mudila. My request "yazhini pappa munnadi bad words use panadhinga". Romba naala ungala pakanumnu asai. Reala engayavadhu crowd area pona ungala thedi irukan. Bec nenga blogla solra neraya areaku na vandhurukan thats y. Adhu mattum ilama na ena nenaikurano adhaiye nenga neraya time blogla ezhuthirukinga. Apolam ena manushan ivarnu nenachipan. Eg. Car owners illegal activities. Adhula na command kuda poturukan.

Sir, Pls.............. Atleast monthly once Uppukaththu post panunga sir. Adikadi check panran. Unga சாண்ட்  வெஜ் அண்ட் நான் வெஜ் kuda romba pudikum. Ungaloda special other language movies review... Chance ila sir. Ur the best.

YAZHINI.......... Enga sir kandupudichinga indha name. Indha perkagave ava porandhurukalo...? Superrrrrrrrrrr sir. Nenga every time yazhini pathi ezhuthum podhum enga appa than nyabagam varuvar. Enoda 18th yr la appava na miss panitan. I mean he was expired. Romba miss panran avara. Oru appava ungala pakumpodhu na babya irukumpodhu en appavum ipadi thanonu thonudhu....

Sorry sir, Unga busy schedula unga time romba waste panitan. BEST OF LUCK FOR YOUR FUTURE.

=============
அன்பின்

 சீதாவுக்கு...

 வணக்கம்  22 வயதுக்கான  எண்ணங்களை மிக அழகாய்  சொல்லி இருக்கின்றாய்...

ரொம்ப கஷ்டப்பட்டு கிடைச்ச ஆட்டியூட் அது.. எனக்கு எது சரின்னு படுதோ அதை எழுதுகின்றேன்..நான்  யோக்கியமானவன் என்று காட்ட நான் ஒரு போதும் முயற்சித்ததும் இல்லை..  அப்படி எழுதுவதும் இல்லை.. எதிரில் என் ஆத்ம நண்பனிடம் எந்த தடங்கலும் இல்லாமல் எப்படி சரளமாக பேசுகின்றேனோ? அப்படித்தான் எழுதுகின்றேன்... அது சிலருக்கு பிடிக்கின்றது  சிலருக்கு பிடிக்கவில்லை....

நாம் பலரின் எண்ணவோட்டம் ஓரே மாதிரியாக இருக்கும் போது நீ நினைப்பதை நான் எழுதி இருக்கலாம்..

யாழினி எதிரில் பேட் வேர்ட்ஸ் பேசுவதை குறைக்கலாம் ஆனால் என்னால் பேசாமல் இருக்க முடியாது.... தவிர்க்க முயற்சிக்கின்றேன்...

உங்க அப்பா எங்கயும் போகலை  ஒன்னோடதான் இருக்கார் நீ பில் பண்ணு.. கண்டிப்பா உன்னோட அப்பாவும் இப்படித்தான்  பில் பண்ணி இருப்பார்..90 பர்சென்ட் அப்பாக்கள் அப்படித்தான் பீல் பண்ணுவாங்க...

 இது ரொம்ப சின்ன உலகம் ஏதாவது ஒரு பொது இடத்தில் எதிர்பாராத விதமாய் நிச்சயம் சந்திப்போம்

 உன் எதிர்கால வாழ்வு பிரகாசிக்க ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கின்றேன்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
================
பிலாசபி பாண்டி
வாழ்க்கை ஒரு இலவச சர்க்கஸ்..
தேவை கொஞ்சம் கவனம்.
ஜாக்கிசேகர் பீலிங்ஸ்....
கணவனுக்கு மவுத் அல்சர் இருப்பது நன்கு தெரிந்தும் காரக்குழம்பு வைத்து வஞ்சத்தை தீர்துக்கொள்ளுகின்றார்கள் காதல் மனைவிகள்
=====
தாயோ ,தாரமோ, சகோதரியோ,மகளோ,எவரிடமாவது தன்னை முழுவதும் தொலைத்துக்கொள்ளவே ஆண் விரும்புகின்றான்..
==============
விஜய் டிவியில் அமிர்கானின் சத்யமே ஜெயதே நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகின்றது.. குட் டச் பேட் டச் பற்றி குழந்தைகளுக்கு மிக அருமையாக கிளாஸ் எடுத்தார்.. ஹேட்ஸ் ஆப் அமிர்கான்..
============
கருனைக்கும் காதலுக்கும் வித்யாசம் தெரியாமல், மெத்தப் படித்த பெண்களே உணர்ச்சிவசப்பட்டு குழப்பிக்கொள்ளும் போதுதான் மனது ரொம்பவே வலிக்கின்றது...
==============
என்னை பொருத்தவரை ஒரு மனிதனுக்கு மிக மிக கர்வமான தருணம் என்பது எதுவெனில், சொந்தமற்ற மனிதர்கள் எதிர்பார்ப்பில்லாமல் நம்மை காட்டுத்தனமாக நேசிப்பதுதான்.
===============
நண்பர்கள் என்பவர்கள் ஸ்கெட்ச் பென்சில் போல... நம் வாழ்க்கையை கலர்புல்லாக மாற்றுபவர்கள்... நான் வேண்டுமானல் உங்களுடைய விருப்பமான கலர் ஸ்கெட்ச் பென்சிலாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் உங்கள் ஓவியத்தை நிறைவு செய்ய ஏதாவது ஒரு இடத்தல் நான் உபயோகமாக இருப்பேன்....
நான்வெஜ்18+
A secretary got an expensive PEN as a birthday gift from her boss.

She sent her boss a thanking note via SMS.

The wife reads the text and angrily shows her husband the message:

"Your penis wonderful, I enjoyed using it last night. Thanks"

Moral:- Space is essential in every successful married life!
பிரியஙகளுடன்
ஜாக்கிசேகர்.






நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

15 comments:

  1. என்ன ஜாக்கி , வேலை அதிகமோ இப்பெல்லாம் சாண்ட்விச் சீக்கிரமே கிடைக்காம பசியெடுக்குது . . .கொய்யால இப்பவாவது வந்துதே . .
    ஜே மேட்டர் அப்படியே சரி . .முதலாமாண்டே இப்படீன்னா .இனி. . . .
    அந்த புள்ள ஸ்வேதா சொன்னது சரிதான் ஜாக்கி, யாழினி முன்னாடி ரொம்பவே குறைச்சிக்கோங்கோ . .
    சத்யமேவ ஜெயதே போல ப்ளாக்ல எழுத நீங்களும் முயற்சிக்கலாம் . .அப்பப்போ நீங்களும் எழுதறது உண்டு அதனால சொன்னேன் .
    ம் ம் ம் ம் லாஸ்ட் நாட் த லீஸ்ட் . . பென் செம பென் . . . .

    ReplyDelete
  2. சுவாரசியமான பதிவு!

    ReplyDelete
  3. அண்ணன் பேரு சீதானு அவங்க சொல்லியிருக்காங்க நீங்க என் பொன்னு பேர ஸ்வேதானு எழுதியிருக்கிங்க கொஞ்சம் திருத்திடுங்க தல

    ReplyDelete
  4. nalla pathivu jackie anna

    en blog patri intro kodukka mail anuppi irunthen neenga reply pannalai

    it was so sad as my blog may be useful to so many people fighting cancer, people facing problems in marriage, people fighting court cases.

    any way please keep writing

    ReplyDelete
  5. Most of the comments are pertaining to your using bad words in blog which I also told you in my first tele talk with you some days back. Kindly correct this attitude if not for your followers but at least for the sake of your daughter. House is the only place as on date which teaches good things to the children. We also know that you are using such bad words to show your anger. True but still let you anger be also decent.

    ReplyDelete
  6. Nice. Keep posting ...

    But, in your recent posts, fonts are not standard like your old post. Please concentrate on this.

    ReplyDelete
  7. //இருப்புக்கை மாயாவி போல சட்டுன்னு மறைஞ்சி போயி நடு மண்டையில நங்குன்னு கொட்டனும்னு தோனுது..//
    ஹய்யா! :) நீங்களும் காமிக்ஸ் பத்தி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டீங்க! :)

    ReplyDelete
  8. VAdivelan sir thank u so much.Nengalavadhu en name correcta sonadhuku.

    ReplyDelete
  9. பிலாசபி பாண்டி
    வாழ்க்கை ஒரு இலவச சர்க்கஸ்..
    தேவை கொஞ்சம் கவனம். //

    ஆமா, இங்க எல்லாமே இலவசம் தான்.. நாம தான் கவனமா இருக்கனும்....

    ReplyDelete
  10. Interesting. Post this week. Try to give the sandwich at least in weekends... All the best.

    ReplyDelete
  11. Yes bro if you get time please write a blog about satyamavjeyathe..

    ReplyDelete
  12. கருத்து சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.... காத்திக் ஏதோ உங்கள் புண்ணியத்துல திரும்ப காமிக்ஸ் படிக்க ஆரம்பிச்சி இருக்கேன்.

    அருள் வேலை பளு காரணமா மறந்து போயிட்டேன்.. திரும்ப ஒரு மெயில் அனுப்புங்கள்.


    சீதா சாரி என்னோட மிஸ்டேக் மாத்திட்டேன்.. சாரி..


    வடிவேல் நன்றி.. யோவ் நீ எல்லாம் ஊர்ல இருக்கியா?

    மோகன் சார்.. நான் எல்லாம் விளிம்புநிலை மனிதனாக வாழ்க்கையை ஆரம்பித்தவன் அதனால் அது எல்லாம் தொட்டில் பழக்கம்.. நான் என்ன வச்சிகிட்டா வஞ்சனை செய்யறேன்.

    ReplyDelete
  13. எந்த மனிதனும் 100% சரியில்லை, அப்படி ஆகவும் முடியாது.ஒரு மனிதனின் மறுமுகம் தெரியாதவரை அவன் நல்லவன்.( உனக்கு பிடித்த வரி , எனக்கும் பிடிக்கும்)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner