தம்பி கோச்சிக்கராதிங்க...
 நான் சிறுவயதில் இருந்து வாழ்த் வீடு  வளர்ந்த வீடு என் அத்தை வீடு...  அத்தைமகனுக்கு திருமணம்.. நான் குடும்பத்தோடு போக வேண்டும்... மதுராந்தகம் அருகே நாங்கள் சென்ற  கார் சின்ன சொதப்பலை கொடுக்க... பிளான்  ரொம்பவே சொதப்பியது...  


திரும்ப வீட்டுக்கு வந்து அனைவரையும் விட்டு விட்டு, நான் மட்டும் கடலூருக்கு பேருந்தில் செல்ல முடிவு செய்தேன்..


இரவு பதினோரு மணிக்கு  கோயம்பேட்டுக்கு போனேன்... வண்டி  பார்க்கிங் கட்டணம் பத்து ரூபாயில் இருந்து 20 ரூபாய்க்கு ஏற்றி இருந்தார்கள்.. விதியை நொந்துகிட்டு  வண்டியை போட்டு விட்டு போய் கடலூர் பேருந்துக்கு பதில் பாண்டி பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன்.. 

பாண்டியில் இறங்கி  விடியற்காலையில் பீர் குடிக்க வாய்ப்பு  சுத்தமாக இல்லாத காரணத்தால்... சப்போஸ்  ஒன்னுக்கு ரெண்டுக்கு அவசரத்துக்கு  வந்தா கூட மேட்டரை முடிச்சிட்டு ரிலாக்சா கடலூர்  போலாம் இல்லையா? அதனால் என்னைக்குமே ஸ்டெயிட்டா கடலூர் பஸ் ஏறவே மாட்டேன்..


 பின் பக்கம் படி எறுக்கையில்  கண்டக்டர் உட்காரும் இரண்டு பேர் சீட் தான் நம்ம சாய்ஸ்... கண்டக்டரிடம் கேட்டேன்... நீங்க இங்க உட்காருவிங்களா? இல்லைங்க.. நான் முன்னாடி டிரைவர்  பக்கத்துலதான் உட்காருவேன்.. நீங்க  உட்காருங்க என்றார்..

பார்லிமென்ட்டில் கூட்டம் நடக்கும் போது அங்கொன்றும் இங்கொன்றுமாக உட்கார்ந்து கடனஎழவே என்று உட்கார்ந்து இருக்கும் எம்பிக்கள் போல....பேருந்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித தலைகள் தென்பட்டன..


 பின்பக்க படிக்கட்டு நேர் எதிர் சீட்டில் ஒரு அழாகான கல்லூரி பெண் வந்து உட்கார்ந்தாள்.. அவள்   அந்த நேரத்தில் பாண்டி செல்ல  வாய்ப்பு மிக குறைவு  என்பதால் எப்படியும் காட்டங்கொளத்தூர் எஸ் ஆர் எம்  கல்லூரியில் இறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக நினைத்துக்கொண்டேன்..

 வந்ததில் இருந்து  வீடியோ கேம் ஜாய்ஸ் ஸ்டிக்கை  நோண்டுவது போல செல்போனை நோண்டிக்கொண்டு  இருந்தாள்....

 பேருந்து முழுவதும் வெப்பம்  வியாபித்து இருந்தது..  முன்று நாள் தாடியோடு கழுத்தில் வியற்வை வழிய தாடியின் கசகசப்பும் வியற்வையும் எரிச்சலை ஏற்படுத்தின... எப்போதுத்தான்  பஸ்சை கிளப்புவானுங்களோ? என்று இருந்தது... நைட்டு பஸ்ல போறதுக்கு அந்த அளவுக்கு மேக்கப் தேவையில்லை இருந்தாலும் அதீத மேக்கப்புடன் வந்து இருந்தாள்..


 எப்படியும் 40 முறைக்கு மேல் கண்ணாடி பார்த்து இருப்பாள் என்பது பார்க்கும் போதே  தெரிந்தது...

 பேருந்தில் டிரைவர்  உட்கார்ந்தார்.. மனத நிம்மதி அடைந்தது.. பேருந்து புது பேருந்து என்பதால் அதிகமான ஆட்டம் இல்லை.. வழக்கம் போல பாண்டிக்கும் 55 ரூபாய் பணம் எடுத்து வைத்துக்கொண்டு கண்டக்டர் வந்த்தும் கொடுத்தேன்.. அவர் என்னை ஒரு மாதிரியாக பார்க்க.. சாரி சொல்லி விட்டு 93 ரூபாய் கொடுத்தேன்... அம்மா ஆட்சியில் பேருந்துக்கட்டண  உயர்வை ஏதோ ஞாபகத்தில் மறந்து தொலைத்து விட்ட காரணத்தால் பல்பு வாங்கி எனது பயணத்தை ஆரம்பித்தேன்..


 நல்ல  உடல் அசதி என்பதால் தூங்கி விட்டேன்..... திண்டிவனம் திண்டிவனம் என்று அழைக்கும் போதுதான் நான் எழுந்தேன்.. மணி  இரண்டரை மணியாகி இருந்த்து..இரண்டு பேர் மட்டும் திண்டிவனத்தில் ஏறினார்... மிச்ச சொச்சங்கள் எல்லாம்.. மூன்று பேர் சீட்டில் நன்றாக காலை  தாலைக்கு மேல் இருக்கும் லக்கேஜ் வைக்கும் இடத்தில் காலை முட்டுகொடுத்துக்கொண்டு குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்தார்கள்..


திண்டிவனம் பைபாசில் தூக்கம்  விளையாட்டுக்காட்டிக்கொண்டு  இருந்தது.. 45 வயது மதிக்கதக்க ஒருவர்... தைலாபுரம் தோட்டம் தாண்டியதும் எழுந்தார்... நேராக கண்டக்கடரிடம்   போனார் திரும்ப வந்து  சீட்டில் உட்கார்ந்து கொண்டார்... பத்து நிமிடம் கழித்து என்னை நோக்கி நடந்து வந்தார்..
தம்பி  கோச்சிக்கராதிங்க... இந்த கடைசி படிகட்டுல நின்னுகிட்டு ஒன்னுக்கு  அடிச்சிக்கின்றேன் என்றார்... கண்டக்டர் கிட்ட கேட்டேன்.. ஒரு பத்து நிமிஷம் பொருத்துக்கோங்க பாண்டி வந்துடும்ன்னு சொல்லறார்..


எனக்கு சக்கரை அதனால் ரொம்ப அவசரம்  கோச்சிக்கராதிங்க தம்பி.. என்றார் எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை.. அந்த பெண் என்று அவள் பக்கம் பாத்தேன்.. அந்த பெண் நன்றாக ஜொள் வழிய தூங்கி கொண்டு இருந்தால் இப்படி வாய் கோணி ஜொள் வழிய தூங்கினோம் என்று தெரிந்தால் அவள்    நாலு நாளைக்கு சாப்பிடமாட்டாள் என்பது மட்டும் எனக்கு புரிந்து போனது...


போங்க.. ஆனா வராது என்று சொன்னேன்....


பொதுவா பஸ்ல இது போல பிரச்சனை வந்து  நாம போய் ஒன்னுக்கு போகனும்னு கண்டக்ட்டர் கிட்ட சொல்ல.. அவரு ரொம்ப சாவகசமா வில்லன் நடிகர் பொண்ணம்பலம் போல டிரைவரை அசால்ட்டா பார்க்க.... அவருக்கும் ஒன்னுக்கு  வந்துச்சின்னா வண்டியை நிறுத்திவாங்க... இல்லைன்னா ஏறும் போதே இருந்து தொலைச்சிட்டு வரக்கூடாதா?? 60 பேசஞ்சர் ஒரு ஒருத்தனுக்கு நான் வண்டியை நிறுத்தினா என்னைக்கு பாண்டி போய்  சேருவதுன்னு கத்துவாங்க...


நமக்கு ரகசியமா ஒன்னுக்கு வந்து நமக்கு மட்டுமே   தெரிஞ்ச விஷயம் பஸ்சுக்கே தெரிஞ்சி மானம் கப்பலேறும்..


பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன இப்படித்தான் மாயவரத்துல இருந்து சிதம்பரம் வந்து கிட்டு இருந்தேன்... கண்டக்டர் கிட்ட போய் கேட்டப்ப எரிஞ்சி விழுந்தார்.. பேருந்து பெரிசா கூட்டம் இல்லை... பஸ்சை விட்டு இறங்கவலாம்னா கடலுருக்கு போறதுக்கு மட்டும்தான் காசு இருக்கு.... கொஞ்ச நேரம் வெயிட்ட பண்ணா பஸ்சே  நாறிப்போய் விடும் என்பதால்..... கடைசி படிக்கெட்டு கிட்ட வந்துட்டேன்...


நானும் எவ்வளவோ முயற்வி பண்ணறேன் வந்து தொலையவே மாட்டுது.. பேருந்து குலுங்கி குலுங்கி செல்வதால் மனம் கட்டளை இட மறுத்து விட்டு திரும்பவும் வந்து சிட்டில் உட்கார்ந்தால் வயிறே வெடித்து விடுவது போல அந்த பிரச்சனை தொடர.. திரும்ப கடைசி படிக்கட்டு போனேன்... இந்த முறையும் ஏமாற்றமே.. கடைசியில் சிதம்பரம் பேருந்து நிறுத்தத்தில் தான் நிரந்த  தீர்வு கிடைத்த்து..


நான் அவரிடம் சொன்னேன்... போக முடியாது என்று...  அவர் செய்த முதல் முயற்சி தோல்வியில் முடிந்த்தது.  காரணம்  அவர் ஜிப் அவுத்து முயற்சி பண்ண  நேரம் பெரிய டாட்டா சுமோ புல் பிரைட்டில் சென்ற காரணத்தால் அவசர அவசரமாக தன் முயற்சியை தற்காலகமாக  தள்ளி வைத்தார்.

.பேருந்தின் சிறு தள்ளாட்டத்தில் அவர் ஆட.. நான் வேண்டுமானால் பிடித்துக்கொள்ளவா? என்று கேட்க வேண்டாம்பா ? என்றார்...பிறகு முற்ச்சி செய்தார்.. வெற்றி பெற்றார்..  ரொம்ப நன்றிங்க என்று தன் சக்கரை வியாதியால்  ஏற்ப்பட்ட இயலாமையில் அசடு வழிந்து சென்றார்....


நம்மால முடியலை...? அவரால எப்படி முடிந்தது ?என்று கேள்வி ஏழுந்து நின்றது..ரொம்ப சிம்பிள் மாயவரம், சிதம்பரம் ரோடு படு திராபையா பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன இருந்திச்சி தூக்கி தூக்கி போட்டுச்சி... ஆனா... இந்த ரோடு பைபாஸ் எந்த அலுக்கும் குலுக்கும் இல்லாம பேருந்து போன சாத்தியம்தான்..


சக்கரை நோயாளி என்று சொல்லி இருந்தால் ஒரு வேளை கண்டக்டர் நிறுத்தி இருப்பாரோ?

 சரி இதே பிரச்சனை ஒரு பெண்ணுக்கு  நேர்ந்தால் என்ன செய்வாள்...? 

கண்டக்டரிடம் கூச்சமின்றி சொல்லலி வண்டி நிறுத்தும் அளவுக்கு இந்த சமுகம் அவளை கூச்சமின்றி வளர்த்து இருக்கின்றதா? போன்ற கேள்விகளுடன்   பாண்டியில் நின்ற பேருந்தில் இருந்து இறங்கி,  பீருக்கு பதில் டீ சாப்பிட  டீக்கடை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
 

17 comments:

 1. jackie anna,

  atlaeast 2 hours once one have to answer natural call.but these days few drivers stop the bus for passengers request.most of them will not stop the bus saying we dont have time.

  nice post.Hope you had visited my blog.

  ReplyDelete
 2. ""பார்லிமென்ட்டில் கூட்டம் நடக்கும் போது அங்கொன்றும் இங்கொன்றுமாக உட்கார்ந்து கடனஎழவே என்று உட்கார்ந்து இருக்கும் எம்பிக்கள் போல...."" - Super :)

  ReplyDelete
 3. ரொம்ப எதார்த்தமான "உச்சா" பிரச்சனை. நெசம் தான் நீங்க சொல்வது.

  ReplyDelete
 4. இது போன்ற பிரட்சனைகளை பொதுமக்களாகிய நாம் கண்டு கொள்வதே இல்லை . ஆனால் இது எத்தனை வலிமையான தேவையான ஒரு விசயம் என்பதும் மறந்தே போகிறது . . . பொதுமக்களுக்கான சேவைதான் போக்குவரத்து என்பதை நினைவில் கொண்டால் நல்லது . . .

  படிக்கட்டில் அவர் நிற்கும் போது நிச்சயமாக ஒரு கைதான் அவருக்கு உதவி (மற்றொரு கை ....) அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்பதே இப்போதைக்கு சமாதானம் . .அதே சமயம் எப்போதும் அப்படி நடக்க வாய்ப்பில்லை .

  ஒரு நியாயமான விழிப்புணர்வு ஜாக்கி

  ReplyDelete
 5. "நைட்டு பஸ்ல போறதுக்கு அந்த அளவுக்கு மேக்கப் தேவையில்லை இருந்தாலும் அதீத மேக்கப்புடன் வந்து இருந்தாள்.."  " எப்படியும் 40 முறைக்கு மேல் கண்ணாடி பார்த்து இருப்பாள் என்பது பார்க்கும் போதே தெரிந்தது..."--------------------------

  இந்த ஜாக்கி ஏன் எப்பவுமே பொண்ணுங்களை கம்மென்ட் பன்னுறதிலயே குறியா இருக்காருன்னு யோசிக்குக்ம் போதே ..............
  "சரி இதே பிரச்சனை ஒரு பெண்ணுக்கு நேர்ந்தால் என்ன செய்வாள்...?

  கண்டக்டரிடம் கூச்சமின்றி சொல்லலி வண்டி நிறுத்தும் அளவுக்கு இந்த சமுகம் அவளை கூச்சமின்றி வளர்த்து இருக்கின்றதா? "

  இது தான் ஜாக்கி சேகர் touch.

  இந்தியாவுல பெண்ணா பிறந்து வளர்ந்தவங்க எல்லாருமே வாழ்நாள் சாதனையாளர்கள் தான்.
  பீரியட் சமயத்திலும் சரி , இது போன்ற சமயத்திலும் சரி அடக்கி அடக்கியே ஆண்களை விட அதிக தாங்கும் சக்தி பெற்றவர்களாக பெண்கள் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.இதற்கான பெருமை ஆண் வர்க்கத்தையே சாரும்.
  வெறும் உள்ளாடையோட ஒரு பெண் வரதட்சினை கேஸ் கொடுக்க டெல்லியில தெருவுல ஓடுன படத்தை உங்க தளத்துல பார்த்து எல்லாருடனும் பகிர்ந்து கொண்டேன்.
  Your dear,
  Villagevaasi.

  ReplyDelete
 6. கண்டக்டரிடம் கூச்சமின்றி சொல்லலி வண்டி நிறுத்தும் அளவுக்கு இந்த சமுகம் அவளை கூச்சமின்றி வளர்த்து இருக்கின்றதா?

  உண்மையிலே பெண்கள் நிலைமை பரிதபதுக்குரியது அருமையான கேள்வி

  ReplyDelete
 7. கண்டக்டரிடம் கூச்சமின்றி சொல்லலி வண்டி நிறுத்தும் அளவுக்கு இந்த சமுகம் அவளை கூச்சமின்றி வளர்த்து இருக்கின்றதா?

  உண்மையிலே பெண்கள் நிலைமை பரிதபதுக்குரியது அருமையான கேள்வி

  ReplyDelete
 8. இந்த விஷியதுல KSRTC எவ்ளவோ பரவால்லை

  ReplyDelete
 9. இந்த விஷியதுல KSRTC எவ்ளவோ பரவால்லை

  ReplyDelete
 10. உண்மையிலே பெண்கள் நிலைமை பரிதபதுக்குரியது அருமையான கேள்வி.

  ReplyDelete
 11. "ஓடும் ரயிலில்

  பிடிமானமில்லாமல்

  சிறுநீர் கழிக்கும்

  திறனுமில்லை..."

  என்ற வைரமுத்து வரிகள்

  நினைவில் வந்தன....

  ReplyDelete
 12. "ஓடும் ரயிலில்

  பிடிமானமில்லாமல்

  சிறுநீர் கழிக்கும்

  திறனும் இல்லை"

  என்ற வைரமுத்து வரிகளை

  நினைவு படுத்தியது

  உங்கள் பதிவு...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner