Vazhakku Enn 18/9-2012/உலக சினிமா/இந்தியா/வழக்கு எண் 18/9 -திரைவிமர்சனம்.




இந்த நாட்டில் மட்டும் அல்ல.. எந்த நாட்டிலும் ஏழைகள் சொல்லுக்கு மதிப்பு இல்லை..விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை  போராட்டங்கள்  ஏதோ ஒரு அதிகார வர்கத்தினால் சூறையாடபடுகின்றார்கள்..


அதிகார வர்கத்தினர் எவ்வாறு தேன் தடவுவது போல பேசுவார்கள் என்பதும் அதே அதிகார வர்கத்தினர் விளம்புநிலை  மனிதர்களின் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் தங்கள் சுயலாபத்துக்கு எப்படி காலில்  போட்டு நசுக்கி விட்டு  புது வீடு கட்டி கிரகபிரவேசம் செய்கின்றார்கள் என்பதையும் சில பல காட்சிகள் மூலம் விளக்குகின்றது..

இந்த படம் டைட்டிலில் இருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை எகிர வைத்த படம்..ஒரு அளவுக்கு என்னால் இந்த கதையை கெஸ் பண்ண முடிந்தாலும் ஆசிட் மேட்டர் டுவீஸ்ட்  படத்தில்  எதிர்பார்க்காத டுவீஸ்ட்தான்..

பாலுமகேந்திரா படம் பார்த்து விட்டு வெளியே வந்ததும்.. இயக்குனர் பாலாஜி சக்திவேல் காலில் விழுந்து இருப்பேன் என்று சொன்னதாக நண்பர் சொன்னார்.. காலில் விழலாம் தப்பில்லை அந்த அளவுக்கு ரொம்ப நீட்டான படம் என்பதை மறுப்பதற்கில்லை.

படம் பார்த்து விட்டு படம் அற்புதம் என்ற வகையில் எஸ்எம்எஸ்சில் தகவல்களை நண்பர்கனய் மற்றும் தம்பி ரமேஷ் போன்றவர்கள் அனுப்பி என்னை உசுப்பி விட்டுக்கொண்டு இருந்த காரணத்தால் இந்த படத்தை இரவே பார்க்கவேண்டும் என்று முடிவு எடுத்து பார்த்துவிட்டேன்.

===========
Vazhakku Enn 18/9-2012/உலக சினிமா/இந்தியா/வழக்கு எண் 18/9 படத்தின் ஒன்லைன்.
நடுத்தர மற்றும் விளிம்பு நிலை வாழ்க்கை வாழும் இரண்டு ஜோடிகளுடைய பருவ மாற்றங்களினால் ஏற்படும்  பிரச்சனைகள்தான் கதை.

=========


Vazhakku Enn 18/9-2012/உலக சினிமா/இந்தியா/வழக்கு எண் 18/9
  படத்தின் கதை என்ன??


வேலு( ஸ்ரீ) யாருமற்ற அனாதை பிளாட்பாரக்கடையில்  வேலை செய்து வயிற்று பசி போக்கி கொள்ளுபவன்.. அவன் வேலை  செய்யும் பிளாட்பாரக்கடைக்கு எதிரில் இருக்கும்  பெரிய  அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் ஜோதி (ஊர்மினா மன்ஹாட்டன்)க்கும் மோதல் ஏற்படுகின்றது..

  ஜோதியின் நல்ல மனதை பார்த்து விட்டு  அவள் மீதான மோதலை கை விட்டு விட்டு அவள் மேல் ஒரு தலைக்காதல் வயப்படுகின்றான்..ஜோதி வேலை செய்யும் வீட்டுஓனரின் பள்ளி படிக்கும் பெண் ஆர்த்தி(மனிஷா யாதவ்)க்கும்  அவர்கள் வீட்டுக்கு மேல் மாடியில் இருக்கும் தினேஷ்( மிதுன் முரளி)க்கும்  காதல் ஏற்படுகின்றது..

ஆனால்  அந்த காதல் புட்டுக்கொள்கின்றது.. அதனால் ஜோதியும் வேலுவும் எப்படி பாதிக்கின்றார்கள் என்பதே  படத்தின்  திரைக்கதை..


படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
காதல்  படத்துக்கு பிறகு மீண்டும் வெற்றியை  இந்த படத்தின் மூலம் சுவைத்து மகிழ்ந்து இருக்கின்றார்... இவரின் முந்தையபடமான கல்லூரி திரைப்படம் எனக்கு ரொம்பவே  பிடிக்கும் அதில் தமன்னா  மற்றும்  அந்த படத்தில் நடித்தவர்கள் அத்தனை பேருமே  நன்றாக  நடித்து இருப்பார்கள். ஆனால் அந்த படம் ஓடவிவ்லை..ஆனால் எனக்கு அந்த படம் மிகவும் பிடித்து இருந்த்து.


 படம்முடிந்த உடன் எழுந்து நின்று கைதட்டுகின்றார்கள்...  படம் பார்க்கும் அத்தனை பேரும் தட்டும் அந்த கைதட்டல்தான் இந்த  படத்தின் வெற்றியை தீர்மாணித்து விட்டது.


பிளாட்ப்பார கடை அதன் பிரச்சனைகள், அதில் என்ன என்ன வேலைகள் செய்ய வேண்டி வரும் என்று எல்லா வேலைகளையும் மிக நுனுக்கமாக கவனித்து படமாக்கி அதில் வேலுகேரக்டரில் கனா காணும் காலங்கள் புகழ் ஸ்ரீயை  நடிக்க வைத்து இருக்கின்றார்கள்... 


 வேலு பாத்திரத்தை மிக நன்றாகவே செய்து இருக்கின்றார்.
வேலு  வேலை செய்யும்  பிளாட்பாரக் கடையில் கூடசினிமா கனவுக்களுடன் வேலைக்கு சேரும் சின்னசாமி.. மனதில் நிற்கும் கேரக்டர்.. அந்த பையனின் பின் புலத்தையும் கருப்பு பிராவோடு மேக்கப்போட்டுகொண்டு இருப்பதும், மார்பில் நிறைய பணங்களை குத்திக்கொண்டு கூத்து ஆடுவதை பார்க்கும் போது உடம்பு நடுங்குகின்றது..யப்பா என்ன திறமை? இந்த சின்ன வயதில்.. சான்சே இல்லை.......ஹேட்ஸ் ஆப்...


ஜோதியாக  வாழ்ந்து இருக்கும் ஊர்மிளா மன்ஹாட்டன் அஸ்சாம் மாநிலத்து பெண் மட்டும் அல்ல புனே  பிலிம் இண்ஸ்டியூட் பெண்ணாம்... நடிப்பில் பின்னுகின்றார்...
ஆர்த்தியாக நடித்து இருக்கும் மனிஷா யாதவ் சில வேலைகளில் சூப்பர் பிகராகவும் சில  காட்சிகளில் அப்படி நினைத்த்து தவறோ என்று எண்ணும் வகையில் இருக்கின்றார்.. இடைசெறுகலாக் சில காட்சிகளில் செமை கட்டை என்ற எண்ணத்தை தோற்றுவிப்பது போல  சிலகாட்சிகளில்   தோன்றுகின்றார்.


படத்தின் நான் ரசித்த கேரக்டர் என்றால் தினேஷ் என்ற கேரக்டரில் வரும்மிதுன் முரளி.. சான்சே இல்லை.. வெள்ளையா இருக்கறவன் தப்பு செய்வான்னு கனா கண்டேன் படத்துக்கு அப்புறம் இன்னும் அழுத்தமா சொன்ன படம் இது..


தினேஷ் கேரக்டர் வாய்ஸ் மாடுலேஷன் மற்றும் பாடி லாங்வேஜ் அசத்தல் ஒரு தேர்ந்த  சத்யராஜின் அல்வா கேரக்டர் அந்த பையனிடம் வெளிப்படுகின்றது..  அந்த அளவுக்கு வேலை வாங்கி இருக்கின்றார்கள்.,

 படத்தில் வரும் எல்லா சின்ன சின்ன கேரக்டர்களும் மனதில் நிற்க்கின்றார்கள்.  முக்கியமாக ரோசி அக்கா கேரக்டர்...

படத்தின் போலிஸ் இண்ஸ்பெக்டர் குமாரவேலு துடிப்பதை பார்க்கும் போது,மனதில் ஒரு சாதித்த உணர்வு ஏற்படுகின்றது பாருங்கள்... இதேதான் எனக்கு மைனா படம் பார்க்கும் போது கிளைமாக்ஸ் காட்சியில் ஏற்பட்டது..குமாரவேலு இயல்பாய் வில்லத்தனம் காட்டுகின்றார்..

முதல் பாதியில் பல காட்சிகள் வலிந்து  தினிக்கப்பட்டவையாகவ தோன்றுயது.. நிறைய காட்சிகளில் விஷுவலாக சொல்லாமல் டயலாக் அதிகம் பயண்படுத்தி இருக்கின்றார்கள்.. அதனால் ஒரு ஆவணபடம் பீல் கொஞ்சம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

இசை பெரிதாய் கவரவில்லை.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி ஸ்டில் கேமராவான 5டி கேமராவில் எடுத்து இருக்கின்றார்கள்.

முதல் காட்சியில் குவாலிட்டி பல்லை இளித்துக்கொண்டு  இருந்தாலும் போக போக அசத்தி  விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.. தயவு செய்து உடலில் கேமராவை மாட்டிக்கொண்டு எடுக்கும் காட்சிகள் இயல்புதன்மையை கெடுத்துவிடுகின்றன..
பெரிய ஸ்டார் காஸ்ட் இல்லாமல் ஒரு படத்தை எடுத்து படம் பார்த்த அத்தனை பேரையும் கைதட்ட வைப்பது அவ்வளவு சாதாரணமான  விஷயம் இல்லை..ஹேட்ஸ் ஆப் பாலஜி சக்திவேல் சார்..


உங்கள் வீட்டில் வயதுக்கு வந்த பெண் பிள்ளை இருந்தால் அசிங்கம் அது இது என்று யோசித்துக்கொண்டு இருக்காமல்  இந்த படத்தை பார்க்க செய்யுங்கள்.. எப்படி எல்லாம் ஒரு ஆண் வலை வீசுவான் என்பதையும் எப்படி எல்லாம் கேமரா மொபைல்களில்  நிர்வாணமாய் சிக்கலாம் என்பதையும் வயதுக்கு வந்த பெண்ணுக்கு புரிய வையுங்கள்..


மொபைல் கேமரா பற்றி  பிரச்சனைகளை தனியாக  பதிவிடுகின்றேன்.
==========

படத்தின் டிரைலர்..

============

படக்குழுவினர் விபரம்.
Directed by Balaji Shakthivel
Produced by N. Subash Chandrabose,
Ronnie Screwvala
Written by Balaji Sakthivel
Starring Mithun Murali
Sri
Urmila Mahanta
Manisha Yadav
Music by R. Prasanna
Cinematography S. D. Vijay Milton
Editing by Gopi Krishna
Studio Thirupathi Brothers
UTV Motion Pictures
Release date(s)
May 4, 2012
Running time 115 minutes
Country India
Sri Lanka
Language Tamil


================

தியேட்டர் டிஸ்கி...
நேற்று இரவு உள்ளகரம் குமரனில் இந்த படத்தை நானும் நண்பர் நித்யாவும் பாத்தோம்..70 ரூபாய்க்கு நல்ல  மெயின்டெயின் செய்கின்றார்கள். இனி சைதை ராஜ் போல உள்ளகரம் குமரனிலும் படம் பார்க்கலாம் என்று இருக்கின்றேன்.. தியேட்டரை நடத்துபவர்கள் படத்தின் பேனரை மெயின் ரோட்டில்  வைக்காமல் உள்ளே வைத்தால் எப்படி கூட்டம் வரும்.. என்ன படம்ஓடுகின்றது என்று உள்ளே பார்த்தால்தான்  தெரிகின்றது... நல்ல தியேட்டர்.. விளம்பர படுத்த தெரியவில்லை.. சே சேட்...
=============

பைன்ல்கிக்..
இந்த படம் தமிழ்சினிமாவின் மைல்கல்... எந்த படம் சமுதாயத்து பிரச்சனைகள் செவிட்டில் அடித்து  சொல்லுகின்றதே அந்த படமே என் அளவில் சிறந்த படம்.. அந்தவகையில் மிக சிற்ப்பான படம்.. விடலை பெண்களை கவிழ்த்து    மொபைல் கேமராவில் எடுத்து  மிரட்டி பலருக்கு விருந்து இநத் காலத்தில் இந்த படம் நல்ல விழிப்புனர்வு படம் என்றால் அது மிகையில்லை என்று சொல்லுவேன்.பாலாஜிசக்திவேலுக்கு மீண்டும் நன்றிகள்.. முக்கியமாக அந்த கூத்துகார பையனின் திறமையை வெளிப்படுத்தியதற்கு....கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய உலக சினமா வரிசையில் ஒரு உன்னத தமிழ்படம்..



=========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..






நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

23 comments:

  1. சத்தமே இல்லாமல் வந்து சாதித்த தமிழ் சினிமாக்களில் முக்கிய இடத்தில் இப்படம் இருக்கும்னு சொல்றீங்க , சரி சரி . . .பாத்துடலாம்தான் . .சீ சீ கண்டிப்பா பாத்துடலாம்

    ReplyDelete
  2. ஜாக்கி அருமை. இன்னிக்கு பாக்க போறோம்.

    //வெள்ளையா இருக்கறவன் தப்பு செய்வான்னு கனா கண்டேன் படத்துக்கு அப்புறம் இன்னும் அழுத்தமா சொன்ன படம் இது..//

    ஏன்?? பொறமை??? (நான் வெள்ளை இல்ல சாமி)

    ReplyDelete
  3. வழக்கு எண் 18/9 !!!

    ReplyDelete
  4. அருமையான விமர்சனம்...உலக சினிமா அப்படின்னு வேற சொல்லிடீங்க...கண்டிப்பா பாத்துடுறோம்...

    ReplyDelete
  5. ரைட்டு இன்னைக்கே எந்த கடையிலயாவது CD கிடைக்குதான்னு பார்ப்போம்.., அட நான் இருக்கிற நாட்டுல தியேட்டரில் தமிழ் படம் அதிகம் திரையிட மாட்டாங்கப்பா ...!

    ReplyDelete
    Replies
    1. already released in so many websites.... use google search...

      Delete
    2. ada paavigala..poi theatrela padam parungapa..

      Delete
  6. நிறைய காட்சிகளில் விஷுவலாக சொல்லாமல் டயலாக் அதிகம் பயண்படுத்தி இருக்கின்றார்கள்..

    tnx for ur eview its a good one.wil correct in future.tnx

    ReplyDelete
  7. பாத்துட்டேன்!

    ReplyDelete
  8. நல்ல விமர்சனம். நாளை பார்த்துவிடுவேன். படம் நம் எதிர்பார்ப்பை ஈடு செய்தாலே வெற்றி தான்!

    ReplyDelete
  9. சரி - தப்பு, நல்லது - கெட்டது, ஏழை - பணக்காரன் ஆகியவைக்கும் மனிதனின் நிறத்திற்கும் சம்பந்தம் இல்லை. அப்படிப் பார்த்தால் கறுப்பு இனத்தவர் தான் மண்டேலா. சொல்ல்ப் போனால் ஏழைகள் (கறுப்பு) தான் கருணைமிக்கவர்களாக இருக்கின்றனர்.

    ReplyDelete
  10. விம்ர்சனம் அருமை...
    பார்க்க வேண்டிய படத்துக்கு அருமையான விமர்சனம்,

    ReplyDelete
  11. //எந்த படம் சமுதாயத்து பிரச்சனைகள் செவிட்டில் அடித்து சொல்லுகின்றதே அந்த படமே என் அளவில் சிறந்த படம்//

    ஒரு வாசகம்னாலும் திருவாசகம்.

    ReplyDelete
  12. படம் முடிந்த உடன் அனைவரும் எழுந்து கை தட்டினார்கள் ,அதுவே இந்த படத்தின் வெற்றி க்கு அடையாளம் . ஏதோ சாதித்த திருப்தி நமக்கு வருகிறது

    ReplyDelete
  13. படம் முடிந்த உடன் அனைவரும் எழுந்து கை தட்டினார்கள் ,அதுவே இந்த படத்தின் வெற்றி க்கு அடையாளம் . ஏதோ சாதித்த திருப்தி நமக்கு வருகிறது

    ReplyDelete
  14. சைதை ராஜ் நல்ல தியேட்டர் தான்.என்ன படம் கொஞ்சம் பளீச்சென தெரியாது.60 ருபாய் டிக்கெட்டுக்கு சென்னையில் ஓரளவு ஓகே.
    நான் ரெகுலராக படம் பார்ப்பது அங்கேதான்.

    ReplyDelete
  15. Dear anna

    Yesterday I saw the flim at Ullagaram kumaran theatre with my friends. Movie is very good. Mr Balaji Sakthivel sir Proving again and again.

    ReplyDelete
  16. உன்னுடன் சேர்ந்து படம் பார்த்த நாட்கள் ஞாபகம் வருகிறது. விமர்சனம் அருமை.

    ReplyDelete
  17. ஒவ்வொரு காட்சியும் சிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது... அருமையான படம்.., ஏனோ படம் முடிந்த உடன் ஒரு சோகம் தொற்றிக்கொள்கிறது.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner