கஹானி இந்தி படத்தை பற்றி இணையத்தில் எல்லோரும் எழுதி எழுதி
மாய்ந்து விட்டார்கள்.நாமும் எழுதி வைப்போம்... என்னது கஹானி திரைப்படத்தை
இப்போதுதான் பார்க்கின்றீர்களா?
என்று ஆச்சர்யபட வேண்டாம்.. நேரம்
இருக்கும் போதுதானே பார்க்க முடியும்?
கஹானி பற்றி
நிறைய நல்ல விதமான அபிப்ராயங்கள் வந்த காரணத்தால் நான் படத்தின் கதையை எங்கேயும் படிக்கவேயில்லை.. திரைப்படத்தை சில நாட்களுக்கு
முன் பார்த்து விட்டு அசந்து போய் இருக்கின்றேன்.
ஒரு நிறைமாத கர்பினி போல நடிப்பது அவ்வளவு சாதாரண விஷயம்
இல்லை.. ஏற்கனவே டேர்ட்டி பிக்சரில் கலக்கிய வித்யாபாலனின் எவர்கீரின் மாஸ்டர் பீஸ்
என்று இந்த படத்தை சொல்லலாம்.
நிறைமாத கர்பினிகள் இரண்டு கிலோவுக்கு அதிகமான குழந்தையை
வயிற்றில் சுமக்கும் போது ஒரு மாதிரி காலை அகட்டி வைத்து அரக்கி அரக்கி நடப்பார்கள்.
தளர்த்தியாகத்தான் பிரா அணிவார்கள்..
நடக்கும் போது ஆசுவாசப்படுத்திக்கொள்ள பின்பக்கம் சப்போர்ட்டுக்கு கை வைத்துக்கொள்ளுவார்கள். அதையெல்லாம் கர்பவதி போல நடிக்கும் ஒரு நடிகை செய்தால் மிக
ஆச்சர்யமாக இருக்கம் அல்லவா? வித்யா பாலன்
அசத்தி இருக்கின்றார்.
===========
Kahaani-2012 திரைப்படத்தின் ஒன்லைன்.
லண்டனில்
இருந்து இந்தியாவுக்கு வேலைக்கு வந்து தொலைந்து போன கணவனை தேடி வரும் ஒரு
கர்பவதியின் கதை...
===========
Kahaani-2012 திரைப்படத்தின் கதை என்ன??
கல்கத்தாவுக்கு நேஷனல் டேட்டா சென்டருக்கு வேலைக்கு வந்து
மாயமாகி போன கணவனை தேடி லண்டனில் இருந்து Vidya Bagchi (Vidya Balan)
வருகின்றார்..
ஆனால்
வித்யாவின் கணவன் போனில் அவளிடம் தான் தங்கி இருந்த இடங்களை பற்றி சொல்லிஇருக்கின்றான்.. அந்த இடங்களில்
சென்று விசாரிக்கின்றாள்.. ஆனால் கணவனை பற்றி ஒரு துப்பும் இல்லை.. கணவனை
விசாரிக்க ஆரம்பித்த உடன் அவள்
யாரையெல்லாம் சந்தித்து விட்டு
வந்தாளோ அவர்கள் எல்லாம் பரலோகம் சென்று கொண்டு இருக்கின்றார்கள்..
வித்யா
பாக்சியையும் ஆபத்து சூழ்கின்றது கர்பவதி தன்னை எப்படி காத்துக்கொண்டாள் என்பதை
வெண்திரையில் பாருங்கள்.
==========
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
போகின்ற போக்கை பார்த்தால் சூப்பர் ஸ்டார்
வித்யாபாலன் என்று டைட்டில் போட்டு விடுவார்கள் போல.. அந்த அளவுக்கு நடிப்பில்
பின்னி பெடலெடுக்கின்றார்.
இந்த
படம் சஸ்பென்ஸ் திரில்லர் வகையை சார்த்தது.
எட்டு கோடி
செலவு செய்து விட்டு 104 கோடி ரூபாயை இந்த படம் சம்பாதித்து இருக்கின்றது என்றால்
இந்த படத்தின் வெற்றியை யோசித்துக்கொள்ளுங்கள்..
வித்யா பாலன்
இந்த படத்தின் தமிழ் பெண்ணாக வருவதால் சில காட்சிகளில் சின்ன சின்னதாக நம்ம ஊரை
டச்சு பண்ணி இருக்கின்றார்கள்..
வித்யா
பாலனுக்கு உதவி செய்யும் போலிஸ் கேரக்டர் நல்ல தேர்வு... வீட்டுக்கு டிராம்
வண்டியில் போகும் போன் எடுத்து தினமும் பேசுவதை வைத்தே காட்சிகளில்
வெளிப்படுத்தும் அந்த கேரக்டரின் மன நிலையை சொன்ன விதம்..
கம்யூட்டரில்
அருகே வந்து வேலை செய்யும் போது வித்யாவின்
அருகாமையும் அந்த பெண் வாசனையும்
முகர்ந்து விட்டு சின்னதாக மையல் கொள்வது
என்று அந்த போலிஸ்கேரக்டர் ரானா சின்ஹா சான்சே இல்லை.
அதே போல கான்
கேரக்டராக வரும் அந்த அதிகாரி கேரக்டர்... சான்சே இல்லை.. வித்யா எதிரில் சிகரேட்
பிடிப்பதில் இருந்து... அவன் இல்லீகலா கொலை செய்யறான்.. நாம லீகலா கொலை செய்யறோம்
அதான் இரண்டு பேருக்கும் பெரிய வித்யாசம் என்று கேஷூவலாக சொல்லும் காட்சியில்
காட்சிக்கு கணத்தை கூட்டுகின்றார்.
பேக்கு போல கொலை செய்ய வரும் அந்த கொலைகாரனை பார்க்கும் போதே பக் என்ற இருக்கின்றது.. நல்ல தேர்வு.
சின்ன சின்ன
கேரக்டர்களை கூட ரொம்ப சிறப்பாக செதுக்கு இருக்கின்றார்கள். முக்கியமாக ஓட்டலில்
வென்னி தண்ணி எடுத்து வரும் அந்த பையனின்
விகல்பமில்லா சிரிப்பு.. வரே வா...
இயக்குனர்
Sujoy Ghosh ஒரு சிறப்பான படத்தை எடுத்து இருக்கின்றோம் என்று காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்.
கிளைமாக்ஸ்
சான்சே இல்லை. ஐ லவ் வித்யா..
===============
படத்தின்
டிரைலர்.
==============
படக்குழுவினர்
விபரம்.
Directed by Sujoy Ghosh
Produced by Sujoy Ghosh
Kushal Kantilal Gada
Written by Ritesh Shah
Sutapa Sikdar
Sujoy Ghosh
Screenplay by Sujoy Ghosh
Suresh Nair
Nikhil Vyas
Story by Sujoy Ghosh
Advaita Kala
Starring Vidya Balan
Parambrata Chatterjee
Nawazuddin Siddiqui
Indraneil Sengupta
Saswata Chatterjee
Music by Vishal-Shekhar
Cinematography Setu
Editing by Namrata Rao
Studio Boundscript Motion Pictures
Distributed by Viacom 18 Motion Pictures
Pen India Pvt.Ltd
Release date(s)
9 March 2012
Running time 128 minutes
Country ‹See Tfd› India
Language ‹See Tfd› Hindi
Budget 8 crore (US$1.6 million)
Box office 104 crore (US$20.75 million)
==============
பைனல் கிக்..
இந்த படம்
நல்ல திரில்லர் எதிர்பாராத கிளைமாக்ஸ்..
பெரிய பூச்சுக்கள் இன்றி மிக இயல்பாக ரொம்ப நீட்டாக இருக்கும் படம். அதனால்
இந்த படத்தை பார்த்தே தீரவேண்டும்.. இந்த படம் நிச்சயம் பார்த்தே தீரவேண்டியபடம்தான். சென்னை பாரிசில் இருக்கும் மூவிஸ் நவ் கடையில் இந்த திரைப்படம் கிடைக்கின்றது.
பிரிய்ங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
லேட்டா வந்தாலும் லேட்டட்டஸாக வந்திருக்கிறது உங்கள் விமர்சனம். படம் பார்த்து ரொம்ப நாளாச்சுன்னாலும் மறுபடி பார்க்கத்தூண்டுகிறது
ReplyDeleteஅதே போல் கொல்கட்டா ஊர் மக்களுக்கு சில உச்சரிப்புக்கள் வராது...அதையும் காட்டியிருப்பார்கள்....
ReplyDeleteஅதே போல் கொல்கட்டா ஊர் மக்களுக்கு சில உச்சரிப்புக்கள் வராது...அதையும் காட்டியிருப்பார்கள்....
ReplyDeletenice comment
ReplyDeletegood writing jakie
ReplyDeleteபடம் பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள்.
ReplyDeleteclimax nijamave twist than sir
ReplyDeleteடியர் ஜாக்கி ,
ReplyDeleteஇப்ப தான் முதல் முறையா ஒரு ஹிந்தி படத்தோட விமர்சனத்தை உங்க தளத்துல படிக்கிறேன்.
நீங்க ஏன் மலையாள படங்களை பத்தி எழுதக்கூடாது ?. மலையாளிகளோடு நமக்கு எவ்வளவோ முரண்பாடுகள் இருந்தாலும் நிறைய நல்ல எதார்த்தமான பழைய மலையாள படங்கள் இருக்கின்றன.
Please try them.
டியர் ஜாக்கி ,
ReplyDeleteஇப்ப தான் முதல் முறையா ஒரு ஹிந்தி படத்தோட விமர்சனத்தை உங்க தளத்துல படிக்கிறேன்.
நீங்க ஏன் மலையாள படங்களை பத்தி எழுதக்கூடாது ?. மலையாளிகளோடு நமக்கு எவ்வளவோ முரண்பாடுகள் இருந்தாலும் நிறைய நல்ல எதார்த்தமான பழைய மலையாள படங்கள் இருக்கின்றன.
Please try them.
டியர் ஜாக்கி ,
ReplyDeleteஇப்ப தான் முதல் முறையா ஒரு ஹிந்தி படத்தோட விமர்சனத்தை உங்க தளத்துல படிக்கிறேன்.
நீங்க ஏன் மலையாள படங்களை பத்தி எழுதக்கூடாது ?. மலையாளிகளோடு நமக்கு எவ்வளவோ முரண்பாடுகள் இருந்தாலும் நிறைய நல்ல எதார்த்தமான பழைய மலையாள படங்கள் இருக்கின்றன.
Please try them.