யாழினி அப்பா.... 6





கடந்த மூன்று வாராங்களாக கடுமையான வேலை  அதனால் இணையம் பக்கமே வர முடியவில்லை.. நாட்டு நடப்பு என்று எதிலும் பெரிய சுவாரஸ்யத்தில் மனம் லயிக்கவில்லை.. தினம் ஒரு பார்த்து விட்டுதான் தூங்குவேன் படம் பார்த்து பல வாரங்கள் ஆகின்றது..


நேற்று வந்த இந்த கடிதம் என் மனதை ரொம்ப நெகிழ செய்தது ...யாரோ ஒருவர் நான் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்... அதை எழுதுகின்றார்... இந்த பரபரப்பான உலகில் நம்மை பற்றி கவலை கொள்ளவும் நமக்காய் நேரம் ஒதுக்கி எழுதுவது எவ்வளவு  பெரிய விஷயம்..

முன்று வாரம் எழுதாத இந்த தருணங்களில்  ஒன்று மட்டும் புரிந்து போனது.. முன்பை விட நிறைய நண்பர்களை பெற்று இருக்கின்றேன்.. பாசமான தம்பிகளை பெற்று இருக்கின்றேன்.. மனிதர்களை சம்பாதிப்பது என்பது பெரிய  விஷயம்.. அதனாலே இன்று  நேரம் ஒதுக்கி எழுத தோன்றியது.

ராஜ் சந்தித்த அதே அவமானங்களை நானும் சந்தித்து இருக்கின்றேன்... யாழினி பிறந்த உடன் தம்பி அப்துல்லா சொன்னது இன்றும் நினைவில் இருக்கின்றது.. என் பெரிய மக வளர வளர நாள் வளர்ந்தேன்.. அது போல நீங்க அவ வளர வளர ஒரு பெரிய  பொசிஷனுக்கு வருவிங்க அண்ணே நான் சொல்லறது நடக்கும்  பாருங்க என்று தம்பி அப்துல்லா சொன்னதை பலரும் சொல்லி இருக்கின்றார்கள்.. இப்போது ராஜும் அதையே சொல்லி இருக்கின்றார்.. பார்ப்போம்..

அன்பு ஜாக்கி,
  எப்படி இருக்கீங்கயாழினி பாப்பா நல்ல இருக்கா?    

நீங்கள் அம்மாவுக்கு எழுதிய சில பதிவுகளைஎல்லோரும் பாராட்டினார்கள். நான்  அந்த பதிவில் உங்களின் மனதை பார்த்தேன்.அதில் இருக்கும் சோகத்தை  பார்த்தேன்.  என்ன சோகம் என்றால்வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் சோகம். நானும் என்  வாழ்கையில் மோசமான காலகட்டத்தில் அப்படி இருக்க வேண்டிய நிலைமை. 

MCA படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தேன்.1996 இல் அண்ணா யுநிவேர்சிடியிலும்,  IIT   யிலும்  இருந்துதான்  வேலைக்கு ஆள் எடுத்தார்கள்.   பிறகு ஒரு சின்ன வேலையில் என் நண்பர் மூலமாக  சேர்ந்தேன். என் அத்தை மகளை லவ் பண்ணியதால் உடனே திருமணம்.
திருமணமான 8  மாதத்தில் வேலை போய் விட்டது. என் மகளை  வயிற்றில்  சுமக்கிறாள் என் மனைவி. என்ன  கொடுமையான வாழ்க்கை. நாங்கள் என் மாமனார் வீட்டின்  கீழ் தான்  இருந்தோம். யாராவது உறவினர் வந்தால் அவர்கள் முகத்தில் கூட  விழிக்க முடியாமல் திரிந்த மோசமான நேரம். என் மகள் பிறந்தாள் 19 -மே - 2000 . என் அப்பா சொன்னது "கவலைப்படாதே  பெண் பிள்ளை பிறந்த நேரம் நீ 
எங்கயோ போக போற". அதே மாதிரி 03 -மார்ச் -2001 சிங்கப்பூர் போனேன் ஒரு நண்பர் மூலமாக. ஐந்து வருடம் சிங்கை வாசம்.  இப்போது இங்கே சென்னை  வந்து செட்டில்  ஆகிவிட்டேன். அதே போல் யாழினி   பாப்பா பிறந்து  உங்களுக்கு நல்ல காலம் ஆரம்பித்து விட்டது. இனி வெற்றி  தான்.  

உங்கள் பதிவை பார்க்க தினமும் உங்கள் தளத்தை திறந்து பார்ப்பது வழக்கம். நீங்கள் போட்ட 23 -Apr பதிவை பார்க்கும் பொதுஎனக்கு புதிய பதிவு போடவில்லையே என்ற ஏமாற்றத்தை விட, நீங்கள் பதிவிட நேரம் இல்லாமல் வேலையில் இருக்கிறீர்கள் (என்று நம்புகிறேன், ஆண்டவனிடம் வேண்டுகிறேன் ) என்பது மனதுக்கு திருப்தியாகவும் இருக்கிறது. ஜாக்கி நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்பதை விட உங்கள் பதிவுகள் முக்கியமில்லை. 

என் மனதுக்குள் <<என்றாலும் எங்களுக்காக லீவ் நாளில்
 வாரம் ஒரே ஒரு சாண்ட்  வெஜ் அண்ட் நான் வெஜ் மட்டுமாவது போடலாம் இல்லையா? >>. சரி என் mind  வாய்ஸ் உங்களுக்கு கேட்க்கும் என்று நம்புகிறேன். https://mail.google.com/mail/e/338

அன்பு நண்பன்,
ராஜ் முத்து குமார்  
anandhabavanam.blogspot .com 
========

சில வேலைகளை செய்து தர சம்மதித்து இருக்கின்றேன்.. இனி முன்பு போல் இணையத்தில் அதிகம் எழுதுவது சந்தேகமே...ஆனாலும் என்னை அடையாளப்படுத்திய இந்த இடத்தை என்னால் ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது.. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் எழுதுவேன்.. அல்லது  எழுதவதற்கு நேரத்தை உருவாக்கி கொள்கின்றேன்.
சிலர் கடைசியாக போட்ட பதிவில் யாழினிக்கு உடல் நிலை சரியில்லை என்று  எழுதி இருந்தேன்..  போன்  செய்யும் அத்தனை பேரும் யாழினியின் உடல்நிலையை விசாரிக்கின்றார்கள்.. அதனால்தான் எழுதவில்லையோ என்று அவர்களாக நினைத்துக்கொள்ளுகின்றார்கள்..அப்படியெல்லாம் இல்லை...
=============
யாழினி இப்போது நடக்க ஆரம்பித்து  விட்டாள்.. அதனால் அவள் உயரத்துக்கு இருக்கும் பொருட்கள் எல்லாம்  பூமாதேவியிடத்தில் தஞ்சம் அடைகின்றன.. பொருட்களை களைத்து போட சலிக்கவே மாட்டேன் என்கின்றது... ஒரு 40 முறைக்கு மேல் அடுக்கி வைத்த பேப்பரை களைத்து போட்டு விட்டாள். இது ஒரு பொழப்பு என்று  பேப்பரை எடுத்து போட்டு என்னை பார்த்து பளிச் என்று சிரிக்கையில்,  முதுகில் இரண்டு வைக்கலாம் என்று  நினைத்தாலும் முடிவதில்லை..
=================
பேசும் எல்லா விஷயங்களும் நன்றாக புரிகின்றன.. நினைத்த விஷயத்தை அடைந்தே ஆக வேண்டும் என்ற அடம் ரொம்பவே அதிகம்.. சிலரை பிடிக்க வில்லை என்றால் அப்படியே புறம் தள்ளி விடுகின்றாள்... அவர்கள் என்னதான் காட்டுக்கத்தல் கத்தினாலும் திரும்பிகூட பார்ப்பதில்லை.. அவளுக்கு பிடித்தால்தான்  வாயே திறக்கின்றாள்.. இது பற்றி என் மனைவியிடம் சொன்னேன்.  உன்புத்தி அதுக்கு இல்லாமலா இருக்கும்? என்கின்றாள்.
=================
என் இரண்டு நாள் தாடியில் முகத்தை உரசி  விளையாடுவது யாழினிக்கு மிக பிடித்தமான விளையாட்டாக இருக்கின்றது.. அதுக்காகவே இரண்டு நாள் தாடியில் சுற்ற வேண்டியதாக இருக்கின்றது.
==============

யாழினி சந்தித்த முதல் சம்மர் அவளால் முடியவில்லை.. உடல் உஷ்னம் காரணமாக ஜுரம் வந்து இரண்டு நாட்கள் படுத்தி எடுத்து விட்டாள்... நச நச என்ற அழுது கொண்டே இருந்தால் அவள் அழ ஆரம்பித்தாலே டென்ஷன் வந்து விடுகின்றது..

 சின்ன விஷயத்துக்கு மனைவியை எரிந்து விழ நெரிடுகின்றது..  சில நேரங்களில் அவளை பார்க்கையில் பரிதாபமாக இருக்கின்றது...
இரண்டு வாரங்களுக்கு முன் இரண்டு நாட்களாக குழந்தை ஆய் போகவில்லை..வயிற்று வலியில் துடிக்கின்றாள்..அதிக ஊஷ்னம் காரணமாக அவள் உடலும சூடாக இருக்கின்றது.. டாக்டரை போய் பார்த்து விட்டு வந்தும்.. குழந்தை அழுது துடிக்கின்றாள்.. டாக்டர் சொன்னார்.. ஆய் போய்விட்டால் வயிற்றுவலி குறைந்து விடும் என்று சொன்னார்.. குழந்தைக்கு சீக்கிரம் ஆய் வர கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.. வேண்டுதலின் போது கூட ச்சே எதுக்கெல்லாம் வேண்டுகின்றோம் என்று எண்ணம் வேறு...


மருந்து கொடுத்ததும் கொஞ்சம் தூங்க ஆரம்பித்தாள்.. நான் விருகம்பாக்கத்தில் இருக்கும் நண்பரை சந்தித்து விட்டு வந்து விடுகின்றேன் என்று கிளம்பினேன்..

நண்பரை பார்த்து பேசிக்கொண்டு இருந்தேன் மனைவி  போன் செய்தாள்.. யாழினி ஆய்  போய் விட்டாள் என்றும் சொன்னாள்... மனது குதுகலித்தது. ஆய்  போறதுக்கெல்லாம் மனது குதுகலிக்கற அளவுக்கு  வச்சிட்டியே...என்று நொந்துக்கொள்வதை தவிர நான் வேறு என்ன செய்து விட முடியும்???


==========
யாழினிக்கு உங்கள் அன்பை தெரிவிக்க yazhinijackiesekar@gmail.com என்ற மெயில் ஐடிக்கு  மெயில்களை  அனுப்புங்கள்.

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


 =========
 குறிப்பு 
என்னிடம் இருந்து  போன் ஊத்திக்கொண்டு விட்டது அதனால் அனைவருடைய நம்பர்களும் கோவிந்தா கோவிந்தா.. அதனால் போன் செய்யும் போது யார் என்று கேட்டால்? என்னை கோபிக்க வேண்டாம்... தயவு செய்து உங்கள் எண்களை எனக்கு ஒரு மெசேஜில் பெயர் போட்டு மெயிலிலோ அல்லது போனிலோ தட்டி விடவேண்டுகின்றேன்....



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

16 comments:

  1. WELL JACKIE SIR,,, AFTER A CAP.... NICE TO C U BACK... HOPE YAZHINI IS DOING WELL.....MAY GOD BLESS YAZHINI.... CONVEY MY BEST REGARDS TO MY CUTE LITTLE ANGLE.....TIME KEDAIKKUM POTHU KANDIPPA YEZUTHUKKA JAKIE SIR.....THKS

    ReplyDelete
  2. குழந்தை மலம் போகாமல் ரொம்ப அவதிப்பட்டால், Dulcolax உபயோகப்படுத்தவும் (டாக்டரை கலந்தாலோசித்த பின்!)

    ReplyDelete
  3. Anna.. Ponnu appadiye unga jadai .. :)

    ReplyDelete
  4. பழங்களே சிறந்தது. பப்பாளி பழம் கொடுத்தா இந்த ஆயி மேட்டர் நெருங்காது. அளவாக சாப்பிட்டால் சூடு இல்லை.

    ReplyDelete
  5. Dear Jackie, Very happy to know that Yazhini is normal now and she is keeping you busy by her mischievous activities. This is the time to enjoy whatever she does instead of getting annoyed. Very sad to know that you will not write much in your blog now. But still I feel that you must write something more under about UPPU KATHU. With best wishes.

    ReplyDelete
  6. Congrats for the job and prayers for Yazhini's health. Please DO NOT give Dulcolux to Yazhini even after consultation. Try fruits that has lot of fiber line Guau (Koiya) and lot of water.

    ReplyDelete
  7. Hai Anna...

    how are you
    convey my regards and wishes to yr wife,pappa
    after seeing u long time i am so happy
    i think u r busy in your work
    Daily office vanthathum unga site open panni parppen
    u are very intimate to me anna...
    amma,appa,sister,ninauhal,wife,pappa,uppukattru ena ellame enakku pidikkum
    natural social interest romma pidikkum (you are not over act)
    time kidakkum podhu kandippa niraya ezhuthunga

    -kavitha saran
    movieellam harsa vimarsanam pannamattinga
    goo

    ReplyDelete
  8. குழந்தை மலம் போகாமல் ரொம்ப அவதிப்பட்டால், feed some hot water(with or without sugar).it will ease and give the result.

    ReplyDelete
  9. //Daily office vanthathum unga site open panni parppen
    u are very intimate to me anna...//office-la velai?

    ReplyDelete
  10. தினமும் இரவு உறங்கும் முன் குழந்தைக்கு ஆறு ,ஏழு காய்ந்த திராட்சைகளை தண்ணீரில் ஊறவைத்து புகட்டினால்
    காலையில் மலம் சுலபமாக வெளியேறும்.

    ReplyDelete
  11. நாம் மட்டும் தான் வாழ்க்கையில் ரெம்ப போராடிக்கொண்டிருக்கிறோம் என நினைக்கையில், போராடித்தான் யெயிக்க வேண்டும் என்பதை நன்பரின் கடிதம் மூலம் எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner