சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/06/05/2012(ஞாயிறு)

 ஆல்பம்..


ஐவர் குழு அறிவித்து விட்டது... முல்லைப்பெரியாறு அணையில் எந்த பிரச்சனையும் இல்லை... எந்த பூகம்பத்தையும் தாங்கும் சக்தி அதற்கு உண்டு..142 அடியாக தண்ணிரை உய்த்திக்கொண்டாலும்  பிரச்சனை இல்லை..


152 அடிவரை கூட உயர்த்தினாலும் அணைக்கு எந்த பாதிப்பு இல்லை....  வேறு அணை கட்ட தேவையில்லை என்று சொல்லியாகி விட்டது... ஆனால் அணை பலமா என்று துளையிட்ட பகுதிகளை அடைக்க வேண்டும் என்று தமிழகம்  கோரி வருகின்றது... கேரளா வழக்கம் போல  எதிர்ப்பு தெரிவிக்கின்றது... நான் தெரியாமதான் கேட்கிறேன்? சென்னையில தான் ரோட்டை நோண்டினா சடுதியில மூட மாட்டானுங்க...டெஸ்ட் பண்ண ஒரு அணையில போட்ட குழிய கூடவ அடைக்க நாதி இல்லை.. எனக்கு ஒன்னுமே புரியலை...??
=========
ஜனநாயக நாட்டில் போரட்டம் செய்துதான் காரியத்தை சாதிக்க வேண்டி இருக்கின்றது.. எல்லாம் மிக சரியாக நடந்து விட்டால்  யாரும் போராட்டம் செய்யப்போவதில்லை..தர்மபுரியில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களை பொது இடத்தில் கை ஓங்கி இருக்கின்றார்.. ஒரு எஸ்பி... பலத்த்த சர்ச்சையை இந்த விவகாரம் கிளப்ப.. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.. மக்கள் ஆவலுடன்  எதிர்பார்த்த நடவடிக்னையை அரசு எடுத்து விட்டது... ஆம் அந்த டிஎஸ்பியை இடமாற்றம் செய்து கிருஷ்ணகிரிக்கு  அனுப்பி விட்டது... இது போல லஞ்சம் மற்றும் ஊழல் பிரச்சனைகளில் சிக்கும்  போலிஸ்கார்ர்களை இடமாற்றம்தான் செய்கின்றார்கள்.. இட மாற்றம் செய்த இடத்திலும் அதே தவறை செய்தால்? திரும்பவும் இடமாற்றம்தான்.. அங்கேயும் அதே தவறை செய்தால்? திரும்பவும் இடமாற்றம்தான்.. அதுதான் இந்திய ஜனநாயகம்...
=============
 அமெரிக்க திரைப்படங்களில் ஒரு பெரிய பிரச்சனை நடக்கும் போது சிஐஏ மற்றும் எப்பிஐ ரெண்டு போலிசும் முட்டிக்கொள்ளும்... அது போல ஒரு நிலை வர வேண்டாம் என்று சில மாநில முதல்வர்கள்  தீவிரவாத தடுப்பு மையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.. என்னை பொருத்த அளவில் தேசிய அளவில் இப்படி ஒரு அமைப்பு இருக்க வேண்டும்... ஊர் ரெண்டு பட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல ஒரு வர் தவறு செய்தால் நிச்சயம் அது வெளியேவரும்,, அது மட்டும் அல்ல.... நிச்சயம் தேசிய அளவில் பாதுகாப்பில் நம் நாடு தன்னறைவை இன்னும் அடையவில்லை என்பதே உண்மை...
==============
போன  சாண்ட்வெஜ் பகுதியில் இந்தியா கண்டம் விட்டு கண்டம் தாக்கும் எவுகனை சோதனையை ஆதரித்த்தமைக்கு நிறைய பேர் எதிர்பாய் தங்கள் கருத்துக்களை  தெரிவித்து இருந்தார்கள்.. கல்வி  மற்றும் தனி மனித உள் கட்டமைப்பு முறையாக வளராத நாட்டில் ராணுவத்துக்கு கோடிக்கணக்கில் செலவிடுவது நியாம் இல்லை என்று அவர்கள் கருத்தை வைத்தார்கள்.. அந்த கருத்து எனக்கு ஏற்புடையதுதான் என்றாலும் நாட்டின் பாதுகாப்பு என்று வரும் போது சில விஷயங்களை நாம் அனுசரித்துதான் போக வேண்டும்.,. காரணம் நம்மை பக்கத்துநாடுகள் அநியாத்துக்கு சீண்டிகொண்டு இருக்கின்றன... இலங்கை, பாகிஸ்தான், சீனா போன்றவற்றை உதாரணமாக சொல்ல்லாம்... நாட்டில் லஞ்சலாவன்யம் பெருக்கெடுத்து ஓடுகின்றது என்றாலும் நாட்டின் பாதுகாப்பை  ரொம்ப லூஸ்ல விட்டு விடமுடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
==============
 மீண்டும் பதினைஞ்சு  சதவிகிதம் கல்வி கட்டணத்தை தனியார்  பள்ளிகள் உயர்த்திகொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்து விட்டது... பல பெற்றோர்கள் வயிற்றில் கிலியோடு பார்க்கின்றார்கள். எல்லா விலையும் உயர்ந்து விட்டது.. அதில் இந்த மகிழ்சியான  செய்தியையும்  சேர்த்துக்கொள்ள வேண்டும்.
=‘===============
பாவப்பட்ட மக்கள் இருக்கும் ஊர் சென்னைன்னு முடிவு ஆயிடுச்சி... சென்னையை தவிர்த்து எல்லா ஊர்லயும் மழை பூந்து அடிக்குது.. மதுரைல கூட சாயிந்திரம் ஆன டெய்லி மழை பெய்யுது..  அந்த மழை ஏக்கத்தை போக்கும்  வகையில் இந்த  காட்சி  கொஞ்சம் இதமா இருக்கும்குனு  நம்பறேன்..



-============
வாழ்த்துகள்...
சென்னைமேயர் சைதை துரைசாமி அவர்கள் நடத்தி வரும் மனித நேய அறக்கட்டளை மூலம்  படித்த 34 பேர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஸ் தேர்வில் வெற்றி பெற்று இருக்கின்றார்கள்.. பலன் எதிர்பாராமல் இந்த பணியை செய்து வரும் மேயருக்கும்  அறக்கட்டளை மூலம் படித்த வெற்றி  பெற்ற மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்.
===============
நித்தி மேட்டர் மதுரை ஆதினம் பற்றி எழுதவே அயற்சியாக இருக்கின்றது...  என்ன நடக்கின்றது பொருத்து இருந்து பார்போபம்.

===================
கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய.... இந்த வீடியோ உதவும்


=========
மிக்சர்...

நேற்று ஒரு குட்டியானை வண்டி வேகமாக சென்று கொண்டு இருந்தது... ராதிகா எக்ஸ்போர்ட் என்று அதில் எழுதி இருந்தது...ஒரு  இளம்  பெண் ஏழ்மையை உடலிலும் உடையிலும் வெளிபடுத்தும்  தேகத்துடன் பின் பக்கம்  உட்காந்து   தன் நெஞ்சை பிடித்து  கொண்டு   விலியால் துடித்துக்கொண்டு இருந்தார். ஒரு ஆண்  அந்த பெண்ணுக்கு விசிறிக்கொண்டு இருந்தார்.. கூடவே இன்னும் சில பெண்கள் அவரை பரிதாதாக பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.  அந்தபெண்ணின் பக்கதில் உட்க்கார்ந்து இரந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அந்த பெண்ணின் நெஞ்சை தடவி விட்டுக்கொண்டு இருந்தார்கள்..உடையெல்லாம் விலகி அந்த பெண் பார்க்க பரிதாபமாக இருந்தார்..வலி மட்டுமே அவர் கண்ணில் இருந்தது...பேக்ட்ரியில்.. என்ன பொருள் அவர் மீது மோதியது என்று  தெரியவில்லை.. பட் ரோடு சென்ட்தாமஸ் மருத்துவமைனை பக்கம் அந்த வேன் வளைந்தது சென்றது..... நான் அவசர வேலை காரணமாக சென்று விட்டேன்.. அந்த  பெண் வலியில் துடித்தது இன்னும் என் கண்ணில் இருக்கின்றது...நலம் பெற வேண்டும் என்று நாம் வேண்டிக்கொள்வதை தவிர வேறு என்ன  செய்து விட முடியும்.?
=============
 ஆதம்பாக்கத்தில் ஒரு போலிஸ்கரர் எனக்கு முன்னால்   அவர் டூவீலரில் அவர் பையனை அழைத்துச்சென்று கொண்டு இருந்தார்..  மப்ட்டி டிரஸ்சில் இருந்தார்.. காலில் காக்கி சாக்ஸ்சும்  கருப்பு ஷுவுமாக அவர் சென்று கொண்டு  இருந்தார்.. நான் வெயிலுக்கு கூலிங் கிளாஸ் அணிந்து அவர் வண்டி பின்னாடியே சென்று கொண்டு இருந்தேன் நான் முதுகில் எனது பையை மாட்டி இருந்தேன்... சட்டென ஒரு  வளைவில் என்னை அவர் கவனிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் நொடிக்கு நொடி திரும்பி திரும்பி  பார்த்துக்கொண்டே  முன்னை விட வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தார்.. என்னை வெடிகுண்டு முருகேசன் லேவலில்  அவர் யோசித்து இருக்க வேண்டும்...அவர் முகத்தில் அப்பட்டமாக பயம் தெரிந்தது... எங்கேயோ எதையோ மிச்சம் வைத்து இருக்கின்றார்... அதனால் அந்த பயம்............

இந்தவார கடிதம்

 அவசரமாக ஒரு உதவிகேட்டு அதனை செய்யமுடியாமல் போனதிற்கு வருந்தினேன்.
அன்புள்ள் ஜாக்கி அண்ணா,எங்கள்ளுக்கு ஒரு உதவி வேணும் . என் பெயர் மீனாக்ஷி சுந்தரம் . எங்க அம்மா சென்னை  பூந்தமல்லி  அம்மாவை 21.4.12 காலை பத்து முப்பது மணி முதல் காணவில்லை  பஸ், பைக் , கும்பல்,கண்டால்   பயப்படும் சுபாவம் உடையது ,கால்களில் செருப்பு அணியும் பழக்கம் இல்லாதவர் சென்னை வெயிலில் அதிக துரம் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு . பூந்தமல்லி பக்கம் தான் அவர் எங்காவது இருக்க  வேண்டும் நாங்களும் கடந்த நன்கு தினம் தேடுகிறோம் .ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.யாராவது நண்பர்கள் எங்கள் அம்மாவை பார்த்தல் .எங்களுக்கு தெரியபடுத்தி உதவுங்கள் உங்கள் பிளாக் எனது பிளாக் லிங்க் தந்தால் எங்களுக்கு உதவியாக இறுக்கும்.
நானும் பிளாக் எழுதுகிறான் .அனால் அதிகம் நண்பர்கள் படிப்பார்களா என்பது சந்தேகம்.
உங்க மாதிரி எனக்கு எழுத வராது. அல்லது எங்க அம்மா போட்டோ மட்டும் உங்க பிளாக் போட்டால் எனக்கு உதவியாக இறுக்கும்.
நன்றி அண்ணா.
மீனாக்ஷி சுந்தரம்
பிட்ஸ் பிலானி  
...........................................
 அவர்கள் அம்மா தொலைந்த மறுநாள் எனக்கு போன் செய்து  தகவல் சொல்லிவிட்டார்கள்.. நாள் இணையபக்கமே போக முடியாத குடும்ப மற்றும் அலுவலக சூழல் என்பதால் இரண்டு நாள் கழித்து  சட்டென நினைவுக்கு வந்து போஸ்ட் போட எழுதினேன்..
==========
அன்பின் நண்பர்களுக்கு..... கடந்த  திங்கள்கிழமை இரவு எனக்கு ஒரு போன் வந்தது..போனில் ஆண் குரல்...  என் பெயர் மகேந்திர குமார். ...இன்றுதான்  22/04/2012 நான் அமெரிக்காவில் இருந்து சென்னக்கு வந்து இருக்கின்றேன்.. என்னை வரவேற்க்க ஒரு நாள் முன்னதாக விருதுநகரில் இருந்து கிளம்பி எனது குடும்பத்தினர் சென்னைக்கு வந்து விட்டார்கள்.. பூந்தமல்லியில் எனது வீடு இருக்கின்றது.. என் அம்மா  பூந்தமல்லி வீட்டில் இருந்து 21/04/2012 அன்று வெளியே போய் இருக்கின்றார்... திரும்ப அவருக்கு வீட்டுக்கு வர வழி தெரியவில்லை.. தொலைந்து போய் விட்டார்... நான் அமெரிக்காவில் இருந்து வந்ததும்  எனது அம்மாவை பார்க்க ஆசையாக இருந்தேன்..ஆனால் என் அம்மாவை காணவில்லை என்று சொல்லுகின்றார்கள்..  நாங்கள் தேடாத இடம் இல்லை.. என்று தேம்மி தேம்பி அழ ஆரம்பித்தார்..
 ===========
ஒரு தகவலுக்கு உறுதி படுத்திக்கொள்ள போன் செய்த போது அம்மா கிடைத்து விட்டார் என்ற  ஆனந்த  செய்தியை சொன்னார்கள். நான் ரொம்ப சந்தேஷமாக இருந்தாலும் மனம் சரியான நேரத்தில் உதவி செய்ய முடியவில்லை என்ற உறுத்தல் என்னிடத்தில் இன்னமும் இருக்கின்றது..
===============
அன்புள்ள ஜக்கி சேகர் அண்ணாவுக்கு  .கை  குழந்தை வைத்து கொண்டு சமாளீபது அதுவும் சென்னையில் எவள்லு கடினம் எனக்கு தெரியும்  ,கடவுள் இருக்கின்றார் , கடவுள் இருக்கின்றார் ,எங்க அம்மா அரசியவாதி இல்லை,சினிமா நடிகர்  இல்லை , மனநிலை சிறிது பதிகபட்டவர் ,எங்க அம்மாவை திருப்பி கொடுத்த இறைவன் ,உங்களை போன்ற நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.நடுத்தர மக்களுக்கு  யார் இருக்கா?நான் பல காணமல் போனவர் நோட்டீஸ் பார்த்திருக்கிறான் .அனல் ஒரு போதும் உத்து பார்த்து அந்த நோட்டீஸ் இருப்பவர்கள் இவர்களாக இருக்குமோ என்று நினைத்தது கிடையாது .எனது குழந்தைக்கும் அடுதவர்கள்ளுக்கு உதவும் பழக்கத்தை சொல்லி  தருவேன்  சென்னை ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் புகை வண்டி,பஸ் பிடிக்க ஓடுவதை பார்த்திருக்கிறான்  ,எங்க அம்மா கையில் பணம் இல்லை ,ஆனால் பையன் பார்க்கும் சந்தோஷத்தில் தங்க நகை அணித்திருந்தார் ,,அந்த நகை பறிக்காமல் அனுப்பி விட மனம் வேணும் , அந்த நல்ல மனித தெய்வத்துக்கு நன்றி. 

நன்றி அண்ணா.
மீனாக்ஷி சுந்தரம்
பிட்ஸ் பிலானி  

==================
ஆனால்  அண்ணன் தம்பிகள்அனைவரும்   என்னை  நிறைய கன்வின்ஸ் செய்தார்கள். மெயில் அனுப்பினார்கள்.. நான் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.... அந்த உறுத்தல் எனக்கு இன்னமும் இருக்கின்றது.

பிலாசபி பாண்டி..


நண்பர்கள் என்பவர்கள் ஸ்கெட்சு பென்சில் போல... நம் வாழ்க்கையை கலர்புல்லாக மாற்றுபவர்கள்... நான் வேண்டுமானல் உங்களுடைய விருப்பமான கலர் ஸ்கெட்சு பெண்சிலாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் உங்கள் ஓவியத்தை நிறைவு  செய்ய ஏதாவது ஒரு இடத்தல் நான் உபயோகமாக இருப்பேன்....

======================


 கத்ரி வெயில் ஸ்டார்ட் ஆயிடுத்து... அதனால அனுஷ்க்காவோட இந்த ஈர சாங் உங்கள் நெஞ்சை ஈரப்படுத்தும் என்று நம்புகின்றேன்..   நெஞ்சு என்பதை ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல்  எழுதி இருக்கின்றேன் என்று நம்புகின்றேன்.



====================
நான்வெஜ்18+
Question: What's the best part of a blow job?
Answer: The 10 minutes of silence



===================


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

10 comments:

  1. மழை இல்லை மழை இல்லைன்னு நீங்களே மழையா பொழிஞ்சிட்டீங்களே ஜாக்கி ,
    படம் குளிரவைக்க சொல்லிட்டீங்க , எத்தனை பேருக்கு வேத்துச்சோ
    பாவம் அந்த பெண்மணி (இரண்டு பேருமே) நலமாக இருக்க பிராதிப்போம்
    அனுஷ்கா டர்ட்டி பிக்‌ஷர் சில்க் மழை பாட்டு ம் ம் ம் நடக்கட்டும்

    ReplyDelete
  2. நீண்ட நாட்களுக்கு பின் - வணக்கம் தல

    சுவராசியமாக இருந்தது.... ஜனநாயகம்.... ம்

    ReplyDelete
  3. /////////////சென்னைமேயர் சைதை துரைசாமி அவர்கள் நடத்தி வரும் மனித நேய அறக்கட்டளை மூலம் படித்த 34 பேர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஸ் தேர்வில் வெற்றி பெற்று இருக்கின்றார்கள்///////////

    நான் இதுவரை கேள்விப்படாத விஷயம்.., உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் இது ..!

    ReplyDelete
  4. //மிக்சர்...

    குட்டியானை வண்டி //

    மனதை என்னவோ செய்கிறது

    ReplyDelete
  5. So now on the sandwich wil be there on Sundays????

    ReplyDelete
  6. தலைவரே உங்கள் வலைப்பூவை தொடர்ந்து வாசித்து வருகிறேன் . இன்று தான் முதன் முதலாக பின்னூட்டம்
    இடுகிறேன் . இந்த வார சான்ட்விச் மிக அருமை .

    ReplyDelete
  7. ungalal oruvarukku uthavi seiya mudiyathathai appadiye oppu kolla nalla manam vendum nalla pathivu anna

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner