இன்றிலிருந்து கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள்.....


ஒரு வாரத்துக்க சென்னையில் உலக பட விழா நடக்க இருக்கிறது ஏன் உலக படங்களை பார்க்க வேண்டும்.

சினிமா என்பது ஒரு சமுகத்தின் வெளிப்பாடு .உலக சினிமாக்கள் பார்ப்பதன் முலம் உலகில் இருக்கும் கடை கோடி வாழ் மக்களின் வாழ்கை பற்றியும் அவர்கள் சமுக வளர்ச்சி பற்றியும் அறிய முடியும்.
ஒவ்வோறு நாட்டின் கலாச்சாரமும் சூழ்நிலைக்கு ஏற்ப்ப மாறுபாடு கொண்டவை அந்த கலாச்சாரங்களை எந்த நிர்பந்தத்துக்கம் ஆட்படாமல் திரையில் பார்க்கலாம்.நீங்கள் என்னதான் ஊர் சுற்றுபவராக இருந்தாலும் இந்த பூமீயின் பல பகுதிகளை நீங்கள் பார்த்தே இருக்க முடியாது ஆனால் உலக படவிழா அதற்க்கு வாய்ப்பு அளிக்கிறது...


நீங்கள் தென் கொரியாவில் ஓடும் அழகான தெருவையும்,வியட்நாமின் குறுகிய தெருக்களையும், பின்லாந்தின் அழகிய ஏரியையும் ஆஸ்த்ரியாவின் அழகிய கடற்க்கரையும், போலந்து நாட்டின் அழகான பெண்னையும், செக்கொஸ்லாவாகியாவின் மலை முகடுகளையும் இந்த ஒரு வாரத்தில் பார்த்து ரசிக்கலாம்.


நம் கலாச்சாரத்தையும் அவர்கள் நாட்டு கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் ஒப்பிடு செய்து ரசிக்கலாம் வியக்கலாம்.

இந்த 10 நாட்களும் சினிமா சினிமா என்று எல்லோரும் அலைவார்கள் எல்லா உதவி இயக்குநர்களும் கண்ணில் கனவுகளுடன் குறிப்பெடுக்க ஒரு நோட்ட புத்தகத்துடன் வந்து இருப்பார்கள் சவரம் செய்யாத தாடியிலும் உதட்டில் புகையும் சிகரேட்டிலும் வறுமை எட்டிப்பார்க்கும்.

அதே போல் நிறைய பில்டப்பு பேச்சுகளையும் அவர்களிடத்தில் கேட்கலாம்

“நேத்து அஜித் வீட்டுக்கு போய் கதை சொன்னம்பா மனுஷன் ஆடி போயிட்டாரு, பத்து நிமிஷத்துக்கு ஏந்த பேச்சும் இல்லை அப்புறம் ஷாலினி மேடம் காப்பி கொடுக்க வந்தப்பதான் அந்ம அறையோட இருக்கம் தனிஞ்சுது...

எப்படியும் பஸ்ட் ஷெட்டியுல் பிப்பரவரியில ஸ்டார்ட் ஆயிடும் மச்சான் ஒரு டீ ரெண்டு சிகரேட் ஒரு வடைக்கு காசு கொடுத்துடு மச்சி என்பது போன்ற சம்பாஷனைகள் சர்வ சாதாரணம்...


இங்கு உதவி இயக்குநர்கள் பற்றிய எனது கவிதையை மீண்டும் தருகிறேன்அழுக்கேறிய ஜுன்சும்


ஆறுமாதகால தாடியும் தான்


இவர்களின்


அடையாளங்கள் ...தொடர்ந்து புகைப்பதால்


தடித்த உதடுகளும்


எண்னைப் பார்க்காத தலையும்


அவர்களின்


அக்மார்க் முத்திரைகள்...தூக்கம் தொலைந்த


கண்களில்


அரை நூற்றாண்டு


சரித்திரத்தை மாற்றும்


கனவுகள் இலவசம்.

புரிந்தாலும்


புரியாவிட்டாலும்


ஒரு நாவல் புத்தகம்


ஒரு கைக்குறிப்பேடு


இவர்களின் கையில்


நிச்சயம் இருக்கும்

தெருவோர


டீக்கடைகள் தான்


இவர்கள் இளைப்பாறும்


வேடந்தாங்கல்.

இவர்களின்


பெற்றோர்களின் கனவு


தன் மகனை


மருத்துவராகவோ


பொறியாளனாகவோ


பார்க்கத்தான் ஆசை


ஆனால்


இவர்களின் கனவோ


வேறானது...

திருமண வயதை தாண்டி


ஜன்னல் வழியாக


சாலை வெறித்துப்


பார்க்கும்


சகோதரிகள்...

ஒரு பக்க நுரையீரலை இழந்து


காச நோயால் அவதிப்படும்


அம்மா...

வெள்ளாமை பொய்த்தால்


ஐம்பது வயதிலும்


வேதனைப்படும்


அப்பா...

இது


எதுபற்றியும் இவர்களுக்கு


கவலை இல்லை


இவர்களின் ஒரே கவலை


"வாழ்நாள் கவலை"


நல்ல தமிழ் சினிமா


எடுப்பது தான்...


(சமர்ப்பணம் சினிமா பற்றிய புரிதல் இல்லாது சினிமா பார்ப்பதாலேயே தாணும் ஒரு இயக்குநராக மாறவேண்டும் என்று தென்மாவட்டங்களிலிருந்து பஸ் பிடிக்கும் அனைத்து இளைஞர்களுக்கும்)

தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நொந்தபடியே,

அன்புடன் -ஜாக்கி சேகர்
இந்த மாதிரி நிறைய தென் மாவட்டத்து இளைஞர்களை இந்த பெஸ்ட்டிவலில் நீங்கள் பார்க்கலாம்


நீங்களும் இந்த அனுபவத்தை பெற ஒரு பாஸ் போட் சைஸ் போட்டோவை எடுத்துக் கொண்டு ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டர் சென்றால் நீங்கள் அனுமதி சீட்டு பெற்று முன்று தியேட்டர்களில் ஓடும் படங்களை உங்களுக்கு பிடித்த படங்களை பார்க்கலாம்.


வருடத்தில் ஒரு பத்து நாள்தானே செலவு செய்யுங்கள்....

அன்புடன்/ ஜாக்கிசேகர்3 comments:

 1. வர முடியாத தூரத்தில இருக்கிறதால நல்ல சினிமா பார்த்தா எழிதி போடுங்க
  டீவீடீல பார்க்க முடியுதான்னு பார்ப்போம்

  ReplyDelete
 2. வணக்கம் ஜாக்கி சேகர்

  எல்லாம் சரிதான் ஆனால் சென்னையில் உலக பட விழா எங்கு நடக்கின்றது

  தெறியப்படுத்தினால் நன்றாக இருக்கும்

  நன்றி
  இராஜராஜன்

  ReplyDelete
 3. நீங்க பாத்துட்டு எழுதுங்க தலை 10 நாள்லாம் நமக்கு too much :((((

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner