இருபாலின பதிவர்களுக்கும் என் தன் நிலை விளக்கம்....



கடந்த சில பதிவுகளில் தலைப்புகளில் சிலர் வரம்பு (ஆபாசம்) மீறல் இருப்பதாக போன் செய்தும் பதிவிட்டும் சொன்னார்கள். சில நேரங்களில் இப்படி நேர்வது உண்டு. அனால் எப்போதும் இப்படி இல்லை என்பதற்க்கு என் கடந்த பதிவுகளே சாட்சி... உலக சினிமாவை சொல்லும் போது காமம், போதை மருந்து இல்லாமல் கதை சொல்வது ரொம்ப கஷ்டம்....இது கதை சம்பந்த பட்ட விஷயம்.

அதே போல் காமத்தை எந்தளவுக்கு எழுத்தில் சொல்லலாம் என்ற வரையரை எனக்குள்ளும் இருக்கிறது.

டீத் மற்றும் அலெக்சான்ட்ரா புராஐக்கட் இரண்டு கதை சூழலுக்கு ஏற்ப்ப இது போன்ற கவர்ச்சியான தலைப்பு வைக்க வேண்டியதாகி விட்டது, அதே போல் என்னால் அந்த இடத்தில் பல் வளர்ந்தால் என்று எழுத முடியாது.

பெண் உறுப்பை, பிறப்பு உறுப்பில் பல் வளர்ந்தால் என்று எழுதுவது என்னை பொறுத்த வரை தவறே இல்லை. ஆனால் அதையே பு........யில் பல் வளர்ந்தால் என்று எழுதினால் ஆபாசம்.ஆபாசத்தின் அளவுகோள் எனக்கு நன்றாகவே தெரியும்.... இருப்பினும் என் பதிவை படித்து தலைப்பில் மாற்றம் தேவை என்று நிஜமான அக்கரையுடன் போன் செய்தும் பின்னுட்டம் இட்டு சுட்டி காட்டிய கார்க்கி மற்றும் உண்மைதமிழன் போன்றோர் வேண்டுகோள் சந்தோஷத்தை தருகிறது.



உங்கள் இருவருக்கும் என் நன்றிகள். என் எல்லை எனக்கு தெரியும் நண்பர்களே..... ஆனால் இது போல் இனிமே வராது என்று சொல்ல மாட்டேன் கதை அது போல் இருந்தால் அந்த தலைப்புகளைதான் வைக்க முடியும்.. ஆனால் இதையே பொழப்பாக தினமும் வைக்கமாட்டேன்.

ஆனால் ஒன்று மட்டும எனக்கு புரிந்தது... உலகதரத்தில் ஒரு தெலுங்கு சினிமா என்று எழுதினேன் ஒருபய படிக்கவில்லை அது பற்றி எனக்கு கவலையும் இல்லை.உங்கள் மனைவி மார்பில் கை என்று தலைப்பு வைத்தேன், படித்தவர் எண்ணிக்கை ஒரே நாளில் மூவாயிரம்....

அதே போல் எந்த பதிவருடன் என்னை கம்பேர், தயவு செய்து செய்ய வேண்டாம். இது எனது பக்கம்
என் சந்தோஷங்களையும் சகித்து கொண்டவைகளையும் பகிர்ந்து கொள்ள ஒருதளம்.

கற்பு ஒழுக்கம் கட்டுபாடு போன்ற நமது தமிழ் நாடுதான் உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் பதிக்கபட்டவர்கள பட்டியலில் இரண்டாவது ஆக இருக்கிறது...

திரும்பவும் இந்த வரி ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது...

காமத்தை ரசித்து கொண்டே காமத்தை எதிர்க்கும் நம்மவர்கள்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

11 comments:

  1. //உலக தரத்தில் ஒரு தெலுங்கு சினிமா என்று எழுதினேன். ஒரு பய படிக்கவில்லை அது பற்றி எனக்கு கவலையும் இல்லை.உங்கள் மனைவி மார்பில் கை என்று தலைப்பு வைத்தேன், படித்தவர் எண்ணிக்கை ஒரே நாளில் மூவாயிரம்....//

    )))))))))))))))))))))

    ReplyDelete
  2. //காமத்தை ரசித்து கொண்டே காமத்தை எதிர்க்கும் நம்மவர்கள்...//

    உண்மைதான் ஜாக்கி.. காமம் ரசிக்கப்படக் கூடியதுதான்.. வேண்டியதுதான்.. ரசிக்க வேண்டிய விதத்தில், ரசிக்க வேண்டிய இடத்தில் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் எப்படி என்பதில்தான் பிரச்சினை..

    தனிமையில் பேச வேண்டியதை பொதுவில் பேச முடியாது. கூடாது.. ஆனால் பொதுவில் பேச முடிந்ததை தனிமையிலும் பேசலாம். அந்த வகையில் காமம் மட்டுமே நமக்கு தனிமையில் நம்முடன் உறவாடக் கூடியது.. அதனை பொதுவில் வைத்துதாதன் பேசுவேன் என்பது நியாயமல்ல..

    தலைப்புகள் கவரும்வகையில்தான் வேண்டும். இல்லாவிடில் அதிகப்பட்சமான பதிவர்களை சென்றடையாது. ஆனால் அதிலும் கொஞ்சம் கவனம் தேவை. ஏனெனில் ஒரு முறை உங்களது பதிவிற்குள் வந்து மேற்படி கதையை படித்தார்களெனில் மறுபடியும் அதே மாதிரிதான் இருக்கும்போல என்று சொல்லிவிட்டு வராமலேயே போய்விடுவார்கள்..

    நமக்கு பெயர் முக்கியமல்ல.. நாம் எழுதிய பதிவுதான் முக்கியம். அதனை நோக்கியே போவோம்..

    ReplyDelete
  3. தலைப்புகள் கவரும்வகையில்தான் வேண்டும். இல்லாவிடில் அதிகப்பட்சமான பதிவர்களை சென்றடையாது. ஆனால் அதிலும் கொஞ்சம் கவனம் தேவை. ஏனெனில் ஒரு முறை உங்களது பதிவிற்குள் வந்து மேற்படி கதையை படித்தார்களெனில் மறுபடியும் அதே மாதிரிதான் இருக்கும்போல என்று சொல்லிவிட்டு வராமலேயே போய்விடுவார்கள்..

    நமக்கு பெயர் முக்கியமல்ல.. நாம் எழுதிய பதிவுதான் முக்கியம். அதனை நோக்கியே போவோம்.“‘

    உங்கள் கருத்தை நானும் வழி மொழிகிறேன்

    ReplyDelete
  4. உண்மை தமிழன் அவர்கள் கூறியதை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  5. நன்றி கிரி தங்கள் கருத்துக்கு...

    ReplyDelete
  6. அதை பற்றி படமே எடுக்கிறார்கள் அவர்கள், நாம் அதை சொல்லவே கூசுகிறோம்.

    ஒரு விளம்பரம் ஞாபகத்துக்கு வருகிறது

    நாம இன்னும் வளரனும் தம்பி

    :)

    ReplyDelete
  7. தலைவர் உண்மைத்தமிழன் அவர்களின் கருத்துக்களுக்கு ஒரு ஜே...

    alexandra project - திரைவிமர்சனம் என்று எழுதினால், ஜாக்கி சொன்னது போல் ஒரு பயலும் வரமாட்டான்.

    நித்யன்

    ReplyDelete
  8. நன்றி கிரி தங்கள் வருகைக்கு

    ReplyDelete
  9. அதை பற்றி படமே எடுக்கிறார்கள் அவர்கள், நாம் அதை சொல்லவே கூசுகிறோம்.

    ஒரு விளம்பரம் ஞாபகத்துக்கு வருகிறது

    நாம இன்னும் வளரனும் தம்பி


    ரிப்பிட்டேய்யயயயயயயயயயயய்

    ReplyDelete
  10. alexandra project - திரைவிமர்சனம் என்று எழுதினால், ஜாக்கி சொன்னது போல் ஒரு பயலும் வரமாட்டான்.

    ரிப்பிட்டேய்யயயயயயயயயயயய்

    ReplyDelete
  11. Great Lines.. Congrats. You Rocks. I'm downloading and watching your reviewed movies one by one. Every movie is different than others.

    Thanks

    //அதே போல் எந்த பதிவருடன் என்னை கம்பேர், தயவு செய்து செய்ய வேண்டாம். இது எனது பக்கம்
    என் சந்தோஷங்களையும் சகித்து கொண்டவைகளையும் பகிர்ந்து கொள்ள ஒருதளம்.

    கற்பு ஒழுக்கம் கட்டுபாடு போன்ற நமது தமிழ் நாடுதான் உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் பதிக்கபட்டவர்கள பட்டியலில் இரண்டாவது ஆக இருக்கிறது...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner