முதல்வர் கலைஞருக்கு எனது கனிவான வேண்டுகோள்


கலைஞர் ஆட்சியில் பத்தாயிரம் சாலை பணியாளர்களை வேலைக்கு வைத்து அழகு பார்த்தது அன்றைய திமுக அரசு.....

அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு சாலை பணியாளர்கள் வேலையை திமுக அபிமானிகளுக்கே கொடுதது விட்டதாக சொல்லி ஒரே ஒருகையெழுத்து போட்டு அனைவரையும் வீட்டுக்கு அனுப்பியதுபோன முறை ஆட்சியில் இருந்த ஜே அரசு...



எனக்கு தெரிந்தவரை ஜே ஆட்சியில் இருந்த போது அதிகமான போராட்டங்கள் நடத்தியது சாலை பணியாளர்கள்தான். இந்த போராட்டத்தின் போது பலர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன கதையும் இந்த தமிழகத்தில் நடந்தேரியது...

சாலை பணியாளர்களின் பணி தமிழகம் முழுவதும் சேதப்பட்ட சாலைகளை சீர் படுத்துவதே இவர்களை பணியில் வைத்த தன் நோக்கம்...

கலைஞர் நான் ஆட்சிக்கு வந்தால் வந்ததும் சாலை பணியாளர்களை வேலையை நிரந்தர படுத்துவேன் என்றார் அதே போல் செய்தும் முடித்தார்.

அனால் மழை முடிந்து பல நாட்கள் ஆகியும் இந்த பத்தாயிரம் பேரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை..

ஒரு கிலோமீட்டருக்க 50 பேர் என்றால் கூட இந்நேரம் சாலைகளை கொஞ்சமாவது அதாவது வண்டி போகும் அளவுக்காவது செப்பனிட்டுஇருக்க முடியும்...

அரசு நிர்வாகம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பது எனக்கு விளங்க வில்லை ..
நாட்டின் தலைநகரிலேயே சாலைகள் நிலை இப்படி என்றால் பனைமரத்து பட்டி கிராமங்களின் நிலை சொல்லவே வேண்டாம்

பொதுமக்கள் தார் சாலை கேட்கவில்லை பள்ளமாக தற்போதைக்கு குண்டும் குழியுமா இருக்கும் சாலைகளில் சற்று மண்ணும் செங்கல்லும் போடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள்.

சாலை பணியாளர்கள் பணி செய்யவில்லை என்றால் அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் மாதா கோவிலில் மணியாட்டிக்கொண்டா இருக்கிறார்கள்?

முதலில் அரசு வேலை வேண்டும் என்று முதலில் நாயாய் அலைவது, பின்பு சங்கம் அமைத்துஊதிய உயர்வுக்கு கொடி பிடிப்பது. இதுதான் அரசு அதிகாரிகளின் வேலை...

சன்டிவி பிரச்சனை முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டது அதன் பிறகு இன்று அறிவாலயத்தில் நடந்த திருமணத்தில் கூட அழகிரியும் தயாநிதி மாறனும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து பாச மழை பொழிந்த காட்சியை தமிழ் நாடே பார்த்து விட்டது .

இந்த பாச மழை மயக்கத்தில் இருந்து தலைவர் கலைஞர் வெளியே வந்து பொது மக்களின் அன்றாட பிரச்சனையில் கவனம் செலுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.

கோபாலபுரமும் போயஸ்கார்டன் மட்டும் தமிழ்நாடு இல்லை என்பதையும், கோபாலபுரத்தில் இருந்து தலமைசெயலக ரோடும், கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் வரை ரோடும் சரியாக இருந்தால் தமிழ்நாடு முழுவதும் ரோடுகள் சரியாக இருக்கும் என்று அர்த்தம் அல்ல.....

நான்கு சக்கர வாகனத்தில் போகும் உங்களுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் போகும் என்னை போன்ற நடுத்தர வர்கத்தினரின் வலி உங்களுக்கு தெரிய நியாயமில்லை...




அன்புடன்/ ஜாக்கிசேகர்

9 comments:

  1. ஐயா...

    அறிவாலய பாசக்காட்சிகள் முடியும் வரை நாம் பொறுத்திருந்துதான் இந்த அடிப்படை வசதிகளைப் பெற வேண்டுமா?

    ஸ்பெக்ட்ரம் ஊழலில் எத்தனை ஆயிரம் கோடிகள் வந்தன என்று தெரியவில்லை. அங்கு கூட உங்கள் தலைவர் ரவுண்டாக கேட்டிருக்கலாம். நமக்கு எதுக்கு அந்த வேலை.

    அதை எண்ணி முடிக்கவே இன்னும் டைம் ஆகும் அவுங்களுக்கு... உங்க ஏரியால தண்ணி வந்ததுனால நீங்க புலம்பறீங்க. எங்க ஏரியால ஒன்னும் பிரச்சனையில்ல...

    கோபாலபுரமும் அப்படியே...

    சாலைப்பணியாளர்களையும் பொதுவாக அரசு ஊழியர்களையும் சாடும் உங்கள் போக்கு அரசு வேலை கிடைக்காத விரக்தியோ என்றும் எண்ண வைக்கிறது.

    அதிகாரிகள் மணியாட்டிக்கொண்டும், அதிகாரத்தில் உள்ளவர்கள் money ஆட்டிக்கொண்டும்தான் இருப்பார்கள். நாம தமிழர்களாச்சே... சும்மா இருப்போம்.

    நித்யகுமாரன்

    ReplyDelete
  2. //அனால் மழை முடிந்து பல நாட்கள் ஆகியும் இந்த பத்தாயிரம் பேரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை..//

    கட்சி பணிகளை யார் பார்ப்பது தோழரே

    ReplyDelete
  3. இதுவும் கடந்து போகும் என்பது தான் அரசியலின் தாரக மந்திரமே!

    பிரச்சினைகள் அவ்வபோது பெரிதாக தோன்றலாம் ஒரு பத்து நாள் தாண்டிட்டா மக்கள் மறந்துருவாங்க

    அது தான் ரொம்ப வருஷமா இங்கே நடக்குது

    ReplyDelete
  4. //
    இதுவும் கடந்து போகும் என்பது தான் அரசியலின் தாரக மந்திரமே!

    பிரச்சினைகள் அவ்வபோது பெரிதாக தோன்றலாம் ஒரு பத்து நாள் தாண்டிட்டா மக்கள் மறந்துருவாங்க
    //

    ஏன்னா அதுக்குள்ள அடுத்த பிரச்சனை வந்துருமே!

    ReplyDelete
  5. super correcta soneenga. ivangaluku nammala pathi enna kavalai. thatha than peran aadhityanai M P aakum varai oaya maattar. kalahamae kudumbam kudumbamae kalaham vaalha thamilaham

    ReplyDelete
  6. வருகை தந்து கருத்து தெரிவித்த அனைவருக்னகம் என் நெஞ் சார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  7. //அதிகாரிகள் மணியாட்டிக்கொண்டும், அதிகாரத்தில் உள்ளவர்கள் money ஆட்டிக்கொண்டும்தான் இருப்பார்கள். நாம தமிழர்களாச்சே... சும்மா இருப்போம்.

    நித்யகுமாரன்//


    ரிப்பீட்டேய்..............

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner