(POINT BREAK)முன்னாள் அமெரிக்க அதிபர்கள் கொள்ளை அடித்தால்...????


கொள்ளை அடிப்பது ஒரு கலை...அந்த கலையை திரில்லுக்காக செய்வது என்பது சிலருக்கு பொழுது போக்கு...ஆனால் செய்யும் தொழிலில்.. எந்த தொழிலாக இருந்தாலும் மற்றவர் கவனிக்கும்படி செய்வது என்பது, பலருக்கு பிடித்து காரியம்தான் ... லீகலாக செய்வது என்பது எப்போதும் பிரச்சனை வராது ...

ஆனால் சட்டத்துக்கு புறம்பாக செய்யும் வேலையை பலர் கவனிக்கும்படி செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல... அதற்க்கு மிகுந்த துணிச்சல் வேண்டும்... வாழ்க்கையில் எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியம் வேண்டும்....மிகுந்த கட்ஸ் வேண்டும்... நெஞ்சில் உதை வாங்கும் தில் வேண்டும்

எல்லோராலும் இது போன்ற திரில்லை அனுபவிக்க முடியாது....கமிட்மென்ட் இல்லாத வாழ்க்கை வாழ்பவர்களுக்கே இது சாத்தியம்.... கூட இருக்கும் நண்பர்களிடத்திலும் இந்த தைரியம் வேண்டும்..... அப்படி பேங்கை கொள்ளை அடிக்கும் திரில் திருடர்களை பற்றிய கதைதான் அவுட் பிரேக் படத்தின் கதை...

பாயின்ட் பிரேக் படத்தின் கதை இதுதான்...
அவர்கள் வித்யாசமான பேங்க் கொள்ளையர்கள்... அவர்கள் கொள்ளை அடிக்கும் போது முன்னாள் ஜனாதிபதிகளின் முகமூடிகளை அனிந்து கொள்ளை அடிப்பார்கள்.. (உம் )ரீகன், நிக்சன்.....

4 பேர்,27 பேங்க் கொள்ளைகள்... மூன்று வருடமாக செய்து கொண்டு இருக்கின்றார்கள்...ஒருவரையும் சுட்டது இல்லை... எவருக்கும் காயம் ஏற்படு்த்தியது இல்லை...பேங்க் லாக்கருக்கு போய் டைம் வேஸ்ட் செய்வதில்லை.. காலை பத்து மணியில் இருந்து மதியம் இரண்டு வரை கலெக்ஷன் ஆகும் பேங்க் கல்லா பணத்தைதான் அவர்கள் கொள்ளை அடிப்பார்கள்... எந்த பேங்கிலும் 90செகன்ட் அதாவது ஒன்றரை நிமிடம்தான் அவர்கள் நேரத்தை செலவிடுவார்கள்.... போகும் போது ஒருவன் மட்டும் பேண்டை அவிழ்த்து பின்பக்கம் ஒரு பக்கத்தில் தேங்கும் மற்றோரு பக்கத்தில் யூவும் எழுதியதை அவிழ்த்து காட்டி விட்டு செல்வார்கள்.... தேங்க்யுவை அவன் பட்டில் எழுதியது தவிர போலிசிடம் வேறு எந்த க்ளுவும் இல்லை.....


இந்த கேசை கண்டுபிடிக்க Johnny Utah (Keanu Reeves) வருகின்றார் அவருக்கு நண்பராகAngelo Pappas (Gary Busey) துப்பறிகின்றார்கள்...அவர்கள் கடல் அலையில் சறுக்கி விளையாடுபவர்கள் என்பதை கண்டுபிடிக்கின்றார்கள்.... கடல் சறுக்கல் கற்றுக்கெள்ள போய் அவர்களை பிடிக்கலாம் என்று நினைக்கின்றான்.... அதற்க்குTyler Endicott (Lori Petty) உதவுகின்றாள்... அவன் அந்த முன்னாள்அமெரிக்க அதிபர்கள் முகமுடி பேட்டு கொள்ளை அடிக்கும் அந்த கொள்ளை கூட்டத்தை எப்படி கண்டுபிடித்தான் என்பதை விறுவிறுப்பாய் வெண்திரையில் காணுங்கள்......

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

நம்புங்கள் இந்த திரில்லர் படத்தின் இயக்குனர் ஒரு பெண்...செம அட்டகாசமான திரைக்கதை....
மேலே இருக்கற ரெண்டு படத்திலயும் இருக்கும் இந்த அம்மாதான் இந்த படத்தைதோட இயக்குனர் இவர் நடிகையும் கூட..

இந்த படத்தின் தயாரிப்பாளார் நம்ம டைடானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரோன்...இந்த படம் எடுக்கும் போதுதான் தலைவருக்கு திருமணம் நடந்தது..

படத்தின் ஹீரோ கெனுரிவீஸ் இந்த படத்திற்க்கு ஒப்பந்தம் போட்ட போது ஒரு சின்ன கதாபாத்திரத்துக்கு அழைத்து பின்பு பெரிய கதாபாத்திரம் வழங்கபட்டது..

இந்த படத்தின் உண்மையான ஹீரோ படத்தின் ஒளிபதிவாளர்Donald Petermanதான் என்றால் சந்தேகமே இல்லை...

கடல் சறுக்கு பற்றிய பின்புலம் என்பதால் படத்தின் பல காட்சிகள் ஓல்டுஸ்பைஸ் விளம்பரத்தை நினைவு படுத்தும்....கேமரா கோணங்கள் சான்சே இல்லை....


முக்கிய காட்சியாககெனு ஒரு கொள்ளைகாரனை துரத்தும் காட்சி பத்து நிமிட காட்சி... இந்த காட்சியில் கேமராமேனின் உழைப்பும் டைரக்டரின் எண்ணமும் திரையில் பிசகு இல்லாமல் காட்சிபடுத்தி இருப்பார்கள்...இந்த காட்சி பரபரப்பான காட்சி என்பேன்....என்னதான் படத்தை பற்றி ஆகா ஓகோ என்று புகழ்ந்தாலும் கிளைமாக்ஸ் மற்றும் பல காட்சிகள் இடைவேளைக்கு பிறகு கொஞசம் போர்.... அந்த தொய்வை நீக்கி இருந்தால் இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படங்கள் லிஸ்ட்டில் போய் இருக்கும்...இருந்தாலும் பார்க்கவேண்டிய படம் இது.... ஒளிப்பதிவுக்காக கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்...

காதலிக்காக, அவள் உயிருக்காக எத்தனை பேரை ஒரு எப் பி் ஐ காரன் இழப்பான் என்று என் மனைவி படம் முடிந்ததும் கேட்டால்... அது நியாயமான கேள்வியும் கூட...

படக்குழுவினர்விபரம்...

Directed by Kathryn Bigelow
Produced by James Cameron
Peter Abrams
Robert L. Levy
Written by W. Peter Iliff
Starring Patrick Swayze
Keanu Reeves
Gary Busey
Lori Petty
John C. McGinley
James LeGros
Cinematography Donald Peterman
Editing by Howard L. Smith
Distributed by 20th Century Fox
Release date(s) July 12, 1991
Running time 123 minutes
Country United States
Language English
Budget $24,000,000 (estimated)
Gross revenue $83,531,958 (Worldwide)


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

சாண்ட்விச் அன்ட் நான்வெஜ்.18+ (17,08,09)

ஆல்பம்....

மெரினாவில் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை அறிவித்து அது நேற்றில் இருந்து அமுலுக்கு வந்து இருக்கின்றது... வந்த நாளே நான் மெரினாவுக்கு என் மனைவியுடன் போன போது இரண்டு சுக்கு காபி கேட்ட போது பிளாஸ்டிக் கப்பில்தான் டீக்காரர் கொடுத்தார்... அதே போல் அந்த கப்பை குப்பை தொட்டியில் வீச, குப்பை தொட்டி தேடிய போது குப்பைதொட்டியை கானோம்....தீவிரமாக எப்போது அமுல்படுத்த போகின்றார்கள் என்று தெரியவில்லை....

சென்னையில் கொழுப்பெடுத்து திரியும் சில அதிகார வர்கத்து பசங்கள் செய்யும் அடாவடிக்கு அளவே இல்லை... பைக் ரேசிங் என்ற பெயரில் பொதுமக்கள் அதிகம் புழங்கும் மெரினாவின் சர்விஸ் லேனில் காவாளிப்பசங்கள் ரேஸ் விடுகின்றார்கள்... அமைதியாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போதே காது கிழியும் ஓசையுடன் விருட்டென கிளம்பும் பைக்கின் ஓசை .... வியிற்றில் பயத்தை தோற்றுவிக்கின்றது..... எதாவது சின்ன குழந்தைகள் கிராஸ் செய்தால் அந்த குழந்தை நிலையை நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருக்கின்றது....

ஒரு வாரத்துக்கு முன் இப்படித்தான் நான் சர்வீஸ் லேனில் வந்து கொண்டு இருக்கும் போது ஒரு சனியன் வீலீங் செய்து பைக்கின், முன் சக்கரம் என் வலது கை பக்கம் அருகே சக்கரம் வரும் அளவு மிக நெருக்கமாக.... ஒரு சகடை வீலீங் செய்து என்னை வெறியேற்றியது... இவர்கள் ஒரு குழுவாக இருக்கின்றனர்.. தனியாக இருந்தாலும் புரட்டி எடுக்கலாம்... ஒருவனை புரட்டினால் ஒரு குழுவாக நம்மை புரட்டி விடுவார்கள் என்பதால் என் யோசனையை ஒத்தி வைத்து இருக்கின்றேன்...

மூன்று நாட்கள் முன் டி ஷர்ட் அணிந்த இரு் பெண்கள் பீச்சில் வண்டியை நிறுத்தி ஸ்டேன்ட் போட இரண்டு பேர் அவர்களை அசத்த ஸபீடாக பைக்கின் முன் சக்கரத்தை, யானை தும்பிக்கையால் ஆசீர்வாதம் செய்வது போல் முன் சக்கரத்தை மிக வேகமாக தூக்கி கொண்டு செல்ல.... ரொம்பவும் பைக்கை...மேலே தூக்க பைக் பேலன்ஸ் தவறி... இவர்கள் மேல் விழுந்தது... ஒருவன் காலில், சைலன்சர் சூடு வேறு போட்டுக்கொள்ள.... என்னையும் சேர்த்து யாருமே கீழே விழுந்தவனை தூக்கிவிடாமல் அவன் விழுந்ததை கைதட்டி பலர் ஆரவாரித்தோம்... அதன் பிறகு,காதில் கடுக்கன் போட்ட அவன் நண்பர்கள் குழு வந்தே, அவர்களை தூக்கிவிட்டது... எதிரில் கடை வைத்து இருக்கும் பலர் அவர்கள் விழுந்ததை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை... பீச்சில் வாக்கிங் போன பலரின் எண்ணம் இன்னும் வேண்டும் என்பது போல் இருந்தது.... ஏன் இப்படி இந்த வாலிபர்கள் மற்றவர்கள் வாழ்க்கையோடு விளையாடுகின்றார்கள்... இவர்கள் விழுந்து காலை முறித்துகொண்டால் சோறு போட சொத்து இருக்கின்றது... ஆனால் மற்றவர்களுக்கு......

மிக்சர்...
வாசித்ததில் வருந்தியது.....

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் மாணவர்குழு நாட்டுநல பணிதிட்டத்திற்க்காக, ஒரு கோவிலை சுத்தபடுத்தியது.. மதியம் சாப்பிடுவதற்க்கு முன் ஆசிரியர்கள் முதலில் அந்த கோவில் குளத்தில் குளித்து கரையேறி, அந்த குளத்தில் பிள்ளைகளை குளிக்க சொல்ல, குளித்து முடித்து கரையேறிய மாணவர்களில் ஒருவன் தன் தம்பியை கானோம் என கூச்சல்போட ,அந்த பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் குளத்தின் சேற்றில் பினமாக....
அழைத்து போன ஆசிரியர்கள்,உடன் இருந்த மாணவர்கள், பக்கத்தில்ஒன்றாக குளித்த அவன் அண்ணன், அவர்கள் மனநிலையை சற்றே நினைத்து பாருங்கள்....

பிராத்தனை...
சகபதிவர் சிங்கைநாதனுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், பனி போல் விலகவும் அதற்க்காக தோள் கொடுக்கும் எமது சக பதிவுலக நண்பர்களுக்கும் நினைத்தத எல்லாம் நடக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன்...


இந்த வாரம் குமுதம் புத்தகத்தில் வந்த விளம்பரம்... எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா....????

வழக்கம் போல் நான்வெஜ் காரம் கம்மியாக இருப்பதாக பல நண்பர்கள் குறைபட்டுக்கொள்கின்றார்கள்....அதாவது நான்வெஜ் ஒரு சின்ன ரிலாக்சுக்காக எழுதுவது... அவ்வளவே...காரம் ஜாஸ்த்தி ஆனால் கண்ணீல் ஜலம் வந்துவிடும் அல்லவா? எப்போதாவது வரலாம்.... அடிக்கடி வருவது உடம்புக்கு நல்லது அல்ல என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல....


வாழ்த்துக்கள்... எனது நண்பர் கேபிள் இந்தவார தமிழ்மண நட்சத்திர பதிவாராக தேர்ந்து எடுக்கபட்டு இருக்கின்றார்...அவர் சிறப்புடன் செயல்பட வாழ்த்துகின்றேன்....

நன்றி....
படித்தபோது எனது நினைவு வந்து போட்டோ போட்டிக்காக லின்க் கொடுத்து என்னோடு தொபேசியில் செய்தி தெரிவித்த பதிவர் நண்பர் அகநாழிகை வாசுதேவனுக்கு என் நன்றிகள்....


விஷுவல் டேஸ்ட்... நான் எடுத்ததில் பிடித்து.....
படங்களை கிளிக்கி பார்க்கவும்.....

தண்ணீ்ரில் மூழ்கி வெளிவரும் போது எத்தனை நாளைக்குதான் போட்டோ எடுப்பது....ஊட்டியில் தேயிலை பசுமை ஆற்றில் மூழ்கி வெளிவந்தால் எப்படி இருக்கும்??? படத்தில் இருப்பது மாடல் அல்ல எனது மச்சான்...

இது கலிபோர்னியா மேம்பாலம் அல்ல..... சென்னை கத்திப்பரா மேம்பாலம்... பின்புறத்தில் நியான் எழுத்தில் ஜொலிப்பது ... பணக்காரர்கள் இளைப்பாறும் லீராயல் மெரிடின் ஹோட்டல்....
கிண்டி கத்திப்பாரா பாலத்தின் ஒரு அரை வட்டம்....
கிண்டி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பூந்தமல்லி நோக்கி வேகம் எடுக்கும் வாகனங்கள்....

நான்வெஜ்....

ஜோக்..1
ஒரு வயசுக்கு மேல ஆம்பிளையா இருக்கட்டும், பொம்பளையா இருக்கட்டும்... கிருஸ்மஸ் மரம் போலதான்.... அந்த மரத்தில் இருக்கும் பால்,பெல், போல எல்லாம் அலங்காரத்துக்குதான்... இது கொஞ்சம் காமெடியானாலும், அதுதான் நிஜம்...

ஜோக்...2
ஒரு நல்ல வேலை ஆணுக்கு கிடைக்க 100பர்சென்ட் டேலன்ட் தேவைபடுகின்றது... ஆனால் பெண்ணுக்கு 4 பர்சென்ட் போதுமானது... மீதி அவர்களிடம்தான் 34.24.36 =96 இருக்கின்றதே.....


ஒரு சின்ன கருத்து....

பூக்களின் மரணம் பெண்களின் கொண்டையில்...
ஆண்களின் மரணம் பெண்களின் புன்......
(பிக்காலி பயலுவலா தப்பா நினைக்கறதே உங்க அம்புட்டு பேருக்கும் பொழப்பா போச்சு.... )புன்னகையில்னு சொல்ல வந்தேன்.....

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(BourneSupremacy) ஓடு.... ஓடிக்கொண்டேஇரு....

இரவில் கனவில் சிறு வயதில் ஒரு பாம்பு என்னை வெகு நாட்களாக துரத்திக்கொண்டே இருந்தது... அது எங்கு போனாலும் உயிரை வந்து எடுக்கு்ம் இவ்வளவு ஏன்.. கிராமத்தில் டூ பாத்ரூம் போக முள் செடிகளுக்கு பின்னால் உட்கார்ந்து கொண்டு டைம்பாசுக்கு எதி்ரில் இருக்கும் சிறு கற்களை எடுத்து வேறு ஒரு பெரிய கல்லில் அடித்த படி விளையாட,அப்படியும் இல்லை என்றால் அருகில் இருக்கும் பூண்டு செடி இலைகளை ஒவ்வொன்றாக கிள்ளி நேரத்தை கடத்தும் போது பக்கத்தில் வந்து ஹலோ சொல்லும் அந்த பாம்பு.... இதெல்லாம் கனவில்தான்...

காலையில் விழித்ததும் அம்மாவிடம் சொன்னேன்... அம்மா சொன்னால் பாம்பு கடித்தால் நல்லது என்று... அப்புறம் அந்த பாம்பு என்னை ஒரு நாள் இரவு கனவில் கடித்தும் வைத்ததும்... அதன் பிறகு எங்கு போனாலும் என் கால் கட்டை விரலை கடித்த படி என்னோடு மண்ணில் புரண்ட படி வந்து கொண்டே இருக்கும், கிளாஸ் ரூம், கோவில் என்று நான் எங்கு சென்றாலும் தொடர்ந்து என் காலை கடித்தபடி வந்து கொண்டே இருக்கும்...... அதன் பிறகு அந்த கனவு ஒரு சில வயதுக்குமேல் வரவில்லை....

கனவில் சிலது நடக்கும் சட்டென நம்மை தொட்டு விடும் தூரத்தில் விழப்பு வேறு வந்து தொலையும்...உடல் எங்கும் வியற்வையோடு.. தண்ணிரை தொண்டையி்ல் களுக்கி கொண்டால் அதன் பிறகு தூக்கம் ஓஹோகயாதான்...... இப்படி தொடர்ந்து கனவு வந்து தொந்தரவு செய்து கொண்டே இருக்கும் ஒருவனுக்கு... அந்த கணவின் விடை தேடி புறப்படும் படம்தான்BourneSupremacy படத்தின்கதை....

BourneSupremacy படத்தின் கதை இதுதான்....


இந்த கதை இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் போர்னை எதிரிகள் துரத்த அதிலிருந்து தப்பிக்க உதவி செய்த பெண் உடன் இந்தியாவில் கோவாவில் ஒரு ரிசார்ட்டில் தங்கி இருக்கின்றான்....
போர்ன் பாத்திரத்தை Matt Damon செய்து இருக்கின்றார்.... போர்னுக்கு தினமும் கனவில் பெர்லினில் உள்ள ஒரு ஓட்டலில் உள்ள ஒரு அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தை கொலை செய்த கனவு தினமும் வாட்டுகின்றது.... போர்ன் ஒரு சீஐஎ ஏஜென்ட் அவனுக்கு கொடுக்கபட்ட அல்லது பயற்சி அளிக்கப்டடதே யாரை எப்போது சொன்னாலும் கேள்வி கேட்காமல் கொலை செய்ய வேண்டும் என்பதுதான்... ஆனால் இதற்க்கு நடுவில் ஒரு பெரிய பணமாற்றமும்,கோப்பு மாற்றமும் நடக்க.... இதை அறிந்த ஒரு ஆயில் பிசினஸ் டான், அந்த பைலையும், பெரும் தொகையையும் இடையில் புகுந்து கிரில் என்பவனை வைத்து இரண்டையும் அடித்து விடுகின்றான்.....

சீஐஏவின் பைலும் போச்சு பணமும் போச்சு.... பெரிய அவமானமாக போய் விடுகின்றது... போர்னை உலகம் முழுவதும் வலை வீசி தேடி வருகின்றது இந்தியாவில் இருக்கும் போர்னை இந்தியாவில் வைத்தே தீர்த்து கட்டி விட்டால் பணத்தையும், பைலயும் போர்ன் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான் என்று கதை கட்டிவிடலாம் என்று எண்ணி இந்தியாவந்து அவனை கொலை செய்ய முயல... அவனுக்கு பதில் போர்ன் காதலி இறக்கின்றாள்.....

தன் காதலியை கொலை செய்தவனை கண்டு பிடித்து பழி வாங்கினான? சீஐஏவிடம் போர்ன் மாட்னானா? அவ்ன் தரப்பை எப்படி விளக்கினான்? குற்றவாளிகளை அடையாளம் காட்டினானா? போன்றவற்றை வெண்திரையில் பாருங்கள்.....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

முதல் காட்சியே இந்தியாவில் கோவா என்று டைட்டில் போடும் போதே மனம் புல்லரிக்க தொடங்கும்.....

இந்தியாவில் கோவாவில் போர்ன் உடற்பயிற்ச்சிக்கா காலையில் கோவா கடற்க்ரையில் ஓட அதனை ஆலிவர் உட்டின் கேமரா விடாமல் துரத்த அதற்க்கு ஒரு இந்திய இசையான தப்பு மேளத்தை கலந்து பேக் ரவுன்டில் ஒரு இசையும் போர்னின் ஓட்டமும் உற்சாகமான காட்சி அது.....

கோவாவில் நடக்கும் அந்த கார் துரத்தல் காட்சி அற்புதமான காட்சி அமைப்பு... சேலை கட்டிய நம்மூர் பெண்களை எல்லாம் காட்டும் போது எனக்கு மரிழ்வை தந்தது...

இந்த படத்தின் கேமரா ஒரு சில காட்சிகள் தவிர படம் முழவதும் ஸ்டெடிகேமில் வைத்தே படம் பிடித்து இருப்பார்கள்....

ஏனெனில் திரைக்கதை அப்படியான திரைக்கதை... அதற்க்கு வேகம் கொடுத்து கேமரா பயணி்க்க வேண்டும் ... அதற்க்கு ஈடு கொடுத்து ஒளிப்பதிவாளர்ஆலிவர் வுட் ஒர்க் செய்து இருப்பார்....

ஓட்டம் ஓட்டம் படம் முழுவதும் அதிகார வர்கம் துரத்த தனிமனிதன் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்....

சிங்கத்தை அதன் குகையில் சந்திக்க ஒரு கட்ஸ் வேண்டும் அல்லவா? அந்த கட்ஸ் ஹீரோவுக்கு இருப்பதாக பின்னபட்ட திரைக்கதையி்ல் அந்த காட்சி ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது....

Matt Damon ரொம்ப சிறிப்பாக் அவருக்கு கொடுக்கபட்ட வேலையை ரொம்ப சீரியசாக முகத்தை வைத்து கொண்டு படம் முழுக்க விளையாடி இருப்பார்...

இந்த படத்தை பார்த்து முடித்த உடன் ஒரு நிறைவு இருக்கும் அதே போல் அந்த விடாக்கண்டன் வில்லன் உங்கள் நினைவில் இருப்பான்....


ஊரெல்லாம் இவனை தேடிக்கொண்டு இருக்கு சீஐஏ பில்டிங் பக்கத்தில் இருந்து பேசும் அந்த காட்சியை நீங்கள் பார்த்து அனுபவியுங்கள்...

Robert Ludlum என்பவர் எழுதிய கதையின் திரைவடிவம் இந்த படம்....

முடிவில் தான் செய்த தப்புக்கு பிராயசித்தமாக அந்த பெண்ணை சந்திக்க போவது கண்ணீல் நீர் வரவழைக்கும் காட்சி அது... சின்ன டூவிஸ்டுடன் படத்தை பயணிக்க வைத்த இயக்குனர்Paul Greengrass யை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...



படம் பெற்ற விருதுகளும் பரிந்துரையும்.....
Awards
Year Organization Award Category/Recipient Result
2005 ASCAP Film and Television Music Awards ASCAP Award Top Box Office Films: John Powell Won
2005 Academy of Science Fiction, Fantasy & Horror Films, USA Saturn Award Best Action/Adventure/Thriller Film and Best Actor- Matt Damon Nominated
2005 Broadcast Film Critics Association Critics Choice Award Best Popular Movie Nominate
2005 Cinema Audio Society Awards C.A.S. Award Outstanding Achievement in Sound Mixing for Motion Pictures Nominated
2005 Edgar Allan Poe Awards Edgar Best Motion Picture Screenplay Nominated
2005 Empire Awards, UK Empire Award Best Actor- Matt Damon and Best Film Won
2005 Empire Awards, UK Empire Award Best British Director of the Year- Paul Greengrass Nominated
2005 London Critics Circle Film Awards ALFS Award Best British Director- Paul Greengrass and Scene of the Year- the Moscow car chase sequence Nominated
2005 MTV Movie Award MTV Movie Award Best Action Sequence-the Moscow car chase sequence and Best Male Performance- Matt Damon Nominated
2005 Motion Picture Sound Editors, USA Golden Reel Award Best Sound Editing in Domestic Features - Dialogue & ADR and Best Sound Editing in Domestic Features - Sound Effects & Foley Nominated
2005 People's Choice Awards, USA People's Choice Award Favorite Movie Drama Nominated
2005 Teen Choice Award Teen Choice Award Choice Movie Actor: Action/Adventure/Thriller-Matt Damon and Choice Movie: Action/Adventure Nominated
2005 USC Scripter Award USC Scripter Award Tony Gilroy (screenwriter) and Robert Ludlum (author) Nominated
2005 World Soundtrack Award World Soundtrack Award Best Original Soundtrack of the Year-John Powell and Soundtrack Composer of the Year-John Powell Nominated
2005 World Stunt Awards Taurus Award Best Stunt Coordinator and/or 2nd Unit Director and Best Work with a Vehicle Won
2005 World Stunt Awards Taurus Award Best Fight- Darrin Prescott and Chris O'Hara Nominated

படக்குழவினர் விபரம்....

Directed by Paul Greengrass
Produced by Patrick Crowley
Frank Marshall
Paul L. Sandberg
Doug Liman
Written by Screenplay:
Tony Gilroy
Brian Helgeland
(uncredited)
Novel:
Robert Ludlum
Starring Matt Damon
Franka Potente
Brian Cox
Julia Stiles
Karl Urban
Gabriel Mann
Joan Allen
Music by John Powell
Cinematography Oliver Wood
Editing by Christopher Rouse
Rick Pearson
Distributed by Universal Studios
Release date(s) July 23, 2004
Running time 108 min.
Language English, Russian, German, Italian
Budget $75 million[1]
Gross revenue $288,500,217[1]

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(OUT BREAK) வேளச்சேரி வைரஸ், எப்படி பரவி இருக்கும்???

என் மனைவியை நேற்று அலுவலகத்தில் இருந்து அழைத்து வரும் போது வேளச்சேரி பக்கம் வந்தேன்... எல்லோரும் ஆப்பரேஷன் தியேட்டர் போவதற்க்கு தயாராய் இருப்பது போல் எல்லோரும் முகமுடி அணிந்து இருந்தார்கள்...

பேருந்தில் ஜன்னல் ஓர சீட்டுகளில் உட்கார்ந்து உள்ள பெண்கள் எல்லாம் யாரோ பேருந்தின் பின் சீட்டில் உட்கார்ந்த ஒருவன், வாயுவை வெளியேற்றிய எபக்டில் எல்லோரும் ஷாலால் முகம் பொத்தி சேப்டி பிரிகாஷன் எடுத்துகொண்டு இருந்தார்கள்...

பொதுவாக பேருந்தில் உள்ளவர்கள் பக்கத்தில் குப்பை வண்டி கிராஸ் செய்து, துரைப்பாக்கம் பக்கம் போகும் போது முகம் பொத்தி இருப்பதை கவனித்து இருக்கின்றேன் ஆனால் இப்போது எல்லோரும் அப்படி இருப்பது வேளச்சேரி வாசிகள் மீதுள்ள பயத்தை காட்டுகின்றது....

மடிப்பாக்த்தில் இருக்கும் எனது சகோதரிவீட்டுக்கு போன போது வைரஸ் தொல்லை தீரும் வரை யார் வீட்டுக்கும் போகாதேடா? என்ற போதே அவ்வளவு ஏன் நான் ஊன் வீட்டுக்கே வரலை என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.....பசங்களை யாரோடும் நட்பு பாராட்ட வேண்டாம் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்...... ஒரே மகனை கல்லூரிக்கு நாளை அனுப்பவதா என்று குழம்பி போய் உள்ளார்கள்.... எந்த நேரமும் செய்தி சேனலை பார்த்தபடி இருக்கின்றார்கள்...

ஒரு வைரஸ் எப்படி வேண்டுமானாலும் யார் மூலமாக வேண்டுமானலும் பரவும்... இறந்து போன வேளச்சேரி சிறுவனின் அப்பார்மென்டுக்கு வந்த கூரியர்பாயின் ஒன்னுவிட்ட சித்தப்பா சிங்கபூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து இருக்கலாம், அதற்க்கு பக்கத்து சீட்டில்ஜரோப்பிய நாட்டில் இருந்து வந்தவன் வைரசை இவருக்கு பரப்பி இருக்கலாம்... இப்படி நிறைய முறையில் பரவும்.....

ஒரு வைரஸ் எப்படி பரவும், அந்த வைரசால் பாதிக்க படுபவர்கள் எப்படி பாதிக்கபடுகின்றார்கள் , அப்படி பாதிக்கபட்டவர்களை எப்படி நோய் தடுப்பு செய்ய வேண்டும்...வேளச்சேரியில் ஒரு பையன் ஆனால் சென்னையில் பாதி இடங்களில் இந்த வைரஸ் தாக்கினால் எப்படி இருக்கும்? அப்போது அரசு எடுக்கும் முடிவுகள் என்ன? அது எப்படி மக்களை டீரீட் செய்யும்? அதற்கு பாதிக்கபட்ட மக்களின் ரியாக்ஷன் என்ன? என்பதை அவுட் பிரேக் படம் பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்....

ஆவுட் பிரேக் படத்தின் கதை இதுதான்....

மொடாபா வைரஸ் ஆப்பிரிக்காவில் இருக்கும் அறு... அதன் பக்கத்தில் இருக்கும் ஆர்மீ கேம்பில் பலர் ஒரு பெயர் தெரியாத வைரஸ் தாக்கி இறக்க அந்த இடத்தையே இராணுவம் பாம் போட்டு அழித்து விடுகின்றது... அது நடந்தது 1965 அது ஒரு டாப் சீக்ரேட்...

ஆனால் அந்த வைரஸ் அங்கு இருந்த குரங்குகளுக்கு பரவி தொலைக்கின்றது...

1995ல் ஒருவன் வைரஸ் பரவிய குரங்கை வலை போட்டு பிடித்து சட்ட விரோதமாக அதனை கப்பல் மூலம் ஏற்றி அதனை அமெரிக்காவில் விற்று தொலைக்க அந்த குரங்கை ஜம்போ என்பவன் வாங்கி அதனை வேறு ஒரு இடத்தில் விற்க்க அந்த கடைக்காரர் இது கலப்பு பாலினம் அதனால் விலை போகாது என்று சொல்ல அந்த குரங்கை காட்டில் விட்டு விடுகின்றான்... இதற்கு முன் அந்த குரங்கு அவன் கையையும் அந்த கடைக்காரர் கைடியயும் கடித்து வைத்து விடுகின்றது...


தன் காதலியை சந்திக்க பாஸ்டன் போகும் ஜம்போ அங்கு ஏர்போர்ட்டில் தன் காதலிக்கு உதட்டு முத்தம் இட்டு விட்டு மயங்கி சரிய அவ்வளவுதான் அந்த வைரஸ் காய்சல் நகரம் எங்கும் பரவுகின்றது.....USAMRIID (United States Army Medical Research Institute of Infectious Diseases) ல் இந்த மொடாபா வைரஸ் கண்டுபிடிக்கும் கேசை எடுத்து துப்பறியும்Colonel Sam Daniels (Dustin Hoffman) அவருடைய முன்னாள் மனைவி Robby Keough (Rene Russo)அவள் ஒரு சயின்டிஸ்ட் CDC (Centers for Disease Control) ல் பணி புரிகின்றாள்... பாதிக்கபட்ட ஜம்போ அவன் காதலி எல்லாம் பாஸ்டனில் இருக்கும் மருத்துவமனையில் இருக்க,( பாஸ்டன் ஸ்ரீராம் ஜாக்கிரதை) ஊரில் தொற்று நோய் பரவ அந்த நோய் எதிர்பு சக்தி அந்த காட்டில் விட்ட குரங்கிடம் இருந்துதான் எடுக்க வேண்டும் என்று கண்டு பிடிக்க ஊரே தொற்றில் மாட்டி இருக்கும் போது ராஷவம் அந்த குறிப்பிட்ட ஊரை மட்டும் பாதுகாப்பு வளையத்தில் வைக்க.... குரங்கை தேடி போனார்களா? அந்த குரங்குதான் காரணம் என்பதை எப்படி கண்டு பிடித்தார்கள்?
அவ்வளவு பெரிய காட்டில் அந்த குரங்கை எப்படி தேடினார்கள்.. என்பதை விரல் நகம் கடித்த படி, முட்டிக்கொண்டு இருக்கும் மூத்திரத்தை பாத்ரூம் போய் கொட்டி விட்டு வர முடியாத படி நம்மை திரைக்கதையில் கட்டி போட்டு சொல்லி இருக்கின்றார்கள்.....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
இந்த படம் 1995 ல் வெளி வந்து சக்கை போடு போட்ட படம்.....

இந்த படத்தின் இயக்குனர் டிராய், எர்போர்ஸ் ஒன்,பாபெக்ட் ஸ்டோர்ம், படத்தின் இயக்குனர் Wolfgang Petersen....

இந்த படத்தில் மார்கன் பிரிமேன்,கெவின்ஸ்பேசி போன்றவர்களும் நடித்த இருக்கின்றார்கள்

இந்த படத்தின் கதாநாயகி ரெனி ரூசோவை எனக்கு ரொம்ப பிடிக்கும்

வைரஸ் பரவுவதை வெகு ஜனமக்களுக்கு மிக அழகாக புரியும் படி திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இந்த படகுழுவுக்கு எனது நன்றிகள்....


ஏரோபிளேனில் காய்சலில் வரும் ஜம்போ ஒரு பிஸ்கட் தின்று வைக்க அதனை ஒரு சிறுவன் எடுத்து கொள்லாமா? என்று அனுமதி கேட்டு அந்த பிஸ்கட்டை எடுக்கும் போது அவ்ன தடுக்கபடும் போது நமக்கு ஒரு நிம்மதி...

அந்த குரங்கு கடித்து வைக்கும் போதே அந்த வைரஸ் பரவும் காட்சிகளை எடுத்து இருக்கும் விதம் அருமையான ஒன்று...

அதை விட தியேட்டரில் ஒருவன் இரும்ப..... அந்த கிருமி தியேட்டர் இருட்டில் பயணப்பட்டு படத்தின் காட்சிக்கு சிரிக்கும் ஒவ்வொறு பார்வையாளன் வாய்புறமாகவும் மூக்கு வழியாகவும் உள்ளே செல்லும் போது.... அதனை காட்சி படுத்தி இருக்கும் காட்சி அழகு... அதை பார்க்கும் நமக்கு பயம் நிச்சயம் தொற்றிக்கொள்ளும்...

இந்த படம் பார்த்த பிறகுதான், நான் இந்த மாதிரி நோய் தொற்று இருக்கும் நாட்களில் தியேட்டர் செல்வதை தவிர்த்தேன்.. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும்....

நோய் தொற்றி வரும் மக்கள் கதறும் கதறலை நன்றாக காட்சி படுத்தி எடுத்து இருப்பார்கள்

குரங்கை கண்டுபிடிப்பதும், அதற்க்கு முன் எப்படி அந்த குரங்கு அமெரிக்கா வந்து இருக்கும் என்பதை இன்வெஸ்ட்டிகேஷன் செய்வது விறுவிறுப்பான அழகு...

இதற்கு மத்தியில் இராணுவத்தில் இருக்கும் ஆபிசர்கள் மத்தியில் இருக்கும் ஈகோ எல்லா இராணுவ படத்திலும் வருவதுதான்....

ராணுவம் தேவைபட்டால் சொந்த நாட்டு மக்களையே சுட்டு கோள்ளும் என்பதற்கு இந்த படத்தின் சில காட்சிகள் நல்ல எடுத்துக்காட்டு....

வாழ்வில் எல்லோரும் பார்க்க வேண்டியபடம்....


இந்த படத்தின் விருதுகளும்... பரிந்துரைப்பும்....

ASCAP Award

* Top Box Office Film (Won)

Saturn Award

* Best Science Fiction Film (Nominated)

NAACP Image Award

* Cuba Gooding, Jr. - Outstanding Supporting Actor in a Motion Picture (Nominated)

படம் மற்றும் படக்குழுவினர் பற்றி....

Directed by Wolfgang Petersen

Produced by Arnold Kopelson
Anne Kopelson
Wolfgang Peterson
Gail Katz
Written by Laurence Dworet
Robert Roy Pool
Starring Dustin Hoffman
Rene Russo
Morgan Freeman
Cuba Gooding, Jr.
Patrick Dempsey
With Donald Sutherland
And Kevin Spacey
Music by James Newton Howard
Editing by Neil Travis
Distributed by Warner Brothers
Release date(s) March 10, 1995
Running time 127 min.
Language English

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

சாண்ட்விச் அன்ட் நான்வெஜ் 18+ (12.08.09)

ஆல்பம்...

சென்னைவாசிகள் பீதியில் உறைந்து போய் உள்ளார்கள்.. திருமதி செல்வம், கோலங்கள் ,அரசி போன்றவற்றை மூட்டைகட்டி வைத்து விட்டு செய்தி சேனல்பக்கம் தங்கள் கடைகண்ணை திருப்பி இருக்கின்றார்கள்... பன்றி காய்சல் நோயில் வேளச்சேரி சிறுவன் பலியானதை அடுத்து... சென்னை பரபரப்பாகி இருக்கின்றது.. எங்கு சென்றாலும் பன்றி காய்சலை பற்றியே பேச்சாக இருக்கின்றது... முக்கியமாக குழந்தை வைத்து இருப்பவர்கள் வயிற்றில் நெருப்பைகட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்... சிலர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டி்லேயே முடக்கி வைத்து இருக்கின்றார்கள்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம்... பன்றி காய்சல் எல்லாம் கூவம் ஓரம்தான் வரும் என்று எல்லோரும் நினைத்து்கொண்டு இருக்க... முதலில் இது அப்பார்ட்மென்ட் வாசிகளை தாக்கி இருக்கின்றது.... இரண்டாவதாக அடையார், இத்தனைக்கும் வெளியே போய் வந்தால் சின்தால் சோப் போட்டு கை கழுவும் குடும்பங்கள்தான் பெருமளவுக்கு பாதிக்கபட்டு இருக்கின்றது.... அவர்களிடம் மட்டும்தான் இந்த பீதி எல்லாம்... சைதாபேட்டை கூவம் கரையோரம் வாழ் மக்களை நேற்று பார்த்தேன்... பெரிய அளவிளான பயமோ, முன் எச்சரிக்கையோ ஏதும் இல்லாமல் இயல்பாய் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்....


பெங்களுருவில் திருவள்ளுவர் சிலை திறப்பும் இங்கே கன்னட கவிஞர் சிலை திறப்பும் பெண் கொடுத்து பெண் எடுப்பது போலதான் என்பது எனது கருத்து...காவிரி பிரச்சனை அல்லது ஒகேனக்கல் பிரச்சனை என்று எதாவது வந்து கலவரம் வந்தால் அங்கே நம்ம திருவள்ளுவர் கை போனா? இங்கே கன்னட கவிஞர் கால் போகும்...இப்படி நடக்க அதிகம் வாய்ப்பு இருக்கின்றது.... அது போல் நடக்காமல் இருக்க பாரதமாதாவை வேண்டிக்கொள்வோமாக.....

மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு வேன், எரிசாராயம் கடத்தி போகும் போது அதனை பிடிக்க அந்த வேனை விரட்ட, பேய் வேகத்தில் சென்ற வேன் இரண்டு என்ஜீனியரிங் கல்லூரி மாணவர்கள் உயிரை பறித்து இருக்கின்றது... அதே போல் சேலையில் தீப்பிடித்த பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க வேகமாக ஓட்டிய வேன் டிரைவர் சாலையில் நடந்து போன பள்ளி மாணவன் மீது மோதி அவன் ஸ்தலத்துலே இறக்க... அதையும் மீறி அந்த பெண்ணை காப்பாற்ற மருத்துவமனை சென்றால் அங்குபோனதும் அந்த பெண் தீக்காயத்துடன் இறந்து போய் விட்டாள்.... பல்வேறு இடங்களில் நடந்த இந்த துயர சம்பவத்தில், மூன்று ஆண் பிள்ளைகளும் ரோட்டில் நடந்து போனார்கள் அவ்வளவுதான்....

மிக்சர்....
07,08,09 இப்படி ஒரு தினம் திரும்பவும் வராது அதனால நட்சத்திர பதிவின் போது அந்த நாளை சிறப்பாக்கி ஒரு பதிவு போடலாம் என்று நினைத்து இருந்தேன்... எல்லாம் டாட்டா இன்டிகாமால் வீண்.....


சென்னை பதிய தலமை செயலகம் வெகு விரைவாய் கட்ட பட்டு வருகின்றது, இரண்டு மாதத்தில் மிகப்பெரிய உயரம் கட்டி விட்டார்கள்...




மெரினாவை அழகு படுத்தும் விதமாக நடந்த பணிகளில் பாதிக்குமேல் நடந்து முடிந்து இருக்கின்றது , பொதுபணித்துறை கட்டிடம் எதிரே புல்வெளி அமைத்து அழகு படுத்தி இருக்கின்றார்கள்....
எல்லாம் ஓகே இன்னும் சென்னை சாலைகள் பக்காவான சாலைகளாக மாறவே இல்லை...

விஷுவல் டேஸ்ட் எடுத்தில் பிடித்தது....
படங்களை கிளிக்கி பெரிதாக பார்க்கவும்

இரவு வேளச்சேரி இரயில்வே மேம்பாலம், பத்துவருஷத்துக்கு முத்தி இந்த எடத்துக்கு வந்துட்டு போனவன்... இப்ப வந்தா செத்தே போயிடுவான்...

பத்து வருஷத்துக்கு முந்தி ஸ்டார் பில்டர் போட்டு படம் எடுக்கிறது ரொம்ப பேமசான விஷயம்.. கல்யாண பொண்ணு கையில காமாட்சி அம்மன் விளக்கை கைல கொடுத்துட்டு ஒரு மூனு படமாவது எடுத்தாதான் போட்டோகிராபரால தூக்கம் வரும் நம்ம சென்ட்தாமஸ் மவுன்ட் போஸ்ட் ஆபிஸ் எதிர்க்க எடுத்தது

இதுவும் மவுன்ட் மிலிட்ரி கேம்பஸ் கிட்ட இருக்குற சர்சின் இரவு நேர வெண்மை...
ஓ எம் ஆர் பக்கத்துல இருக்குற காகினிசென்ட் சாப்ட்வேர் கம்பெனி கட்டத்தோட இரவு தோற்றம்
வேளச்சேரி விஜயநகர் சதர்லேன்ட் கட்டிடமும் ரோடும்....
வேளச்சேரி ரயில் நிலையம் ரயில் நிலையம் மேலே வெண் டார்ச் அடிப்பது சாட்சாம் நம்ம நிலா தாங்க....
பழுதிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருக்கும், மின் விளக்கு கோபுரம்... அதன் ஸ்டார் பில்டர் நடுவில் உள்ள முக்கோனத்தின் நடுவில் ஜொலிப்பது, வட்ட நிலா....


குறிப்பு... இரவில் எடுத்த படங்கள் எல்லாம் கையில் எடுத்தது.... அல்லது பைக்கில் உட்கார்ந்து கொண்டே எடுத்தது...ஸ்டேன்ட் உபயோகபடுத்தவில்லை...
நான்வெஜ்....


ஜோக் 1

கணவனிடம், முழு சுகத்தையும் எப்போதுமே அனுபவிக்காத ஒரு 40வயது பெண்மணி, ஸ்பென்சரில் பர்சேஸ் செய்த கொண்டு இருக்கும் போது யாரோ இரண்டு பெண்கள் பேசிக்கொண்டு போகும் போது “ பிலிப்ஸ் 21 இன்ச்” என்று காதில் விழ சட்டென அந்த பெண்கள் பார்க்கலாம் என்றால், சட்டென மாயமாய் கடந்து போய் ஜனத்திரளில் மறைந்து விட்டார்கள்.... அவர்களிடமே கூச்சத்தை விட்டு கேட்டு இருக்கலாம்,ச்சே விட்டு விட்டோமே.. என்ன காரியம் செய்தோம் என்று நொந்த படி அந்த பெண்மணிஆட்டோ பிடித்து வீடு வந்தாள்... வீட்டுக்கு வந்ததும் ஒரு ஜடியா தோன்றியது இன்டர்நெட்டை ஆன் செய்தாள், குகுள் செர்ச்க்கு போனாள் “ பிலிப்ஸ் 21 இன்ச்” என்ற டைப் அடித்தாள், நெற்றி வியற்வை துடைத்துக்கொண்டாள், நகம் கடித்தால் சில நிமிடம் கழித்து “ பிலிப்ஸ் 21 இன்ச்” கலர் டிவி என்று கொட்டை எழுத்தில் காட்ட, மானிட்டர் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டு விட்டு விசும்ப தொடங்கினாள்.....

ஜோக்..2

தீபாமேத்தாவை எல்லாருக்கும் தெரியும் ஆனா, அவுங்க யாரோட0.....சாரி டங்கு சிலிப்பு போல டைப்பு சிலிப்பாயிடுச்சி.... அவுங்க எந்த படத்தை எடுத்தாலும் சர்சைதான்... சரி விஷயத்துக்கு வரேன் இரண்டு பொம்பளைங்களை வச்சி படம் எடுத்தாங்க அதுக்கு பயர்னு பேரு வச்சாங்க....அடுத்து இரண்டு ஆம்பளைங்களை வச்சி எடுக்கபோற படத்துக்கு என்ன பெயர் தெரியுமா? பேக்பயர்னு பேராம் .... டைட்டில் நல்லா இருக்குதானே????,

தத்துவம்....

பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின்மேல் ஏறி நின்றால்....வென்றிடலாம் பன்றி பீவரை.... என்ன சரியா?????

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(TALK TO HER) 18+ உலக சினிமா (ஸ்பேனிஷ்)காதலியோடு மணிக்கணக்கில் பேசுபவரா நீங்கள்????


காதலியோடு பேசுவது என்பது காதலித்தவனுக்கு மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு அற்புதம் அது....இப்போது எல்லாம் காதலியோடு வாயால் பேசுவதை விட, உதடுகளோடு பேசவிடுவதுதான் அதிகமாக இருக்கின்றது...ஹும் பல் இருக்கறவன் பட்டானி சாப்பிடுறான்...

மெரினா கடற்கரை கொளுத்தும் வெயில்.. ஆனாலும் ஒரு குடை கூட இருக்காது இருந்தும் பேசிகொண்டே இருப்பார்கள்... அப்படி என்னதான் பேசுவார்களோ....காதலியோடு பேசுவது போதையான விஷயம்.. அதுவும் மணிக்கணக்காய் பேசுவது என்பது மெனதை கொள்ளை கொள்ளும் விஷயம்...

அதே போல் போனில் பேசுவது அவ்வளவு சுகம் பேசிக்கொண்டே இரயில் டிராக் கடந்து பஸ் மோதி உயிர் விட்டவர்கள் அதிகம்... பேசுதல் சுகமான விஷயம்.. அது போதையிலும் போதை ராஜபோதை....
சரி காதலி பேசாத ஊமையாக இருந்தாள்? சைகைகள் மூலம் பேசி புரிய வைத்துவிடலாம்... ஆனால் தான் நேசித்த காதலி கோமாவில் கிடந்தாள் காதலன் என்ன செய்யவான் என்பதுதான் டாக் டூ ஹர் படத்தின் கதை...
டாக் டூ ஹர் படத்தின் கதை இதுதான் .....
Benigno வும் Marco வும் ஒரு நாடகம் பார்க்கின்றார்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்வென்றால் இருவரின் காதலிகளும் கோமாவில் ஒரே ஹாஸ்பிட்டலி்ல் இருக்கின்றார்கள் என்பதுதான்....
Benigno வின் காதலி Alicia ஒரு டான்ஸ் மாணவி... அவள் ஒரு விபத்தில் கோமா நிலைக்கு போகின்றாள்...Benignoஒரு ஆண் நர்ஸ் அதற்க்கு காரணம் கோமாவில் இருக்கும் காதலியை தானே பார்த்து கொள்ள வேண்டும் என்ற சுயநலம்தான் காரணம்.
Marco ஒரு பயண எழுத்தாளன் அவனது காதலிLydia González ஒரு புல்பைட்டர் மாடு முட்டி கோமாவுக்குபோனவள்அவளும் அதே ஹாஸ்பிட்டல்தான்....இரண்டு காதலர்களும் கோமாவில் இருக்கும் காதலிகளை பார்த்துக்கொள்கின்றார்ள்.. இதில் Marcoவின் காதலி அதாவது புல்பைட்டர் காதலியின் முன்னாள் காதலன் வரMarco அவளை விட்டு வெளியூர் செல்கிறான் சில நாட்கள் கழி்த்து பேப்பர் பார்க்கும் போது தான் காதலி கோமாவில் இறந்து போனதும்Benigno போலிஸ் கைது செய்து இருப்பதும் தெரிகின்றது காரணம் கோமாவில் இருக்கும் காதலிஅலிசைBenigno கற்பழித்துவி்ட்டான் என்பதுதான் குற்றசாட்டு... உடனேMarco ஊர் திரும்புகின்றான் நடந்தவைகள் அறிய ஜெயிலுக்கு போய் Benigno சந்திக்கின்றான்....போலிஸ் சொன்னது உண்மையா? கோமாவில் இருந்த பெண்ணை எப்படி கெடுத்தான் என்பது உண்மையா? என்பதை வழக்கம் போல் வெண்திரையில்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

முதல் காட்சியில் டிராமா சீன் வந்ததும் இந்த படம் வேற ஒரு டைப் படமோ என்று என்னுவதற்க்குள் காட்சி மாற்றி நம்மை நிமிர்ந்து உட்காரா வைக்கின்றார்கள்

கோமாவில் இருக்கும் பெண்ணின் நிர்வாண உடலை ஹாஸ்பிட்டலில் துடைக்கும் போது அந்த பெண்ணுக்கு மதாவிடாய் வர சட்டென அந்த இடத்தில் டெட்டால் அடித்து ஸ்பாஞ் வைத்து துடைக்கும் போது நர்ஸ் தொழிலில் இருக்கும் ஆணையோ பெண்ணையோ கையெடுத்து கும்பிட தோன்றுகின்றது...

உலக அழகியாக இருந்தாலும் கோமா என்று வந்த பிறகு எல்லாம் நடை பினம்தான் என்ன அற்புதமான காட்சி அமைப்பு....கோமாவில் கிடக்கும் நபர்களின் மேல் பரிதாபம் வரவைக்கும் படம் இது....

தன் காதலி கோமாவில்தாயே இருக்கின்றாள் என்று கருதாமல் அவளுக்கு பணிவிடை செய்து கொண்டே Benigno அவளை பார்த்துக்கொள்வது அவ்வளவு அழகு...

காதலி கோமாவில்தானே இருக்கின்றாள் என்று எண்ணாமல் அவளோடு எப்போதும் பேசிக்கொண்டே இருப்பது கவிதையான காட்சிகள்...
படத்தில் நிறைய நிர்வாண காட்சிகள் இருக்கும்....ஜாக்கிரதை

அதே போல் பெண் உறுப்பு போல் பெரிய செட் போட்டு அதன் உள்ளே Benigno போய் வருவது போன்ற காட்சிகளை எல்லாம் நம்ம ஊரில் எடுத்தால் அவ்வளவுதான்...

நீ எல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கலியா? உங்க அம்மாவும் பெண்தானே? அவகிட்ட இருக்கறதுதானே எல்லார்கிட்டயும் என்று திட்டி ,(Pedro Almodóvar)இயக்குனரை ஊரை விட்டே விளக்கி வைத்து இருப்பார்கள்....

அதே போல் அந்த பெண் புல் பைட்டர் என்பதை அவள் உடல் அமைப்பில் இருந்தே கண்டு பிடித்துவிட முடிகின்றது... அந்த புல் பைட்டிங்க காட்சிகளும் ஒளிப்பதிவும் அருமை.....

இந்த படம் கோல்டன் குளோப் விருதும் ஆஸ்கார் அவர்ர்டும் வாங்கியது....

டைம் பத்திரிக்கை இந்த படத்தினை சிறந்த 100 படங்கள் பட்டியலில் இந்த படத்தையும் இனைத்து இருக்கின்றது....

இந்த படம் (ஸ்பானிஷ்) வாங்கிய விருதுகள்.....

* 2002 Academy Awards:
o Best Original Screenplay (Pedro Almodóvar)
* Argentine Film Critics Association ("Silver Condor"): Best Foreign Film
* 2003 BAFTA Awards:
o Best Film Not in the English Language
o Best Original Screenplay (Pedro Almodóvar)
* 2003 Bangkok International Film Festival ("Golden Kinnaree Award"): Best Film, Best Director (Pedro Almodóvar)
* Bodil Awards: Best Non-American Film
* Bogey Awards: Bogey Award
* Cinema Brazil Grand Prize: Best Foreign Language Film
* Cinema Writers Circle Awards (Spain): Best Original Score (Alberto Iglesias)
* Czech Lions: Best Foreign Language Film
* 2003 César Awards: Best European Union Film
* European Film Awards: Best Film, Best Director (Pedro Almodóvar), Best Screenwriter (Pedro Almodóvar)
* 2003 Golden Globe Awards:
o Best Foreign Language Film
* Goya Awards (Spain): Best Original Score (Alberto Iglesias)
* Los Angeles Film Critics Association: Best Director (Pedro Almodóvar)
* Mexican Cinema Journalists ("Silver Goddess"): Best Foreign Film
* National Board of Review: Best Foreign Language Film
* Russian Guild of Film Critics ("Golden Aries"): Best Foreign Film
* Satellite Awards: Best Motion Picture - Foreign Language, Best Original Screenplay (Pedro Almodóvar)
* Sofia International Film Festival: Audience Award - Best Film
* Spanish Actors Union: Performance in a Minor Role - Female (Mariola Fuentes)
* TIME Magazine: Best Film
* Uruguayan Film Critics Association: Best Film (tie)
* Vancouver Film Critics Circle: Best Foreign Film

[edit] Nominations

* 2002 Academy Awards:
o Best Director (Pedro Almodóvar)
* British Independent Film Awards: Best Foreign Film - Foreign Language
* Broadcast Film Critics Association Awards: Best Foreign Language Film
* Chicago Film Critics Association: Best Foreign Language Film
* Chlotrudis Awards: Best Director (Pedro Almodóvar)
* David di Donatello Awards: Best Foreign Film
* European Film Awards: Best Actor (Javier Cámara), Best Cinematographer (Javier Aguirresarobe)
* Satellite Awards: Best Director (Pedro Almodóvar)

Directed by Pedro Almodóvar
Produced by Agustín Almodóvar
Michel Ruben
Written by Pedro Almodóvar
Starring Javier Cámara
Darío Grandinetti
Leonor Watling
Geraldine Chaplin
Rosario Flores
Music by Alberto Iglesias
Cinematography Javier Aguirresarobe
Editing by José Salcedo
Distributed by Sony Pictures Classics
(USA)
Warner Sogefilms
(Spain)
20th Century Fox
(Argentina)
Pathé
(France)
Release date(s) Flag of Spain 15 March 2002
Flag of the United States 25 December 2002 (limited)
Flag of Canada 25 December 2002
Running time 112 min.
Country Spain
Language Spanish
Budget n/a
Gross revenue $51,001,550 (worldwide)


குறிப்பு... இந்த படத்தின் முடிவில் என் மனைவிக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை... இந்த படத்தை மிகச்சிறந்த 100 படங்களுள் ஒன்றாக டைம் பத்திரிக்கை செலக்ட் செய்து இருப்பதை சொன்ன போது.....என் மனைவி போயா நீயும் உன் உலகபடமும் என்றாள்......நீங்களாவது படம் பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்கள்....என் மனைவி ஹம் தில் சுக்கே சனம் போன்ற படங்களை பார்த்து வளர்ந்தவள்.... எனக்கு கூட படத்தோட முடிவு.........

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்பிடு.....


தமிழ்மண நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுக்கபட்ட போதே உள்ளுக்குள் ஒரு குருவி கத்தியது... அதே போல் ஷுட்டிங்கில் வேலை பெண்டு நிமிரும் அளவுக்கு வேலை, வேலை...

ஆனால் தம்பி நையான்டி நைனா கொடுத்த ஐடியா படி எற்க்கனவே பொதுவான பதிவுகள் எழுதி டிராப்டில் சேமித்து வைத்து விட்டேன்....
ஒரு மூன்று நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லை... அப்படிஎன்றால் பெரிதாய் இல்லை எனலாம் ... நான் ஷுட்டிங் போனதும் டிராப்டில் உள்ள போஸ்ட்டைதமிழ்மணத்திலும் தமிளிஷ்லும் இணைக்க என் மனைவிக்கு, ஒரு மணிநேரம் தேவைபட்டது... என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.. அதாவது நெட் கனெக்ஷன் வந்து வந்து போய் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தது....

அந்த டாட்டா இன்டிகாம் நாதாரிகளுக்கு போன் செய்தால் சர்வர் டவுன் என்று பழைய பல்லவியே பாடிக்கொண்டு இருந்தார்கள்... ஒரு கட்டத்தில் கொஞ்சம் நஞ்சம் வந்து கொண்டு இருந்த நெட் கனெக்ஷன் கூட அதன் பிறகு வர வில்லை... காரணம் கேபிளில் பிரச்சனை என்றார்கள்....நான் தவித்தேன் துடித்தேன் அலறினேன்.... வேலைக்கு ஆக வில்லை.... சரி அதன் பிறகு பெண் டிரைவில் ஏற்க்கனவே நோட் பேடில் எழுதி வைத்ததை பிரவுசிங் சென்ட்ர் போய் போஸ்ட் செய்தேன் அதனாலே யாருக்கும் என்னால் பின்னுட்டம் கூட போட முடியவில்லை....


ஆனால் முகம் தெரியாத உங்களால் இது சாத்தியம் அயிற்று தமிழ்மண பதிவராக நான் முதல் பக்கத்தில் வந்த போது அறிமுக பதிவுக்கு 52 கமென்ட்ஸ்.... என் மெயில் பாக்ஸ் நிரம்பி வழிந்தது....எனக்கு கண்களில் ஒரு ஓரமாக நீர்த்திவிலைகள்..

அதன் பிறகுஎல்லா பதிவுகளுக்கும் குறைந்தது 25 கமென்டாவது நான் பதில் போடாமலும் வந்து கொண்டுதான் இருந்தது... இந்த வெற்றி உங்களாலும் உங்கள் புரிதலாலும் சாத்தியம் ஆயிற்று... நன்றி எனக்கு பிரதிபலன் பார்க்காது இந்த ஒரு வாரத்துக்கு தோள் கொடுத்த தோழர்கள் தோழிகள் கீழே.....

நித்யகுமாரன்... என்னை வலையுலகில் அறிமுகபடுத்தியவர்...முன்பெல்லாம் நிறைய எழுதியவர், கல்யாணம் ஆனதும் எழுதுவதை குறைத்துக்கொண்டவர்...என்னை போல் தடவி டைப் அடிப்பது போல் இல்லாமல் பத்து நிமிடத்தில் பதிவு போடும் வேகம் இருக்கின்றது ஆனால் ஏன் எழுதவில்லை என்று எனக்கே தெரியவில்லை.....

வெட்டிபயல் ....இவர் எப்போதாவது என் வலை பக்கத்து வருபவ்ர் முதல் வாழ்த்து இவருடையதுதான்...

காத்திகை பாண்டியன்.. நல்ல நண்பர் எனது கைபேசி எண் வாங்கி பேசி அறிமுகபடுத்திக்கொண்ட நண்பர்...தன் வரலாறுகளை திறம்பட சொல்லுபவர்...இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை வாத்தியர் தொழில்.....

நட்புடன் ஜமால்.... பதிவு போஸ்ட் பண்ண அடுத்த நொடி இவர்கிட்ட இருந்து பின்னுட்டம் வர தவறுவதே இல்லை...எனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தும் நபர்,சாட்டில் பேசி என்னிடம் நட்பானவர்....

பிரேம்ஜீ... எந்த ஒரு டெக்னாலஜி பத்தியும் சட்டென தகவல் சொல்லுபவர், இவரது பக்கத்தில் திரைப்பட டிரைலர் என்னை கவர்ந்த விஷயம்...


வந்தியதேவன்.. எனக்கு சுவாரஸ்ய வலை பதிவு விருது கொடுத்த புண்ணியவான், எனது சான்ட்விச் அன்ட் நான்வெஜ் பரம ரசிகன்.... நான்வெஜ் சரியில்லை என்று அடிக்கடி வருத்தம் கொள்பவன்

கேபிள் சங்கர்... இரண்டு பேருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இருவரும்சினிமா காதலர்கள்... அதை தவிர்த்து நல்ல நண்பர்...எனக்கு இவரிடம் மிகவும் படித்தது உணவை ருசித்து சாப்பிடுபவர்.....

மங்களுர் சிவா....பதிவுலகில் நான் முதன் முதலாக நேரில் சந்தித்த நபர், இவர் திருமண போட்டோவை நான்தான் எடுத்தேன் என்று நினைக்கின்றேன்.... என் மேலே ரொம்ப பாசம். பத்து நாள் வலை பக்கம் வரலைன்னாலும், பதினோறாவது நாள் வந்து, எனது எல்லா பதிவையும் படிச்சிட்டு பின்னுட்டம் போடும் பாசக்கார பயபுள்ள.. எனக்கு முதன் முதலில் தொடர்ந்து பின்னுட்டம் போட்டு என்னை உற்சாகபடுத்தியவன்....

கிரி.... கிரி தலைவர் ரஜினி... நம்ம தலைவர் கமல்...அதையும் மீறி எனக்கு கிரியோட எழுத்து பிடிக்கும்.. சிங்கபூர் பற்றி எழுதிய கட்டுரை... சமீபத்தில் பாடகர் மைக்கேல் பத்தி எழுதின கட்டுரை அருமை....

வண்ணத்து பூச்சி... என்னோட நலனில் அதிகம் அக்கரை கொண்டவர், எப்பவும் போன் பண்ணி அடுத்து என்ன பண்ண போற என்று ஆர்வமாய் கேட்பவர்....இவரும் ஒரு சினிமாகாதலர்.. முதன் முதலில் உலக படவிழாவில்தான் சந்தித்து கொண்டோம்.....

கோவி கண்ணன்....மனதில் பட்டதை காம்பரமைஸ் செய்துக்கொள்ளாமல் விஷயத்தை சொல்லும் வல்லவர் எனக்கு,தொடர்ந்து ஒரு வாரம் பின்னுட்டம் இட்டு அசத்தியவர்....

பைத்தியக்காரன்... பைத்தியக்காரன் அரசியல் பார்வை வித்தியசமானது.. வேற ஒரு கோனத்தில் யோசி்த்து அதனை திறம்பட சவைபட சொல்லுபவர்...எப்போதுமே ஜாக்கி கேமராவோட வந்து விழாவை சிறப்பிக்கனும்னு அன்போடு சொல்லுபவர்....

டோன்லீ... சில பல பதிவுகளை படித்து எனக்கு தொடர்ந்து பின்னுட்டம் ஈடுபவர் நல்ல நண்பர்

சந்தனமுல்லை.... எப்போதாவது வந்தாலும், என் நினைவில் இருப்பவர்

குசும்பன்.... பெயருக்கு ஏற்றார் போல் குசும்பு திலகம்தான் இவரின் நக்கல் எனக்கு மிகவும் பிடிக்கும்..பொதுவாக வலைபதிவர்களை கலாய்க்கும் கற்பனைக்கு ஈடு இனை இல்லை.....

நையான்டி நைனா... பார்பதற்க்குதான் நையான்டி நக்கல் எல்லாம்... ஆழ்ந்த கருத்துக்களை சொல்லும் அறிவாளி... எனது உடன் பிறவா சகோதரன்... தானே போன் செய்து அறிமுகப்டுத்திக்கொண்டவன்...இவனின் என் மீதான பாசம் என்னை சிலிர்க்க வைக்கும்...

சரவணகுமரன்.... தொடர்ந்து என் எழுத்துக்களை வாசித்து பின்னுட்டம் பொடுபவர்.... நன்றி தோழர்

துபாய்ராஜா.... சமீபத்தில் எனது பதிவில் பின்னுட்டம் இட்டு அறிமுகமான நண்பர்.. தொடர்ந்து வாசித்து வாழ்த்தும் கமென்டும் சொல்லும்நண்பர்...

கலையரசன்.... எங்கள் ஊர் பக்கத்து ஊர் ஆளு... எப்பவுமே முக்கிய பதிவுக்கு பின்னுடத்தில் தன் கருத்தை சொல்லும் பாசக்கார பய புள்ள... நல்ல நண்பர்,இவர் பதிவுகளின் சில நக்கல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

சுரேஷ்குமார்.... சில நாட்களாய் அறிமுகம்.... என்னை அஜீத்துக்கு பிறகு பலர் தலை என்று அழைக்கின்றார்கள் ஏன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தானே....

சுப்பையா.... எனக்கும் சுப்பையா சாருக்கும் பெரிய அறிமுகம் இல்லை என்றாலும் வாழ்த்த மனது வேண்டும்.... நன்றி சுப்பையா சார்...

ராஜன்... சமீபமாய் தொடர்ந்து என் பதிவுகளை வாசித்து பின்னுட்டம் இடும் நண்பர்... நன்றி ராஜன்..


ஸடார்ஜன்... வலைப்பூக்களில் இப்போதுதான் அறிமுகம் என்றாலும் விடாமல் வாசி்த்து எனக்கு வாழ்த்தும் பின்னுட்டமும்... போட்டு திக்கு முக்காட செய்பவர்...நன்றி நண்பரே...


புதுவை சிவா..... தொடர் வாசிப்பு நண்பர்...நேரங்கிடைக்கும் போது பின்னுட்டம் இடுவார்.. என் வலையில் சின்ன பிரச்சனை இருந்த போது டோன்டு விடம் ஜாக்கிக்கு பின்னுட்டம் போட முடியவில்லை என்று வருத்தபட்டதாக நியாபகம்...நன்றி சிவா

தண்டோரா.... இவரின் மகள் என் கல்லூரி மாணவி.. ஆனால் பல வருடங்களுக்கு முன்பே பாண்டி கன்னியக்கோவிலில் பாரில் பீர் சாப்பிட்டு கலைந்து போய் இருக்கின்றோம்....தலைவருக்கு கோபால புரம் என்றால் எட்டிக்காய் கசப்பு... பதிவை மீறி நல்ல நண்பர்... இவரின் அலுவலகம் எனக்கு இளைப்பாறும் வேடந்தாங்கல்....தமிழ் பிழைகள் நான் திருத்திக்கொள்ள வேண்டி அன்பாய் ,சில நேரங்களில் அதட்டி சொல்லுபவர்....பீர் வாசனையை விட இலக்கிய வாசனை இவரிடம் அதிகம்....


துளசிகோபல்... டீச்சரின் பயண பார்வைகள் வெகு அழகு...சில கருத்துக்களை விதண்டாவாதம் செய்யாமல் உண்மை இருப்பின் அதன் பக்கம் நிற்பவர்.... எப்போதாவது என் வலைபக்கம் வருபவர்.. எப்போதவது வந்தாலும் நல்ல பின்னுட்டம் இட்டு என் தமிழ் பிழைகளை உரிமையாய் திருத்தும் அன்பு டீச்சர்...

ஜெட்லி... என் மீது நேசம் கொள்ளும் இன்னோருதம்பி....முக்கியமாக இசிஆர் பக்க தியேட்டர் பற்றி இவர் எழுதி இருக்கும் பதிவுகள் அருமை என்பேன்....


ஆசிப் மீரான்.... வலையுலகில் அண்ணாச்சி என்று செல்லமாக அழைக்கும் மாஸ் ஹீரோ ....இவ்ரின் பதிவுகள் சிம்பிளாக இருந்தாலும் நீட்டாக இருக்கும்...என் எழுத்து பிழைகளை வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சொல்லி காட்டுபவர் நன்றி அண்ணாச்சி....

புருனோ.... பேருக்கதான் டாக்டர் பல விஷயங்களை இவருடன் விவாதிப்பதில் எனக்கு அலாதி ஆனந்தம்...சில கேள்விகளை எதிராளி நகராமல் ஓடாமல் ஓளியாமல் இருக்கும் படி நச் கேள்விகளை லாஜீக்கோடு கேட்பவர்.....நல்ல நண்பர்.....என் மீது எப்போது பாசம் வைத்து இருப்பவர்....நன்றி டாக்டர்....

நான் ஆதவன்.... இப்போதெல்லாம் என் பின்னுட்டங்களில் தொடர்ந்து நண்பர் ஆதவனை பார்க்கின்றேன் மிக்க நன்றி ஆதவன்....


வெயிலான்....நல்ல நண்பர்...நல்ல விஷயங்கள் நடக்கும் போது சட்டென கைகுலுக்கும் தோழர்....

அது ஒரு கனாக்காலம்... நான் சமீபமாய் கேள்வி படும் நபர் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி நண்பரே...

யுவகிருஷ்னா....
ஒரு சில நாட்களுக்கு முன் ,மூத்த பதிவராய் ஒரு மணி நேரத்துக்குமேலாய் என்னை தொடர்பு கொண்டு அறிவுரை சொன்னவர்... என் எழுத்துக்களை பாராட்டியவர்....வளரும் போது வரும் பிரச்சனைகளை களைய கற்றுக்கொடுத்தவர்... நன்றி லக்கி

வெண்பூ.... மங்களுர் சிவா போல் எனக்கு தொடர்ந்து என் எழுத்தை வாசித்து பின்னுட்டம் போட்டு என் எழுத்தை சீர்படுத்திய நண்பர்....தற்போது வேலை பளு காரணமாக எப்போதாவது தலை காண்பிக்கின்றார்... நன்றி நண்பா....

டிவி ராதாகிருஷ்ணன்.... எப்போதாவது வரும் நண்பர் இருப்பினும் வாழ்த்து தெரிவித்தமைக்கு என் நன்றிகள்...

தமிழ் பிரியன்.... தொடர்ந்து நண்பர் தமிழ் என் பதிவுகளை படிக்கின்றார் என்று நினைக்கின்றேன்.... நன்றி தமிழ்பிரியன்

பிஸ்கோத்துபயல்.... தொடர்ந்து வாசிக்கும் நண்பர்...தொடர்ந்து பின்னுட்டம் இட்டு என்னை ஊக்க படுத்துபவர்....நன்றி பிஸ்கோத்துபயல்....

சகாதேவன்.... ஜாம்பவான் ஒளிப்பதிவாளர்களை போல் நான் பிரகாசிக்க வாழ்த்திய நண்பர் சகாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....

சதங்கா...பெரிய பரிட்சயம் இல்லா விட்டாலும் என்னை வாழ்த்திய சதங்காவுக்கு என் நன்றிகள்

அக்னிபார்வை.... ஏதாவது டெக்னிக்கலாக தெரியவேண்டுமாயின் உடனே அக்னிக்கு போன் அடித்து சந்தேகம் கேட்பேன்... உடன் சந்தேகம் நிவர்த்தி் செய்யபடும்... நல்ல நண்பர்... பதிவர் சந்திப்பில் கடைசி கடைசியாக போவது நாங்கள்தான்...

வால்பையன்.... தொடர்ந்து பின்னுட்டம் இட்டு கலக்கும் நண்பர் ஆங்கில பட ஹீரோக்களிடம் எனக்கு பிடித்த பல விஷயங்கள் வாலுக்கும் பிடிக்கும்....சில பின்னுட்டங்களில் நக்கல் ஜாஸ்த்தியாக இருக்கும்....நன்றி வால்

சூரியன்... சமீபகாலமாய் பழகிய நண்பர் தொடர் பின்னுட்டம் இட்டு என்னை உற்சாக படு்த்துபவர்...நல்ல நண்பர் உலக படங்கள் மீது காதல் கொண்டவர்..

பிரதீப்பாண்டியன்... எனது பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர் என்னோடு நட்புபாராட்டுபவர் உலகபடவிழாவில் கலந்து கொள்ள துடிப்பவர்... நன்றி பிரதீப்...

ஆர் ஆர்... இப்போதுதான் கேள்வி படுகின்றேன் வாழ்த்தியமைக்கு நன்றி

கீத் குமாரசாமி... இவரும் சினிமா காதலர்தான் பல பதிவுகளை வாசித்து இருக்கின்றேன்... கமல் விரும்பி என்று நினைக்கின்றேன் நன்றி கீத்....

ராஜ்குமார்.... என் எழுத்துக்களில் உள்ள எளிமையையும் வளமையையும் சிலாகிப்பவர்.. என் எண்ணங்களை போலவே சிந்திப்பது ராஜிக்கு மிகவும் பிடித்தமானது. ஒரே அலைவரிசையில் சிந்திப்பது என்பது சந்தோஷமான விஷயம்தானே.... நன்றி ராஜ்

சீனா... எப்போதாவது வந்தாலும் தொடர்ந்து என்னை உற்சாகபடுத்தி வருபவர்....
நன்றி சீனா

கல்ப் தமிழன்.... நன்றி கல்ப் தமிழா உங்களை போன்றவர்களின் தட்டிக்கொடுத்தலே எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகின்றது.....

கேஎஸ் முத்துபாலகிருஷ்ணன்.... முகம் தெரியாத நீங்கள் எனக்கு பாராட்டு வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி....

என் பக்கம்.... எப்போதாவது வந்தாலும் தொடர்ந்து வரும் என் பக்கத்துக்குநன்றி என் பக்கம் தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்திற்க்கும்... நன்றி

பேரரசன்.... வாழ்த்து தெரிவித்த அரசனாருக்கு என் நன்றிகள்

மஞ்சூர் ராஜா... என்னை பெரிய திரையில் வெற்றி பெற உளமாற வாழ்த்தியமைக்கு என் நன்றிகள்..

சுரேகா..... என்னை பாராட்டி பின்னுட்டம் இட்ட நண்பர் சுரேக்காவுக்கு என் நன்றிகள்


கோஸ்ட்.... என் படங்களை பாராட்டியமைக்கு என் நன்றிகள் நன்பா

நர்சிம்.... நன்றாக கலாய்பதில் வல்லவர்...இவரின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும் நல்ல நண்பர்

கதிர் ஈரோடு..... நன்றி கதிர் எனது பக்கத்தை வாசித்து பின்னுட்டம் இட்டதிற்க்கு...

அத்திரி.... நக்கல் நையாண்டியோடு சமகால அரசியலை அலசுபவர் பல நாட்களாக என் வலைப்பக்கம் பார்க்க முடிவதில்லை...நச் சென கமென்ட் போடுபவர்....

ராஜ்... தொடர்ந்து வாசிப்பவர் ஆங்கில படங்கள் மீதான ஆர்வம் நிறைய... மர்டர் அட் 1600 படம் விரைவில் எழுதுகின்றேன்.. டிவிடி கிடைக்கவில்லை அதனால் இந்த தாமதம்...


ஸ்ரீராம்.... பாஸ்டன்.... சமுக கோபங்கள் அதிகம் உள்ள நண்பர்... பேசுவதை விட நம்மால் ஏதாவது செய்யவேண்டம் என்று கங்கனம் கட்டிக்கொண்ட அலைபவர்.. எனத இந்த நிலைபாட்டை எப்படி எடுத்தீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தெளிவுபடுத்திக்கொண்ட நண்பர்.. நன்றி நண்பா... பாஸ்டனில் இருந்தது ஒர மணிநேரத்துக்கு போனில் பேசுபவர்... நன்றி நண்பா....

குடுகுடுப்பை....நல்ல பதிவர் நான் இப்படித்தான் என்று நடிப்பு கலக்காமல் சொல்லுபவர் தமிழ்மண நட்சத்திரமாக பிரகாசிக்க எனது வாழ்த்துக்கள்....

குடந்தை அன்புமணி... சமீபமாய் என் பதிவுகளில் வலம் வந்து பின்னுட்டம் இடும் நண்பர் நன்றி

அகநாழிகை.... இவரின் கவிதைகளுக்கு நான் ரசிகன் நல்ல இலக்கிய எழுத்துகள் இவருடையது... மது மாதுக்கு செலவு செய்யாமல் புத்தகங்களுக்காக செலவு செய்பவர்...நல்ல நண்பர்

கைப்புள்ள... அந்த வடிவேலு படத்துக்கு விசிறிநான்.. நன்றி கைப்புள்ள

அமு செய்யது...எப்போதாவது வந்தாலும் தொடர்ந்து பின்னுட்டம் இட்டு உற்சாகபடு்த்தும் நண்பர்..

இராகவன் நைஜீரியா.... நல்ல நண்பர் எவர் மனதையும் காயபடுத்திவிடக்கூடாது என்று நினைப்பவர் சின்ன விஷயத்துக்கு கூட சட்டென மன்னிப்பு கேட்டு விடுபவர்....சிலரால் மட்டுமே எவர் மனதையும் காயபடுத்தாமல் வாழ முடியும்.... நன்றி நண்பரே....

கிஷோர்... தொடர்ந்து என் ஆங்கில படத்தின் விமர்சனங்களுக்கு பின்னுட்டம் போட்டு பாராட்டும் நபர்... நன்றிகிஷோர்

மதுவதனன் மௌ... தொடர்ந்து என் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது வாசித்து பின்னுட்டம் இடுபவர்...

காத்திகேயனும் அறிவுதேடலும்.... நல்ல ஆங்கில பட விமர்சகர்....படங்களை மிக விரிவாய் எழுதி விமர்சிப்பவர்... நல்ல நண்பர்.. என் எழுத்து மீது மதிப்பு வைத்து இருப்பவர்... நன்றி கார்த்தி்...


மற்றும், யோ, நேமித்திரன் தமிழன் கறுப்பி, உடன்பிறப்பு, சம்பத் , கிச்சா, அபாபல் ஜோ, உழவன் ,ஜோ, 23சீ, ரூட்டோ, செந்தில், டூ டூ, ஆதித்தன், ஜோதி கார்த்திகை...யூஎம் கிருஷ்னா,சீ,யாசவி, சங்கா, பிளாக்பாண்டி,இளவட்டம் நாஞசில் நாதம்,ராபின் ,ஜாம்பஜார் ஜக்கு, மிஸ்டர் அடோர்...,ராஜாராமன், பராரி ,வேந்தன், என் உலகநாதன், மின்னுது மின்னல், சதிஷ், வெண்காட்டான், செந்தில்வேலன்,கக்குமாணிக்கம், சுவனபிரியன்,நட்ராஜ் ,அன்வர், ராம்ஜியாஹு,அருன்மொழிவர்மன்,உங்களில் ஒருவன் , பரிமளா, மனசு,தமிழ் ஓவியா2009,நிகழ்காலத்தில்,கவிர்மைந்தன், பாஸ்கர்,வலசுவேலனை, பிஜீ,வே இராதாகிருஷ்ணன்,குட்டிபிரபு, குமார், தருமி, போன்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்


அதே போல் மெயிலில் பதிவிலும் அதிகம் நட்பு பாராட்டும், ஹரிராஜகோபாலன், குழந்தை வேலு,புரபசர் பெர்னான்டோ,சிங்கார வேலு ,கல்யான் குமார், அப்புறம் பெயர் சொல்ல வேண்டாம் என்ற... அலட்டி பெண்மணி...போன்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....

இந்த ஒரு வாரத்தில் என் பதிவை பாராட்டி பின்னுட்டம் இட்டவர்களுக்கு என் அன்பை வெளிபடுத்தவே இந்த பதிவு பலரின் வலை தளத்தை போய் நான் பார்த்து கூட இல்லை... இருப்பினும் எனக்கு அதரவு தந்த மேலுள்ள அன்பு உள்ளங்களுக்கு என் நன்றிகள்....

என்னை தமிழ் மண நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுத்த தமிழ்மண நிர்வாகத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல

சன்டிவி வருடத்துக்கு ஒரு முறை சொல்வது போல்.... இந்த வெற்றி உங்களால் சாத்தியமாயிற்று....


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner