வியட்நாம் பயணகுறிப்புகள். 5




அதோ இதோ என்று
அன்னிய தேசமான வியட்நாமில்  பத்து நாட்கள் ஓடி  விட்டது…

நாளை காலை  சனிகிழமை  பத்து மணிக்கு வியட்நாமில்  இருந்து   சென்னைக்கு விமானம்…  ஆனால்  நடுவில்   பாங்காக் ஏர்போர்ட்டில்  எட்டு மணி நேரத்துக்கு அப்புறம்தான் சென்னை பிளைட்
என்ன  செய்ய  போகின்றேன் என்று தெரியவில்ல




நம்ம  ஊரைவிட ஏழ்மை தேசம் என்றாலும்  நிறைவாய் வாழ்கின்றார்கள்…  இந்த பத்து நாளில் எந்த இடத்திலும்..  ங்கோத்தா ங்கொம்மா.. என் கிட்டயே உதார்  காட்டுறியா? கொம்மா கூதியை கிழிச்சிடுவேன் என்று
எந்த  சண்டையையும் பார்த்தது இல்லை.. இத்தனைக்கு  நம்ம ஊர் காசுப்படி எட்டு ரூபாயில் இருந்து 330
எம்எல் டின் பீர் சல்லிசாக  எல்லா… டீக்கடைகளிலும் சூப் கடைகளிலும் கிடைக்கின்றது.

யாரும் குடித்து விட்டு உளரவில்லை..  ரோட்டில் கைலி நகர்ந்து கொட்டை தெரிய யாரும் ரோட்டில்  விழுந்து
கிடக்கவில்லை…

ஒரு விபத்து  நடந்து  கும்பல் கூடி
டிராபிக் ஜாம் ஆகி போனதில்லை… அவ்வளவு ஒழுங்கோடு சென்றாலும்  இந்த ஊர் டூவிலர்கார்கள்தான் அநியாயம் பண்ணுகின்றார்கள்.

 வியட்நாம் மக்கள்… நம்ம ஊரில் வெள்ளைகாரர்களை  நாம் பார்ப்பது போல இங்கே தென் இந்தியர்களுக்கு
மவுசு அதிகம்..

மிகை படுத்தி  சொன்னவை அல்ல.. இதுவரை 14  பெண்கள் என்னை இடித்து விட்டு சாரி  கேட்டு விட்டு சென்றார்கள்..   தெரியாமல் என்று பார்த்தால்  நான்கினை   சொல்ல வேண்டும். மற்றது எல்லாம்  வேண்டும் என்றே என்பது என் கணிப்பு … அதனாலே  குறிப்பு   நோட்டில் எழுதி வைத்தேன்..

நம்ம ஊர்னா.. கவன்
படத்துல விஜய் சேதுபதி மடோனா கிராஸ் பண்ணும் போது செவத்தோட   ஒட்டி நிப்பாறே அப்படித்தான் நாம நடக்க முடியும்..
தெரியாமல் கை பட்டாக்கூட… அக்கா தங்கச்சியை இழுத்து விடுவார்கள்.

நம்ம ஊரில்  ஷேர் ஆட்டோவில் மட்டும்தான் ஆண் பக்கத்தில் உட்காருவார்கள்..
ஆனால் பேருந்தில்  தெரியாத ஆனோடு பேருந்தில்
அமர இன்னும் யோசிக்கின்றார்கள்..  தெரியாத ஆண்
பக்கத்தில்   உட்கார அடைப்பு போல வெளிச்சம்  அதிகம் இல்லா இடம் தேவையாய் இருக்கின்றது… அதிலும்
சிலர் கடவுளை வேண்டியபடி ஆபத்துக்கு பாவம் இல்ல என்று அமருகின்றார்கள்…  ஆனால் இங்கே ஆண் பெண் பேதமே இல்ல..

 ஆண்களுக்கு நிகர்  வியட்நாம் பெண்கள் என்று தாராளமாக சொல்லலாம்.. ஏன்
தென்இந்தியர்கள் அதிகம் பிடிக்கின்றது என்ற கேள்விக்கு அவர்கள் கலர் மற்றும்  அவர்கள் கண்கள் என்ற பதில் கிடைத்தது…

அதே  போல சைட் அடிப்பது என்றால் வைத்த கண் வாங்காமல்
பார்க்கின்றார்கள்… நமக்குதான் கூச்சமாக இருக்கின்றது..    இரண்டு பேர் போட்டோ எடுத்துக்கொண்டு சென்றார்கள்..

  பாண்டிச்சேரி சண்டே மார்க்கெட் போல இங்கே  சனி ஞாயிறு இரண்டு நாளும்…   தெருக்களில் கடை  போட்டு விற்கின்றார்கள்..  அதில் மட்டும் நாலு பேர் நேருக்கு நேர் மோதிவிட்டு
சிரித்து சென்றார்கள்… மனைவி சொன்னார்… உனக்கே எஸ்காட் போடனும் போல என்றார்…

எல்லா மனிதர்களும்  நேசமிக்கவர்களாக இருக்கின்றார்கள்… நிறைய எழுத இருக்கின்றது…   அனேகன் படத்தில் வருவது போல ஏதோ சொந்த தேசத்துக்கு
வந்தது போல இருக்கின்றது.. பத்து நாட்கள் ஓடியதே
தெரியவில்லை..

 பத்து நாட்கள் வேலை அப்படியே இருக்கின்றது…  நிறைய ஓட வேண்டும்… நிறைய   உழைக்க வேண்டும்.  முக்கியமாக வியட்நாம் பெண்கள் போல உழைக்க வேண்டும்..

இன்னும் வயல்வெளிகளில்
கடுமையாக உழைப்பவர்கள் வியட்நாம் பெண்கள்தான்
அந்தி சாய்ந்தும்  உழைக்கின்றார்கள்…

 நிறைய எழுத இருந்தாலும்  கடந்த பத்து நாட்களை அசைபோட்ட படி பேக்கிங் வேலை
செய்ய வேண்டும்.

சொந்த மண்ணில் ஞாயிறு

மீண்டும்.  சந்திப்போம்.

வியட்நாமில் இருந்து

ஜாக்கிசேகர்.

31/03/2017


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner